(9) வேணுவை விடுவித்த நீதிபதி! 


சினிமாவைப் பொறுத்தவரை, அது எந்த மொழி சினிமாவாக இருந்தா லும் மனிதனின் வாக்கைவிட, வெள்ளைப் பேப்பரில் இருக்கும் வார்த்தைகள் தான் சாட்சி. வெறும் வாக்கை மட்டும் நம்பினால், காப்பிடி அரிசிக்குக்கூட வழியில்லா மல் போய்விடும். இது பெரும் பாலும் சினிமா தயாரிப் பாளர்களுக்குத்தான் பொருந்தும்.

Advertisment

நீதிமன்றங்களும் நீதிபதிகளும் எப்போதுமே சட்டப்படிதான் நடந்து கொள்வார்கள்.  கொடுத்த வாக்கை காப்பாற்றும் சம்பவங்களும் நடக்கும். அப்படி தர்மப்படி நடந்த நீதிபதியால், ஒரு வழக்கி லிருந்து தப்பித்தார் தயாரிப்பாளர் எம்.ஏ.வேணு. 

"சம்பூர்ண ராமாயணம்'’ படத்திற்கு முன்பு "தங்க வளையல்'னு ஒரு படம் தயாரிக்க  ஃபைனான்சியர் ஒருவரிடம் ஒரு லட்ச ரூபாய்  கடன் வாங்கிய வேணு, பாண்ட் பேப்பரிலும்  கையெ ழுத்துப் போட்டிருந்தார். அத்தோட விட்டிருந்தா பரவாயில்ல. இந்தப் படம் ஹிட்டாச்சுன்னா உனக்கு இரண்டு லட்ச ரூபாய் தர்றேன்னு வார்த்தையையும் விட்டுட்டார் வேணு. ஆனால் ‘தங்க வளையலோ’ அட்டர் ஃப்ளாப்பாகி, இத்துப்போன தகரத்துக் குக் கூட தேறாமப் போச்சு. ஃபைனான்சியரோ, கொடுத்த காசைக் கேட்க, வேணுவோ சமாளித்தபடியே இருக்க...… இதனால் கடுப்பான அந்த ஃபைனான்சியர், கோர்ட் படியேறிவிட்டார். பல வாய்தாக்கள் போயும் வழக்கு முடியவில்லை. இந்த ‘தங்க வளையல்’ வழக்கு  நடந்துக்கிட்டி ருக்கும்போதே  "சம்பூர்ண ராமாயணம்'’ படத்தை எடுத்து முடித்து ரிலீசும் பண்ணிவிட்டார் வேணு. 

இந்தப் படம் ஓரளவு  லாபத்தைப் பார்த்த நேரத்துலதான் "தங்க வளையல்'’ ஃபைனான்சியர் வழக்கு இறுதிக்கட்டத்திற்கு வந்தது. தீர்ப்பு நாள் என்பதால் கோர்ட்டுக்கு வந்திருந்தார்கள் ஃபைனான்சியரும் வேணுவும். தன்னிடமிருந்த வேணுவின் அக்ரிமெண்டைக் காட்டியதுடன், வேணு சொன்ன வார்த்தையையும் நீதிபதியிடம் சொன்னார் அந்த ஃபைனான்சியர். 

Advertisment

எல்லாத்தையும் கேட்ட பின்  நீதிபதி, "என்ன மிஸ்டர் வேணு, இதெல்லாம் உண் மையா?''’என்றார். 

"ஆமாங்கய்யா… அக்ரி மெண்டில் இருப்பதும் உண்மை, வாய்மொழியாக நான் சொன்னதும் உண்மை'' ’என நேர்மையுடன் ஒத்துக் கொண்டார் வேணு.

"நீதிமன்றங்களைப் பொறுத்தவரை எழுத்துப்பூர்வ ஆதாரங்களைத்தான் சாட்சியாக ஏற்றுக்கொள்ளும். அதனால் இந்த வழக்கைப் பொறுத்த வரையில் சட்டத் தின்படி உங்களுக்கு தண்டனை வழங்கலாம். ஆனால் நீங்கள் ‘"சம்பூர்ண ராமாயணம்'’ என்ற அருமையான  சினிமாவைத் தயாரித்திருப்பதால், உங்கள் மீதுள்ள தனிப்பட்ட மரியா தை காரணமாக உங்களைத் தண்டிக்க விரும்பவில்லை. இது எனது தனிப்பட்ட தர்மப்படி யான முடிவு. அதனால்  நீங்கள் எழுதிக் கொடுத்தபடியும், வாக்கு கொடுத்தபடியும் எதிர் மனுதாராருக்கு கொடுக்க வேண்டிய கடன் தொகையை திருப்பிக் கொடுத்து, தர்மப்படி நடந்துகொள் வீர்கள் என்ற நம்பிக்கையில் இந்த வழக்கி லிருந்து உங்களை விடுவிக்கிறேன்''” என்றார் நீதிபதி. 

Advertisment

நிம்மதிப் பெருமூச்சுவிட்டார் வேணு. நீதிபதி உத்தரவுக்கிணங்க,  அக்ரி மெண்ட்படியும் கொடுத்த வாக்குப் படியும் நடந்து தனது நேர்மையை நிரூபித்தார். 

"சம்பூர்ண ராமாயணம்',’ வேணுவுக்கு  ஓரளவுதான் லாபம் சம்பாரித்துக் கொடுத்ததுன்னு எழுதுனதுக்கு காரணமும் இருக்கு. 

படத்தின் தயாரிப்புச் செலவு 26 லட்ச ரூபாய். லாபமோ வெறும் 2 லட்ச ரூபாய் தான். இதை இந்த ‘ரீலின்’ 5-ஆவது அத்தியாயத்திலேயே சொல்லியிருந்தேன். 

படத்திற்கான செட்டுகள், மற்ற தொழில்நுட்பச் செலவுகள்னு ஒரு பக்கம் பட்ஜெட் எகிறியதுன்னா… பிரபல        கர்நாடக சங்கீத வித்வான் மதுரை டி.வி.சோமுவால் எதிர்பாராத வகையில் பட்ஜெட் எகிறியது. 

அதாவது, படத்தின் பத்துப் பாடல்களையும் மருதகாசியும் கா.மு.ஷெரீப் பும் எழுத, எல்லாப் பாடல்களையும் டி.வி.சோமுவை பாட வைத்து ரிக்கார்டிங்கும் பண்ணிவிட்டார் வேணு. 

ஷூட்டிங் ஆரம்பிச்சு போய்க் கிட்டிருந்த நேரத்துல வேணுவைக் கூப்பிட்ட சோமு, “"கர்நாடக சங்கீதத்துல வேணா நான் பெரிய ஆளா இருக்கலாம். எனக்கு சினிமாவுக்கான சங்கீதம் வரல வேணு. இந்தப் பாடல்கள் படத்துடன் வெளி யாகும்போது, “"என்னய்யா இந்த ஆளு... இந்த இழு இழுத்துப் பாடுறான். கர்நாடக சங்கீதத்துக்குதான் லாயக்கு, சினிமாவுக்கு சரிப்பட்டு வரமாட்டான்போல'ன்னு மக்கள் கேலி பண்ணுவார்கள்.  அதனால் நீங்க வேற யாரையாச்சும் பாட வைங்க... அதான் சரியா வரும்''’என்றார். 

"பரவாயில்லண்ணே இருக்கட்டும்''’என வேணு சொன்னாலும் விடவில்லை சோமு. 

"இப்ப இந்தப் படத்துல வர்ற நான் பாடின ரெண்டு பாட்டை பாடிக்காட்டுறேன். அதுக்குப் பிறகு நீங்களே முடிவை மாத்திக்கிருவீங்க''’எனச் சொல்லியபடியே.. 

"இன்று போய் நாளை வா…”

வீணைக் கொடியுடைய வேந்தனே'”பாடலை கர்நாடக சங்கீத பாணியில் அதிகமாக இழுத்துப் பாவனையுடன் பாடிக் காட்டிவிட்டார் சோமு. 

"சோமு சொல்றதும் சரிதான்'னு வேணுவுக்கும் தோணுச்சு. 

அதுக்குப் பிறகு அதே பத்துப் பாடல்களையும் சிதம்பரம் ஜெயராமனைப் பாட வச்சு ரிக்கார்டிங் பண்ணினார். 

சோமுவும் அதைக் கேட்டுவிட்டு, "இதான் சினிமாவுக்கான ராகம்,  சங்கீதம், சாரீரம், ஸ்வரம்'னு வேணுவை வாழ்த்தினார். 

ரவுடியாக இருந்து தயாரிப்பாளராக மாறியவர் யார்னு தெரியுமா?

(வெளிச்சம் பாயும்)

reelbox