ff

(67) யானையும், கொசுவும்!

ரு சமயம் பிரபலமான இலக்கியப் பேச்சாளர் பெண்மணி, ஒரு இலக்கிய மேடையில் பேசும்போது, "பழம் இலக்கியங்கள்ல இருக்கிற முக்கியமான விஷயங்களை கவிஞர் கண்ணதாசன் காப்பியடிச்சு, காப்பியடிச்சு சினிமாவுக்கு பாட்டு எழுதுறார். அதனால ஒரிஜினல் இலக்கியம் படிக் கிறவங்களுக்கு ஆர்வம் இல்லாம போய்விடுகிறது. இலக்கியத்தை திருடி பாட்டெழுதுறது எதில் சேர்த்தி?'’என ஆவேசமாகப் பேசினார்.

Advertisment

இப்படி அதிரடியாகப் பேசின அந்தப் பெண்மணிக்கு இலக்கிய ஆர்வலர்களிட மிருந்து பாராட்டு குவிந்தது.

வழக்கம்போல அவர் வீட்டு தொலைபேசி ஒலித்தது.

வழக்கம்போல யாரோ பாராட்டுறதுக்குப் போன் செய்வதாக நினைத்து எடுத்தார்.

Advertisment

எதிர் முனையில், "நான் கண்ணதாசன் பேசுறேம்மா'' என்றதும் ஆடிப்போய்விட்டார் அந்தப் பெண்மணி.

"சொல்லுங்க... சொல் லுங்க''’என பதறினார்.

"ஒண்ணுல்லம்மா... நீங்க பேசுனதைக் கேட்டேன். ரொம்ப நல்லா பேசியிருந் தீங்க. ‘"இலக்கியத்துலருந்து காப்பியடிச்சு கண்ணதாசன் பாட்டெழுதுறார்'னு சொல்லீருந்தீங்க. இலக்கியங்கள்ல இப்படிப்பட்ட வாழ்க்கைத் தத்துவங்களுக்கான சொற்றொடர்களும், சொற்களும் இருக்குங்கிறது பெரும் பான்மையானவர்களுக்கு தெரியாதேம்மா. உங்கள மாதிரி படித்த அறிஞர்களுக்குத் தெரியும். பாமர மக்களுக்குத் தெரியுமா? இலக்கியங்களோட நோக்கமே, வாழ்க்கை யோட அதைப் பொருத்திப் பார்த்து வாழணும்கிறதுதானே. அதனாலதான், நான் அந்த இலக்கியக் கருத்துக்களை எடுத்து, சினிமா பாடல் மூலம் வெகுஜனமா இருக்கிற பாமர மக்களிடம் கொண்டு சேர்க்கிறேன். இலக்கியத்தை எளிமைப்படுத்துறது, அதை மக்கள்ட்ட கொண்டு சேர்க்கிறது தப்பாம்மா?

யான்நோக்கும் காலை நிலன்நோக்கும்

நோக்காக்கால் தான்நோக்கி மெல்ல நகும் இந்தத் திருக்குறள் "குறிப்பறிதல்' அதிகாரத்துல 1094-வது குறளா இருக்குங்கிறது உங்களுக்குத் தெரியும். இந்தக் குறளுக்கான பொருளும் உங்களுக்குத் தெரியும்.

பாமரனுக்கு இந்தக் குறளைச் சொன்னால் புரிஞ்சுக்க சிரமமாக இருக்கும். அதனால் அதன் பொருள் தெரிஞ்சுக்க ஆசைப்படமாட்டான். இந்த இலக்கிய ருசியை அவனுக்கும் சேர்க்கணும்னுதான் என்னோட பாடல்கள்ல இலக்கியத்தில் உள்ள அழகான விஷயங்களை எளிமையா சேர்க்கிறேன்.

நான் அவளை பாக்கும்போது நாணத்தால், தலைகுனிந்து, நிலத்தைப் பார்ப்பாள். இதனால் நான் அவளைப் பார்க்காதது போல இருக்கும்போது என்னைப் பார்த்துவிட்டு மெல்ல புன்முறுவல் செய்வாள்.’

அந்தக் குறளின் இப்படியான அற்புதக் காதல் சுவையை அறிஞர்கள் மட்டும்தான் ரசிக்க வேண்டுமா? பாமரன் ரசிக்கக் கூடாதா? அதனால்தான்...

dd

உன்னை நான் பார்க்கும் போது

மண்ணை நீ பார்க்கின்றாயே!;

மண்ணை நான் பார்க்கும் போது

என்னை நீ பார்க்கின்றாயே!

-என சினிமாப் பாடலில் எளிமைப்படுத்தி எழுதினேன்.

இந்த சினிமாப் பாடலின் தொடக்கம் கூட

நேற்றுவரை நீயாரோ நான் யாரோ

இன்றுமுதல் நீ வேறோ நான் வேறோ’

-எனத் தொடங்கும்.

குறுந்தொகையில் குறிஞ்சித் திணையில் செம்புலப்பெயனீரார் எழுதிய பாடலில் ஒன்றான...

யாயும் ஞாயும் யாராகியரோ

எந்தையும் நுந்தையும் எம்முறை கேளிர்

யானும் நீயும் எவ்வழி அறிதும்

செம்புலப் பெயல்நீர் போல

அன்புடை நெஞ்சம் தாம்கலந் தனவே!’

-என்கிற பாட்டின் தாக்கம்தான்.

நீங்க இலக்கியத்தைப் படிச்சிட்டு அப்படியே பேசுறீங்க. நான் அதை உள் வாங்கி எளிமைப்படுத்தி, ஊருக்குச் சொல்றேன். இது தப்பாம்மா?''’எனக் கேட்டிருக்கிறார் கண்ணதாசன்.

அந்த பேச்சாளர் பெண்மணிக்கு பேச்சே வரவில்லை.

ஜெமினிகணேசன், தேவிகா நடிப்பில் வந்த "வாழ்க்கைப் படகு'’படத்தில் "நேற்றுவரை நீ யாரோ'’பாடல் இடம்பெற்றது.

எம்.ஜி.ஆருக்கும், கண்ணதாசனுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டிருந்த சமயம்....

மதுரை திருப்பரங்குன்றத்துல தி.மு.க. கட்சி மீட்டிங்லயே, "இனி என்னோட படங் களுக்கு கவிஞர் வாலிதான் பாடல்கள் எழுது வார்''’என எம்.ஜி.ஆர். அறிவிக்க.... தமிழ்நாடு முழுக்க பரபரப்பாகிப் போச்சு.

சென்னை பாண்டிபஜாரில் தமிழ்வாணன், மதிஒளி சண்முகம் உட்பட பெரிய, பெரிய பத்திரிகை யாளர்களும், இலக்கியவாதிகளும் ஒரு விவாதக் கூட்டம் நடத்து னாங்க.

"கண்ணதாசனுக்கு மாற்று வாலியா? கண்ணதாசன் எங்க? வாலி எங்க?'’என ஆவேசமா விவாதிச்சுப் பேசுறாங்க. அந்தச் சமயத்துல தமிழ்வாணனோட "கோகுலம்'னு ஒரு சிறு பத்திரிகை. குமுதத்தோட இணைச்சு வரும். அதுல கேள்வி-பதில் பகுதியில் "கண்ணதாசன் -வாலி: ஒப்பிடுக?'’அப்படிங்கிற கேள்விக்கு "கண்ணதாசன் ஒரு யானை -வாலி ஒரு கொசு'’என தமிழ்வாணன் எழுதியிருந்தார். இதுவும் பரபரப்பாகிடுச்சு.

இந்தப் புத்தகம் வந்த மறுநாள் ஒரு திருமண நிகழ்ச்சியில் வாலியும், தமிழ்வாணனும் சந்திச்சுக்கிட்டாங்க.

"பத்திரிகை பார்த்தீரா? என்னோட பதிலைப் படிச்சீரா?''”

"படிச்சேன்...''”

"எப்படி?''”

"நீங்க எழுதினது நூத்துக்கு நூறு உண்மை. கண்ணதாசன் ஒரு யானை; நான் கொசுதான். ஆனா...''”

"என்ன.... ஆனா...?''”

"கொசு கடிச்சா யானைக்கால் வந்துடும்... பரவால்லயா...''”

-இப்படி வாலி சொன்னதும், சத்தமாக சிரித்து ரசித்தார் தமிழ்வாணன்.

இப்படி ஆரோக்கியமாக இருந்தது அந்தக்கால விவாதங்களும், விமரிசனங்களும்.

விமர்சிக்கப்பட்டவரையே ரசிக்க வைப்பதுதானே நல்ல விமரிசனத்திற்கான லட்சணம்.

கண்ணதாசனின் பெருந்தன்மை.....

(பறவை விரிக்கும் சிறகை)

படம் உதவி: ஞானம்

____________

கட்... கட்... கட்’...!

dd

டிகர்திலகம் சிவாஜி, கே.ஆர்.விஜயா, நம்பியார் நடிச்சு, பி.மாதவன் தயாரிச்சு, இயக்கிய படம் "ராமன் எத்தனை ராமனடி'. இந்தப் படத்துக்கு கதை-வசனம் எழுதினவர் பாலமுருகன்.

"இருட்டுல இருந்த என்னை வெளிச்சத்துக்கு கொண்டு வந்ததும் ஒரு பொண்ணுதான். வெளிச்சத்துலருந்து என்னை இருட்டுக்கு தள்ளினதும் ஒரு பொண்ணுதான்'’-அப்படிங்கிற டயலாக் உண்டு. இதை கதை யோட்டத்துக்கு தகுந்த மாதிரி எப்படி பிரஸண்ட் பண்றதுங் கிறதுல சிவாஜியப்பாவுக்கு ஒரு சின்ன குழப்பம். காரணம்... என்ன மீனிங்ல இந்த டயலாக் எழுதப்பட்டிருக்குங்கிறதுல குழப்பம். இருந்தாலும் கர்ப்பிணிப் பெண் போல இடுப்பில் ஒரு கை வைத்து அந்த டயலாக்கை பேசினார் சிவாஜியப்பா.

கட்... கட்... கட்..’ என குரல் கொடுத்தார் கதாசிரியர் பால முருகன். டைரக்டர் மாதவனுக்கு கடுப்பு. இருந்தாலும் பொறுமை காத்தார்.

"என்னடா?''’என சிவாஜியப்பா கேட்டார்.

"என்ன கையத் தூக்கி பேசு றீங்க?''’என கேட்டார் பாலமுருகன்.

"இருட்டுலருந்து என்னை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தவ ஒரு பொண்ணுங்கிறது... "கர்ப்பத்துல ருந்து பெத்துப் போட்டவ' அப்படிங்கிற மீனிங்லதான எழுதியிருக்க?''”

"இங்க பாருங்க... தேவையில்லாம கதையை மாத்துற வேலை வேண்டாம். சாப்பாட்டு ராமனா திரிஞ்சவனை, மெட்ராஸுக்கு போய் ஒரு நல்ல ஆளாகி வான்னு அனுப்புறது அவதான். அவன் பெரிய சினிமா நடிகனாகி ஊருக்கு வரும்போது, இன்னொருத்தனுக்கு மனைவியாகி, அவன் மனசை இருட்டுல தள்ளினது அவதான். அதுக்குத்தான் இந்த டயலாக். இஷ்டத்துக்கு கையக் காலை உசத்தி, கதையை மாத்தாதீங்க'' ’என பாலமுருகன் சொல்ல...

யோசித்த சிவாஜியப்பா... "பக்கத்துல இருக்க சோபாவ இப்படி நகர்த்திப் போட்டு, அதுல கை வச்சுக்கிட்டுப் பேசட்டுமா?'' எனக் கேட்க... டைரக்டர் மாதவன் ஓ.கே.சொல்ல, பாலமுருகனைப் பார்த்து, "டேய் குட்டையா (குள்ள மானவர்) ஓ.கே.வா?''’என சிவாஜியப்பா கேட்க... “"அதுக் குத்தான சிவாஜிய ஹீரோவா போட்டு படம் எடுக்குறோம். இல்லேன்னா... ஆள மாத்திரமாட்டோ மா?''’என பாலமுருகன் சொல்ல...

"பாருங்களேன்... சிவாஜிங்கிற ஒரு மாபெரும் நடிகரையே ஒரு வசனகர்த்தா கோளாறு சொல்றார்னா... படைப்பாளிகள் அப்ப எவ்வளவு சுதந்திரமா இருந்திருக்காங்க. படைப்பு சரியா வரணும்கிறது எவ்வளவு கவனமா இருந்திருக்காங்க'ன்னு புரியும்.