Advertisment

நினைவோ ஒரு பறவை! நடிகர் -டைரக்டர் -தயாரிப்பாளர் மனோபாலா

dd

dd

(66) சாதாரணம்... ரணம்!

ரு படத்துக்கு உயிரூட்டுறதே வசனம்தான்.

Advertisment

உதாரணத்துக்கு "கை கொடுத்த தெய்வம்' படத்துல க்ளைமாக்ஸில் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் எழுதின வசனத்தை விட வேற உதாரணம் தேவையில்லை.

ஒரு அப்பாவிப் பொண்ணு. அவளை "கெட்டுப் போனவ' என ஊர் உலகமே சொல்லும்போது...

கதையோட முடிவுல அதுக்கொரு தீர்வு சொல்லணும்.

க்ளைமாக்ஸ் ஸீன் எடுக்க யூனிட் தயாரா இருக்கு.

சிவாஜியப்பா, சாவித்திரியம்மா, எஸ்.எஸ்.ஆர்., ரெங்காராவ்... இப்படி பெரிய, பெரிய நடிப்பு ஜாம்பவான்கள் நடித்த படம் அது. க்ளைமாக்ஸில் நடிக்க ஆர்ட்டிஸ்ட் எல்லாரும் தயாரா இருக்காங்க.

Advertisment

ஆனா டைரக்டர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணனுக்கு டயலாக் வரமாட்டேங்குது. "நச்'னு ஒரு டயலாக்குக்காக புலம்பித் தவிக்கிறாரு.

கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் எப்பவுமே வேட்டிய அவுத்துப் போடுவாரு, அன்டிராயரோட நிப்பாரு. சட்டய கழட்டிப்போடுவாரு... பனியனோட நிப்பாரு.

இப்படியெல்லாம் கூட தன்னைத் துன்புறுத்தி, காட்சிக்கும், வசனத்துக்கும் யோசிக்கக்கூடியவர்.

ஆனா... இப்ப சுத்தமா டயலாக் வரல!

சிவாஜியப்பா என்ன பண்ண

dd

(66) சாதாரணம்... ரணம்!

ரு படத்துக்கு உயிரூட்டுறதே வசனம்தான்.

Advertisment

உதாரணத்துக்கு "கை கொடுத்த தெய்வம்' படத்துல க்ளைமாக்ஸில் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் எழுதின வசனத்தை விட வேற உதாரணம் தேவையில்லை.

ஒரு அப்பாவிப் பொண்ணு. அவளை "கெட்டுப் போனவ' என ஊர் உலகமே சொல்லும்போது...

கதையோட முடிவுல அதுக்கொரு தீர்வு சொல்லணும்.

க்ளைமாக்ஸ் ஸீன் எடுக்க யூனிட் தயாரா இருக்கு.

சிவாஜியப்பா, சாவித்திரியம்மா, எஸ்.எஸ்.ஆர்., ரெங்காராவ்... இப்படி பெரிய, பெரிய நடிப்பு ஜாம்பவான்கள் நடித்த படம் அது. க்ளைமாக்ஸில் நடிக்க ஆர்ட்டிஸ்ட் எல்லாரும் தயாரா இருக்காங்க.

Advertisment

ஆனா டைரக்டர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணனுக்கு டயலாக் வரமாட்டேங்குது. "நச்'னு ஒரு டயலாக்குக்காக புலம்பித் தவிக்கிறாரு.

கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் எப்பவுமே வேட்டிய அவுத்துப் போடுவாரு, அன்டிராயரோட நிப்பாரு. சட்டய கழட்டிப்போடுவாரு... பனியனோட நிப்பாரு.

இப்படியெல்லாம் கூட தன்னைத் துன்புறுத்தி, காட்சிக்கும், வசனத்துக்கும் யோசிக்கக்கூடியவர்.

ஆனா... இப்ப சுத்தமா டயலாக் வரல!

சிவாஜியப்பா என்ன பண்ணினார்னா... சாவித்திரி, எஸ்.எஸ்.ஆர். உட்பட க்ளைமாக்ஸில் நடிக்கிற எல்லா ஆர்ட்டிஸ்டையும் கூப்பிட்டார்.

"நாம செட்டுக்குள் ஒரு ஓரமாய் போய் உட்காரலாம்'' என அழைத்துக்கொண்டு போனார்.

எல்லாருக்கும் சேர் போடச் சொன்னார். எல்லோரும் உட்கார்ந்தார்கள்.

கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் கதாசிரியர், வசன கர்த்தா, தயாரிப்பாளர், இயக்குநர் என்பதைத் தாண்டி கவிஞராகவும் திகழ்ந்தார். சினிமாவுக்கும் பாடல்கள் எழுதியுள்ளார். கொஞ்சம் குள்ளமானவர் என்பதாலும், கவிஞர் என்பதாலும் "குள்ளக் கவி' என்றுதான் கோபாலகிருஷ்ணனை சிவாஜியப்பா அழைப்பார்.

"குள்ளக்கவி திக்குறான்... திணறுறான்... இருக்கட்டும்... அப்படியே யோசிக்கட்டும். அவன் பார்வையிலேயே நாம இருந்தா அவனுக்கு ஒரு நெருக்கடியா இருக்கும். எப்படி யும் இன்னும் பத்துப் பதினைஞ்சு நிமிஷத்துல டயலாக்கை கண்டுபிடிச்சிடுவான். அவன் டயலாக்கை கண்டுபுடிச்சிட் டான்னா... இந்தக் காட்சி சிறப்பா வரும். கûதைக்கு முத்தாய்ப்பா இந்த வசனம் இருக்கும் வெய்ட் பண்ணு வோம்'' என சிவாஜியப்பா சொல்ல... அதன்படியே எல்லோரும் காத்திருந்தனர். ஆனால் சாயங்காலம் நாலுமணி வரைக்கும் கோபாலகிருஷ்ணனுக்கு டயலாக் வரல!

dd

நாலு மணிக்கு மேல... குஷியோட காத்துல பறக்கிற மாதிரி ஓடி வர்றார்.

"இந்தப் படத்தை நான் காப்பாத் திட்டேன்... என்னை நான் காப்பாத்திக் கிட்டேன்...'' எனச் சொன்னார்.

"கை கொடுத்த தெய்வம்' படத்தோட க்ளைமாக்ஸ் மிக அழுத்தமாக அமைய... வசனம்தான் முக்கிய காரணம்.

வெகுளிப் பெண் சாவித்திரிக்கும், சிவாஜிக்கும் கல்யாண ஏற்பாடுகள் நடக்கும் நிலையில்... "அவள் குடும்ப வாழ்க்கைக்கு ஏற்றவள் அல்ல' என சாவித்திரியின் அண்ணனே தன் நண்பரான சிவாஜிக்கு கடிதம் எழுதிவிடுவார்.

திருமணத்தை நிறுத்தச் சொல்லிவிடும் சிவாஜி... உண்மை அறிந்து, சாவித்திரியை மணமுடிக்க வரும்போது, சாவித்திரி யின் அப்பா ரெங்காராவும், "நீ கெட்ட பெண்' என ஒதுக்கியதால் தற்கொலை செய்துகொள்வார் சாவித்திரி.

dd

"உலகம் உன்னை வெறுத்துச்சு. உனக்காக நான் அந்த உலகத்தையே வெறுத்திட்டு, உனக்கு வாழ்வு கொடுக்க வந்திருக்கும்போது... நீ என்னையும் வெறுத்திட்டுப் போறியே ஏம்மா...''

"களங்கம் இல்லாத பொண்ணுமேல இப்படி களங்கம் சுமத்துனா... அவளோட காலம் இப்படித்தான் முடியும்கிறத, இந்தப் பாழாப்போன உலகத்துக்கு எடுத்துக்காட்ட... அவ கடைசி யாத் திரைக்கு ஏற்பாடு செய்யுங்கய்யா...''

-இப்படியான வசனங்கள், இப் போது சாதாரணமாகத் தெரியலாம்...

ஆனால் அப்போது... அது பெண்மேல் அபாண்ட பழி சுமத்தியவர்களை ரணப்படுத்தியது.

படம் பார்த்தவர்களின் இதயங் களை ஈரப்படுத்தியது.

"சவாலே சமாளி' படத்தில் தலைக்கனம் பிடித்த கதை நாயகியாக ஜெயலலிதா நடித்திருப்பார். ஏழை இளைஞனாக சிவாஜி.

கதைப்படி ஒரு நிர்பந்தத்தால் சிவாஜி-ஜெயலலிதாவுக்கு திருமணமாகும்.

முதலிரவின்போது... சிவாஜி தோளைத் தொட்டுப் பேச... அந்த இடத்தில்... "தொடாதீங்க... நீங்க ரோஷமுள்ள ஆம்பளையா இருந்தா, என் அனுமதியில்லாம என்னைத் தொடக்கூடாது'' என ஜெயலலிதா சொல்வார். மல்லியம் ராஜகோபால் கதை-வசனம் எழுதி இயக்கிய படம் இது.

"தொடாதீங்க...' என்று வசனம் எழுதப்பட்ட காட்சிக்கு பாட்டாலேயே கண்ணதாசன் வசனம் எழுதி அற்புதம் சேர்த்தார்.

அந்த "தொடாதே'வை பல்வேறு வடிவங்களில் "நிலவைப் பார்த்து வானம் சொன்னது...' பாடலில் எழுதினார் கண்ணதாசன்.

ஏ.பி.நாகராஜன் மிகச்சிறந்த டைரக்டர் மட்டுமல்ல... மிகச்சிறந்த மொழிப்புலவரும் கூட.

சிவன்லிதருமி, நக்கீரர் -சிவன்... விவாதங்களுக்கு இணை உண்டா?

(பறவை விரிக்கும் சிறகை)

_______________

நுட்பம்!

திருவிளையாடலில் சிவனுக்கும் நக்கீரருக்கும் விவாதம் நடக்கும் இடம் அரண்மனையின் தமிழ்ச் சங்க மண்டபம்.

இதில் நான்கு தூண்களில் மூன்று தூண்களில் புலவர்களின் படங்கள் வரையப்பட்டிருக்கும். நாலாவது தூண் வெறுமனே இருக்கும்.

நான் ஓவியக் கல்லூரியில் படித்த ஓவியனல்லவா... அதனால் "திருவிளையாடல்' படம் பார்த்தபோது எனக்கு அது குழப்பமாக இருந்தது.

ஒருவேளை செட் ரெடியாவதற்குள் ஷுட்டிங் எடுக்கவேண்டிய சூழ்நிலையா? என கேள்வி எழுந்தது எனக்குள்.

நான் அந்தப் படத்தின் ஆர்ட் டைரக்டர் கங்காவிடம் கேட்டேன்.

"சங்கத்தமிழ் வளர்த்தவங்க நான்கு பேர்கள். அதில் மூணுபேர் இறந்துட்டாங்க. கதைப்படி இப்போ நக்கீரர் உயிரோடு இருக்கார். அதனால்தான் ஒரு தூணில் படம் வரையாமல் விட்டோம்'' என்றார் கங்கா.

அப்பப்பா... இது எவ்வளவு பெரிய விஷயம்!

தேடித் தேடி கத்துக்கணும்... தெரிஞ்சுக்கணும்... அதுதான் எனக்குப் பிடிக்கும்!

nkn140922
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe