க இந்தியாவை அமைக்கத் துடிக்கும் மத்திய பா.ஜ.க. அரசு, தமிழக பள்ளிக்கல்வியை தொடர்ச்சியாக குறி வைத்து ஆர்.எஸ்.எஸ்.சின் இந்துத்துவா சிந்தனைகளை மையப்படுத்தும் பல்வேறு செயல் திட்டங்களை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மூலம் திணிக்க முயற்சிப் பது சமீபகாலமாக சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகின்றது. தமிழக அரசின் பள்ளிக்கல்வி இயக்குநர், தொடக்கக்கல்வி இயக்குநர், மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குநர் ஆகிய மூன்று உயரதிகாரிகளுக்கும் கடந்த 20-ந்தேதி பள்ளிக்கல்வித்துறையின் இணைச்செயலாளர் வெங்கடேசன் ஒரு அவசர சுற்றறிக்கையை அனுப்பி வைத்திருக்கிறார்.

ee

அதில், இந்து மாணவர் முன்னணி மற்றும் இந்து இளைஞர் முன்னணி அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் இந்து மதத்தலைவர்கள் பற்றிய வரலாறு, சமய வழிபாடு, நீதிக்கல்வி, வீர காவியங் கள் பற்றிய கருத்து பிரச்சாரங்களை தமிழக பள்ளி களில் முன்னெடுத்து வருவதாக அரசின் கவனத் துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த அமைப் பைச் சேர்ந்தவர்கள் பள்ளி - கல்லூரிகளில் படிக் கும் இந்து மாணவர்களிடம் இது பற்றி கலந்துரை யாடி வருகின்றனர் என்றும், இதற்காக, தலா 10 பேர் கொண்ட குழுவினர் ஒவ்வொரு பள்ளி-கல்லூரி யிலும் இயங்கி வருகின்றனர் என்றும் தெரிய வந்துள் ளது. மேலும், இந்து மாணவியர்கள் வேறு மதத்தின ருடன் காதலில் ஈடுபட்டிருந்தால் அதனை தடுக்கும் நோக்கில் செயல்படுவதாகவும் தெரிகிறது.

இது போன்ற நடவடிக்கைகள் பள்ளி-கல்லூரிகளின் வழிகாட்டு நெறி முறைகளையும் விதி களையும் மீறுவதாக இருக்கின்றன. அவற் றை கண்காணிப்ப துடன், மதம் மற்றும் சாதி சமய கோட் பாடுகளுடன் நடக் கும் செயல்களை தடுக்க வேண்டும். விரைவில் நடக்கவிருக்கும் சட்டம்- ஒழுங்கு குறித்த கூட்டத்தில் இது பற்றி விவாதிக்கப்படவிருப்பதால் மேற்கண்ட செயல்கள் குறித்து எடுக்கப்படும் நடவடிக்கைகளை அரசுக்கு உடனடியாக தெரிவிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டிருக்கிறார் இணைச்செயலாளர் வெங்கடேசன்.

Advertisment

இந்த கடிதத்தைத் தொடர்ந்து சம்பந்தப் பட்ட கல்வித்துறை இயக்குநர்கள் மூவரும் தங்க ளுக்கு கீழ் பணிபுரியும் முதன்மை கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும், அவர் கள் மூலம் பள்ளி மற்றும் கல்லூரிகளின் முதல்வர் களுக்கும் அறிவுறுத்தியுள்ளனர். இந்த விவகாரம் தற்போது அம்பலமாகி பள்ளிக்கல்வித்துறை வட்டாரங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலை யில், அப்படி எந்த ஒரு கடிதமும் அனுப்பப்பட வில்லை; தமிழக பள்ளிகளில் மதக் குழுக்கள் எது வும் செயல்படவில்லை என அவசரம் அவசரமாக மறுத்திருக்கிறார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன். அண்மைக்காலமாக, துறை யின் அதிகாரிகள் சிலபல நடவடிக்கைகள் எடுப் பதும், அதனை செங்கோட்டையன் மறுப்பதும் வாடிக்கையாக இருக்கின்றன.

ee

இது குறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரி கள் தரப்பில் நாம் விசாரித்தபோது, ""மத்திய-மாநில அரசுகளின் ஒருங்கிணைந்த பட்டியலில் பள்ளிக் கல்வி இருந்தாலும் பா.ஜ.க.வுக்கு முன்பு மத்தியில் ஆட்சியிலிருந்த ஆட்சியாளர்கள் தமிழக அரசின் கருத்துக்களை அறிந்தே எதையும் செயல்படுத் தினர். தமிழ்நாட்டில் செல்வாக்கு மிக்கவர்கள் முதல்வர்களாக இருந்ததால், ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தம் இங்கு ஊடுருவ முடியவில்லை. ஆனால், எடப்பாடி ஆட்சியில் மத்திய பா.ஜ.க. அரசு, தனது மனிதவள மேம்பாட்டுத்துறை மூலம் தமிழக பள்ளிக்கூடங்களை ஆர்.எஸ்.எஸ். சித்தாந்த முகாமாக மாற்ற முயற்சிக்கிறது.

Advertisment

eee

பா.ஜ.க.-ஆர்.எஸ்.எஸ். இயக்கங்களின் மாணவர் அமைப்புகளை நேரடியாக பள்ளி மற்றும் கல்லூரிகளில் இறக்கி விடுகிறார்கள். இந்த நிலையில்தான், இப்படி ஒரு சர்குலர் கடிதம் ரெடி யானது. இது குறித்து அமைச்சர் செங்கோட்டை யன், துறையின் முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ் ஐ.ஏ.எஸ். உள்பட உயரதிகாரிகள் மத்தியில் விவாதிக்கப்பட்டு அதன்பிறகே துறையின் இயக்குநர் களுக்கு அறிவுறுத்தப்பட்டது. கடிதத்தை ரகசியமாக வைத்துக்கொள்ளவும், மாவட்ட கல்வி அலுவலர்கள் மற்றும் பள்ளி-கல்லூரி முதல்வர்களுக்கு வாய்மொழியாக அறிவுறுத்தவும்தான் உயரதிகாரி கள் உத்தரவிட்டிருந்தனர். ஆனால், கடிதம் மூலமே பரிமாறிக்கொள்ளப்பட்டதால் விசயம் அம்பலமாகி விட்டது. அதனால், இதனை மறுத்த அமைச்சர் செங்கோட்டையன், கடிதம் லீக்கானது குறித்து, இணைச்செயலாளர் வெங்கடேசனை வறுத் தெடுத்து விட்டார்'' என்று சுட்டிக்காட்டு கிறார்கள்.

பள்ளி-கல்லூரிகளில் மதக் குழுக்கள் என்பது குறித்து தமிழக உளவுத்துறையினரிடம் பேசிய போது, ""இந்துத்துவா அமைப்பினர் மதக் குழுக் களை இயக்கி வருகிறார்கள் என எங்களுக்கு கிடைத்த தகவலை முதல்வர் எடப்பாடி பழனிச் சாமிக்கு எங்களின் உயரதிகாரிகள் தெரிவித்துள்ள னர். உளவுத்துறையின் அறிக்கையை தலைமைச் செயலாளர் சண்முகம் மற்றும் உள்துறை செய லாளர் நிரஞ்சன்மார்டி ஆகியோரிடம் விவாதித் துள்ளார் முதல்வர். அந்த விவாதத்தின் போது தான், பொதுத்துறையிலுள்ள சட்டம் - ஒழுங்கு பிரிவிலிருந்து பள்ளிக்கல்வித்துறையை ஆக்ஷன் எடுக்க வலியுறுத்தலாம் என முடிவெடுக்கப்பட்டது.

ee

அதன்படி, பொதுத்துறையின் முதன்மைச் செயலாளர் செந்தில்குமார் ஐ.ஏ.எஸ்.சுக்கு உள் துறையிலிருந்து அறிவுறுத்தப் பட்டதை தொடர்ந்து, பள்ளிக் கல்வித்துறைக்கு செப்டம்பர் 12-ந்தேதி கடிதம் அனுப்புகிறார் செந்தில்குமார். அது குறித்து அமைச்சர் செங்கோட்டையனும் பிரதீப்யாதவ் உள்ளிட்ட அதிகாரி களும் விவாதித்த பிறகு, துணைச் செயலாளர் வெங்கடேசனுக்கு உத்தரவிடப்படுகிறது. பள்ளிகளில் மத குழுக்கள் eeஇயங்கவில்லை என செங்கோட்டையன் சொல்வது பொய். உளவுத்துறைக்கு கிடைத்த தகவலை உறுதி செய்துகொண்ட பிறகே இப்படிப்பட்ட நட வடிக்கைகள் பள்ளி-கல்லூரிகளில் இருப்பது குறித்தும், அது தடுக்கப்பட வேண்டுமென்பதை வலியுறுத்தியும் முதல்வருக்கு அறிக்கை கொடுத்தனர் எங்களின் உயரதிகாரிகள்'' என்கின்றனர் உளவுத்துறையினர்.

தமிழக கல்வித்துறையை காவித்துறையாக மாற்றும் அனைத்து நடவடிக்கைகளையும் மெல்ல மெல்ல எடுத்து வருகிறது ஆர்.எஸ்.எஸ். இயக்கம். பிஞ்சுகளின் நெஞ்சில் மதவெறி நஞ்சை விதைக்கும் வகையில், சமீபத்தில் அரசு நிதியுடன் செயல்படும் மயிலாடுதுறை குருஞானசம்பந்தம் பள்ளியில் தங்களது ஷாகா பயிற்சி முகாமை நடத்தியது ஆர்.எஸ்.எஸ்.! அதுபோலவே, நாகை அருகே ஒரு தனியார் பள்ளியிலும் இதே பயிற்சி நடத்தப்பட்டது.

பள்ளிகளில் மத குழுக்கள் உருவாவது தமிழக கல்வித்துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், பள்ளி மற்றும் கல்லூரிகளில் நடைமுறைப்படுத்தப்படும் இந்துத்துவா ரீதியிலான மத பிரச்சாரங்களை தடுப்பதை ரகசிய நடவடிக்கையாக வைத்திருக்காமல் வெளிப்படையாக நடவடிக்கை எடுக்க எடப்பாடி அரசு முன் வர வேண்டும் என்பதே ஐ.ஏ.எஸ்.அதிகாரிகளின் கருத்தாக இருக்கிறது.

-இரா.இளையசெல்வன்

_____________

தொண்டு நிறுவனங்களா? மத வெறியர்களா?

ள்ளிக்கல்வித்துறை துணைச் செயலாளர் வெங்கடேசனின் சுற்றறிக் கைக்கு முன்பாக துறையின் இயக்கு நர் கண்ணப்பன் eeவெளியிட்ட அறிவிப் பின்படி, அரசு சாரா தொண்டு நிறு வனங்கள் அரசுப் பள்ளிகளில் தலை யிட்டு கற்றல், மருத்துவம், உளவியல் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட அனுமதி வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது, மதரீதி யான அமைப்புகள் பல்வேறு பேனர் களில் பள்ளிக்குள் நுழைவதற்கான வாய்ப்பாக அமைந்துவிடும் என கல்வி யாளர்களும் உயரதிகாரிகள் பலரும் எச்சரித்திருந்தனர். ஏற்கனவே சாதிக் கயிறு சர்ச்சை பல பள்ளிகளில் ஆபத் தை உருவாக்கி வரும் நிலையில், இயக்குநரின் அறிவிப்பு வேறு வித மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் எனப் பலரும் எச்சரிக் கின்றனர்.

தமிழ்நாடு மாணவர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பாரிமைந்தன், “""பா.ஜ.க. ஆட்சியில் அதன் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி. பல பல்கலைகளிலும் கல்லூரிகளிலும் நுழைந்துவிட்டது. சென்னை பல்கலைக்கழகத்தில், இந்துக்களே அணி திரள்வீர் என்ற போஸ்டரால் சர்ச்சை உண்டானது. தற்போது பள்ளிக் குழந்தைகளை குறி வைக்கத் தொடங்கியுள்ளனர். மாணவர்களை நல்வழிப்படுத்தும் நிகழ்ச்சி என்ற பெயரில் ஆர்.எஸ்.எஸ். ஊடுருவுகிறது'' என்கிறார்.

தமிழ்நாடு ஆசிரியர் சங்கத் தின் மாநிலத் தலைவர் பி.கே.இள மாறன், ""கடந்த 16-ந் தேதி வெளி யான இயக்குநரின் அறிக்கையில், இத்தகைய நிகழ்வுகளுக்கு தலைமை யாசிரியரே அனுமதி கொடுக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. டி.இ.ஓ, சி.இ.ஓ. போன்ற உயர்கல்வி அதிகாரி கள் அனுமதி வேண்டும் என்ற நிலை இருந்தபோது இத்தகைய மத அமைப்புகள் ஊடுருவ முடிய வில்லை'' எனச் சுட்டிக்காட்டு கிறார். பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் கண் ணப்பனிடம் விளக் கம் கேட்டபோது, ""அரசுப் பள்ளி களில் ஆசிரியர் பற்றாக்குறை இருப்பதால் தனியார் நிறுவனத்தினர் பகுதி நேர ஆசிரி யர்கள் மூலம் பாடம் நடத்த அனுமதி கேட்கிறார்கள். அது தொடர்பாகத் தான் தலைமையாசிரியர் அனுமதி போதும் என அறிக்கை வெளியிட் டேன்'' என்கிறார்.

"40ஆயிரம் பேர் தகுதித்தேர்வு எழுதி ஆசிரியர் வேலைக்கு காத்திருக்கும் நிலையில், ஆர்.எஸ்.எஸ்.ஸை நுழைத்திட முயற்சிப்பது பேராபத்து' என்கிறார்கள் கல்வியாளர்கள்.

-மனோசௌந்தர்