Advertisment

செய்தியாளர்கள் பிடியில் நகராட்சி! -போஸ்டிங்கில் கல்லா கட்டும் மாஜி!

cc

ருப்புக் கோட்டை நகர்மன்றத் தலைவர் சுந்தரலட்சுமி என்றாலும், முன்னாள் நகர்மன்றத் தலைவரும் அவருடைய கணவருமான சிவப்பிரகாசம் அசைவில்தான் எல் லாம் நடக்கிறது. இந்த இருவரையும் கடந்து, செய்தியாளர்கள் இருவர் பிடியில் மொத்த நகராட்சியும் சிக்கியிருக்கிறது. இவ்விருவர் சொல்வது மட்டுமே நகராட்சியில் நட

ருப்புக் கோட்டை நகர்மன்றத் தலைவர் சுந்தரலட்சுமி என்றாலும், முன்னாள் நகர்மன்றத் தலைவரும் அவருடைய கணவருமான சிவப்பிரகாசம் அசைவில்தான் எல் லாம் நடக்கிறது. இந்த இருவரையும் கடந்து, செய்தியாளர்கள் இருவர் பிடியில் மொத்த நகராட்சியும் சிக்கியிருக்கிறது. இவ்விருவர் சொல்வது மட்டுமே நகராட்சியில் நடக்கிறது. சிவப் பிரகாசத்தை இயக்கு வதும் இவர்கள்தான் என்று உ.பி.க்கள் மத்தியிலும் பேச்சு அடிபடுகிறது.

Advertisment

cc

நகராட்சி மூலம் ‘சம்திங்’ பார்க்கும் வேலையை, செய்தி யாளர் ஒருவர் பின்னால் இருந்து முடுக்கிவிடுவதும், இன்னொரு செய்தி யாளர் அதனை முன்னின்று செயல் படுத்துவதும், செய்தி யாளர்கள் வட்டாரத் திலேயே அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. அதனால், அந்த இரு வரைவிட்டு விலகியே இருக்கிறார்கள் அருப்புக் கோட்டை செய்தியாளர்கள்.

அருப்புக்கோட்டை நகராட்சியில், போடாத போஸ்டிங்குக்கு வசூல் பண்ணும் வேலைகளும் ஜரூராக நடக்கின்றன. ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் சேர்மனாகவே தன்னைப் பாவித் துக்கொள்கிறவர், போஸ்டிங் விஷயத்தில் கிட்டத் தட்ட கோடிகளில் குவித்து விட்டார். 36 வார்டுகளிலும் சொத்துவரி உயர்வில் கணிசமான தொகை பார்த்துவிட்டனர். ஸ்வீப்பர் பணிக்கு ரூ.7 லட்சம் தொடங்கி, கிளார்க், ஜூனியர் அசிஸ்டன்ட், பியூன் என 20 பேருக்கு போஸ்டிங் உருவாக்கி ரூ.20 லட்சத்திலிருந்து ரூ.30 லட்சம் வரையிலும் வாங்கியிருக் கின்றனர். சென்னையில் ஒப்புதல் பெறத் தாமதமாகும் எனச் சொல்லி, பெரிய லெவலில் கலெக்ஷன் ஓடிக் கொண்டிருக்கிறது. அதிலும், குறிப்பிட்ட செய்தியாளர் ஒருவரது ஆதிக்கம், அருப்புக்கோட்டை நகராட்சியை கிடுகிடுக்க வைக்கிறது எனப் புலம்பு கின்றனர், நகர்மன்ற வட்டாரத்தில்.

nkn100822
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe