பா.ஜ.க. தன்னுடைய அரசியல் விளையாட்டை ஆரம்பித்து, அதில் முதல் ஆட்ட நாயகனாக செங் கோட்டையனைத் தேர்வுசெய்துள்ளது. எடப்பாடியை அகற்றிவிட்டு, ஒரு புதிய அ.தி. மு.க.வைக் கட்டமைக்க ஓ.பி.எஸ். தலைமையில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. அதில் செங்கோட்டையனுக்கு ஒரு முக்கிய பதவி வழங்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.

Advertisment

aa

அ.தி.மு.க.வில் கடந்த 15 நாட்களாக உட்கட்சிக்குள் பல களேபரங்கள் நடைபெற்று வருகின்றன. இதுவரை காட்சியில் தென்படாத செங்கோட்டையன் கடந்த வாரத்தில் அ.தி.மு.க. மட்டுமல்லாமல் தமிழக அரசியலில் பரபரப் பாகப் பேசப்பட்டார். எடப்பாடிக்கான பாராட்டு விழாவில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வின் படங்கள் இடம்பெறவில்லை எனக்கூறி தன்னுடைய முதல் எதிர்ப்பையும் பதிவு செய்த அவர், விழா மேடைகளில் எடப்பாடியின் பெயரைக்கூட உச்சரிக்காமல், தன்னுடைய எதிர்ப்பை பலமாகக் காண்பித்துவருகிறார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒவ்வொரு மாவட்டத் திலும் அ.தி.மு.க. பொறுப்பாளர்கள், மாவட்டச் செயலாளர் கள், வட்டச் செயலா ளர்கள் என பல பதவி களுக்கான பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் தமிழகத்தில் பரவலாக உள்ள பெரும்பாலானோர் அந்த பட்டியலுக்கு எதிர்ப்பு தெரிவித்து கூட்டங்களைப் புறக்கணிக்க ஆரம்பித்துள்ளனர்.

Advertisment

ad

ஒருசில மாவட்டங்களில் அ.இ. அ.தி.மு.க.வினர் மிகவும் பகிரங்கமாக இந்தப் பட்டியலுக்குத் தங்களுடைய எதிர்ப்பைப் பதிவுசெய்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் மாநகர் மாவட்டத்தின் அம்மா, எடப்பாடியார் வெறிகொண்ட உண்மை விசுவாசிகள் என்ற ஒரு குழுவினர், திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளர் சீனிவாசனுக்கு எதிராக ஒரு சுவரொட்டியை ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர். "தி.மு.க. அமைச்சர் நேரு, மேயர் அன்பழகன் காலை கழுவி பணம் பெற்றுக்கொண்டிருப்பவரும், ப்ளுபிலிம் தொழில், மாமா வேலை செய்யும் மானங்கெட்ட மாவட்டச் செயலாளர் என்று திருச்சி சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி பகிரங்கமாகப் பேசிய நிலையில், அதற்கு மறுப்பு தெரிவிக்காமல் அமைதி காப்பதற்கு காரணம் என்ன? பதிலளிக்க வசனம் கிடைக்கவில்லையா? வரும் பணம் நின்றுவிடும் என்ற பயத்திலா?' என்று கேள்விகளுடன் அந்த சுவரொட்டி இடம்பெற் றுள்ளது.

அதேபோல் திருச்சி மாநகர் மாவட்ட வேதனைகளை வெளிக்காட்டத் துடிக்கும் கழகத்தின் நிர்வாகிகள், உண்மைத் தொண்டர்கள் ஒட்டியுள்ள சுவரொட்டியில் அ.தி.மு.க.வில் பதவி வேண்டுமா? அதற்கு சில தகுதிகள் உள்ளன. அதில் கட்சி பொதுக்கூட்டம், போராட்டம், கொடியேற்று விழா, கட்சி நிகழ்ச்சிகள் நடத்தியோ, கலந்தோ இருக்கக்கூடாது. மாற்றுக் கட்சிகளின் இரண்டாம் கட்டத் தலைவர்களோடு நல்ல தொடர்பில் இருக்கவேண்டும். அதேபோல் எடப்பாடியை மிக கேவலமாகத் திட்டுவோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisment

ss

தஞ்சாவூர் மற்றும் பட்டுக்கோட்டை முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தின் கோட்டையாக இருந்தது. அவர் இ.பி.எஸ்.ஸை எதிர்த்து, ஓ.பி.எஸ்.ஸுக்கு ஆதரவாகச் சென்ற பின்னர் அவருடைய பலம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்தது. தற்போது இருக்கும் இடம் தெரியாமல் தனக்கு உண்டான தொழிலில் மட்டும் கவனம் செலுத்திவருகிறார். இந்நிலையில் அவரை எதிர்த்து அரசியல் செய்வதற்காக தஞ்சாவூரில் தெற்கு மாவட்ட கழக செயலாளராக முன்னாள் எம்.எல்.ஏ. சி.வி.சேகர் அறிவிக்கப்பட்ட பிறகு அந்த தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட கூட்டம் நடை பெற்றது. இந்த கூட்டத்தில் தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட 9 ஒன்றியச் செயலாளர்களும் கூட்டத் தில் பங்கேற்காமல் புறக்கணித்துள்ளனர்.

திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க.வில் மாநகர் மாவட்டச் செயலாளராக இருக்கும் ஜெ.சீனிவாசன், தன்னுடைய உறவினர்களுக்கு மட்டுமே பதவிகளை வழங்கியிருக்கிறார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. அவர் போட்டுக்கொடுத்த பதவிகளில் சீனிவாசனின் பெரியப்பா மகன் சண்முகம் மாநகர எம்.ஜி.ஆர் மன்றச் செயலாளர், அத்தை பையன் வாசுதேவன் காஜாபேட்டை பகுதிச் செயலாளர், உடன்பிறந்த அக்கா மகன் பரத் மாவட்ட இளைஞர் பாசறைத் தலைவர், மனைவியின் உறவினர் ரோஜர் பாலக்கரை பகுதிச் செயலாளர் என்றால் பார்த்துக்கொள்ளுங் கள். இவர்கள் 4 பேரும் சீனிவாசன் வசிக்கும் வீட்டினை சுற்றியே வசித்து வருபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் இவருடைய விருப்பத்தின்படி பகுதிகளை பிரித்துக்கொள்கிறாராம். அதில் ஒரு பக்கம் 7 வார்டு இருக்கும், மற்றொன்றில் 4 வார்டு இருக்கும். இப்படி எல்லாவற்றிலும் உறவினருக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுப்பதாக தொண்டர்கள் குற்றச்சாட்டை முன்வைத் துள்ளனர்.

இப்படி தமிழகத்தில் குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் நேரடியாக பல எதிர்ப்புகள் எழுந்துள்ளன. தற்போது தமிழகம் முழுவதும் நிர்வாகிகள், தொண்டர்கள் என்று பலரும் தங்களுடைய எதிர்ப்பை காட்டி வரும் நிலையில், வருகின்ற சட்டமன்ற தேர்தலை எடப்பாடி எப்படி எதிர்கொள்ளப் போகிறார் என்பது பில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது? மற்றொரு பக்கம் பா.ஜ.க. ஒரு புதிய அ.தி.மு.க.வை கட்ட மைக்கத் திட்டமிட்டு அதனைச் செயல்படுத்து வதில் தீவிரம் காட்டி வருகிறது. எடப்பாடியை கழட்டிவிட்டு புதிய கூட்டணியை உருவாக்கி தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற புதிய திட்டத்தில் பா.ஜ.க. அரசியல் விளையாட்டை ஆட ஆரம்பித்துள்ளது.

-துரை.மகேஷ்