சூரப்பாவால் பறிபோன இட ஒதுக்கீடு வேடிக்கை பார்க்கும் அ.தி.மு.க.

aa

ம்.பி.சி. பிரிவைச் சார்ந்த வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கி சமூகநீதியை நிலைநாட்டியதாக பெருமை அடித்துக் கொள்ளும் அ.தி.மு.க. அரசு, தமிழக அரசின் நிதியுதவியில் நடத்தப்படும் பல்கலைக்கழகங்களில் 69 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்தாமல் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.வின் 49.5 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்தி பிற்படுத்தப் பட்ட மற்றும் பட்டியல் இன மக்களுக்கு துரோகம் செய்திருக்கிறது. மேலும், உயர்சாதியினருக்கு வழங்கப்படும் 10 சதவீத இட ஒதுக்கீட்டையும் அமல்படுத்தி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினர் குழுவில்கூட விவாதிக்காமல் தன்னிச்சையாக அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா முடிவெடுத்திருப்பதும் அதுகுறித்து அ.தி.மு.க.வாய் திறக்காமல் இருப்பதும் நம் விசாரணையில் தெரியவந்தது.

surappa

இதுதொடர்பாக, சட்டப்போராட்டத்தில் ஈடுபட்டுவரும் முதுநிலை மாணவர் தமிழ்நாசர் நம்மிடம், ""தமிழக அரசின் 69 சதவீத

ம்.பி.சி. பிரிவைச் சார்ந்த வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கி சமூகநீதியை நிலைநாட்டியதாக பெருமை அடித்துக் கொள்ளும் அ.தி.மு.க. அரசு, தமிழக அரசின் நிதியுதவியில் நடத்தப்படும் பல்கலைக்கழகங்களில் 69 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்தாமல் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.வின் 49.5 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்தி பிற்படுத்தப் பட்ட மற்றும் பட்டியல் இன மக்களுக்கு துரோகம் செய்திருக்கிறது. மேலும், உயர்சாதியினருக்கு வழங்கப்படும் 10 சதவீத இட ஒதுக்கீட்டையும் அமல்படுத்தி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினர் குழுவில்கூட விவாதிக்காமல் தன்னிச்சையாக அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா முடிவெடுத்திருப்பதும் அதுகுறித்து அ.தி.மு.க.வாய் திறக்காமல் இருப்பதும் நம் விசாரணையில் தெரியவந்தது.

surappa

இதுதொடர்பாக, சட்டப்போராட்டத்தில் ஈடுபட்டுவரும் முதுநிலை மாணவர் தமிழ்நாசர் நம்மிடம், ""தமிழக அரசின் 69 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்தமாட்டேன் என்றும் மத்திய அரசின் 49.5 சதவீத இட ஒதுக்கீட்டைத்தான் அமல்படுத்துவேன். இல்லையென்றால், எம்.டெக் பயோடெக்னாலஜி மற்றும் எம்.டெக் கம்யூடேஷனல் டெக்னாலஜி உள்ளிட்ட படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையையே நிறுத்தப் போவதாக துணைவேந்தர் சூரப்பா தன்னிச்சையாக அறிவித்ததால் சித்ரா, குழலி, விக்ரம், ராஜேஷ், யுவஸ்ரீ, ஹரிணி உள்ளிட்ட மாணவர்கள் வழக்கு தொடுத்தார்கள். இதில், அண்ணா பல்கலைக்கழக வழக்கறிஞர், யு.ஜி.சி. வழக்கறிஞர் உள்ளிட்டவர்கள் மத்திய அரசால் நிதி ஒதுக்கப்படும் படிப்புகள் (centrally funded courses) என்று தவறான தகவல்களை கொடுத்துவிட்டார்கள். பயோடெக்னாலஜி துறையோ சப்போர்ட் டிங் புரோகிராம் என்கிற அடிப்படையில் அதிகபட்சமாக 60 லட்ச ரூபாய்தான் ஸ்காலர்ஷிப்பாக வழங்குகிறார்கள்.

தமிழக அரசு வழக்கறிஞர் முறையாக நீதிமன்றத்தில் விவாதிக் காததால்தான் மத்திய அரசின் 49.5 சதவீத இட ஒதுக்கீட்டை அமல் படுத்தவேண்டும் என்று தீர்ப்பளிக்கப்பட்டது. அப்படியே, இருந் தாலும்கூட 49.5 சதவீத இட ஒதுக்கீடு பின்பற்றும்போது கூடுதலாக 10 சதவீத உயர்சாதிகளுக்கான இட ஒதுக்கீட்டை பின்பற்றச்சொல்லி துணைவேந்தர் சூரப்பாவுக்கு அதிகாரம் கொடுத்தது யார்? தமிழக அரசு நினைத்தால் மத்திய அரசின் பயோடெக்னாலஜி துறை வழங்கும் ஸ்காலர்ஷிப் தேவையில்லை என்று சொல்லிவிட்டு தமிழக அரசின் 69 சதவீத இட ஒதுக்கீட்டை எந்த தடையும் இல்லாமல் அமல்படுத்தலாம்.

surappa

தவறான பொய்யான தகவல்களால் தமிழக அரசு கடைப் பிடித்துவந்த 69 சதவீத இட ஒதுக்கீடு அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் கோவை பாரதியார் பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் ஆகிய நான்கு பல்கலைக்கழகங்களில் பறிபோயிருக்கிறது. குறிப்பாக, பி.சி. மாணவர்கள், பி.சி. முஸ்லீம் மாணவர்களுக்கு வழங்கப்படும் 3.5 சதவீதம், எம்.பி.சி.யிலுள்ள 20 சதவீதம், எஸ்.சி.யில் 3 சதவீதம், எஸ்.சி. அருந்ததிக்கு வழங்கப்பட்ட 3 சதவீதம் இட ஒதுக்கீடுகள் பறிக்கப்பட்டதோடு தமிழக மாணவர்களைவிட வடமாநில மாணவர்களே அதிகமாக இப்படிப்பில் சேரும் வகையில் மத்திய பா.ஜ.கவின் 49.5 இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டிருக்கிறது'' என்று வேதனையோடு சுட்டிக்காட்டுகிறார்.

இதுகுறித்து பிரபல கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபுவிடம் நாம் கேட்டபோது, “""பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு பா.ஜ.க. அரசு செய்த மாபெரும் துரோகம். அப்படிப்பட்ட, துரோக கூட்டணியில் இன்னும் எப்படி பா.ம.க. தொடர்ந்துகொண்டி ருக்கிறது? பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் இட ஒதுக்கீட்டை அமல்படுத்தாத துணைவேந்தர் சூரப்பா, 10 சதவீத உயர் சாதிக்கான இட ஒதுக்கீட்டை மட்டும் அமல்படுத்த அனுமதி கொடுத்தது யார்? சிண்டிகேட் உறுப்பினர்களிடம் விவாதித்து எடுக்கப்பட்டதா?''’என்று கேள்வி எழுப்புகிறார்.

அண்ணா பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினரும் மயிலாப்பூர் தொகுதி எம்.எல்.ஏவுமான நட்ராஜிடம் நாம் கேட்ட போது, “""இதுகுறித்து விவாதித்ததுபோல் தெரியவில்லை''’என்றார்.

surappa

தமிழக உயர்கல்வித்துறை செயலாளர் அபூர்வா ஐ.ஏ.எஸ்.ஸை தொடர்புகொண்டு நாம் கேட்டபோது, ""துணைவேந்தர் சூரப்பா தன்னிச்சையாக முடிவெடுத்துள்ளார். இதுகுறித்து, பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினர்களிடம் எந்தவிதமான விவாதமும் அவர் செய்யவில்லை''’’ என்றார் உறுதியாக.

அப்படியென்றால், தமிழக அரசின் நிதியில் இயங்கும் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் சூரப்பா மீது அரசு நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏன்? என்று பல்கலைக்கழக பேராசிரியர் மத்தியில் நாம் விவாதித்தபோது, “""துணைவேந்தர் சூரப்பா மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் பல்கலைக்கழக வேந்தரும் ஆளுநருமான பன்வாரிலால் புரோகித்துக்குத்தான் இருக்கிறது. பா.ஜ.க. சப்போர்ட்டில் சூரப்பா இருப்பதால் ஆர்.எஸ்.எஸ் வழக்கறிஞர்களை வைத்துக்கொண்டு நீதிமன்றத்தில் ஆட்டம் போடுகிறார். தமிழக அரசும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது''’’ என்கிறார்கள் குற்றச்சாட்டாக.

nkn130321
இதையும் படியுங்கள்
Subscribe