பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளைத் தப்பிக்க விடும் போலீஸார், அந்தக் கொடூரத்தை அம்பலப்படுத்திய நக்கீரனைக் குறிவைத்து, நமது ஆசிரியரை குற்றவாளி போல விசாரிப்பதற்கு கருத்துரிமை காக்கும் அனைத்து தரப்பிடமிருந்தும் கடும் கண்டனமும் எதிர்ப்பும் வெளிப்படுகிறது.
தோழர் நல்லகண்ணு - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர்
விசாரணை நடக்கக் கூடிய காலத்திலேயே நக்கீரன் ஆசிரியருக்கு சம்மன் அனுப்பி அவரை வரவழைத்து விசாரணை நடத்துவது கண்டிக்கத்தக்கது. இதுபோன்ற நடவடிக்கையை எடுத்திருப்பதை பார்த்தால் இந்த வழக்கை எப்படி நடத்துவார்கள் என்பது ஐயமாக இருக்கிறது என்றார்.
மேலும், நமது ஆசிரியரை தொடர்பு கொண்டு, ''ரொம்ப வருத்தமாக இருக்கிறது. இதுபோன்று போலீசார் நடந்து கொண்டால் உண்மையை சொல்ல யார் வெளியே வருவார்கள்?. மறுபடியும் போலீசார் அழைத்தால் சொல்லுங்கள்'' என்றவர், ""நீதித்துறையே இந்த விவகாரத்தை கையில் எடுத்து நேரடியாக விசாரிக்க வேண்டும்'' என்றார்.
""மாநில அரசும் அரசியல் சம்பந்தப்பட்டவர்கள் கடந்த 7 ஆண்டுகளாக நடந்து வந்திருப்பதை மூடி மறைக்கும் முறையில் நடந்திருப்பது மோசமானது. இது தமிழ் சமுதாயத்திற்கு இழுக்கு. இதுபோல் இனி நடக்காமல் இருக்க காவல்துறையும் அரசும் உறுதியான நடவடிக்கையை எடுக்கவேண்டும்.
மாநில அரசிற்கும் மத்திய அரசு துணைபோகிறது. மத்திய அரசினுடைய புலனாய்வு துறையின் (சி.பி.ஐ.) புகாரும் எப்படி நடக்கும் என உத்தரவாதம் இல்லை.எனவே நீதித்துறை தலையிட்டு விசாரணை செய்யவேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் மாநில நிர்வாக குழு தீர்மானித்திருக்கிறது
மு.க.ஸ்டாலின் - தி.மு.க. தலைவர்
பெண்களை வசியப்படுத்த "பெய்டு கேங்' என்று இருப்பதாக ஊடகங்களில் செய்தி வந்திருக்கிறது. இதில் சம்பந்தப்பட்ட ஹரீஷ் என்பவருக்கும், பொள்ளாச்சி ஜெயராமன் மகன்களுக்கும் தொடர்பு இருந்திருக்கிறது. நக்கீரன் பத்திரிகையில் இந்த விவகாரம் குறித்த செய்திகள் வெளிவரத் தொடங்கியது. உடனே நக்கீரன் பத்திரிகை மிரட்டப்படுகிறது. ஹரீஷ் மிரட்டுகிறார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெயரைச் சொல்லி மிரட்டுகிறார்.
இப்போது நக்கீரன்கோபாலை சி.பி.சி.ஐ.டி. போலீசார் சம்மன் அனுப்பி விசாரிக்கிறபோது, எப்படியெல்லாம் மிரட்டினார்கள் என்று அவரே வெளியே வந்து செய்தியாளர்களிடம் பேட்டி அளித்திருக்கிறார். அதிகாரத்தைப் பயன்படுத்தி, ஆட்சியைப் பயன்படுத்தி குற்றவாளிகள் தப்பிக்க முயற்சித்துக்கொண்டிருக்கிறார்கள்.
எல்.லெட்சுமணன் பி.ஏ., பி.எல்., -வழக்கறிஞர், சேலம்-7
சட்டம் போட்டு தடுக்கிற கூட்டம் குற்றத்தைத் தடுக்கவில்லை. பொள்ளாச்சி பாலியல் செய்தியை முதலில் வெளியிட்ட நக்கீரனின் ஓர் சாதனை. அதில் சம்பந்தப்பட்ட அதிகார வர்க்கத்தின் எதிர்ப்பு நக்கீரனுக்கு மேலும் ஒரு வேதனை. ஆனால் நக்கீரனுக்கு இது ஒன்றும் இல்லை புதிய சோதனை.
161 சட்டத்தின் படி குற்றத்தை பார்த்தவர் களையோ அல்லது குற்றத்தை பற்றி கேள்விப் பட்டவர்கள் அல்லது குற்றம் சம்பந்தமாக ஏதாவது ஆதாரம் இருந்தால் போலீசாரிடம் ஒப்படைக்க லாம். அதேபோல கட்டாயப்படுத்த முடியாது.
4 மணி நேர விசாரணைக்குப் பின் சி.பி.சி.ஐ.டி. அலுவலகம் முன்பு நமது நக்கீரன் ஆசிரியர் கொடுத்த பேட்டி, நக்கீரன் இணையதளத்தில் பதிவேற்றப்பட்டது. அதில் வாசகர்களும் பொதுமக்களும் பதிவிட்டுள்ள கருத்துகளில் சில...
Arun Ramasamy: எஸ்.பி. பாண்டியராஜன் பாதிக்கப்பட்ட பெண்ணோட பெயரை ஊடகங்கள்கிட்ட சொன்னதுக்கு ஈஇஈஒஉ அந்த ஆளைத்தான் புடிச்சு விசாரிக்கணும்.
sirajudeen a.n.m: போலீஸ் துணையில்லாமல் எதுவும் நடக்காது. இதை சும்மா விடக்கூடாது.
Dry Tree: முதலில் மாற்ற, மாறவேண்டியது காவல்துறை! சட்டம் யாருக்கு?
Jackie VISHAAN: இதே போல் அந்த போலீஸ் வீட்டுல நடந்துருந்தா அப்போ சும்மா இருந்து இருப்பாரா, உங்க பதவிய நல்ல விஷயத்துக்கு பயன்படுத்தி நல்லது பண்ணுங்க. அப்படி முடியலனா அதுக்காக வெக்கப்படுங்க.
SAMSU DEEN:இப்படிப்பட்டவர்களுக்கு தண்டனை நிறைவேற்றாவிட்டால் எலக்ஷனில் ஓட்டு போட மாட்டோம் என்று மக்கள் நிபந்தனை வைத்தால் இந்த அரசு ஏற்றுக் கொள்ளுமா? உங்களுக்கு ஓட்டு வேண்டும் என்றால் எங்களுக்கு நீதி வேண்டும்.
Ganesh Sankar: மத்திய மாநில அரசுகள் கையாலாகாத அரசாக இருப்பதால்தான் ஐ.நா. புள்ளிவிவரம், பெண்களுக்கு பாதுகாப்பு அற்ற நாடுகளின் பட்டியலில் இந்தியா 2-ம் இடத்தில் உள்ளது என்று கூறியுள்ளது.
REFER TUBE: இவை யாவும் ஆளும் கட்சியின் முட்டாள்தனத்தை மீண்டும் வெட்ட வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
Love2 Help: இப்படியான குற்றங்களுக்கு சட்டம் நாக்கூசாமல் ஆதாரம் கேட்பதை நிறுத்திவிட்டு, கிடைத்த வீடியோ ஆதாரத்தை ரகசியமாக காப்பாற்றி, உடன் நடவடிக்கை எடுத்து, மரண தண்டனை விதிக்க வேண்டும். CID, CBCID அதிகாரிகளே, உங்கள் வீட்டிலிருக்கும் பெண் குழந்தைகளை மனதில் நினைத்து நியாயமான தீர்ப்பும், மிகக்கடுமையான தண்டனையும் உடனே கொடுங்கள் அல்லது கண்டிப்பான, நேர்மையான அதிகாரிகள் இந்த வழக்கை விசாரிக்கவேண்டும்.
Arun Prabu: இது மிகவும் மோசமான செயல், இப்படி ஒரு அரசாங்கம் மற்றும் சம்பந்தப்பட்ட காவல்துறை இருப்பது நம் தமிழ்நாட்டுக்கே அசிங்கம். இழிவு, வேதனை, அவமானம், தலைகுனிவு.
Arul Nathan: அரசியல்வாதிகளை காப்பாற்றவே காவல்துறை துடிக்கிறது. மனிதர்களா இவர்கள் ஓநாய்கள்... தமிழர்களையும் தமிழ் நாட்டையும் நாசம் செய்கிறார்கள்.
Jain Alavudeen:காக்கிச்சட்டையைப் போடும்போதே இரக்கம் -நேர்மை -நீதி ஒழுக்கத்தை தூக்கி எறிந்துவிடுவார்கள்போல சில அதிகாரிகள். எடப்பாடியும் பன்னீரும், மோடி துணையோடு தமிழ்நாட்டை நாசம் பண்ணிக்கொண்டிருக்கிறார்கள். காலம் இப்படியே கடந்துவிடும் என்று நினைக்கிறார்கள்.
Gopinath N: காவல்துறை நமது மோடியின் இரு அடிமைகளின் ஏவல்துறையாக மாறிவிட்டது.