(43) வெளிச்சம் தந்த நிலா!
கதாசிரியர் கலைமணி என்னை தங்களின் அடுத்த பட தயாரிப்புக்கு இயக்குநராக்க விரும்பி, ராயப்பேட்டை அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றார். ஆனால் பார்ட்னர்கள் மூவரும் ‘"மணிவண்ணன் இயக்க வேண்டும்'’எனச் சொன்னதால், கலைமணியின் தம்பி பெருமாள் தன்னுடைய ஆபீஸிற்கு அழைத்துப் போனார். விஷயத்தைச் சொன்னார்.
"இப்படி துயரம் துரத்துதே'’என அழுகையும், ஆவேசமுமாக எல்லையம்மன் கோவிலில் ஒரு தேங்காயை உடைத்து, "நான் டைரக்டராகாம உன் கோவிலுக்கு வரமாட்டேன்''’என சபதம் செய்தேன்.
பெருமாள், பாண்டிபஜார் போய் சாப்பாடு வாங்கிட்டு வந்தார். கோபத்தில் மிக அதிகமாக சாப்பிட்டேன்.
மறுபடியும் ஒரு கேள்விக்குறி என் முன்னால்.
"வாழ்க்கைல போராட்டம் இருக்கலாம்... போராட்டமே வாழ்க்கையா இருந்தா எப்படி?''’என மிகுந்த யோசனையோடு உட்கார்ந்திருந்தேன் பெருமாள் ஆபீஸில்.
சாயங்காலம் நாலு நாலரை மணி இருக்கும்... கலைமணி வந்தார்.
"என்ன டைரக்டரே... என்ன மாதிரி ஸ்கிரிப்ட் பண்ணலாம்? நீங்க ஒரு சிறந்த டெக்னீஷியன். அதுக்குத் தகுந்த மாதிரி ஒரு கதையை கண்டுபிடிக்கணும்னு யோசனை பண்ணிக்கிட்டே இருக்கேன்''’என்றவர் ஒரு வீடியோ டெக்கையும், நூறு பேய்ப் படங்களின் வீடியோ கேஸட்டுகளையும் வாடகை எடுத்து வரச் செய்தார்.
டெக்குல பேய்ப் படமா போட்டு ஓட்டுறார். அவரும் விடாம படம் பார்க்க்கிறதோட என்னையும் பார்க்கச் சொல்றார்.
எனக்கு ரொம்ப குழப்பம்.
"இவரு குடும்பப்பாங்கான கதைகளை எழுதுறவர். இவரு எதுக்கு பேய்ப்படமா பார்க்குறாரு?''’ என யோசித்துக் கொண்டே, கண்ணுல சொக்குன தூக்கத்தை சமாளிச்சுக்கிட்டே படங்களைப் பார்த்தேன்.
தம்மடிச்சிக்கிட்டே யோசிச்சிக்கிட்டிருந்தவர், திடீர்னு டெக்கை ஆஃப் பண்ணச் சொன்னார்.
"டைரக்டரே... இந்த மாதிரி ஒரு பேய்க் கதையைத்தான் உங்களுக்கு எழுதப் போறேன்.''”
"பேய்க் கதையா? எனக்கு செட்டாகுமா சார்? "எவெரஸ்ட் ஃபிலிம்ஸ்' கம்பெனி படத்தை நான் டைரக்ட் பண்ண சான்ஸ் இல்லையா சார்?''”
"அத விடுங்க... பார்ட்னர்கள் ஒப்புக்கல. என் தம்பி பெருமாள் கம்பெனிக்கு நீங்க படம் பண்ண னும். அதுக்குத்தான் இந்த பேய்க் கதை. நல்லா வரும்னு எனக்கு நம்பிக்கை இருக்கு''” என்றார்.
அந்தக் கம்பெனிக்கு மணிவண்ணன் இயக்கிய படத்துக்கு "முதல் வசந்தம்'’என டைட்டில் வைத் தார். நான் பெருமாள் தயாரிப்பில் இயக்கப்போகும் படத்திற்கு "பிள்ளை நிலா'’என பெயர் வைத்தார்.
"என்ன சார் கதை?'' என்று கேட்டான்.
"ஒரு பொண்ணு செத்துப் போறா. அப்ப குழந்தை பிறக்குது. இதுதான் இண்டர்வெல் பிளாக்.''”
நான் சட்டென நிமிர்ந்து உட்கார்ந்தேன். என் சோர்வு போன இடம் தெரியவில்லை.
"ஒருத்தி செத்துப் போறா... ஒரு குழந்தை பிறக்குது.... கேட்கிறப்பவே நல்லா இருக்கு சார்''” என்றேன்.
ஸ்டோரி லைன் பிடித்த பிறகு... கதையை உருவாக்கினோம்.
"பிள்ளை நிலா'’ ஸ்கிரிப்ட் தயாரானது.
மோகன், நளினி, பேபி ஷாலினி, கௌரவ வேடங்களில் ஜெய்சங்கர், ராதிகா ஆகியோரும் நடிக்க, அசோக்குமார் ஒளிப்பதிவில், இளையராஜா இசையில், "கலைமணி மூவீஸ்' சார்பில் பெருமாள் தயாரித்தார். (இந்தப் படத்தை தயாரிப்பதற்கு முன்பு பெருமாள் எனது அஸிஸ்டெண்ட்டாக கொஞ்சநாள் வேலை செய்தார்.) நான் டைரக்ஷன் செய்தேன்.
இந்தப் படம் எனக்குக் கிடைக்க ஒரு வகையில் மோகனும் காரணம்.
"மனோபாலாவுக்கு யார் டைரக்ஷன் வாய்ப்புக் கொடுக்குறாங்களே, அந்தக் கம்பெனிக்கு உடனே கால்ஷீட் கொடுக்குறேன்'’என மோகன் சொல்லியிருந்தார்.
மோகன் பிஸியான ஹீரோவாக இருந்தாலும் எனது முதல் படம் தோல்வி, இரண்டாவது படம் அப்படியே பாதியில் நிற்கிறது. அப்படியிருக்கையில் மூன்றாவது வாய்ப்பை எனக்குத் தர யோசித்தார்கள்.
மோகனை வைத்து தொடர்ந்து படங்களைத் தயாரித்த கோவைத்தம்பி கூட, எனக்கு வாய்ப்புத் தரவில்லை. (பின்னாளில் என்னை தன் கம்பெனிக்கு படம் பண்ணவைக்க விரும்பிக் கேட்டுவிட்டார் கோவைத்தம்பி. ஆனால் நான் ஒப்புக் கொள்ள வில்லை)
எனக்காக கால்ஷீட் தர முன்வந்த மோகன், என் வாழ்க்கையில் மாறுதலை உண்டாக்கிய படத்திற்கு ஹீரோவானார்.
மோகன் எல்லா டைரக்டர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் சௌகர்யமான ஹீரோவாக இருந்தார்... எனக்கும் அப்படியே.
அந்தச் சமயத்தில் நளினி பிஸியான ஹீரோ யின். ஒரே நேரத்தில் ஐந்தாறு படங்கள் நடித்து வந்தார். அதனால் நைட் கால்ஷீட் தருவதாகச் சொன்னார். "பிள்ளை நிலா '’பேய்ப் படம் என்பதால் இரவு நேர படப் பிடிப்புதான் பெரும்பாலும். அதனால் நானும் சம்மதித்தேன்.
மலையாளப் படம் ஒன்றில் நடித்திருந்த பேபி ஷாலினியை "பிள்ளை நிலா' படத்திற்காகத் தான் முதன் முதலில் தமிழுக்கு அறிமுகம் செய்தேன். ஆனால் எங்களுக்கு பின்பு ஒப்பந்தம் செய்து எங்களுடைய படத்திற்கு முன்பாகவே பேபி ஷாலினி நடித்த "ஓசை'’படம் வெளியாகிவிட்டது.
கிட்டத்தட்ட தமிழ் சினிமாவையே விட்டுவிட்டது போல தெலுங்கு சினிமாவில் மிகவும் பிஸியாகிவிட்ட ராதிகாவை, இந்தப் படம் மூலம்தான் தமிழுக்கு மீண்டும் அழைத்து வந் தேன். ஏற் கனவே ‘"நிறம் மாறாத பூக் கள்'’ படத்தில் நான் உதவி இயக்குநராக பணியாற்றிய போதிலிருந்து ராதிகாவுடன் அறிமுகம் இருந்தாலும், ‘"பிள்ளை நிலா'’ படத்தில் நடிக் கும்போது ராதிகாவுக்கும், எனக்கும் இடையே ஒரு நல்ல நட்பு ஏற் பட்டது.
இரவு ஏழு மணிக்கு படப்பிடிப்பிற்கு வரும் நளினி, இரவு பத்து மணிக்கு.... அதா வது மூன்று மணிநேரம் ‘"பிள்ளை நிலா'’ படப்பிடிப்பில் கலந்துகொள்வார். அதன்பிறகு வேறு படத்தின் படப்பிடிப் பிற்காக சென்றுவிடுவார்.
வழக்கமாக ஒவ்வொரு சினிமா கம்பெனிகளிலும் படத்துக்கோ, கம்பெனிக்கோ எந்த வகையிலும் பிரயோஜனப் படாத ஆட்கள் சிலர் இருப்பாங்க. அப்படி தேவையில்லா ஆட்கள் இங்கவும் இருந்தாங்க. அவங்க என்ன போட்டுக் கொடுத்தாங்களோ தெரியாது... என்கூட பேசுவதையே கலைமணி நிறுத்திட்டார்.
(பறவை விரிக்கும் சிறகை)
படம் உதவி: ஞானம்
_______________
மணிவண்ணனின் சக்ஸஸ் சீக்ரெட்!
அந்தச் சமயத்தில் மணிவண்ணன் ரொம்ப பிஸி. ஒரே நேரத்தில் நாலைந்து படங்களை டைரக்ஷன் செய்துகொண்டிருந்தார். அதனால் ‘"முதல் வசந்தம்'’ கதை விவாதத்தில் கலைமணியுடன் நானும் கலந்துகொண்டேன்.
"‘நான் படம் தயாரிக்கப் போறேன்... நீங்கதான் டைரக்ஷன் பண்ணனும்'’ என்று சொல்லி, யார் வந்து ஐயாயிரம் ரூபாய் கொடுத் தால் கூட போதும், ‘"அடுத்த மாசம் நம்ம பட ஷூட்டிங்கை வச்சுக்குவோம்'’ என ஒப்புக் கொள்வார். ரெண்டு ஸீனைச் சொல்லி, தயாரிப்ப ôளரை அசத்துறது மணிவண்ணனுக்கு கைவந்த கலை. ஒரு குட்டி பிரிட்ஜ் வாங்கிக் குடுத்தாக் கூட, டைரக்ஷன் பண்ண ஒப்புக்குவார். "வந்த புரொடியூஸரை விடக்கூடாது. நாம லைம் லைட்லயே இருந்துக்கிட்டே இருக்கணும்''’ என்கிற எண்ணம் உள்ளவர்.
என்னையும் திட்டுவாப்ல. “"எந்த வாய்ப்பு வந்தாலும் ஏத்துக்க. ஒண்ணு தோத்திட்டாலும், இன்னொரு படம் கை கொடுக்கும்''னு சொல்வாப்ல.
"நீயே கதை பண்ணிக்கிட்டிருக்கணும்னு நினைக்காத. கலைமணி இருக்காரு, அவர்கிட்ட கதை வாங்கு. இல்ல வேற கதாசிரியர்கள்கிட்ட கூட கதை வாங்கு. படம் பண்ணிக்கிட்டே இருக்கணும்''’என அட்வைஸும் பண்ணுவாப்ல.