Advertisment

நினைவோ ஒரு பறவை! -மனோபாலா (13)

ff

dd

(13) கிராமத்து ராஜா... சிகப்பு ரோஜா!

ழ்வார்பேட்டை கமல்ஹாசன் வீட்டில் நாங்கள் வழக்கம் போல கூடி சினிமா குறித்து விவாதித்துக்கொண்டிருந் தோம். அப்போது சுருட் டையான தலைமுடியுடன் கூடிய ஒருவர் வந்தார்.

Advertisment

அவரிடம் சாரு ஹாசன் விசாரித்தபோது... தான் டைரக்டராக அறிமுகமாகும் படத்தின் கதையை கமலிடம் சொல்வதற்காக வந்தி ருப்பதாகத் தெரிவித்தார்.

Advertisment

கதையைக் கேட்ட சாருஹாசன் வியப்பை வெளிப்படுத்தினார். ‘இவர் பெரிய டைரக்டராக வருவார்’என கணித்தார். ‘கிளாமர் பாய்’ வேஷங்களில் நடித்துக்கொண்டிருந்த கமல், இந்தப் படத்தில் நடித்தால் சிறப்பாக இருக்கும் என சாருஹாசன் முடிவெடுத்தார். கமலிடமும் இந்தக் கருத்தை வலியுறுத்தினார், வற்புறுத்தி னார்.

கதை சொல்ல வந்தவர், மற்றும் ஒரு டைரக்டர்’ என்கிற மாதிரி அப்போதைக்கு பார்க்கப்பட்டாலும், அவரின் எதிர்காலம் பற்றி சாருஹாசன் மிகத் துல்லியமாகச் சொன்னதை நாங்கள் மறக்கவில்லை.

"மயிலு'வாக ஸ்ரீதேவியும், "சப்பாணி'யாக கமலும், "பரட்டை'யாக ரஜினியும் நடித்திருக்க, பொள்ளாச்சிக்காரர் எஸ்.ஏ.ராஜ்கண்ணு தயாரிப்பில், இளையராஜா இசையில் "பதினாறு வயதினிலே'’என்ற பெயரில் அந்தப் படம் வெளியாகி சினிமா உலகையும், ரசிகர்களையும் ஸ்தம்பி

dd

(13) கிராமத்து ராஜா... சிகப்பு ரோஜா!

ழ்வார்பேட்டை கமல்ஹாசன் வீட்டில் நாங்கள் வழக்கம் போல கூடி சினிமா குறித்து விவாதித்துக்கொண்டிருந் தோம். அப்போது சுருட் டையான தலைமுடியுடன் கூடிய ஒருவர் வந்தார்.

Advertisment

அவரிடம் சாரு ஹாசன் விசாரித்தபோது... தான் டைரக்டராக அறிமுகமாகும் படத்தின் கதையை கமலிடம் சொல்வதற்காக வந்தி ருப்பதாகத் தெரிவித்தார்.

Advertisment

கதையைக் கேட்ட சாருஹாசன் வியப்பை வெளிப்படுத்தினார். ‘இவர் பெரிய டைரக்டராக வருவார்’என கணித்தார். ‘கிளாமர் பாய்’ வேஷங்களில் நடித்துக்கொண்டிருந்த கமல், இந்தப் படத்தில் நடித்தால் சிறப்பாக இருக்கும் என சாருஹாசன் முடிவெடுத்தார். கமலிடமும் இந்தக் கருத்தை வலியுறுத்தினார், வற்புறுத்தி னார்.

கதை சொல்ல வந்தவர், மற்றும் ஒரு டைரக்டர்’ என்கிற மாதிரி அப்போதைக்கு பார்க்கப்பட்டாலும், அவரின் எதிர்காலம் பற்றி சாருஹாசன் மிகத் துல்லியமாகச் சொன்னதை நாங்கள் மறக்கவில்லை.

"மயிலு'வாக ஸ்ரீதேவியும், "சப்பாணி'யாக கமலும், "பரட்டை'யாக ரஜினியும் நடித்திருக்க, பொள்ளாச்சிக்காரர் எஸ்.ஏ.ராஜ்கண்ணு தயாரிப்பில், இளையராஜா இசையில் "பதினாறு வயதினிலே'’என்ற பெயரில் அந்தப் படம் வெளியாகி சினிமா உலகையும், ரசிகர்களையும் ஸ்தம்பிக்க வைத்தது.

"பதினாறு வயதினிலே'’படம் மிகுந்த வரவேற்போடு ஓடிக்கொண்டிருக்க, "மயிலு'’ஸ்ரீதேவி பற்றி சென்னையில் திரும்பிய பக்கமெல்லாம் பேச்சாக இருந்தது. இளம் ரசிகர்கள், "மயிலு... மயிலு... மயிலு...'’என உருகினார்கள்.

கமல் வீட்டில் கூடும் எங்களது நட்பு வட்டமோ, எந்த நேரமும் "பதினாறு வயதினிலே'’ படத்தின் இயக்குநர் பாரதி ராஜாவைப் பற்றி பேசுவதையே வேலையாகக் கொண்டோம்.

"பாரதிராஜா கிராமத்து ராஜா. "பதினாறு வயதினிலே', "கிழக்கே போகும் ரயில்' என இரண்டு ஹிட் படங்களைக் கொடுத்திருக்கிறார். கிராமத்து ஆளான அவருக்கு நகர்ப்புற கதையமைப்பு கொண்ட படங்களை எடுக்கத் தெரியாது'’ என்கிற பேச்சு பரவியிருந்ததால், அதை சவாலாக ஏற்று பாரதிராஜா களத்தில் இறங்கினார். கமல்-ஸ்ரீதேவி ஜோடியை வைத்து "சிகப்பு ரோஜாக்கள்'’படத்தை எடுத்தார். தினசரி ஷூட்டிங் அனுபவங்களை கமல் எங்களிடம் சொல்லிக் கொண்டே இருப்பார்.

(தி.நகரில் ஒரு பங்களா வில் "சிகப்பு ரோஜாக்கள்' படப்பிடிப்பு பெரும்பாலும் நடந்தது. அதனால் அந்தப் படம் வெளியாகி சக்கைப்போடு போட்டதால் அந்த பில்டிங்கிற்கு ‘"ரெட் ரோஸ் பில்டிங்'’ என பெயர் கூட வந்தது என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன் அந்தப் படத்தின் வெற்றியை.)

ff

"சிகப்பு ரோஜாக்கள்' படப்பிடிப்பின் போது நான் இரண்டு மூன்று நாட்கள் ஷூட்டிங் பார்க்கச் சென்றேன்.

நான் போயிருந்தபோது...

டீப்பாவில், "நோ... நோ...'’ என கமல் எழுதும் காட்சி எடுக்கப்பட்டது. அந்தக் காட்சியை பாரதிராஜா நடித்துக் காட்ட, அதை உள்வாங்கி, கமல் நடித்துக்கொண்டிருந்தார். அதையெல்லாம் பார்க்கும்போது எனக்கு மிகவும் பிரமிப்பாக இருந்தது. அந்த பிரமிப்பிலிருந்து விலகாமலேயே எனது மைலாப்பூர் அறைக்கு நடந்தேன்.

"சிகப்பு ரோஜாக்கள்'’ படம் வெளி யாவதற்கு சில மாதங்கள் முன்பாக 1978-ஆம் ஆண்டில் மகேந்திரன் இயக்கத்தில் ரஜினி சார் நடித்த "முள்ளும் மலரும்'’படம் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது.

ஆழ்வார்பேட்டை சீத்தம்மாள் காலனியில் மகேந்திரன் குடியிருந்தார். கமலுக்கும் நண்பர். அதனால் எனக்கும் மகேந்திரன் சாருக்கும் இடையே நல்ல தோழமை இருந்தது. நான் அவரை அவரது வீட்டில் சந்திக்கும் போதெல்லாம் இருவரும் இலக்கியமும், சினிமாவும் பற்றி மட்டுமே பேசுவோம். பேசிக்கொண்டிருக்கும்போதே "டீ சாப்பிட போலாமா?' ’என்பார். இருவரும் பேசிக் கொண்டே நடந்து சாம்கோ ஹோட்டலுக்கு வருவோம். டீ சாப்பிடுவோம். பிளாட்ஃபார்மில் நின்று இருவரும் சிகரெட் பிடித்துக்கொண்டே சினிமா பற்றி தொடர்ந்து பேசிக் கொண்டி ருப்போம். மகேந்திரனைப் பற்றி எனக்கு எதுவும் தனிப்பட்ட முறையில் பெரிதாக தெரியாது. ஆனால் அவர்தான் "தங்கப் பதக்கம்'’படத்தின் கதாசிரியர் என்பது உட்பட சில விஷயங்களை அவரே சொல்லச் சொல்ல வியப்போடு கேட்பேன். ஆனால் "முள்ளும் மலரும்'’படம் எனக்குள் ஏற்படுத்திய தாக்கம்' என் மதிப்பில் அவர் மிகவும் உயர்ந்து நின்றார்.

சினிமாதான் என் எதிர்காலமாக இருக்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்த நான் ‘"முள்ளும் மலரும்'’ படத்தைப் பார்த்ததும் ‘மகேந்திரன் மூலமாகத்தான் எனது சினிமா பயணம் நிகழ வேண்டும்’ என முடிவெடுத்திருந்தேன். மகேந்திரனிடம் உதவியாளராகச் சேரவேண்டும் என்கிற எனது விருப்பத்தையும் அவரிடம் தெரிவித்திருந்தேன்.

மகேந்திரனைச் சந்தித்துப் பேசுவது, பி.சி.ஸ்ரீராமை சந்தித்துப் பேசுவது, கமல் வீட்டில் நண்பர்களுடன் சினிமா பற்றி உரையாடுவது என எனது தினசரி பொழுது போய்க் கொண்டிருந்தது.

என்னதான் சினிமா பற்றி பேசி பொழுதைக் கழித்தாலும் சாப்பாட்டுக்கும், செலவுகளுக்கும் பணம் வேணுமே... அதற்காக தூர்தர்ஷனில் வேலை பார்த்தேன்.

dd

சென்னையில் தூர்தர்ஷன் தொடங்கப்பட்ட முதல் நாளிலேயே நடராஜன் தலைமையில் மூன்று ஓவியர்களில் ஒருவராக அங்கே வேலை செய்தேன். அந்த சமயம் அட்லாண்டிக் ஹோட்டலுக்கு எதிரே இருந்த ஒரு விளம்பர நிறுவனத்தில் கிரியேட்டிவ் பெர்ஸனாகவும் வொர்க் பண்ணினேன். பணம் கிடைத்தாலும் இரண்டு இடங்களிலும் வேலை செய்வது ஒரு மெக்கானிக்கல் சிஸ்டம்போல் இருந்தது.

ஒருநாள்...

வேலை முடிந்து திரும்பி அறையில் மிகவும் மனம் சோர்ந்து உட்கார்ந்திருந்தேன். ’பார்க்கிற வேலையில் பணம் கை நிறைய கிடைச்சாலும், மனசுக்கு சந்தோஷமில்லையே. "சினிமாத்துறையை நினைச்சு ஏங்கிக்கிட்டே இருக்க வேண்டியதுதானா. அந்த சினிமா நம்ம கைக்கு வசப்படாதா?'’ என யோசனையோடு இருந்த நேரத்தில்....

என் அறை வாசல் முன்பாக ஒரு கருப்பு நிற கார் வந்து நின்றது.

ஆர்வமாக பார்த்தேன். அது கமல்ஹாசனின் கார். அதனால் இன்னும் ஆர்வ மானேன்.

"கமல் சார் உங்களை கூட்டிவரச் சொன்னார்' என்றார் டிரைவர்.

"எங்கே கூப்பிடுகிறார்? எதுக்கு கூப்பிடுகிறார்' என்றெல்லாம் கமல் விஷ யத்தில் நான் யோசிக்க வில்லை. கமல் என்ன சொன்னாலும் எதிர் கேள்வி இல்லாமல் செய்பவன் நான். அதனால் புரியாத புதிரோடு காரில் ஏறி அமர்ந்தேன்.

கார் விரைந்தது!

காருக்கு முன்பாகவே கமலின் வீட்டுக்கு முந்திச் சென்றது என் மனப் பறவை....

குரு பாரதிராஜா-

சீடர் பாக்யராஜ் மனஸ்தாபத்தை

சரி செய்த நான்...

(பறவை விரிக்கும் சிறகை)

படம் உதவி: ஞானம்

nkn120322
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe