ணக்கம். எனது பெயர் ஆறுமுகப்பாண்டி. தென் மாவட்டத்துக்காரனான நான், தொண்டாமுத்தூர் தொகுதிக்குட்பட்ட குனியமுத்தூரில் வீடு வாங்கி, மனைவி, குழந்தைகள் சகிதமாய் குடியேறினேன். கடந்த 2016-ல் தளபதி ஸ்டாலின் முன்னிலையில், 3,000 பேரோடு கட்சிக்குள் இணைந்தபோது தி.மு.க.வினர் அதிர்ந்தார்களோ இல்லையோ, அ.தி.மு.க. அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அதிர்ந்தார்.

nb

தனது தொகுதியான தொண்டாமுத்தூரில் தன்னை எதிர்த்துப் போட்டியிட யாருமே இல்லையென்ற அவரது நினப்பை உடைத்தேன். கட்சியில் சேர்ந்த 3 மாதத்திற்குள்ளாகவே மாவட்ட மாணவர் அணி இணை அமைப்பாளராக நியமிக்கப்பட்டேன். இன்னொருபுறம் நான் ஈடுபட்டிருந்த தொழில்களிலும் பெரிய அளவிலான வளர்ச்சியை நோக்கிச் சென்றுகொண்டிருந்தேன். தொகுதிக்குள் அமைச்சர் வேலுமணிக்குப் போட்டியை ஏற்படுத்துவதற்காக, வேலுமணி கோவிலுக்குப் போகும் அதே பகுதியில், தளபதி ஸ்டாலின் பெயரில் சமுதாயக் கூடங்களையும், 4 சிவாலயங்களையும் கட்டிக்கொடுத்தேன். மேலும், தளபதி பெயரில், பூங்கா, நிழற்குடைகளைக் கட்டினேன். அவரது பகுதியில். இப்படியெல்லாம் செய்வது, வேலுமணிக்கும், அவரது அடியாட்களுக்கும் பிடிக்கவேயில்லை.

எனவே எனக்கெதிராகத் திட்டமிட்டுப் பல வேலைகளில் இறங்கினார்கள். எங்கள் பகுதி ஏரியா கவுன்சிலரை வைத்து, பாதாள சாக்கடைத் திட்டம் என்ற பெயரில் என் வீட்டு வாசலில் நள்ளிரவில் குழி தோண்டிப் போட்டார்கள். அப்பகுதிக் கான குப்பை வண்டி யையும் வீட்டருகே வைத்தார்கள். இப்படி வீட்டருகே குப்பை வண்டியை வைத்த அதி காரியிடம், ""வீட்டு வாசலில் குப்பை வண்டி யை வைத்தால், என் குழந்தை களுக்கு நோய்த் தொற்று ஏற்படாதா?'' என்று கேட்டேன். உடனே, அரசாங்க ஊழியரைப் பணிசெய்ய விடாமல் தடுத்தேன், அவருக்குக் கொலை மிரட்டல் விடுத்தேன் என்றெல்லாம் என்மீது வழக்கு தொடுத்தார்கள். அதில் கைதாகாமல் இருப்பதற்காக முன்ஜாமீன் வாங்கினேன். இப்பிரச்சனை ஒரு பக்கம் இருக்க, பாலியல் வழக்கு என்ற இன்னொரு குண்டைத்தூக்கி என்மீது போட்டார்கள்.

Advertisment

ரேஸ் கோர்ஸில் வசித்துவந்த ஷீலா ராஜகோபால் என்பவரின் வீட்டிற்குள் நான் அத்துமீறி நுழைந்து, தவறாக நடக்க முயன்றதாகக்கூறி ஷீலா ராஜகோபால் மூலமாக என்மீது புகாரளிக்க வைத்தார்கள். இந்த சம்பவம், 30-04-2018 அன்று மாலை 4 மணியளவில் நடந்ததாக காவல் துறையால் பதிவுசெய்யப்பட்டது. இதுகுறித்து அன்றைய தினமே, குற்றச்செயல் குறித்த மாதிரி வரைபடத்தை காவல்துறையினர் உருவாக்கியிருந்தனர். ஆனால் என்மீது மறுநாளில்தான் காவல்துறையில் ஷீலா ராஜகோபால் புகாரளித்திருந்தார். இப்படி அடுத்த நாள் அளிக்கப்பட்ட புகாருக்கு, முதல் நாளே காவல்துறையினர் எப்படி செயல்பட்டார்கள் என்றெல்லாம் நான் விசாரிக்கையில், அமைச்சர் எஸ்.பி. வேலுமணி எனக்கெதிராகச் செயல் பட்டிருப்பது தெரிய வந்தது. என்மீது புகாரளித்த இந்த ஷீலா ராஜகோபாலிடமிருந்து 2015-ஆம் ஆண்டே, 3 கோடியே, 60 லட்சம் ரூபாய்க்கு வீட்டை வாங்கிவிட்டேன். வங்கியில் பணம் கொடுக்கல் வாங்கலில் இருந்த சில தடங்கல்களைச் சரிசெய்துகொண்டிருந்த சூழலில் என்மீது அபாண்டமான குற்றச்சாட்டுகளைப் பதியவைத்து, அமைச்சர் வேலுமணி திட்டமிட்டு என்னை 18 நாட்கள் சிறைக்குள் அனுப்பி சந்தோசப்பட்டுக் கொண்டார்.

minister

சிறைக்குச் சென்றுவந்ததால் என்னிடம், நடந்த சம்பவம் குறித்து தி.மு.க. தலைமை விளக்கம் கேட்க, அதற்கு நான் அளித்த பதிலால் திருப்திப்பட்டு, ""சரி... போய் வேலையைப் பாருங்கள், நான் பார்த்துக் கொள்கிறேன்"" என ஆறுதல் சொல்லியனுப்பினார் தளபதி. ஆனால், கட்சிக்குள் நான் பெரிதாக வளர்ந்துவிடுவேன் என்ற பொறாமையில், அப்போதைய மாவட்டப் பொறுப்பாளர், இளைஞர் அணி துணை அமைப்பாளர் எனப் பலரும் சேர்ந்து எனக்கெதிராகக் கூட்டுச்சதி செய்து, என்னை கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யும்படி வைத்துவிட்டார்கள். நான் சஸ்பெண்ட் ஆகாதிருந்தால், நான்தான் தொண்டாமுத்தூர் தொகுதியின் வேட்பாளராகி வேலுமணியை எதிர்த்து நின்றிருப்பேன். நிச்சயம் வெற்றியைச் சுமந்து தளபதியின் காலில் சமர்ப்பித்திருப்பேன்.

ஷீலா ராஜகோபால், போலீஸிடம் கொடுத்த ஒப்புதல் வாக்குமூலத்தில், என் மீது புகாரளிக்க ஒரு நாள் தாமதமானதற்கு, உடல் நலம் சரியில்லாததே காரணமென்று குறிப்பிட்டுள்ளார். அவரது வீட்டுக்கு சற்றுத் தொலைவிலுள்ள காவல் நிலையத்துக்கு நேரிலேயே சென்றிருக்கலாம், அல்லது தொலைபேசி மூலமாகத் தொடர்புகொண்டு புகாரளித்திருக்கலாம். மேலும், அவர் குறிப்பிட்டிருந்த அந்த நாளில் நான் ஆக்சிஸ் வங்கியில் இருந்ததை, சி.சி.டி.வி. கேமரா ஆதாரத்துடன் அந்த வங்கி மேலாளரே சாட்சியம் அளித்திருப்பதும் எனக்கு சாதகமாக உள்ளது. என் வளர்ச்சியை முடக்குவதற்காக அ.தி.மு.க.வோடு இணைந்து, லோக்கல் தி.மு.க.வினரும் துரோகம் செய்ததைத்தான் என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. இதனால், தற்கொலை செய்துகொள்ளும் எண்ணம் அடிக்கடி மனதில் எழுகிறது.

இவண்,

ஆறுமுகப்பாண்டி

Advertisment