கடந்த 2020, மார்ச் பொதுமுடக்க கொரோனா காலகட் டம். சமூக ஆர்வலர் தேவேந்திரனை சாராயம் கடத்தியதாக காவல்துறை கைதுசெய்து கொண்டு போய் சிறையில் அடைத் தது. அந்த வழக்கில் இன்றுவரை தன் தரப்பு நியாயத்தையும், போலீஸ் தரப்பின் அத்துமீறலையும் நிரூபிக்கப் போராடிக் கொண்டிருக்கிறார் தேவேந் திரன். என்னதான் நடந்தது அன்று?
"கொரோனாவால் உலகம் முழுவதுமே ஊரடங்கு. மதுக்கடை பார்கள் அனைத்தையுமே மூடிவிட்டார்கள். அயப்பாக் கம் பகுதியில் மட்டும் அம்பத் தூர் கலால் போலீஸின் உதவி யுடன் பார் பூட்டை உடைத்து மதுவை எடுத்து விற்றுக் கொண்டிருக்கிறார்கள் சிலர்.
அப்போது இணை ஆணையராக விஜயகுமாரியும், கலாலில் அசிஸ்டண்ட் கமிஷன ராக நல்லதுரையும் இருந்தனர். நான் கொரோனா காலகட்டத்தில் சாப் பாடுகள் தயாரித்து அமிஞ்சிக்கரை, அண்ணாநகர் பகுதிகளில் உணவு கொடுத்துக்கொண்டிருந்தேன். ரெகுலரா வரும்போது இப்படி மதுவிற்பதைப் பார்த்துவிட்டு நல்லதுரை யிடம் புகார் செய்தேன்.
அம்பத்தூர், ஆவடி, கொ

அம்பத்தூர், ஆவடி, கொரட்டூர் பகுதிகளில் எஸ்.ஐ. யாக இருந்து இன்ஸ்பெக்ட ரானவர் ஜார்ஜ் மில்லர். இவருக்கு அரசியல்வாதிகள் நல்ல பழக்கம். அன்றைய சட்டமன்ற உறுப்பினர் அலெக்ஸ், அமைச்சர் பெஞ்சமின் எல்லாம் நல்ல பழக்கம்.
இந்த சமயத்தில் அயப்பாக்கம் தொகுதியில பெஞ்சமின் கட்சிக்காரங் களுக்கு மட்டும்தான் அரிசி கொடுக்கிறார். மக்கள் யாருக்கும் கொடுக் கலைனு சமூக ஊடகத் துல பதிவுபோடுறேன். இது வைரலாகுது. இதில் அவருக்கு என்மீது வருத்தம். அம்பத்தூர்ல அம்மா உணவகத்தில் நிறைய முறைகேடு நடக்குது.. இது சம்பந்தமா எம்.எல்.ஏ. அலெக்ஸிடம் போனில் பேசும்போது எனக்கும் அவருக் கும் வாக்குவாதம். இந்த குரல் பதிவை சமூக ஊடகங்களில் போடுறேன். இதுல எம்.எல்.ஏ.வுக்கும் என்மேல கோபம்.
இதுக்கு நடுவுலதான் கொரோனா காலகட்ட மதுவிற் பனை பிரச்சனை வருது. ஜார்ஜ் மில்லர் என் லைனுக்கு வந்து, "நீதான் தேவேந்திரனா... உனக்கெதுக்கு? இதுக்கு போலீஸ் என்னமோ பண்ணிட்டு போறாங்க... நீ பெரிய அவனா, இவனா'ன்னு பேச... பதிலுக்கு நானும் பேசுனேன்.
இரண்டுநாள் கழித்து காலையில வாக்கிங் போறேன். என் வீட்டுப் பக்கம் ஒரு கார் நிற்குது. அதிலிருந்து இரண்டு பேர் என்னைப் பிடிச்சு கை, கால், கண்ணெல்லாம் கட்டிக் கொண்டுபோறாங்க. திருமுல்லைவாயல் டி-7 டேங்க் பேக்டரி போலீஸ் ஸ்டேஷன் பின்னால ஒரு கோடவுன். அங்கே கொண்டுபோய் தலைகீழா கட்டித் தொங்கவிட்டு ஜார்ஜ்மில்லர் உதைக்கிறார், அடிக்கிறார். சரியான அடி... என் கையை உடைச்சுட்டாங்க.
அவங்க கஸ்டடியில் இருக்கும்போது ஒரு வீடியோ காட்டினாங்க. கலால் நல்லதுரையிடம் புகார் செய்தேன் அல்லவா! அதை நிரூபிக்க ஆதாரத்துக்காக ஒரு பாட்டில் 750 ரூபாய்னு மது பாட்டில் வாங்கினேன். அதைக் கொண்டுபோய் என் வண்டியில் வைக்கிறேன். இதைப் போலீஸ் பதிவுசெய்து, பாலிமர் டி.வி.யில் சமூக ஆர்வலர் சாராயம் கடத்தினார்னு வீடியோ போட்டாங்க.
அம்பத்தூர் மாஜிஸ்திரேட் லிமிட்டில் என்னைக் கைது பண்ணினாங்க. ஆனால் பூந்தமல்லி மாஜிஸ்திரேட் லிமிட்டில், போலீஸைப் பார்த்து தப்பியோடும்போது பாலத்திலிருந்து விழுந்து கை உடைந்ததாக மகஜர்ல எழுதுறாங்க. இதில்லாம வீட்டிலிருந்த என் பையனையும் இந்த வழக்குல சேர்த்துட்டாங்க. என் மனைவியிடம், ‘"இவன் காலையும் உடைக்கணும்னுதான் நினைச்சேன். உடைச்சா, இவனைத் தூக்கிட்டு அலையணுமேனு விட்டுட் டேன். அவனை நீ ஜாமீன் எடுக்கக்கூடாது'னு மிரட்டினாங்க.
கிட்டத்தட்ட ஒரு மாசம் சிறையிலிருந்துட்டு ஜாமீன்ல வெளியே வந்தேன். ஜெயிலிலிருந்து வந்து ஒரு பத்திரிகையாளர் சந்திப்பு ஏற்பாடுசெய்து நடந்ததைச் சொன்னேன். அதிலிருந்து நான் இந்த நாலு வருஷமா, எல்லா அதிகாரிகளுக்கும் ஆதாரத்தோட புகார் பண்ணிக்கிட்டிருக்கேன். எந்த ஒரு நடவடிக்கையுமே இல்லை. கிணற்றில் போட்ட கல்லா என் வழக்கு இருக்கு.
தொடக்கத்துல மனித உரிமை ஆணையத்துல தானே முன்வந்து இந்த வழக்கை எடுத்தாங்க. பிறகு எதுவும் நடக்கலை. நான், என் மனைவி போய் இந்த சம்பவங்கள் குறித்து மனித உரிமை ஆணையத்துல புகார் கொடுத் தோம். எந்த நடவடிக்கையும் இல்லை. ஜார்ஜ் மில்லர் மீது எஃப்.ஐ.ஆர் போடச்சொல்லி நான் ஒரு வழக்குப் போட்டேன். அம்பத் தூர் மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டுல இப்பத்தான் விசாரணைக்கு எடுத்தி ருக்காங்க'' என்கிறார் தேவேந்திரன் ஆதங்கமாக. இதுகுறித்து சம்பந்தப் பட்ட காவலர் ஜார்ஜ் மில்லரைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, "கொரோனா சமயத்தில் மது விற்ற துடன், காவலர்களையும் தரக்குறை வாகப் பேசினார். அதற்கு எங்கள் வசம் ஆடியோ ஆதாரம் இருக்கிறது. மது விற்பனையின்போது அவரைத் துரத்திப் பிடிக்க முயன்றபோதுதான் அவரது கை உடைந்தது. இத்தனை காலம் கழித்து புகாருடன் வர காரணமென்ன?'' என்கிறார்.
"இந்தியாவில் ஊழல், மோசடி குறித்து கேள்வியெழுப்பும் ஆர்வலர் கள் 51 பேர் இறந்திருக்கிறார்கள். 300 பேர் மீது தாக்குதல் நடந்திருக்கிறது. 5 பேர் தற்கொலை செய்துகொண்டி ருக்கிறார்கள். ஜார்ஜ் மில்லர் விரைவில் ஓய்வுபெற்றுவிடுவார். எங்குமே நீதி கிடைக்காவிட்டால், தவறுகள் நடக்கும்போது தட்டிக் கேட்க யார் முன்வருவார்?''’என்கிறார் தேவேந்திரன் வருத்தமாக.