dd

(58) கதையை இப்படிச் சொல்லணும்!

பாடலாசிரியர், கதாசிரியர், திரைக்கதை மன்னர், வசனகர்த்தா, தயாரிப்பாளர், இயக்குநர் என சினிமாவில் பன்முகத் தனமையுடன், எல்லா முகத்திலும் வெற்றிமுகம் கண்டவர் பஞ்சு அருணாசலம் சார் அவர்கள்.

Advertisment

1960-களில் பாடலாசிரியராக என்ட்ரி கொடுத்தார். எத்தனை... எத்தனை ஹிட் பாடல்கள்.

"கலங்கரை விளக்கம்'’ படத்தில் எம்.ஜி.ஆருக் காக "பொன் எழில் பூத்தது புது வானில்'’ என மயக் கும் பாடலை எழுதினார். 1970-களில் ’"அன்னக்கிளி' யில் ஹிட்டடித்த அத்தனை பாடல்களையும் படைத்தவர். இப்படி பட்டியல் போட்டுக்கொண்டே போகலாம் பஞ்சு சார் எழுதிய பாடல்களை.

1970-களில் சிவாஜியின் "அவன்தான் மனிதன்' படம் தொடங்கி, ரஜினியை "ஆறிலிருந்து அறுபதுவரை',’"எங்கேயோ கேட்ட குரல்'’என மாறுதலாகக் காட்டி, ‘"முரட்டுக் காளை'யாக ரஜினியை ஆக்ஷன் ஹீரோ அந்தஸ்துக்கு உயர்த்தி யது பஞ்சு சாரின் கதைகள்தான். கமல்ஹாசனை ‘"சகலகலா வல்லவன்'’ ஆக்கியதும் இவர் கதைதான். இப்படி பட்டியல் போட்டுக்கொண்டே போகலாம் பஞ்சு சார் எழுதிய கதைகளை.

Advertisment

1970-களில் ‘"அவர் எனக்கே சொந்தம்'’ படத்தின் மூலம் தயாரிப்பாளராகி ரஜினி, கமல், விஜயகாந்த் என எத்தனையோ ஹீரோக்களை வைத்து தயாரித்திருக்கிறார் பஞ்சு சார்.

"கலிகாலம்'’உட்பட நான்கைந்து படங்களை இயக்கியிருக்கிறார் பஞ்சு சார்!

அவருடைய கம்பெனியின் படம்பண்ண முடியாமல் போனது அநேகமாக நான் மட்டுமாகத்தான் இருப்பேன். அன்றைய டைரக்டர்களில் மணிவண்ணன் கூட இரண்டு, மூன்று படங்கள் பஞ்சு சார் கம்பெனிக்கு பண்ணிவிட்டார். எஸ்.பி.முத்துராமன் சார், பஞ்சு சாரின் கம்பெனியின் நிரந்தர டைரக்டராகவே இருந்தார். அவரின் நிறுவனம் அன்றைய டைரக்டர்களுக்கு ஒரு சரணாலயம் போலவே திகழ்ந்தது.

இப்படி, தன் வெற்றிச் சரித்திரத்தை திரையில் எழுதிய பஞ்சு சார், ஆரம்பத்தில் படம் தொடங்கி, பிறகு கைவிடுவது அல்லது பாதி படம் எடுத்ததும் கைவிட வேண்டிய சூழல் அவருக்கு ஏற்பட்டிருக்கிறது.

அதனால் அவரை ‘"பாதி படம் பஞ்சு அருணாசலம்'’என்று சினிமா இண்டஸ்ட்ரியில் சொல்லியிருக்கிறார்கள்.

அத்தனை அவமானங் களையும் படிக்கட்டுகளாகப் போட்டு மிதித்து, அதில் ஏறிப்போய் வெற்றி இலக்கை அடைந்திருக்கிறார்.

dd

"பஞ்சு அருணாசலம் கதை இல்லாமல் படம் இல்லை' என்கிற நிலைமையை தன் உழைப்பால் உண்டாக்கினார். மற்றவர்களின் கதையை படமெடுப்பதாக இருந்தாலும், அதை ஓட்டை உடைசல் இல்லாமல் சரிபண்ணித் தரும் வேலையை பஞ்சு சாரிடம்தான் கொடுத்திருக்கிறார்கள்.

"கதையை எப்படி அமைக்க வேண்டும்' என உளவியல் ரீதியாகவே ஒரு விளக்கத்துடன் பஞ்சு சார் என்னிடம் சொன்னார்.

"மனோபாலா சார்... நாம ஹீரோவுக்கு கதை சொல்லும் போதும்கூட, ஆடியன்ஸுக்கு எப்படி கதையைச் சொல்லப் போறோமோ... அதுபோல சொல்லணும். ஹீரோ ஒரு போலீஸ் ஆபீஸர்னு வச்சுங்கங் களேன். ஹீரோகிட்ட முதல்லயே இதைச் சொன்னீங்கன்னா... அப்படியே, காக்கி டிரெஸ் விறைப்போட மனரீதியா இறுக்கமா ஆகிடுவாங்க. அப்ப அந்த மூடுக்கு ஏத்த மாதிரி தான், குறிப்பிட்ட வட்டத்துக்குள்ளதான் ஸீன் பண்ணவேண்டி யிருக்கும். அதைத் தாண்டி ஸீன் சொன்னா, அவங்களுக்கு உளவியல்ரீதியா பிடிக் காமப் போயிடும். அதேசமயம்... போலீஸ் கதையை எப்படிச் சொல்லணும்னா... ஹீரோ போலீஸ் ஆபீஸர்ங்கிறதை சொல்லாம... ஒரு லோக்க லான ஆளு. தப்ப தட்டிக் கேட்பான்... கடைசியிலதான் அவன் ஒரு போலீஸ் ஆபீஸர்னு தெரியவரும்னு கதை சொன்னா... அந்த லோக்கல் ஆளா, அநியாயத்த தட்டிக் கேட்கிற இளைஞனாத்தான் ஹீரோ தன்னை உருவகப்படுத்திக்குவார். தேவைப்படுற இடத்துல மட்டும் போலீஸ் மிடுக்கை காட்டுவார். அதனால இஷ்டத்துக்கு ஸீன் பண்ணலாம். இந்த ஃபார்முலாவுக்கு மிகச் சிறந்த உதாரணம் எம்.ஜி.ஆர் சாரோட ‘"காவல்காரன்'’ படம்தான். அந்தப் படத் துல எம்.ஜி.ஆர். ஜாலியா வளைய வந்துட்டி ருப்பார். ‘"ஒங்கொப்பரான சத்தியமா நான் காவல்காரன்'னு பாட்டு கூட பாடுவார். ஆனா இண்டர்வெல் பிளாக்ல அவர் ஒரு போஸீஸ்னு ஆடியன்ஸுக்கு தெரியவரும்போது ஒரு பரபரப்பு இருக்கும். எம்.ஜி.ஆரும் அப்படியே சீரியஸா மாறுவார். "இந்த ஃபார்முலா எப்ப வுமே சக்ஸஸ் ஃபார்முலா' எனச் சொன்னார்.

எவ்வளவு பெரிய சீக்ரெட் ஆஃப் சக்ஸஸ் இது.

அதனாலதான் பஞ்சு சார் ஒரே நேரத்துல ஒரே ஹீரோவுக்கு சீரிய ஸான ஒரு கதையையும், ஒரு பக்கா கமர்ஷியல் கதையையும் உருவாக்க முடிஞ்சிருக்கு.

நான் ‘"சத்யா மூவீஸ்'’ என்கிற பெரிய கம்பெனிக்காக பெரிய நடிகர் ரஜினியை வச்சு ‘"ஊர்க்காவலன்'’ படம் பண்ணியதைச் சொன் னேன். அதில் தொடக்கத்தில் சில நிர்பந்தங்கள் எனக்கு ஏற்பட்டதையும், பிறகு என் மேல் நம்பிக்கை வைத்து, என்னை சுதந்திரமாக இயங்க விட்டதையும் சொன்னேனல்லவா. அதுக்கு முன்பே சத்யா மூவீஸ் நிர்வாகி பத்மனாபன் தயாரிப்பில் ‘"மக்கள் திலகம் பிக்சர்ஸ்'ஸுக்காக கன்னடத்தில் விஷ்ணுவர்த்தன், ஊர்வசி நடிப்பில் ‘"டிசம்பர்-31'’ என்கிற படத்தை எடுத்ததையும் சொன்னேன்.

பெரிய நிறுவனங்களின் தயாரிப்பில், படம் இயக்குவது மட்டுமல்ல. பெரிய ஹீரோக்களின் படத்தை இயக்குவதிலும், சில சங்கடங்கள் உண்டு. ‘"டிசம்பர்-31'’ படப்பிடிப்பின்போது சொல்ல மறந்த விஷயம் ஒன்றை உங்களோடு பகிர்ந்துகொள் கிறேன்.

எல்லா மொழிகளிலுமே பெரிய ஹீரோக்கள் இருவரின் ரசிகர்கள் ஒருவித பதட்டத்தை உண்டாக்குவார்கள். ஆனாலும் கன்னடத்தில் ரசிகர்கள் முரட்டுத்தனமாக இருப்பார்கள். அதி லும் குறிப்பாக ராஜ் குமார் மற்றும் விஷ்ணு வர்த்தன் ரசிகர்கள் இடையே இந்த கடும் பதட்டம் இருக்கும்.

"இப்படியெல்லாம் இருக்கும்' என்று எனக்கு அங்கே போய் ஷூட் டிங் தொடங்கிய பிறகு தான் தெரியும்.

பத்மநாபன் எனக்கு ஃப்ளைட் டிக் கெட் போட்டுக் கொடுத் தார். நான் பெங்களூரு சென்று விஷ்ணுவர்த்த னிடம் கதை சொன் னேன். அவருக்கு மிகவும் பிடித்துப்போனது.

(விஷ்ணுவர்தன் இறப்பதற்கு முன்புவரை, மற்றவர்களிடம் இந்த கதையைப் பாராட்டிச் சொல்லியிருக்கிறார் என்றால் பாருங் களேன்?)

படப்பிடிப்பு தொடங்கியதும், பஞ்சா யத்தும் தொடங்கியது.

கன்னட சினிமாவில் ராஜ்குமார்தான் தெய்வம். ராஜ்குமாரின் படங்களை டைரக்ட் செய் கிறவர்கள் மட்டுமே மனிதர்களாக பார்க்கப்படு வார்கள். மற்ற கன்னட ஹீரோக்களை வைத்து படம் பண்ணும் இயக்குநர்கள் மனித லிஸ்ட்டில் வைக்கப்படமாட்டார்கள். ஏதோ தங்களின் சொந்த எதிரியாகவே பார்ப்பார்கள் ரசிகர்கள்.

ராஜ்குமார் ரசிகர்களின் கொலை வெறித் தாக்குதல்...

(பறவை விரிக்கும் சிறகை)

படம் உதவி: ஞானம்

dd

த்யா ஸ்டுடியோ’பத்மநாபன், எம்.ஜி.ஆர். சாருக்கு வலதுகரம் போன்றவர். சத்யா ஸ்டுடியோவை கட்டிக் காப்பதில் மன்னன். ஸ்டுடியோவோட பின்பக்கம் ஐம்பது பசுமாடு, ஐம்பது எருமை மாடுகள் இருக்கும். இங்கிருந்துதான் எம்.ஜி.ஆரோட ராமாவரம் தோட்ட வீட்டுக்கு பால் போகும். இப்படி பெரிய மாட்டுப் பண்ணையே ஸ்டுடியோவுக்குள்ள இருந்தாலும், ஸ்டுடி யோவில் ஒரு ஃபுளோரில் கூட குப்பை இல்லாமல், மிகச்சுத்தமாக பார்த்துக் கொள்வார். "தொழில் செய்ற இடம் சுத்தமா இருக்கணும்'’என நினைக்கிறவர் எம்.ஜி.ஆர். அதனால் அவ்வளவு சுத்தமாக வைத் திருந்தார் கண்காணிப்பாளர் பத்மநாபன்.