Advertisment

மண்டல வாரியாக அமைப்புச் செயலாளர்! -ஸ்டாலின் அடுத்த மூவ்!

dmk

ங்கு தி.மு.க. பலவீனமாக இருக்கிறதோ, அங்கிருந்து தனது அதிரடியை ஆரம்பித்திருக்கிறார் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின். கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல் மாவட்டங்கள் அடங்கிய கொங்கு மண்டலம் தான் தி.மு.க.வுக்கு எப்போதும் தீராத தலைவலியாக இருந்து வருகிறது. மற்ற மாவட்டங்களில் உள்குத்துகள், காலை வாருதல் சகஜம் என்றாலும் ஸ்பெஷல் உள்குத்துகளுக்கு பேர் போனது கோவை.

Advertisment

stalinஅதனால்தான் கோவையிலிருந்து மாற்றம் என்னும் மறுமலர்ச்சியை ஆரம்பித்திருக்கிறார் ஸ்டாலின். அறிவாலயத்தில் மாவட்ட வாரியாக கள ஆய்வுக் கூட்டம் நடந்தபோது, கட்சிக்கு உழைக்காதவர்களை தூக்கி எறியத் தயங்கமாட்டேன் என எச்சரித்திருந்தார் ஸ்டாலின்.

அந்த எச்சரிக்கையின் முதல் நடவடிக்கையாக கோவை புறநகர் தெற்கு மா.செ.வாக இருந்த தமிழ்மணிக்கு கல்தா கொடுத்து விட்டு, பொள்ளாச்சி ந.செ.வாக இருந்த தென்றல் செல்வராஜை மாவட்டப் பொறுப்பாளராக நியமித்திருக்கிறார் ஸ்டாலின். செல்வராஜ் நியமனத்தை பாரபட்சமின்றி வரவே

ங்கு தி.மு.க. பலவீனமாக இருக்கிறதோ, அங்கிருந்து தனது அதிரடியை ஆரம்பித்திருக்கிறார் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின். கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல் மாவட்டங்கள் அடங்கிய கொங்கு மண்டலம் தான் தி.மு.க.வுக்கு எப்போதும் தீராத தலைவலியாக இருந்து வருகிறது. மற்ற மாவட்டங்களில் உள்குத்துகள், காலை வாருதல் சகஜம் என்றாலும் ஸ்பெஷல் உள்குத்துகளுக்கு பேர் போனது கோவை.

Advertisment

stalinஅதனால்தான் கோவையிலிருந்து மாற்றம் என்னும் மறுமலர்ச்சியை ஆரம்பித்திருக்கிறார் ஸ்டாலின். அறிவாலயத்தில் மாவட்ட வாரியாக கள ஆய்வுக் கூட்டம் நடந்தபோது, கட்சிக்கு உழைக்காதவர்களை தூக்கி எறியத் தயங்கமாட்டேன் என எச்சரித்திருந்தார் ஸ்டாலின்.

அந்த எச்சரிக்கையின் முதல் நடவடிக்கையாக கோவை புறநகர் தெற்கு மா.செ.வாக இருந்த தமிழ்மணிக்கு கல்தா கொடுத்து விட்டு, பொள்ளாச்சி ந.செ.வாக இருந்த தென்றல் செல்வராஜை மாவட்டப் பொறுப்பாளராக நியமித்திருக்கிறார் ஸ்டாலின். செல்வராஜ் நியமனத்தை பாரபட்சமின்றி வரவேற் கிறார்கள் உ.பி.க்கள். காரணம், கவுண்டர் சமுதாயம் செல்வாக்கோடு உள்ள மேற்கு மண்டலத்தில், அந்த கவுண்டர் சமுதாயத்திலேயே, பின் தங்கிய முடவாண்டி பிரிவைச் சேர்ந்தவர் தென்றல் செல்வராஜ். மேலும் தீவிர களப்பணியாளர்.

dmkகட்சி அறிவிக்கும் போராட்டங்களுக்கு ஆட்களைத் திரட்டி வருவதில் அவ்வளவாக ஆர்வம் காட்டமாட்டாராம் தமிழ்மணி. ஆனால் செல்வராஜோ பெருங் கூட்டத்தைத் திரட்டி திக்கு முக்காடச் செய்துவிடுவாராம். இதுதான் கட்சிக்காரர்களிட மிருந்து தமிழ்மணியை தனிமைப்படுத்தியிருக்கிறது.

Advertisment

இதற்கடுத்த அதிரடி கல்தா, மாநில மகளிர் தொண்டரணி து.செ.வான மீனாலோகுவுக்கு. இது குறித்து மகளிரணி உ..பி.க்கள். சிலர் நம்மிடம் பேசும் போது, ""மாவட்ட மகளிரணி அமைப்பாளர் சரஸ்வதியுடன் யாரும் பேசக்கூடாது, அன்னம் தண்ணி பொழங்கக் கூடாதுன்னு நாட்டாமைத் தனம் பண்ணுவாருங்க மீனா. அவரு பேச்சக் கேக்காதவங் களோட வூட்டுக்காரருக்கு போன் போட்டு, எக்குதப்பா மாட்டிவிட்டு, குடும்பத்துக்குள்ள குழப்பத்தை ஓடவிட்ருவாங்க. எப்பப் பாரு, எனக்கு துர்கா(ஸ்டாலின் மனைவி) அக்காகிட்ட செல்வாக்கு இருக்கு, அதனால் கோவை வடக்கு தொகுதி கேண்டிடேட் நான் தான்னு சொல்றது மட்டுமில்லீங்க, சுவர்களிலும் இப்பவே எழுதிப் போட ஆரம்பிச்சுட்டாருங்க. இதெல்லாம் தளபதிக்கு புகாரா போனதும் தூக்கிக் கடாசிட்டாருங்க'' என்கிறார்கள் கோரஸாய்.

dmk

மாநில மகளிரணி து.செ.வுக்கே இந்த கதி என்றால், பகுதிச்செயலாளர் எம்மாத்திரம் என்கிற உ.பி.க்கள் குறிச்சி பிரபாகரனின் ப.செ. பதவியை பிடுங்கியதில் ஆனந்தக் கூத்தாடுகிறார்கள். ""பின்ன என்னங்க, போன சட்டமன்றத் தேர்தல்ல கிணத்துக்கடவு தொகுதியில பிரபாகரன் நின்னாரு. இவரை எதிர்த்து எஸ்.பி. வேலுமணி நின்னாரு. ஓட்டு எண்ணிக்கையின்போது, தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் சரிசமமாத் தான் வந்துக்கிட்டிருந்துச்சு.

அப்ப வேலுமணி கிட்டயிருந்து பிரபாகரனுக்கு ஒரு போன் வந்துச்சு. தேர்தல் செலவு கணக்குகள்பற்றி பரிமாறிக் கொண்ட பிறகு, ரெண்டு சுற்று வாக்கு எண்ணிக்கை இருக்கும்போதே, திடீர்னு கவுண்டிங் dmkசென்டரைவிட்டு வெளியேறிட்டாரு பிரபாகரன். அதுக்குப் பிறகு தான் வேலுமணி வெற்றின்னு அறிவிக்கப்பட்டது. இதெல்லாம் தளபதிக்கு அப்பவே தெரிஞ்சு பிரபாகரனை லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கிட்டாரு. இப்ப பதவியையே பிடுங்கிட் டாரு. இப்படிப்பட்ட துணிச்சலான ஆக்ஷனைத் தான் எதிர்பார்க்கிறோம்ங்க'' என்கிறார்கள் கிணத்துக்கடவு உ.பி.க்கள்.

இதேபோல் புதூர் பகுதிச் செயலாளர் மணி நீக்கப்பட்டு, கட்சியின் நீண்டகால விசுவாசியான வடவள்ளி சண்முகசுந்தரம் அந்த இடத்தில் அமர வைக்கப்பட்டிருப்பதை அமோகமாக வரவேற்கிறார்கள்.

dmkஇப்படி வரவேற்பும் மகிழ்ச்சியும் மெஜாரிட்டியாக இருந்தாலும் எதிர்ப்பும் சலசலப்பும் மைனாரிட்டியாக இருக்கத்தான் செய்கிறது. பெரிய நாயக்கன்பாளையம் ஒ.செ. பத்மாலயா சீனிவாசனைத் தூக்கிவிட்டு, கூடலூர் பேரூராட்சித் தலைவராக இருந்த அறிவரசுவை நியமித்ததற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. காரணம், கள ஆய்வுக்கூட்டம் நடந்த போது, 9 ஊராட்சி செயலாளர்கள், 4 பேரூர்க்கழகச் செயலாளர்கள் உட்பட யாருமே சீனிவாசன் மீது புகார் வாசிக்காதபோது, அறிவரசு மட்டுமே புகார் வாசித்துள்ளார், இப்போது சீனிவாசனின் பதவி பறிக்கப்பட்டதை எதிர்த்து தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார் ஒன்றிய மகளிரணி அமைப்பாளர் மல்லிகா.

dmkஇதற்கிடையே மாவட்ட எல்லைகளிலும் புதிய மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறார் ஸ்டாலின். கோவை மாநகர் வடக்கு, தெற்கு என்றிருந்ததை, கோவை மாநகர் மாவட்டம் என ஒரே மாவட்டமாக்கி, மாவட்ட பொறுப்பாளராக நா.கார்த்திக் எம்.எல்.ஏ.வை நியமித்துள்ளார்.

இதேபோல் பல மா.செ.க்களின் பதவியை பிடுங்கி, புதியவர்களுக்கு வாய்ப்புத்தரும் யோசனையில் இருக்கும் ஸ்டாலின், புதிதாக மண்டல வாரியாக அமைப்புச் செயலாளர்களை நியமிக்கலாம் என்கிற பேச்சு அறிவாலய வட்டாரத்தில் பலமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதன்படி புதிய அமைப்புச் செயலாளர் களாக ஆ.ராசா, எ.வ.வேலு, பொன்முடி, கே.என்.நேரு, கீதா ஜீவன் ஆகியோர் நியமிக்கப் படலாம் என்பதுதான் தி.மு.க.வில் லேட்டஸ்ட் டாக்.

-அ.அருள்குமார்

stalin nkn19.06.18
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe