ஒரு டிரில்லியன் டாலர் கனவு! (One Trillion Dollar Dream!) என்கிற புத்தகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கடந்த அக்டோபர் 18ஆம் தேதி வெளியிட்டு வாழ்த்தினார்.
நூலுக்கான அறிமுக உரை தந்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "தமிழ்நாட்டை 2030ஆம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக முன்னேற்றுவோம் என்ற கனவு இலக்கை 2021 ஜூலை 20ஆம் தேதி முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் முதன்முறையாக அறிவித்தார். நாம் அனைத்து துறைகளிலும் நான்குகால் பாய்ச்சலில் முன்னேறி வருவதற்கும், இந்தியாவின் நம்பர் ஒன் பொருளாதார வளர்ச்சி கொண்ட மாநிலமாக தமிழ்நாடு முன்னேறியிருப்பதற்கும் இந்த உயர்வான இலக்கு முக்கிய காரணம்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
டிசம்பர் 10ஆம் தேதி நடந்த நூல் அறிமுகக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, "நமது முதலமைச்சர் வெளியிட்ட இந்த புத்தகத்தில் சொல்லப்பட்டபடி நாம் எந்தெந்த துறைகளில் எவ்வளவு முன்னேறியிருக்கிறோம், இன்னும் எப்படியெல்லாம் முன்னேற வேண்டும் என்று அறிவார்ந்த முறையில் இந்த அரங்கத்திலே பேசிக்கொண்டிருக்கிறோம். ஆனால் இதேநேரத்தில் இன்னொரு சிறு கூட்டம் நமக்குள் எப்படி பிரிவினையை உருவாக்கலாம் சண்டையை இழுத்துவிட்டு பாதாளத்தில் தள்ளலாம் என்று ரூம் போட்டு யோசித்துக்கொண்டிருக்கிறது. இளைஞர்கள் எச்சரிக்கையோடு இருக்கவேண்டும்'' என்று குறிப்பிட்டார்.
திட்டக்குழு துணைத்தலைவர் முனைவர் ஜெயரஞ்சன் உரையாற்றுகையில், "இப்போது இரண்டு பொருளாதார மாடல்கள் பேசப்படுகின்றன. குஜராத் மாடலில் பளபளப்பான சாலைகள் இருக்கும். ஆனால் ஒருசிலர் மட்டும் பெரும் கோடீஸ்வரர்களாக இருப்பார்கள். மற்ற கோடிக்கணக்கான மக்கள் படிப்பறிவில்லாத பஞ்சை பராரிகளாக இருப்பார்கள். தமிழ்நாட்டில் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி இருக்கிறது. எல்லா கிராமங்களிலும் எல்லா குடும்பங்களிலும் படித்தவர்கள், ஓரளவு வசதியானவர்கள் நிறைந்து இருக்கிறார்கள். இதுதான் வித்தியாசம்'' என்று பேசினார்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/12/15/booka-2025-12-15-16-50-40.jpg)
நிகழ்ச்சியில் பேசிய தொழில் முனைவர் சுரேஷ்சம்பந்தம், "சுகாதாரம் சிறந்து விளங்க 1000 பேருக்கு ஒரு மருத்துவர் இருக்க வேண்டும் என்கிறது WHO.. உ.பி.யில் 4000 பேருக்கு ஒரு மருத்துவர் உள்ளார். அமெரிக்காவில் 500 பேருக்கு ஒரு மருத்துவர் உள்ளார். தமிழ்நாட்டில் 250 பேருக்கு ஒரு மருத்துவர் உள்ளார். இப்படி ஒவ்வொரு துறையிலும் நாம் சாதனைகள் படைப்பதற்கு பெரியார் கோட்பாட்டு அடித்தளம் அமைத்தார். அண்ணா அரசியல் அடித்தளம் அமைத்தார். கலைஞர் பொருளாதார அடித்தளம் அமைத்தார்'' என்று விளக்கினார்.
திராவிடர் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் தோழர் மதிவதனி, ஊடகவியலாளர் தோழர் தேரடி இந்திரகுமார் உள்ளிட்டோர் உரையாற்றினர்.
இந்த புத்தகத்தின் முக்கியத்துவம் பற்றி நூலாசிரியர் திருஞானம் பேசியபோது, "ஒரு டிரில்லியன் டாலர் GDP என்பது தற்போதைய ரூபாய் மதிப்பில் 90 லட்சம் கோடி ரூபாய் GDP ஆகும். முதல்வர் பதவியேற்றபோது தமிழ்நாட்டின் GDP 20 லட்சம் கோடி ரூபாய் GDP ஆக இருந்தது. அதனை கடந்த நான்கரை ஆண்டுகளில் 35 லட்சம் கோடி ரூபாய் GDP ஆக உயர்த்தி உள்ளார் நமது முதல்வர். இதனை 2030 ஆம் ஆண்டுக்குள் 90 லட்சம் கோடி ரூபாய் ஏஉட ஆக உயர்த்த இலக்கு நிர்ணயித் துள்ளார்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/12/15/bookb-2025-12-15-16-50-56.jpg)
உலகில் உள்ள 194 நாடுகளில் மொத்தம் 175 நாடுகள் ஒரு டிரில்லியன் டாலர் GDP க்கு குறைவான பொருளாதாரம் கொண்டவை. இந்த நிலையில் நம் நாட்டின் 28 மாநிலங்களில் ஒரு மாநிலம் ஒரு டிரில்லி யன் டாலர் ஏஉடக்கு இலக்கு வைப்பது போற்றுதலுக்குரியது. இந்த இலக்கை நோக்கிய பயணத்தில் முக்கிய சவாலாக இருப்பது ஒன்றிய அரசு உருவாக்கி வரும் தடைகள்தான்.
ஒன்றிய அரசுக்கு நாம் ஒரு ரூபாய் வரி செலுத்தினால் 29 காசுதான் வரிப் பகிர்வாக நமக்குத் திரும்ப கிடைக்கிறது. இதை குறைந்தபட்சம் 50 காசுகளாக உயர்த்தி தரவேண்டும் என்று நமது முதல்வர் முன்வைத் துள்ள கோரிக்கை நியாயமானது. இதுகுறித்து ஊடகங்கள் அதிகம் பேசவேண்டும்'' என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/15/book-2025-12-15-16-50-27.jpg)