"அந்த பெரியார் சிலைக்கு ஒரு வரலாறு உண்டு. அதை அங்குள்ள கல்வெட்டிலேயே காண முடியும். (மாவலி பதில்கள் பகுதியில் அது குறித்து விளக்கப்பட்டுள்ளது) அந்த வரலாற்றுப் பின்னணியில் ஏற்பட்ட சமூக மாற்றத்தால் பலனடைந்தவர்கள் பெரியார் சிலைக்கு மரியாதை செலுத்துவது வழக்கம். அப்படித்தான் கடலூர் புதுநகர் காவல்நிலைய காவலர் ரெங்கராஜ்(எ)திராவிடராசன், கடலூர் போக்குவரத்து காவலர் ரஞ்சித், திருப்பாப்புலியூர் காவல் நிலைய காவலர் அசோக் ஆகியோரும் செப்டம்பர் 17ல் மரியாதை செய்தனர். ஆகஸ்ட் 7ந் தேதி மூவரும் கள்ளக்குறிச்சிக்கு இடமாற்றம் செய்யப்பட்ட னர். நிர்வாகக் காரணம் என்று சொல்லப்பட்டாலும், பெரியாரு க்கு மரியாதை செலுத்திய மூவரை மட்டும் இடமாற்றம் செய்தது நிர்வாகத்தின் அலங்கோலத்தையே காட்டுகிறது என்பதை அரசியல் கட்சியினரும் சமூக செயல்பாட்டாளர்களும் தெரிவித்தனர்.
காவலர்கள் மூவர் மீது வெளிப்படையான வேறு குற்றச்சாட்டுகள் எதுவும் இல்லை. அவர்கள் தாழ்த்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்கள். சாதி மறுப்பு திருமணம் செய்தவர்கள். பெரியாரிய சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டவர்கள், அதனால் அவரது பிறந்த நாளில் அவருக்கு மரியாதை செய்திருக்கிறார்கள், மூன்று காவலர்களின் பணி இடமாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து 08.10.2020 அன்று வி.சி.க பொறுப்பாளர் திருமார்பன் தலைமையில் கடலூர் பெரியார் சிலை அருகே தி.மு.க, காங்கிரஸ், த.வா.க, தி.க, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் உள்ளிட்ட கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடமும் புகார் அளித்துள்ளனர்.
இதுகுறித்து தமிழ் உணர்வாளர்கள் கூட்டமைப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திருமார்பன் நம்மிடம், ""பெரியார் ஒரு அரசியல் கட்சியின் தலைவர் அல்ல. அவர் ஒரு சமுதாய சீர் திருத்தவாதி. இந்திய அரசு அவருக்கு தபால்தலை வெளியிட் டுள்ளது. அப்படிப்பட்டவரின் சிந்தனைகளால், போராட்டங் களால் கல்வியறிவு பெற்றவர்கள், வேலை வாய்ப்பு பெற்றவர்கள், வாழ்வாதாரம் பெற்றவர்கள் அவரை நினைவுகூரும் வகையில் அவருக்கு மரியாதை செலுத்துவதும் எப்படி தவறாகும்? காவல்துறையில் இருப்பவர்கள் அவ்வாறு செய்யக்கூடாது என்றால் ஜெயலலிதாவுக்கு நீதிமன்றம் தண்டனை அறிவித்த போது வேல்முருகன் என்ற காவலர் மொட்டை அடித்தார், அவர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? சாதி, மத, கட்சி அடையாளங்கள் அரசு அலுவலகங்களில் இருக்க கூடாது என்பது அரசு விதி. ஆனால், 3 காவலர்கள் மீது நடவடிக்கை எடுத்த கடலூர் காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீஅபிநவ் கூட சீருடையில் வழிபாடு-பரிகாரம் போன்றவற்றை செய்துள்ளார். அந்த சுதந்திரமும் உரிமையும் இந்தக் காவலர்களுக்கும் இருக்கிறதே? இத்தனைக்கும் இவர்கள் சீருடையில் கூட செல்லவில்லை. இது பா.ஜ.கவினரை திருப்திப்படுத்துவதற்காக அவர்களின் எடுபிடி ஆட்சியினர் செய்யும் பெரியாரிய சிந்தனைக்கு எதிரான நடவடிக்கைதான். அதனால்தான் ஆர்ப்பாட்டம் நடத்தினோம். எனவே அரசு அவர்கள் மீது இடமாற்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும்'' என்றார்.
காவல்துறை வட்டாரத்தில் நாம் விசாரித்த போது, ""கோவில்களுக்கு செல்வது, வழிபடுவது என்பது வேறு, ஒரு கொள்கையை முன்னிறுத்தி இயங்கும் தலைமையின் அடியொற்றி இயங்குவது என்பது வேறு.
பொதுவாக அரசு ஊழியர்கள் கட்சி, சாதி, மத, அரசியல் அடையாளங்களுடன் வெளிப்படையாக இயங்குவது தவறு. பெரியார் ஒரு சமூக சீர்திருத்த தலைவர் என்றாலும் அவர் அரசியல் ரீதியான கொள்கை அடிப்படையில் இயங்கியவர். அந்த இயக்கங்களு டன் நேரடி தொடர்புடைய வர்கள் காவல் துறையில் பணியாற்றும் போது இந்த கொள்கைக்கு எதிரான அரசியல் இயக்கங்கள் போராட்டங்கள் நடத்தும் போது இந்த காவலர்களின் மனநிலை எப்படி இருக்கும் என்ற கேள்வி எல்லோருக்கும் எழும்? இவர்கள் சரியாகவே நடந்து கொண்டாலும் எதிரான கொள்கையுடைய கட்சிகள் இவர்கள் மீது வீண் பழி சுமத்தும். அதை காவல்துறை தான் எதிர்கொள்ள வேண்டும். அதனால் தான் எதிர்காலத்தில் இப்படி யாரும் கட்சி, சாதி, மத, அரசியல் தொடர்புகளோடு துறையில் இயங்கக்கூடாது என்பதற்கான எச்சரிக்கை நடவடிக்கைதான் இது'' என்கின்றனர்.
அதே அளவுகோல், அனைத்து மதத்தினரின் உரிமைகளையும் பாதுகாக்க வேண்டிய போலீஸ் அதிகாரிகள், தங்கள் சீருடையுடன் குறிப்பிட்ட மதம் சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபடும்போதும் ஏற்படு மல்லவா எனக் கேட்டால், வெளிப்படையாக ஒப்புக்கொள்ளத் தயங்குகிறது காக்கி வட்டாரம்.
இதுகுறித்து விழுப்புரம் சரக டி.ஐ.ஜி எழிலரசனிடம் கேட்டதற்கு, ""இது துறை ரீதியான ஒரு நடவடிக்கைதான். தேவை யில்லாமல் திசை திருப்பப்படுகிறது. பெரியார் எல்லோரும் மதிக்க கூடிய ஒரு சமுதாயத் தலைவர். அவர் அரசியலுக்கு அப்பாற் பட்டவர். அதேபோல் காவல்துறையில் இருப்பவர்களும் அரசியலுக்கு அப்பாற் பட்டவர்கள். காவல்துறையில் பணியாற்று பவர்களுக்கு சில விதிமுறைகளும், ஒழுங்கும் இருக்கிறது. நாம் எல்லோருக்கும் பொது வானவர்கள். அதை உணர்ந்து காவல்துறையில் பணியாற்ற வேண்டும் என்பது பொதுவான கருத்து'' என்றார்.
-சுந்தரபாண்டியன்