"தேசிய நெடுஞ்சாலைத்துறை நெல்லை கோட்டத்தில் உள்ள பொறியாளர்களின் வாட்ஸ்ஆப் குழுவில், தலைமைப் பொறியாளர் தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆய்வுக்கு வந்துள்ளதால் ரூ.10,000 வரை கொண்டுவரவும் என்ற தகவலைப் பகிர்ந்திருந்தார், தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை உதவிக் கோட்ட பொறியாளர் மோகனா' என சில தகவல்களைக் கொட்டினார்கள் அத்துறையினர்.
என்ன விவகாரம் இது?
தேசிய நெடுஞ்சாலை மதுரை வட்ட அலுவலக ஆய்வுப் பணிக்காக மதுரை வந்திருந்தார் தேசிய நெடுஞ்சாலை தலைமைப் பொறியாளர் பன்னீர்செல்வம். தேசிய நெடுஞ்சாலை கண்காணிப்பு பொறியாளரின் மதுரை அலுவலகத்தில் கூட்டம் நடைபெற்றது. தலைமைப் பொறியாளர் பன்னீர்செல்வத்தை அவருக்குக் கீழ் பணிபுரியும் பொறியாளர்கள் அப்படியெல்லாம் வெறுங்கையுடன் சந்தித்து விட முடியாது. அதனாலேயே, தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை உதவிக் கோட்ட பொறியாளர் மோகனா, அந்த ஜ்ட்ஹற்ள்ஹல்ல் குழுவில் வெளிப்படையாகவே உதவிப் பொறியாளர்கள
"தேசிய நெடுஞ்சாலைத்துறை நெல்லை கோட்டத்தில் உள்ள பொறியாளர்களின் வாட்ஸ்ஆப் குழுவில், தலைமைப் பொறியாளர் தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆய்வுக்கு வந்துள்ளதால் ரூ.10,000 வரை கொண்டுவரவும் என்ற தகவலைப் பகிர்ந்திருந்தார், தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை உதவிக் கோட்ட பொறியாளர் மோகனா' என சில தகவல்களைக் கொட்டினார்கள் அத்துறையினர்.
என்ன விவகாரம் இது?
தேசிய நெடுஞ்சாலை மதுரை வட்ட அலுவலக ஆய்வுப் பணிக்காக மதுரை வந்திருந்தார் தேசிய நெடுஞ்சாலை தலைமைப் பொறியாளர் பன்னீர்செல்வம். தேசிய நெடுஞ்சாலை கண்காணிப்பு பொறியாளரின் மதுரை அலுவலகத்தில் கூட்டம் நடைபெற்றது. தலைமைப் பொறியாளர் பன்னீர்செல்வத்தை அவருக்குக் கீழ் பணிபுரியும் பொறியாளர்கள் அப்படியெல்லாம் வெறுங்கையுடன் சந்தித்து விட முடியாது. அதனாலேயே, தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை உதவிக் கோட்ட பொறியாளர் மோகனா, அந்த ஜ்ட்ஹற்ள்ஹல்ல் குழுவில் வெளிப்படையாகவே உதவிப் பொறியாளர்களுக்கு ‘ஹின்ட்’ கொடுத்திருந்தார்.
யார் யார் எவ்வளவு
கொடுக்க வேண்டும்?
நெடுஞ்சாலைத்துறை பணிகள் மூலம் உதவி பொறியாளர் ஒருவர் முறைகேடாக எவ்வளவு சம்பாதிக்கிறாரோ, அதற்கேற்றாற்போல் தொகை நிர்ணயிக்கப்படுகிறது. ஒருவருடைய ஏரியாவில் ரூ.40 கோடிக்கு ஒப்பந்ததாரர் வேலை செய்து பில்லுக்குப் பணம் வாங்கினால், ஒரு சதவீதம் என்றால்கூட ரூ.40 லட்சம் வரை அவருக்கு பெர்சன்டேஜ் பணம் கிடைத்துவிடும். இப்படி சம்பாதிப்பவர்கள், தலைமைப் பொறியாளர் ஆய்வுக்கு வரும்போது அவருக்கு ஒரு பவுன் தங்கக் காசு கொடுத்தால் குறைந்து போய்விடமாட் டார்கள். இத்தகைய வில்லங்கமான கணக்கீட் டால்தான், கரன்சிகள் நிரப்பப்பட்ட கவர்களோ, தங்கக் காசுகளோ விலையுயர்த்த ஆடைகளோ, பழக்கூடைகளோ கொடுக்கப்படுகின்றன.
"இந்த அளவுக்கு ஓப்பனாக வாட்ஸ்ஆப் குழுவில், உதவி பொறியாளர்களை பணம் கொண்டுவரச் சொல்வது சரிதானா?''’என தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை உதவிக் கோட்ட பொறியாளர் மோகனாவிடம் கேட்டோம்
"வேற ஒண்ணும் இல்ல சார். எல்லாம் சாப்பாடு செலவுக்குத்தான். இங்கே நிறைய பேர் வந்திருக்கிறோம். இத்தனை பேருக்கு சாப்பாடு போடனுமே? என்ன செய்வதென்று நானே யோசித்துக்கொண்டு இருக்கிறேன். நான் அவ்வளவு பெரிய ஆளு இல்ல. வாங்க, வந்து மீட் பண்ணுங்க. எல்லோருக்கும் ஒரு வெஜிடேரி யன் மீல்ஸாவது தந்தா நல்லா இருக்கும்னு ஆளுக்கு ரூ.2000 போட்டு சாப்பாட்டு செலவை பார்த்துக் கொள்ளலாம்னு இருக்கோம். பன்னீர்செல்வம் சார் இப்பதான் எனக்கு அறிமுகம். சாருக்கு ஒரு ஆப்பிள கொடுத்துட்டு வாங்கன்னு சொல்லிட்டு நான் வெளியே வந்துட்டேன். அஞ்சு விரல் மாதிரி, ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு ஊர்ல இருந்து வந்திருக்காங்க. ஒவ்வொருத்தருடைய கருத்துகளும் வேற மாதிரி இருக்கு. இந்த வேலையைப் பாருங்கன்னா, அது இதும்பாங்க... மண்டை காயுது. நீங்க இப்படி கேட்கும்போது எனக்கு கண்ணு கலங்குற மாதிரி இருக்கு, வேற எதுவும் சொல்ல விரும்பல''” என்று போலியாகப் புலம்பினார்.
தேசிய நெடுஞ்சாலை தலைமைப் பொறியாளர் பன்னீர்செல்வத்தை தொடர்பு கொண்டோம். "இப்ப நான் ஒரு மீட்டிங்ல இருக்கேன். நீங்க சொல்ற மாதிரி யாரும் எனக்கு எதுவும் தரல. நான் வந்திருக்கிறது ஆபீஸ் இன்ஸ்பெக்சனுக்கு. இது ஒரு ரொட்டீன் இன்ஸ்பெக்சன். வேற ஒன்னுமில்ல. அந்த மாதிரி எதுவும் இல்ல. உங்களுக்கு கிடைச்ச தகவல் டோட்டலி ராங். என் கவனத்துக்கு கொண்டு வந்தததுக்கு தேங்க்ஸ் சார். ஐ வில் கரெக்ட் இட். ஆப்பிள் கொடுக்கிறதுதான் கஸ்டமரியா பண்ணுவாங்க... மற்றபடி எதுவும் இல்ல''’என்று சுரத்தில்லாமல் பேசினார்.
நெடுஞ்சாலைத்துறை நெல்லை -கட்டு மானம் மற்றும் பராமரிப்பு கண்காணிப்புப் பொறியாளர் அலுவலக ஆய்வுக்கு வந்த தலை மைப் பொறியாளர் சத்தியபிரகாஷ் பொறியாளர் கள் மத்தியில் பேசும்போது, "உங்க இஷ்டத்துக்கு நிர்வாக அனுமதி எதுவும் வாங்காம பில் போட்டு நீங்க சம்பாதிச்சுட்டு போயிருவீங்க. அதை நான் சரி செய்யணுமா? எனக்கு என்ன வந்திருக்கு?''’என எரிந்து விழுந்தார்.
கூட்டம் முடிந்ததும் வெளியேறிய பொறியாளர்களில் சிலர் "நெடுஞ்சாலைத்துறை ஊழல் சம்பந்தமா நக்கீரன்ல செய்தி வந்துச்சு. விசாரணை நடந்துச்சு. நிர்வாக அனுமதி இல்லாம வேலை உத்தரவு வழங்கி பணம் சுருட்டுனது உறுதியாச்சு. அதை சரிபண்ண தவறு செய்த பொறியாளர்கள் தவியா தவிக்கிறாங்க. ஆனா.. வெட்கம் இல்லாம கோல்ட் காயின் வாங்கிட்டு யோக்கியன் மாதிரி பேசுறாரு தலைமைப் பொறியாளர் சத்தியபிரகாஷ்''’என்று புலம்பியிருக் கிறார்கள்.
நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு தலைமைப் பொறியாளர் சத்தியபிரகாஷை தொடர்புகொண்டோம். "என்னைப் பத்தி உங்களுக்கு தகவல் கொடுத்தது யாருன்னு சொல்லுங்க. அவங்கள என்கிட்ட பேசச் சொல்லுங்க. நீங்க கேட்கிற கேள்விக்கு போன்ல எல்லாம் பதில் தரமுடியாது''’என்று தொடர்பினைத் துண்டித்தார்.
"சேர்ந்தே இருப்பது, பிரிக்க முடியாதது -நெடுஞ்சாலைத்துறையும் ஊழலும்..'’என்று சீரியஸாகவே சொல்கிறார்கள்.