mm

(80) நான் திறந்த கதவில் நானே சிக்கினேன்!

ஹெச்.வினோத் சொன்ன "சதுரங்க வேட்டை'’கதை எனக்கு ரொம்பப் பிடிச்சது.

Advertisment

"ஹீரோ யாரு வேணும். முன்கூட்டியே சொன்னாத்தானே பேச முடியும். உடனே கால்ஷீட் வாங்க முடியாதுல்ல. அதனால் யார் வேணும்னு சொல்லுங்க தம்பி''’என்று கேட்டேன்.

அவர் கொஞ்சமும் தாமதிக்காமல், பிரபல கேமாரமேன் "நட்டி என்கிற நட்ராஜை இந்தக் கதைக்கு நடிக்கவைக்கலாம்'' எனச் சொன்னார்.

"தம்பி அவரு கேமராமேன். ஏதோ ஆசைக்கு ஒண்ணு, ரெண்டு படங்கள்ல நடிச்சிருக்கார். அவர் புரொபஷனல் நடிகர் இல்லை''’என்றேன்.

Advertisment

"இல்ல சார்... வாழ்க்கைல அடிபட்டு, கஷ்டப்பட்டு முன்னேறின 35 வயசுக்கிட்ட இருக்க ஒருத்தன்தான் இந்தக் கதைக்கு சரியா இருப்பான். நட்டி சரியா இருப்பார் சார்''’என மிகச் சரியான காரணத்தைச் சொன்னார் வினோத்.

அது என் மனசில் பளிச்னு பட்டது.

நட்டி நட்ராஜோட செல்போன் நம்பரைத் தேடினேன். அவர் முதன்முதலில் வைத்திருந்த அந்த நம்பர்தான் இருந்தது. போட்டுப் பார்க்கலாம் எனப் போட்டேன்.

நட்டிதான் எடுத்தார்.

எனக்கு வியப்பாக இருந்தது. ஆரம்பத்தில் பயன்படுத்திய நம்பரை மாற்றாமல் வைத்திருந்தார். இப்படி நம்பர் மாற்றாமல் வைத்திருப்பது.... குறிப்பாக சினிமாவில் ஒருவரின் வெற்றிக்கு முக்கிய காரணம்.

"நட்டி...எங்க இருக்க?''”

"ஒரிஸாவுல ஒரு ஷூட்டிங்ல இருக்கேன். சொல்லுங்க டைரக்டர் சார்''”

"இல்ல தம்பி, கதை ஒண்ணு கேட்டேன்... எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது''”

"யாரு சார்? வினோத்துனு ஒரு பையன் வந்து கதை சொன்னானா?''”

"உனக்கு எப்படித் தெரியும் நட்டி?''”

"வினோத் சொன்ன கதையை நான் ஏற்கனவே கேட்டுட்டேன். சூப்பரான கதை சார்''”

"உனக்கு இந்தக் கதைல நடிக்க விருப்பமா நட்டி?''”

"சார்... எனக்கு ஏழு நாள் டைம் கொடுங்க;. நான் வந்து சொல்றேன்''”

என் பட கேமரா வுமன் விஜயலட்சுமி கிட்ட ஒர்க் பண்ணின தால் நட்டியோட டேஸ்ட் எனக்குத் தெரியும். பல மொழிப் படங்கள்ல பெரிய கேமராமேனா வொர்க் பண்ணி, நல்ல வசதியோட இருப்பவர் நட்டி.

நட்டி என் அலுவலகத்திற்கு வந்தார். நடிக்க சம்மதம் சொன்னார்.

வினோத்துக்கு பத்தாயிரம் ரூபாய் அட்வான்ஸ் கொடுத்தது போக, என் கையில் ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் இருந்தது.

ஷூட்டிங் தொடங்கி னோம்.

மண்ணுளி பாம்பு விற்கிறவங்க பத்தின கதைங்கிறதால் அதுக்கேத்த லொகே ஷனை ராமநாதபுரம் மாவட்டத்துல பிடிச்சார் வினோத். இளவரசு போர்ஷன் வர்ற வீடு ஒரு செட்டியாருடையது. அவர் இலவசமாகவே ஷூட்டிங் நடத்திக் கொள்ள எனக்கு அனுமதியளித்தார்.

வினோத்தோட திறமையை சும்மா சொல்லக்கூடாது.

"ரெண்டு மாருதி 800 கார் வேணும்'' என வினோத் கேட்டார்.

ஏற்பாடு செய்து கொடுத்தேன்.

அந்த காரை வச்சு ட்ரோன் ஷாட் போல என்னென்னவோ டெக்னிக் ஷாட்ஸ்களை எடுத்தார் வினோத்.

nn

"சதுரங்க வேட்டை'’படம் இவ்வளவு பெரிய வெற்றியைப் பெறும்னு நாங்க நினைச்சே பார்க்கல. சாதாரணமா நடந்தது ஒரு பெரும் வெற்றிப் படத்தோட படப்பிடிப்பு.

இந்த மொத்த வெற்றிக்கும் காரணம் ஒன் அண்ட் ஒன்லி டைரக்டர் வினோத் மட்டும் தான். "பிக்ஸர்ஸ் ஹவுஸ்' என்கிற என் பேனரையே உசரத்துக்கு தூக்கி விட்டுட்டார்.

"சதுரங்க வேட்டை'’ படத்தில் நிறைய புதுமுகங்களை அறிமுகப்படுத்துவது பரபரப்பாக பேசப்பட்டுக் கொண்டிருக்க... பத்திரிகையாளர்கள் வியப்படைந்தார்கள்.

டைரக்டர் புதுமுகம், கேமராமேன் புதுமுகம், எடிட்டர் புதுமுகம். "ஏன் சார்... நீங்க தயாரிக்கிற படத்துல இவ்வளவு புதுமுகங்களை அறிமுகப்படுத்துறீங்களே... ஏன் சார்?''’என்று கேட்டனர்.

"பொங்கல் வைக்கிறதுக்கே பானையை புதுசா வாங்கும்போது, ஒரு படம் எடுக்குறோம்... அதுல புதுமுகங்களை நிறைய அறிமுகப்படுத்தக் கூடாதா?''’என்று கேட்டேன்.

நான் பேசினதெல்லாம் நல்லாத்தான் இருந்துச்சு. ஆனா... நடைமுறை வேறமாதிரி இருந்துச்சு.

என்னோட தயாரிப்பு கம்பெனியான "பிக்ஸர்ஸ் ஹவுஸு'க்கு லோகோ என்ன தெரியுமா?

ஒரு கதவு திறப்பது போல கம்பெனி லோகேவை டிஸைன் பண்ணியிருந்தேன். அதற்குக் காரணம்... ‘"திறக்கப்படும் இந்த அந்தக் கதவு வழியாக பல திறமையான இளைஞர்கள் சினிமாவுக்குள் வரட்டும், நமது கம்பெனியில் தொழில்நுட்பக் கலைஞர்களாக பல புதியவர்களை அறிமுகப்படுத்துவோம்'’என்கிற நல்ல நோக்கில்தான், ஓவியனான நான் இந்த லோகோவை வடிவமைத்தேன்.

ஆனால்... நான் திறந்த கதவில் நானே சிக்கிக் கொண்டுவிட்டேன். "சதுரங்க வேட்டை'’படத்தை வெளியிடவிடாமல் என்னை முடக்கிப் போடுவதற்கான முயற்சிகள் நடந்தது.

அந்த முட்டுக்கட்டைகளை தள்ளிக்கிட்டு, நான் தப்பிச்சு வர்றதுக்குள்ள ஐயோடானு ஆகிடுச்சு.

அது என்ன?

(பறவை விரிக்கும் சிறகை)

மூன்று கோடி! டைரக்டர் லிங்குசாமியோட "திருப்பதி பிக்ஸர்ஸ்'’தங்களோட சொந்தப் படங்களைத் தாண்டி, பல நல்ல படங்களையும் மொத்தமா வாங்கி வெளியிடுவாங்க. "திருப்பதி பிக்ஸர்ஸ்'தான் ’"சதுரங்க வேட்டை'’படத்தையும் வாங்கியது. படம் வெளியாகி ஒரே ஒரு காட்சியின்போது மட்டும்தான் தியேட்டர்கள்ல பாதியளவு, முக்கால் அளவு இருக்கைகள்ல மட்டும் ஆடியன்ஸ் இருந்தாங்க. அடுத்தடுத்த ஷோக்கள்லருந்து ஹவுஸ்ஃபுல்தான். சும்மா சொல்லக் கூடாது ‘"திருப்பதி பிக்ஸர்ஸ்'’ மிகப்பிரமாதமா விளம்பரம் செஞ்சாங்க. சுமார் மூணு கோடி ரூபாய்க்கும் மேல விளம்பரத்துக்காகவே செலவு செஞ்சாங்க!