(5) பாதி பாப்பாத்தி அரை அய்யரம்மா!
"சம்பூர்ண ராமாயணம்' படத்தை 26 லட்ச ரூபாய் செலவில் தயாரித்த எம்.ஏ.வேணு சாருக்கு (28 லட்சம் வசூலாகி) இரண்டு லட்ச ரூபாய் லாபம் கிடைத்தது. "முதலாளி' படத்தை 12 லட்ச ரூபாயில் தயாரித்தார். அதன்மூலம் 24 லட்ச ரூபாய் கிடைத்தது.
வெற்றி கண்டு ஆடாதவர், தோல்வி கண்டு ஓடாதவர்... மாடர்ன் தியேட்டர்ஸ் முத லாளி டி.ஆர்.சுந்தரத் திடம் பாடம் படித்தவ ராயிற்றே. சினிமாவில் சம்பாதித்ததை சினிமாவுக்கே செலவு செய்பவர். அதனால்தான் அவரின் கடைசிக் காலம் உற்சாகப்படும்படி இல்லை.
ஒருமுறை எம்.ஜி.ஆரிடமிருந்து வேணு சாருக்கு போன்.
"அண்ணே! ஒரு நல்ல கதையை ரெடி செய்து அனுப்புங்க. எனக்கு சம்பளம் வேண்டாம். எவ்வளவு தேதிகள் (கால்ஷீட்) வேணாலும் தர்றேன்'' என்று சொன்னார்.
அப்போது அங்கிருந்தேன் நான்.
"என்னண்ணே முக்கியமான தகவலோ''
"ஆமா ஷாலா. எம்.ஜி.ஆர். கதை ரெடி பண்ணச் சொல்றார்.''
"அண்ணே... இது நல்ல சான்ஸ்''
"நீதான் ஸ்டோரி லைன் நிறைய வச்சிருப்பியே, அதுல அவரோட பாணியில் ஏதாவது கதையிருந்தா ரெடிபண்ணிட்டு வா''
"சரிங்கண்ணே...'' எனச் சொல்லிவிட்டு வீட்டுக்கு வந்தேன். மண்டையையும், ஸ்டோரி லைன் ஃபைல்களையும் குடைந்தேன். அடுத்த சில நாட்களில் முழு கதையுடன் வேணு சார் முன்பு நின்றேன்.
"அண்ணே.. கதை ரெடி! சொல்லிக் காட்டவா?''
"நான் அப்புறமா கேட்டுக்கிறேன். முதல்ல நீ போய் அவரை கதை சொல்லி அசத்து'' என்று சொல்லிவிட்டு, எம்.ஜி.ஆரிடம் அப்பாயின்ட் மெண்ட் வாங்கிக் கொடுத்த
(5) பாதி பாப்பாத்தி அரை அய்யரம்மா!
"சம்பூர்ண ராமாயணம்' படத்தை 26 லட்ச ரூபாய் செலவில் தயாரித்த எம்.ஏ.வேணு சாருக்கு (28 லட்சம் வசூலாகி) இரண்டு லட்ச ரூபாய் லாபம் கிடைத்தது. "முதலாளி' படத்தை 12 லட்ச ரூபாயில் தயாரித்தார். அதன்மூலம் 24 லட்ச ரூபாய் கிடைத்தது.
வெற்றி கண்டு ஆடாதவர், தோல்வி கண்டு ஓடாதவர்... மாடர்ன் தியேட்டர்ஸ் முத லாளி டி.ஆர்.சுந்தரத் திடம் பாடம் படித்தவ ராயிற்றே. சினிமாவில் சம்பாதித்ததை சினிமாவுக்கே செலவு செய்பவர். அதனால்தான் அவரின் கடைசிக் காலம் உற்சாகப்படும்படி இல்லை.
ஒருமுறை எம்.ஜி.ஆரிடமிருந்து வேணு சாருக்கு போன்.
"அண்ணே! ஒரு நல்ல கதையை ரெடி செய்து அனுப்புங்க. எனக்கு சம்பளம் வேண்டாம். எவ்வளவு தேதிகள் (கால்ஷீட்) வேணாலும் தர்றேன்'' என்று சொன்னார்.
அப்போது அங்கிருந்தேன் நான்.
"என்னண்ணே முக்கியமான தகவலோ''
"ஆமா ஷாலா. எம்.ஜி.ஆர். கதை ரெடி பண்ணச் சொல்றார்.''
"அண்ணே... இது நல்ல சான்ஸ்''
"நீதான் ஸ்டோரி லைன் நிறைய வச்சிருப்பியே, அதுல அவரோட பாணியில் ஏதாவது கதையிருந்தா ரெடிபண்ணிட்டு வா''
"சரிங்கண்ணே...'' எனச் சொல்லிவிட்டு வீட்டுக்கு வந்தேன். மண்டையையும், ஸ்டோரி லைன் ஃபைல்களையும் குடைந்தேன். அடுத்த சில நாட்களில் முழு கதையுடன் வேணு சார் முன்பு நின்றேன்.
"அண்ணே.. கதை ரெடி! சொல்லிக் காட்டவா?''
"நான் அப்புறமா கேட்டுக்கிறேன். முதல்ல நீ போய் அவரை கதை சொல்லி அசத்து'' என்று சொல்லிவிட்டு, எம்.ஜி.ஆரிடம் அப்பாயின்ட் மெண்ட் வாங்கிக் கொடுத்தார்.
ராமாவரம் வீட்டுக்குச் சென்றேன். அறையின் முன்பகுதியில் அமர வைக்கப்பட் டேன். கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், வேணு, எஸ்.எஸ்.ஆர். உள்ளிட்ட சில பிரபலங்களுக்கு நான் நெருக்கமானவன் என்பதால் எம்.ஜி.ஆருக்கு என்னைத் தெரியும். உள்ளே அழைக்கப்பட்டேன். எதிரில் ஒரு நாற்காலி போட்டு அதில் என்னை அமரச் சொன்னார்.
"கதையைச் சொல்லுங்க'' என்றார் எம்.ஜி.ஆர்.
"கதையோட தலைப்பு "பட்டாளத்து ராமன்'. இதற்கு மேல் என் கவனமெல்லாம் வேறொரு இடத்தில் இருந்தது. ஃபேன் காற்றில் எம்.ஜி.ஆரின் வேட்டி லேசாக விலகி... அவரின் தொடை மிளிர்ந்தது. நான் பார்த்துக்கொண்டிருந்தது அதைத்தான்.
"இந்த மனுஷன் ஆண்களே விரும்பும் அழகன். பெண்கள் விரும்பும் பேரழகன்'னு சும்மாவா சொல்றாங்க? ஒரு மனுஷன் இந்தக் கலர்லயெல்லாம் கூட பிறப்பானா?' என வியக்கும்படி ரோஜாவும் தங்கமும் இணைந்து "ரோஸ் கோல்டு' வண்ணத் தில் இருந்தார் எம்.ஜி.ஆர். அந்த வியப்பு -திகைப்புடனே அவரின் தொடையைப் பார்த்துக்கொண்டிருந்த என்னை, எம்.ஜி.ஆர். அதட்டிய பிறகே அதிலிருந்து மீண்டேன். வேட்டியை சரி செய்துகொண்டே எம்.ஜி.ஆர். என்னைப் பார்த்து சிரித்தபடி, "கதையைச் சொல்லுங்க'' என்றார்.
முதல் காட்சியிலிருந்து இறுதிக் காட்சி வரைக்குமான கதையைச் சொன்னேன்.
"கதை எனக்கேத்த மாதிரி இருக்கு, நல்லா இருக்கு. நான் வேணு அண்ணன்கிட்ட பேசிக்கிறேன்'' என்றார். விடை பெற்றுத் திரும்பும்போது என் நினைப்பெல்லாம்... "என் கதையை எம்.ஜி.ஆரே நல்லாருக்குன்னு சொல்லிட்டாரே' என மகிழ்ச்சி பிடிபடாமலே இருந்தேன்.
ஆனால்... விதி விளையாடி, சந்தர்ப்பம் சதி செய்தது. சூழ்நிலை சூழ்ச்சி செய்தது.
-இப்படித்தான் சொல்ல முடியும், வேறு எப்படி சொல்ல முடியும்?
எம்.ஜி.ஆர். ஏற்கனவே ஒப்புக்கொண்ட படங்கள், புதிய கட்சி தொடக்கம் -இப்படியான விஷயங்களால் என் கனவு பொய்த்தது.
எம்.ஏ.வேணு சார் மீது எம்.ஜி.ஆருக்கு மிகப்பெரிய மரியாதை உண்டு. காரணம், அவரின் கடும் உழைப்பும், தொழில் அக்கறையும்தான். "மந்திரிகுமாரி' படத்தில் எம்.ஜி.ஆர். ஹீரோவாக நடிக்க வேணு சாரும் ஒரு காரணம்.
இன்னொரு சுவாரஸ்யமான சம்பவம்... எம்.ஜி.ஆர். நடித்த "வீரவாள்' பட ஷூட்டிங் ஏற்காடு மலைச்சாரலில் நடப்பதாக அன்றைக்கு ஏற்பாடு. நட்சத்திரங்கள் முதல் குதிரைகள் வரை வந்தா யிற்று. ஆனால்... முக்கிய காட்சிகளில் இடம்பெறும் தேர் மட்டும் வந்து சேரவில்லை. மிகத்தாமதமாக தேர் வந்து சேர்ந்தது.
"லொகேஷனை மாத்தி அனுப்பிச்சிட்டியா? நீ என்ன சர்வாதிகாரியா?'' என வேணுமீது கோபமானார்.
அந்தச்சூழலை சுமுகமாக்கும் விதமாக "முதலாளி, இந்தப் படத்துக்கு "வீரவாள்'னு வச்சி ருக்கீங்க. அதுக்குப் பதிலா "சர்வாதிகாரி'ன்னு தலைப்பு வச்சா நல்லாருக்கும்'' என்றார் எம்.ஜி.ஆர். அவரைப் பார்த்தபடியே வாய்க்குள் "சர்வாதிகாரி' எனச் சொல்லிப் பார்த்த சுந்தரம், "இதையே தலைப்பா வச்சிரலாம்' என்றார். அதன்படியே சர்வாதிகாரி என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
தென்னிந்திய சினிமாவுக்கு கிடைத்த அற்புதமான நடிகை சௌகார் ஜானகி. மிகவும் ஸ்டைலிஷ் நடிகை. அவரை பெரும் பாலும் சோகச் சித்திரமாகவே காட்சிப் படுத்தியிருக்கிறார்கள். அந்த இமேஜை அவர் மீது அழுத்தமாகப் பதித்துவிட்டார்கள். எம்.ஜி.ஆரின் "கண்போன போக்கிலே கால் போகலாமா?' பாடலாகட்டும், சிவாஜியியின் "புதிய பறவை' பாட்டாகட்டும், ஆஹா... அவரின் மேற்கத்திய பாணியில் உடை லிநடன மாகட்டும்... பிச்சு உதறியிருப்பார். ஒருநாள் கே.எஸ்.ஜி. சொல்லி அனுப்பியதன் பேரில் புதிய படம் சம்பந்தமாக அவரைப் பார்க்கச் சென்றிருந்தேன். வீட்டில் அவரை சந்தித் தேன். விஷயத்தைச் சொல்லிவிட்டு "கிளம்புறேன் மேடம்'' என்றேன்.
"வாங்க வீட்டை சுத்திக் காட்டுறேன்'' என ஒவ்வொரு இடமாக சுற்றிக் காட்டினார். பெட்ரூம் சுவர் முழுக்க பாதரஸக் கண்ணாடி கள் பொறிக்கப்பட்டிருந்தது. டைனிங் ஹாலுக்கு வரும்போதே மீன்குழம்பு வாசனை அடிச்சுத் தூக்கியது.
"நீங்க பாய்தானே?''
"ஆமாம் மேடம்!''
"இன்னிக்கு அசைவம் சாப்பிடலாம் தானே?''
"சாப்பிடலாம்'' என்றேன்.
சுடச்சுட சோறும், கொதிக்கக் கொதிக்க மீன்குழம்பும் வந்தது. திருப்தியாகச் சாப்பிட்டேன்.
"மேடம் நான் உங்ககிட்ட ஒண்ணு கேட்கலாமா? தப்பா நினைச்சுக்க மாட்டீங்கள்ல?''
"கேளுங்க... நான் அப்படியெல்லாம் நினைச்சுக்க மாட்டேன்...''
"நீங்க அய்யர் ஃபேமிலிதானே?''
"ஆமா!''
"அப்புறம் எப்படி இம்புட்டு ருசியா மீன்குழம்பு சமைக்கிறீங்க?''
"ஆடு -கோழி -மீன் -எல்லா ஐட்டமும் நல்லா சமைப்பேன். நான் வைக்கிற அயிரை மீன் குழம்புக்கு ரஜினிகாந்த் பிரியர். "அம்மா, அயிரை மீன் குழம்பு சமைச்சுக் குடுங்கம்மா' என்பார். சமையல் விஷயத்தில் நான் பாதி பாப்பாத்தி, அரை அய்யச்சி'' என்றார்.
நான் வியந்துபோய் அவரைப் பார்த்தேன்.
சௌகார் ஜானகி, இந்திய நடிகைகளில் மிக ஸ்டைலிஷாக ஆங்கிலம் பேசக்கூடியவர்.
"எப்பா... ஜானு என்னமா இங்கிலீஷ் பேசுது' என எம்.ஆர்.ராதா அடிக்கடி பாராட்டுவார்.
பிரகாஷ் ஸ்டுடியோவில் வேணு சார் இருப்பதாக அறிந்து அங்கு சென்றேன். அங்கு பெருத்த உருவத்துடன் ஒரு பெண்மணி அமர்ந்து கணக்குப் பார்த்துக்கொண்டி ருந்தார். அந்த ஸ்டுடியோவை அந்தப் பெண்மணி குத்தகைக்கு எடுத்திருந்தார்.
என்னைப் பார்த்ததும் வேணு சாரும், அவரின் நண்பர்களும் "ஷாலப்பா... இவங்க யார்?னு தெரியுதா'' எனக் கேட்டனர்.
"தெரியலை சார்...'' என்றேன்.
"இந்த தம்பி யாரு?'' எனக் கேட்டார்.
அப்படியே அவரின் வாய்ஸ் இருந்தது.
"இவங்க "குலேபகாவலி' படத்தில் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக நடித்த ஜி.வரலட்சுமி. அந்தப் படத்துல கூட அருமையான ஒரு டூயட் பாட்டு உண்டு'' என நான் சொல்லி முடிப்பதற்குள் எழுந்து வந்து "மயக்கும் மாலை பொழுதே நீ போ... போ... இனிக்கும் இன்ப இரவே நீ வா... வா' என்கிற அந்தப் பாடலை என் கைகளைப் பிடித்துக்கொண்டு பாடினார். அந்த இடமே குஷியால் மிதந்தது.
எம்.ஜி.ஆர். பற்றிய கட்சிப் பாடல்!
ஆனால் கலைஞர் மீதிருந்த நட்பால் அந்தப் பாடலை பாட மறுத்த பிரபல பாடகர்!
(வெளிச்சம் பாயும்)
_____________________
தொடர் சம்பந்தமாக என்னுடன் பேச விரும்புவோர் 98413 28257 என்ற கைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம்!
-ஷாலப்பா