Advertisment

ஆக்கிரமிப்பு அகற்றம்! பரிதவிக்கும் வியாபாரிகள்! -பழனி களேபரம்!

ss

றுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணியை தினசரி ஆயிரக்கணக்கான முருக பக்தர்கள் தரிசித்துவிட்டுச் செல்கிறார்கள். இப்படி வரும் பெரும்பாலான முருக பக்தர்கள் அடிவாரத்தைச் சுற்றி கிரிவலம் வருவது வழக்கம். தைப்பூசம், பங்குனி உத்திரம் காலங்களில் அளவுக்கு அதிகமான முருக பக்தர்கள் பாத யாத்திரை யாகவும், காவடி பால்குடம் எடுத்தும் வரும்போது கிரிவல வீதிகளில் உள்ள ஆக்கிரமிப்புக் கடைகளால் பக்தர்கள் பெரும் சிரமப்படுகின்றனர்.

Advertisment

palani

இந்த நிலையில் பழனி யைச் சேர்ந்த சமூக ஆர்வலரான ராதாகிருஷ்ணன் என்பவர் பழனி அடிவாரத்திலுள்ள கிரிவல வீதி ஆக்கிரமிப்புக் கடைகளை அகற்றவேண்டும் என மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஓய்வுபெற்ற நீதிபதி பாரதிதாசன் தலைமையில் ஆக்கிரமிப்புக் கடைகளை ஆய்வு செய்ய ஒரு கண்காணிப்புக் குழுவை கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு மதுரை உயர்நீதிமன்றம் அமைத்தது. இந்த விசயம் கோயில் நிர்வாகத்திற்கும், நகராட்சிக்கும் தெரியவே உடனே போலீஸ் பாதுகாப்புடன் கிரிவல வீதியிலுள்ள சாலை

றுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணியை தினசரி ஆயிரக்கணக்கான முருக பக்தர்கள் தரிசித்துவிட்டுச் செல்கிறார்கள். இப்படி வரும் பெரும்பாலான முருக பக்தர்கள் அடிவாரத்தைச் சுற்றி கிரிவலம் வருவது வழக்கம். தைப்பூசம், பங்குனி உத்திரம் காலங்களில் அளவுக்கு அதிகமான முருக பக்தர்கள் பாத யாத்திரை யாகவும், காவடி பால்குடம் எடுத்தும் வரும்போது கிரிவல வீதிகளில் உள்ள ஆக்கிரமிப்புக் கடைகளால் பக்தர்கள் பெரும் சிரமப்படுகின்றனர்.

Advertisment

palani

இந்த நிலையில் பழனி யைச் சேர்ந்த சமூக ஆர்வலரான ராதாகிருஷ்ணன் என்பவர் பழனி அடிவாரத்திலுள்ள கிரிவல வீதி ஆக்கிரமிப்புக் கடைகளை அகற்றவேண்டும் என மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஓய்வுபெற்ற நீதிபதி பாரதிதாசன் தலைமையில் ஆக்கிரமிப்புக் கடைகளை ஆய்வு செய்ய ஒரு கண்காணிப்புக் குழுவை கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு மதுரை உயர்நீதிமன்றம் அமைத்தது. இந்த விசயம் கோயில் நிர்வாகத்திற்கும், நகராட்சிக்கும் தெரியவே உடனே போலீஸ் பாதுகாப்புடன் கிரிவல வீதியிலுள்ள சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றியதுடன், ஆக்கிரமிப்புக் கடைகளையும் ஜே.சி.பி. மூலம் இடித்துத்தள்ளினார்கள்.

சிறு வியாபாரிகள் முதல் பெரும் வியாபாரிகள் வரை இந்த திடீர் ஆக்கிரமிப்பு அகற்றத்தால் ரோட்டில் நின்று கதறித்துடித்தனர். போலீஸ் துணையுடன் ஒட்டுமொத்த ஆக்கிரமிப்பையும் அதிகாரிகள் அகற்றினார்கள். மறுநாள் ஐகோர்ட் உத்தரவுப்படி ஓய்வுபெற்ற நீதிபதியான பாரதிதாசன் தலைமையிலான குழுவுடன் மாவட்ட கலெக்டர் பூங்கொடி, மாவட்ட எஸ்.பி. பிரதீப் ஆகியோர் ஆக்கிரமிப்பு அகற்றிய இடங்களை ஆய்வு செய்துவிட்டுச் சென்றனர்.

Advertisment

"காலங்காலமாகவே படியேறும் பகுதிகளிலும், கிரிவல வீதிகளிலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு வியாபாரிகளும், பெருவியாபாரிகளும் பழங்கள், சூடம், பத்தி, சாமிக்கயிறு, முருகனின் நேர்த்திக்கடன் பொருட்கள், அலங்காரப் பொருட்கள், பஞ்சாமிர்தம் இப்படி பல பொருட்களை வியாபாரம் செய்துவருகிறோம். அதுவும் வருடத்திற்கு மூன்று மாதம்தான் முருக பக்தர்கள் கூட்டம் அதிகமாக வரும். அதன்மூலம் வருமானம் கிடைக்கும். மற்ற மாதங்களில் வியாபாரம் சரிவர இல்லாததால் தினசரி கஞ்சி குடிப்பதே சிரமம்தான். அப்படியிருக்க, எங்கள் வயிற்றில் அடிக்கவேண்டும் என்ற நோக்கத்தில் ராதாகிருஷ்ணன் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்ததன்பேரில் கடைகள் எல்லாம் இடிக்கப்பட்டு வியாபாரிகள் எல்லாம் நடுத்தெருவிற்கு வந்திருக்கிறார்கள்.

palani

வாழ வழியில்லாமல் தவித்துவரும் எங்களுக்கு மீண்டும் அதே பகுதியில் வியாபாரம் செய்ய முதல்வர் ஸ்டாலின் ஐயாவிடம் எம்.எல்.ஏ. ஐ.பி. செந்தில்குமார் பேசி நிரந்தரக் கடைகள் வைக்க வழிசெய்து கொடுக்கவேண்டும். கிரிவல வீதியில் நாங்கள் பொழப்பு நடத்திவந்தது மட்டும்தான் அந்த ராதாகிருஷ்ணனுக்கு தெரியுது. முருகனுக்குச் சொந்தமான கோடிக்கணக்கான இடங்களை பல பெருமுதலைகள் ஆக்கிரமித்து வைத்து பள்ளி நிறுவனங்களாகவும், வியாபார ஸ்தலங்களாகவும் மாற்றி வருமானம் பார்த்துவருகிறார்கள். அதெல்லாம் ராதாகிருஷ்ணனுக்குத் தெரியலையா? ஏன் அவர்கள் மீது வழக்குப் போடவில்லை''’என்றனர் பாதிக்கப்பட்ட வியாபாரிகள் சிலர்.

இதுசம்பந்தமாக பழனி திருக்கோவில் சமூக ஆர்வலரான ராதாகிருஷ்ணனிடம் கேட்டபோது, “"ஆன்மீக வழிபாட்டுத்தலமாக இருந்த பழனி தற்போது அயோக்கியர்களின் கூடாரமாக மாறிவருகிறது. மாபியா கும்பல் பிடியில் பழனி நகரம் சிக்கி சட்டவிரோத ssநடவடிக்கைகளை காணமுடிகிறது. கிரிவீதி பகுதிகளில் வியாபாரிகள் எங்கே இருக்கிறார் கள். கந்துவட்டிக்காரர்களும், மாபியா கும்பல்காரர்களும் தான் அடிவாரத்திலுள்ள கிரிவீதியில் இடங்களை ஆக்கிரமிப்பு செய்து அந்த இடங்களை அப்பாவிகளுக்குக் கொடுத்து வருமானம் பார்த்து வருகிறார்கள்.

அதனால் முருகனை தரிசிக்க வரும் முருக பக்தர்கள் பெரிதும் பாதிக்கப்படு கிறார்கள். திருவிழா காலங்களில் பக்தர்கள் வலம்வர முடியவில்லை. அந்த அளவுக்கு ஆக்கிரமிப்பு. அதனால் நீதிமன்றத்திற்கு சென்றேன். தமிழகம் முழுவதுமுள்ள கோயில்களுக்குச் சொந்தமான 55 ஆயிரம் ஏக்கரை மீட்க நடவடிக்கை எடுத்துவரு கிறேன். முருகப் பெருமானுக்கு சொந்தமான இடங்களையும், நிலங்களையும் பலர் ஆக்கிரமித்து இருக்கிறார்கள். அவர்கள் மீதும் வழக்கு போட்டிருக்கிறேன். அந்த வழக்கும் கோர்ட்டில் நிலுவையில் இருந்துவருகிறது. விரைவில் அதற்கும் ஒரு நல்ல தீர்ப்பு கிடைக்கும். அதன்மூலம் முருகனுக்கு சொந்தமான பல ஏக்கர் நிலங்களை மீட்டுக்கொடுப்பேன்''” என்று கூறினார்.

இதுசம்பந்தமாக பழனி சட்டமன்ற உறுப்பினரும், கிழக்கு மாவட்ட செயலாளரு மான ஐ.பி.செந்தில்குமாரிடம் கேட்டபோது, "பழனி கிரிவல வீதிகளிலுள்ள வியாபாரி களுக்கு நிரந்தரக் கடைகள் ஏற்படுத்தித் தரப்படும் என்று கூறியிருந்தோம். கோர்ட் உத்தரவுப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டி ருக்கிறது. அதைக் கேள்விப்பட்ட உடனே நகராட்சி தலைவர் உமாமகேஸ்வரி மூலம் ஓய்வுபெற்ற நீதிபதி பாரதிதாசனிடம் மனு கொடுத்திருக்கிறோம். கழகத் தலைவரான முதல்வருக்கும், அமைச்சர் அண்ணன் உதய நிதிக்கும் இதுகுறித்து தகவல் தெரிவிக்கப் பட்டு பாதிக்கப்பட்ட வியாபாரிகளுக்கு நிரந்தரத் தீர்வு காணவேண்டும் என்பதை வலியுறுத்தி மனு அனுப்பியிருக்கிறேன். சிறு வியாபாரிகள் முதல் பெரும் வியாபாரிகள் வரை அனைவருக்கும் கூடிய விரைவில் மாற்று ஏற்பாடுகள் மூலம் நிரந்தரக் கடைகள் அமைத்துக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப் படும்''’என்றார் உறுதியாக.

nkn200124
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe