ம்பூர் இடைத்தேர்தலில் ஆளும்கட்சியான அ.தி.மு.க.வில் ஜோதிராமலிங்க ராஜா, எதிர்க்கட்சியான தி.மு.க.வில் வில்வநாதன், அ.தி.மு.க.வின் போட்டி கட்சியான அ.ம.மு.க.வில் பாலசுப்பிரமணி, சுயேட்சைகள் என மொத்தம் 10 பேர் களத்தில் உள்ளனர்.

aஅ.தி.மு.க.வில், தொகுதியில் உள்ள கட்சி நிர்வாகிகளிடையே இன்னும் வேட்பாளர் மீதான அதிருப்தி போக வில்லை என்பது கட்சி நிர்வாகிகளை அவர் சந்திக்கச்சென்றபோது எதிரொலித் தது. 3 மணி நேரம் கட்சி அலுவலகத்தில் ஜோதிராமலிங்க ராஜாவை காக்கவைத்து அதன்பின் வந்து சந்தித்தார் ஆம்பூர் ந.செ. மதியழகன். சீட் கிடைக்காத அதிருப்தியில் உள்ள அவரை அமைச்சர் வீரமணி சமா தானம் செய்தபின்பே தேர்தல் களத்தில் இறங்கியுள்ளார்.

""அ.தி.மு.க. கி.செ.வான நான், ஆம்பூர் தொகுதிக்கு சீட் கேட்டு மனு தந்தேன். எனக்குத் தரவில்லை, பினாமி களுக்கு சீட் தருகிறார்கள். அதனால் நான் சுயேட்சையாக போட்டியிடுகிறேன்'' எனச்சொல்லி தோழப்பள்ளி ஊராட்சி அ.தி.மு.க. கி.செ.வும், முன்னாள் ஊராட்சிமன்றத் தலைவியும், பெங்களூருவில் பெரிய காண்ட்ராக்டருமான ஷோபா பாரத் சுயேட்சையாக களமிறங்கியுள்ளார்.

கட்சியில் அ.தி.மு.க. வேட்பாளர் மீதான அதிருப்தி யில் அ.ம.மு.க. வேட்பாளர் தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.வான பாலசுப்பிரமணிக்கு பலம் கூடுகிறது. வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் கூடிய கூட்டத்தை பார்த்து அ.தி.மு.க. தரப்பு அரண்டுவிட்டது. அதேபோல் தினகரன் பிரச்சாரத்துக்கு மார்ச் 29-ந் தேதி ஆம்பூருக்கு வந்தபோது, முதல்வர் எடப்பாடி வந்தபோது இருந்த கூட்டத்தைவிட இரண்டு மடங்கு இருந்தனர். ""அமைச்சர் வீரமணியை எதிர்க்க இவர்தான் சரியான நபர்'' என்றார் தினகரன். இது வீரமணி எதிர்ப்பாளர்களை மறைமுகமாக பாலசுப்பிரமணிக்கு வேலை செய்ய வைத்துள்ளது.

Advertisment

தி.மு.க. வேட்பாளர் வில்வநாதன் தனக்கு, கட்சியில் ஏற்பட்ட அதிருப்தியை சரிக்கட்டியவர், தன் மீதான நெகட்டிவ் விமர்சனங்களை குறைக்கவைத்தார். கூட்டணி கட்சியான த.மு.மு.க.- ம.ம.க. நிர்வாகிகளை சந்தித்து சமா தானம் பேசினர் தி.மு.க. நிர்வாகிகள். தற்போது களத்தில் படுவேகமாக உள்ளார். தி.மு.க.வின் கூட்டணிக் கட்சி களான காங்கிரஸ், இடதுசாரிகள் கொஞ்சம் அதிருப்தியில் உள்ளனர். ""எங்களை ஏன் அரவணைத்து செல்வதில்லை... நாங்கள் தனியே பிரச்சாரம் செய்துவிட்டுப் போகிறோம்'' என தி.மு.க. நிர்வாகிகளிடம் கூற, தற்போது அவர்களை தங்களுடன் அழைத்துச் செல்கின்றனர். அ.தி.மு.க. வேட் பாளருக்கு ஏ.சி.சண்முகம் செலவு செய்வதால் கட்சிக்காரர் களுக்கு இரண்டாவது ரவுண்ட் பட்டுவாடா முடிந்துள் ளது. தி.மு.க.வும் செலவு செய்யத் துவங்கியுள்ளது. முதல் கட்ட பிரச்சாரம் முடிந்துள்ள நிலையில், தி.மு.க. வேட் பாளர் வில்வநாதன் முதல் இடத்திலும், இரண்டாம் இடத் தில் அ.ம.மு.க. வேட்பாளர் பாலசுப்பிரமணியும், மூன்றாம் இடத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் ஜோதிராமலிங்க ராஜா வும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

-து.ராஜா