மிழக ஆடிட்டர் உலகில் புகழ்பெற்ற பிரேமநாயகத்தின் குடும்பத்தினரிடமிருந்து 3 கோடி ரூபாய் மதிப்பிலான கலைநயமிக்க பொருட்களை கொள்ளையடித்துவிட்ட தாக ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி கோவிந்தன் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

rr

ஆடிட்டர் பிரேமநாயகத்திடம் கேட்டபோது, ""சென்னை அடையாறு காந்தி நகரிலுள்ள ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்.அதிகாரி கோவிந்தனின் வீட்டில் கடந்த வருடம் செப்டம்பர் 1-ந் தேதி 40 ஆயிரம் ரூபாய் வாட கைக்கு குடியேறினோம். ஒருவாரம் கழிந்த நிலையில், "என் மகன் குகனுக்கு திருமணம் நிச்சயம் செய் யப்பட்டிருக்கு. வீட்டை உடனே காலி செய்யுங்க' என கோவிந்தனும் அவரது மனைவி தேன்மொழியும் அதிகார தொனியில் பேசினார்கள். "குடியேறி ஒருவாரம் கூட ஆகலை. இப்படி சொன்னா எப்படிங்க?' என கேட் டோம். "என்கிட்டே நியாயம் பேசக் கூடாது' என கடுமையாகப் பேசினார் கோவிந்தன். அவசரத்துக்கு வீடு தேடியும் கிடைக்காததால உடனே காலிபண்ண முடியலை. இதனால் ஆத்திரமடைஞ்ச கோவிந்தன் குடும் பம், எங்களுக்கு ஏகப்பட்ட தொல்லை களை கொடுத்தது. வீட்டின் கரண்டு, குடிநீர் கனெக்சன்களை துண்டிச் சாங்க. கேஸ் கனெக்சனையும் தடுத் தார்கள். வீட்டுக்கு முன்புறம் நாய் களை அவிழ்த்துவிட்டு மலம், சிறுநீர் கழிக்க வைத்து அசிங்கப்படுத்தினர். சொந்த கிராமத்துக்கு ஒருநாள் போகவேண்டிய சூழலில்... காலேஜ் படிக்கும் என் மகள் வீட்டிலேயே இருக்க வேண்டியதிருந்தது. என் மகள் தனியாக இருப்பதை தெரிந்து சில ரவுடிகளை வைத்து என் மகளை பயமுறுத்தினர். ஜன்னல் வழியாக வீட்டுக்குள் நுழைய ஏணி வைத்து ஏறினான் ஒரு ரவுடி.

Advertisment

பயந்துபோன என் மகள் அடை யாறு போலீஸுக்கு தகவல் சொல்ல... போலீஸ் வந்ததும் ஓடிப் போனார்கள். அப்போதைய தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனிடம் நாங்கள் புகார் கொடுக்க... அவர் எடுத்த ஆக்ஷ னில், அடையாறு துணை ஆணையர் ரவீந்திரன், இருதரப்பிலும் விசாரணை நடத்தி, மார்ச் 31-ந் தேதிவரை அவகாசம் வாங்கித் தந்தார்.

தொடர்ந்து டார்ச்சர் செய்த நிலையில்... 31-ந் தேதி வீட்டுக்கு வந் தோம். போலீஸ்காரர்கள் முன்னிலை யில் வீட்டைத் திறந்தபோது... விலை மதிப்புமிக்க அனைத்து பொருட்களை யும் கொள்ளையடித்திருந்தது கோவிந் தன் குடும்பம். இதன் மதிப்பு 3 கோடியே 72 லட்சம் ரூபாய். கோவிந்தன் குடும் பத்தினர் மீது கம்ப்ளைண்ட் பண்ணி னோம். வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்க டேஷ், பொருட்களை திருப்பித்தரு மாறு உத்தரவிட்டதை ஒப்புக்கொண்ட கோவிந்தன் குடும்பம், இப்போதுவரை தராமல் மோசடி செய்து வருகிறது. இந்த நிலையில், எஸ்.சி. எஸ்.டி. சட் டத்தின் கீழ் எங்கள் மீது போலீஸில் பொய்ப் புகார் கொடுத்துள்ள கோவிந் தன், ஐ.ஏ.எஸ். என்கிற கவசத்தை பயன்படுத்தி இன்னமும் எங்களை ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்'' என்கிறார் பிரேமநாயகம்.

""அவர்கள் சொல்வதெல்லாம் பொய். பிரச்சினை கோர்ட்டில் இருப்ப தால் கருத்துச் சொல்ல விரும்ப வில்லை'' என்கிறார் கோவிந்தன்.

Advertisment

-இளையர்