வாடகை பாக்கி! மாநகராட்சியின் பலே பேனர் ஐடியா! -திருவண்ணாமலை திகு திகு!

ss

திருவண்ணாமலை மாநகராட்சிக்கு சொந்தமாக மத்திய பேருந்து நிலையத்தி லுள்ள கடைகளில் அதிக வாடகை பாக்கி வைத்திருப்பவர்களின் விவரத்தை பேருந்து நிலையத்தின் முன்பாக பேனராக வைத்து அதிர்ச்சி வைத்தியம் தந்துள்ளது மாநக ராட்சி நிர்வாகம்! அடுத்த சில நாட்களில் பேனர் கழற்றப்பட்டது மேலும் பரபரப்பாகியது.

tt

பேருந்து நிலையத்திலுள்ள கடைகளில் 74,69,325 ரூபாய் மாநகராட்சிக்கு வாடகை பாக்கி வைத்து முதலிடத்திலிருப்பது ஆகாஷ் ஹோட்டல் முத்துகிருஷ்ணன். 22,11,557 ரூபாய் பாக்கியோடு இரண்டாமிடத்தில் அகர்வால் ஸ்வீட்ஸ் ஏழுமலை. மூன்றாமிடத்தில் ஃபைவ் ஸ்டார் பிரியாணி அசேன்பாஷா 21,78,084 ரூபாய் பாக்கி. இதில், திருவண்ணாமலை தி.மு.க. தெற்கு மாவட்ட துணைச்செயலாளர் விஜயரங்க னின் ப்ரியா ஹோட்டல் பாக்கி 19.50 லட்சம். அ.தி.மு.க. மாநகர கவுன்சிலர் அஸ்வினி ஹோட்டல் நரேஷ் 7.88 லட்சம் என வரிசையாக ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி பாகு பாடில்லாமல் வாடகை பாக்கி வைத்துள்ள 23 பேர்களின் பெயர்களை பேனர

திருவண்ணாமலை மாநகராட்சிக்கு சொந்தமாக மத்திய பேருந்து நிலையத்தி லுள்ள கடைகளில் அதிக வாடகை பாக்கி வைத்திருப்பவர்களின் விவரத்தை பேருந்து நிலையத்தின் முன்பாக பேனராக வைத்து அதிர்ச்சி வைத்தியம் தந்துள்ளது மாநக ராட்சி நிர்வாகம்! அடுத்த சில நாட்களில் பேனர் கழற்றப்பட்டது மேலும் பரபரப்பாகியது.

tt

பேருந்து நிலையத்திலுள்ள கடைகளில் 74,69,325 ரூபாய் மாநகராட்சிக்கு வாடகை பாக்கி வைத்து முதலிடத்திலிருப்பது ஆகாஷ் ஹோட்டல் முத்துகிருஷ்ணன். 22,11,557 ரூபாய் பாக்கியோடு இரண்டாமிடத்தில் அகர்வால் ஸ்வீட்ஸ் ஏழுமலை. மூன்றாமிடத்தில் ஃபைவ் ஸ்டார் பிரியாணி அசேன்பாஷா 21,78,084 ரூபாய் பாக்கி. இதில், திருவண்ணாமலை தி.மு.க. தெற்கு மாவட்ட துணைச்செயலாளர் விஜயரங்க னின் ப்ரியா ஹோட்டல் பாக்கி 19.50 லட்சம். அ.தி.மு.க. மாநகர கவுன்சிலர் அஸ்வினி ஹோட்டல் நரேஷ் 7.88 லட்சம் என வரிசையாக ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி பாகு பாடில்லாமல் வாடகை பாக்கி வைத்துள்ள 23 பேர்களின் பெயர்களை பேனரில் குறிப்பிட்டது மாநகராட்சி நிர்வாகம். மொத்த பாக்கி 3.35 கோடி! இவர்களுக்கு கடந்த 2024, மே மாதம் முதல் கடந்த ஜனவரி 2ஆம் தேதி வரை 5 முறை நோட்டீஸ் தந்தும் வாடகை செலுத்தவில்லையாம். வாடகை செலுத்தவில்லை என்றால் கடைகளுக்கு சீல் வைக்கப்படும், மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும், மறுஏலம் விடப்படும் என எச்சரிக்கை விடுத்திருந்தனர். அதன்பிறகு தான் இந்த பேனர் நடவடிக்கை.

இது குறித்து நம்மிடம் பேசிய சமூக ஆர்வலர் ஒருவர், "வாடகை பாக்கியில் முதலிடத்திலுள்ள ஆகாஷ் முத்துகிருஷ்ணன், திருவண்ணாமலை மாநகரத்தில் நட்சத்திர ஹோட்டல்கள் நடத்திவருகிறார். அ.ம.மு.க. டி.டி.வி.தினகரனின் நெருங்கிய நண்பர். இவரது ஹோட்டலில் மட்டும் தினமும் லட்சங்களில் வியாபாரம் நடக்கிறது. ப்ரியா விஜயரங்கனின் ஹோட்டல், ஃபைவ் ஸ்டார் பிரியாணி ஹோட்டல், சக்தி பழச்சாறகத்தில் காலை முதல் நள்ளிரவு வரை வியாபாரம் படுஜோராக நடக்கின்றது. நல்ல வருமானம் பார்க்கும் இவர்களே வாடகை தராமலிருப்பது எவ்விதத்தில் நியாயம்? சில ஆயிரம் வீட்டு வரி, குடிநீர் வரி கட்டலைன்னா தெருவில் பொது மக்களிடம் கேள்வி கேட்டு அசிங்கப்படுத்த றாங்க. பல லட்சங்கள் பாக்கி வச்சிருக்கும் இவங் களுக்கு மட்டும் சலுகைகள் தர்றாங்க'' என்றார்.

பேனர் வைத்து தங்களை அவமானப் படுத்திவிட்டதாக அரசியல் ரீதியாக மேயர், ஆணை யாளருக்கு கடுமையாக நெருக்கடி தந்து அந்த பேனரை எடுக்கச்செய்தது இன்னும் பரபரப்பாகியுள் ளது. இதுகுறித்து மத்திய பேருந்து நிலைய வாடகைக் கடைக்காரர்கள் சங்கத்தின் பொருளாளர் அகர்வால் ஏழுமலையிடம் கேட்டபோது, "2016ஆம் ஆண்டு அப்போது நகராட்சி கமிஷனராக இருந்த பெண்மணி, ஒவ்வொரு கடையாகப் பார்வையிட்டு, வாய்க்கு வந்ததை வாடகையாக நிர்ணயித்து உயர்த்தினார். மூன்றாயிரம் ரூபாய் வாடகையாயிருந்தது, 25 ஆயிரமானது. அதாவது 10 மடங்கு வாடகை உயர்ந்தது. அதுமட்டுமல்ல, 3 ஆண்டுக்கு ஒருமுறை 15 சதவிகித வாடகை உயர்வு செய்யப் படும் என்றார்கள். அப்படி உயர்த்தப்பட்ட வாடகையை குறைக்கச்சொல்லி முறையிட் டோம், அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. அப்போதைய இந்த தொகுதி எம்.எல்.ஏ.வும், இப்போது அமைச்சராகவும் உள்ள எ.வ.வேலு விடம் முறையிட்டோம். அவர் போராட்டம் செய்தார்... அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. பல நகராட்சிகளில் நீதிமன்ற உத்தரவுப்படி வாடகையைக் குறைத்தார்கள். நாங்களும் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தோம், அந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

tt

தேர்தலின்போது ஆட்சிக்கு வந்து 100 நாட்களில் எங்கள் பிரச்சனையைத் தீர்ப்பதாக வாக்குறுதி தந்தார்கள். ஆட்சி மாற்றத்துக்குப் பின் அமைச்சர், அதிகாரிகளை பலமுறை சந்தித் தோம். இரண்டு ஆண்டுக்கான வாடகையை மட்டும் செலுத்தாமல் நிறுத்திவிட்டு மற்றவற்றை கட்டச்சொன்னார்கள், அதனையும் செலுத்திவருகிறோம். வாடகையை சீரமைப்பு செய்ய, அதிகாரிகள், கடைக்காரர்கள் அடங்கிய குழுவை அமைத்து அரசாணை பிறப்பித்தது அரசு. அந்த குழுவை அமைக்கா மல் அதிகாரிகள் இழுத்தடித்துவந்தார்கள். அந்த ஆணை நகராட்சியாக இருக்கும்போது பிறப்பித்தது, இப்போது இது மாநகராட்சி யாகிவிட்டதால் இதை நடைமுறைப்படுத்த முடியாது என்கிறார்கள். வழக்கு நீதிமன்றத்தில் இருந்தாலும் இப்போதும் வாடகை செலுத்திக் கொண்டுதான் இருக் கிறோம்'' என்றார்.

மாநகராட்சி ஆணை யாளர் காந்திராஜனிடம் கேட்டபோது, "மாநகராட்சிக்கு சொந்தமாக 400 சொச்சம் கடைகள் உள்ளன. மொத்தமாக 17 கோடி ரூபாய் வாடகை பாக்கி உள்ளது. 5 மடங்கு வாடகை உயர்வு செய்யப்பட்ட கடைகள் எதுவெனக் கண்டறிந்து அதனைக் குறைப்பதற்காக குழு அமைக்கச்சொல்லியே அரசாணை வெளியிடப்பட்டது. பேருந்து நிலையம், பூ மார்க்கெட்டில் உள்ள கடைகளில் 17 கடைகளுக்கு மட்டுமே 5 மடங்குக்கு அதிகமான வாடகை உயர்வில் உள்ளது. இந்த 17 கடைகளின் வாடகைக் குறைப்பு சம்பந்தமாக துறைக்கு கடிதம் அனுப்பியுள்ளோம். நகராட்சி, மாநகராட்சியானதால் இதன் நிர்வாகம் வேறு மாதிரி செயல்படும். அதிக வாடகை பாக்கி வைத்திருப்பவர்கள் அதனைச் செலுத்த ஒரு மாதம் அவகாசம் கேட்டுள்ளதால் பேனர் எடுக்கப்பட்டது'' என்றார்.

வாடகைப்பணம் வசூலானால் சரி!

nkn250125
இதையும் படியுங்கள்
Subscribe