Advertisment

மீட்புக் குழுவா? பறிக்கும் குழுவா? -பஞ்சமிநில சர்ச்சை!

ss

வேலியே பயிரை மேய்ந்த கதையாக, அரசு பஞ்சமி நில மீட்புக் குழு அமைத்தால், அவர்கள் நிலத்தை மீட்டுக்கொடுக்காமல், பஞ்சமி நிலத்தை கண்டுபிடித்து அபகரிப்பதாகப் புகாரெழுந்துள்ளது.

Advertisment

தமிழகத்தில் எஸ்.சி., எஸ்.டி. மக்களுக்காக வழங்கப்பட்ட 14 வகையான நிபந்தனைக்கு உட்பட்ட நிலம் 2 லட்சம் ஏக்கர் உள்ளது. இவையெதுவும் தற்போது அந்த மக்களிடம் இல்லை. அந்த பஞ்சமி நிலத்தை மீட்டெடுத்து மீண்டும் அந்த மக்களுக்கு வழங்கவேண்டும் என்று நாகர்சேனையின் தலைவர் அருங்குணம் வினாயகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். அதன்பேரில், தலைமை நீதியரசர் சஞ்சய்கிஷன்கௌல், நீதியரசர் சிவஞானம் ஆகியோர் அடங்கிய அமர்வு, அரசு தலைமைச் செயலாளர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் முதன்மைச் செயலாளர் ஆகியோர் அடங்கிய பஞ்சமி நிலமீட்பு மத்தியக் குழுவை அமைத்து, அதிகபட்சமாக ஆறுவார காலத்திற்குள் பஞ்சமி நிலங்களை மீட்டு மக்களிடம் ஒப்படைக்கவேண்டுமென 12-08-15 அன்று உத்தரவிட்டது.

Advert

l

அதன்பேரில் தலைமைச் செயலாளர் ஞானதேசிகன் 8.10.15 அன்று அரசு ஆணை நிலை எண் 357-ன் கீழ் பஞ்சமர் நிலமீட்பு மத்தியக் குழுவின் தலைவராக நில நிர்வாக ஆணையர் கிரிஜா வைத்தியநாதனைத் தலைவராகவும், ஆதி திராவிடர் செயலாளர் மற்றும் அரசு வருவாய் செயலாளர் ஆகியோரை உறுப்பினராகவும் செயல்பட ஆணை பிறப்பித்தார். 2021-ஆம் ஆண்டு நில நிர்வாக ஆணையர் நாகராஜ் இந்த குழுவுக்குத் தலைவராக இருந்தபோது பஞ்சமி நிலத்தை மீட்டுக் கொடுக்காமல், இவர் புது அரசாணை பிறப்பித்து நிலத்தை தனியாருக்கு தாரைவார்த்துள்ள சம்பவம் பெரும் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது.

ஈரோடு மாவட்டம் சூரியம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் பெத்தப்பறையன். 06-03-1924ஆம் ஆண்டு ரிஜிஸ்டர் எண் 29/024, 4 ஏக்கர் 73 சென்ட் நிலம் இவருக்கு இருந்துள்ளது. இந்த இடத்தை பெத்தப்பறையன் வாரிசான முத்தாள், பாவாயி சேர்ந்து ராமர் பண்ணாடி மகனான ரங்கசாமிக்கு விற்பனை செய்துள்ளனர். அந்த இடத்தை ரங்கசாமி, தேவி காட்டன் மில் உரிமையாளரான பூசப்பனுக்கு விற்பனை செய்துள்ளார். விற்பனை செய்த ரங்கசாமி எஸ்.சி, வாங்கியவர் மாற்றுசமூகத்தினர் என்பதால் இந்த இடம் வாங்கியது செல்லாது என சமூக ஆர்வலர்கள் போராடியதன் விளைவாக அப்போதைய டி.ஆர்.ஓ., இந்த இடம் பஞ்சமி நிலம், இது தவறுதலாக பதியப்பட்டுள்ளது என நிரூபித்து அந்த இடத்தை அரசு புறம்போக்காக மாற்றியுள்ளார்.

வருவாய் நிலை ஆணை 15/41 என்ன சொல்கிறது என்றால், இதுபோன்ற நிலங்களை மீளப்பெற்று அந்த வாரிசிடமே ஒப்படைக்க வேண்டும். அப்படி யாரும் இல்லாதபட்சத்தில் அந்த இடத்தை ஆதிதிராவிட அனாதீனமாக மாற்றவேண்டும்.

ஆனால் டி.ஆர்.ஓ. அந்த இடத்தை புறம்போக்காக மாற்றிய பிறகு, அந்த இடம் எங்களுக்குச் சொந்தமானது. அதை எப்படி நீங்கள் புறம்போக்காக மாற்ற முடியும்? என்று தேவி மில்லைச் சேர்ந்த முத்துசாமி என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். 2019-ல் பஞ்சமி நிலம் என்பதால் அந்த இடத்தை மீண்டும் 15 நாட்களில் அந்த மக்களுக்கே கொடுக்கவேண்டும் என தீர்ப்பாகியது.

நிலத்தை வாங்கிய பூசப்பன் வழக்கு தொடுக்காமல், அதற்குமாறாக தேவி காட்டன் நிர்வாக இயக்குனர் என்று மேல்முறையீட்டுக்குச் சென்றவர், ஆர்த்திகா காட்டனின் வாட்ச்மேன் கே.முத்துசாமி என்று தெரியவருகிறது. அந்தப் பகுதியில் விசாரித்ததில், இந்த தேவி காட்டன் எப்போதோ சென்றுவிட்டது. அங்கே அரசு அகதிகள் முகாம் நடத்தி வந்ததாகவும், காலப்போக்கில் அந்த அகதிகள் முகாம் இடத்தை பக்கத்திலிருந்த ஆர்த்திகா காட்டன் மில் கைப்பற்றியதாகவும் சொல்கிறார்கள். தற்போதைய நிலையில் தேவி மற்றும் ஆர்த்திகா இரண்டும் ஒன்றுதான் என்கிறார்கள்.

ll

மேல்முறையீட்டுக்கு சென்றபிறகு பல கேள்விகளுக்குப் பதில் கொடுக்கமுடியாத இவர்கள், அரசுடன் இணைந்து திட்டம் போட்டு, பிரச்சனைக்குரிய பஞ்சமி நிலத்துக்குப் பதிலாக அதே அளவுக்கு மாற்று இடம் கொடுப்பதாக மாவட்ட ஆட்சியர் நீதிமன்றத்தில் ஒப்புதல் கொடுத்ததன் பேரில் ஆர்த்திகா காட்டன், அந்த இடத்திற்குப் பதிலாக 1 ஏக்கர் பெறுமானமுள்ள நிலத்தை மாற்று இடமாக பெற்றுக்கொண்டது.

பஞ்சமி நிலத்தை மீட்டுக் கொடுக்கவேண்டிய பஞ்சமி நில மத்தியக் குழு தலைவரே இப்படி நிலங்களை தாரைவார்த்து வருவ தற்கு எதற்கு கமிட்டி? கலைத்து விடலாமே என பலரும் கேள்வி யெழுப்புகின்றனர்.

இதுகுறித்து அப்போதைய பஞ்சமி நில மீட்புக்குழு தலைவர் நாகராஜிடம் கேட்டபோது பேச மறுத்துவிட்டார். ஆர்த்திகா காட்டனோ, "“முடிந்த விவ காரத்தை ஏன் மீண்டும் கேட் கிறீங்க? அரசு சொன்னபடி செய்துள்ளோம்' என்றனர்.

இதுகுறித்து பேசிய அருங்குணம் வினாயகம், “"இந்த கொடுமை ஈரோட்டில் மட்டுமில்லை, திருவள்ளூரில் உள்ள ராயல் என்பீல்ட், அரக்கோணத்தில் ஹூண்டாய் கார் நிறுவனம், தர்மபுரியில் எடப்பாடியின் பினாமி, இப்படி தமிழகம் முழுவதும் பஞ்சமி நிலங்களை ஆக்கிரமித்துள்ளார்கள். மீட்புக் குழு தலைவரே இந்த பஞ்சமி நில அபகரிப்புக்குத் துணை போகலாமா? மக்களை ஏமாற்றமல் கமிட்டியை கலைத்துவிடுவது நல்லது''’என்றார்.

கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் நடந்த இந்த முறைகேட்டுக்கு தி.மு.க. ஆட்சியிலாவது தீர்வு காணப்படுமா?

nkn011123
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe