(4) கட்டி வைத்து அடித்தார்!

1972-ல் "பட்டிக்காட்டு பொன்னையா' படத்துடன் ஜெயலலிதாவுக்கு தன் படத்தில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பை நிறுத்திக்கொண்டார் எம்.ஜி.ஆர். 

அதன்பின் "சந்திரகலா, மஞ்சுளா, லதா போன்ற புதுமுகங்களுக்கு வாய்ப்பளித்தார்.

Advertisment

அடுத்த சில ஆண்டுகளில் சினிமாவை விட்டு விலகிய ஜெயலலிதா, நாட்டிய நாடகங்களை நடத்திவந்தார்.

தேனியில் நாட்டிய நாடகம் நடத்துவதற்காக கிளம்பிய ஜெயலலிதா, அதற்குமுன் சிவாஜிகணேசனை சந்தித்தார். 

"நான் செய்த தவறை முதலமைச்சர் மன்னிக்கக்கூடாதா? நீங்கதான் எனக்காக அவரிடம்  பேசவேண்டும்'' எனக் கேட்டுக்கொண்டார். அத்துடன், தான் நடத்தும் நாட்டிய நாடகம் மூலமாக வசூலாகும் தொகையை, முதல்வரின் சத்துணவுத் திட்டத்திற்கு நிதியாகத் தருவதாகவும் சொன்னார்.

Advertisment

எம்.ஜி.ஆருக்கு முன்பே சிவாஜிக்கு ஜெயலலிதாவின் குடும்பம் நன்கு அறிமுகமானது. அவரின் தாயார் சந்தியா, "சிவாஜி நாடக மன்ற' நடிகையாக இருந்தார். அதனால் ஜெயலலிதாவை அழைத்துக் கொண்டு போனார். அறைக்கு வெளியே அவரை உட்கார வைத்துவிட்டு எம்.ஜி.ஆரின் அறைக்குள் போனார். 

"தம்பி கணேசு வா... வா... எப்படியிருக்க? தங்கச்சி, பிள்ளைங்கள்லாம் எப்படியிருக்காங்க?'' என விசாரித்துவிட்டு, "ஜானு... ஒங்க அண்ணனுக்குப் பிடிச்ச ஆப்பமும், கருவாட்டுத் தொக்கும் ரெடி பண்ணு'' எனச் சொல்லிவிட்டு "அப்புறம்?'' என எம்.ஜி.ஆர். கேட்க, சிவாஜி அறையின் வெளிப்பக்கமாகப் பார்த்து "வா'' என குரல் கொடுக்க, தயங்கித் தயங்கி ஜெயலலிதா உள்ளே வர... எம்.ஜி.ஆரின் முகம் மாறியது. கொஞ்சம் குழப்பத்துடன் சிவாஜியைப் பார்த்தார்.

"அம்மு கட்சியில சேரணும்ங்குது. அம்மு பண்ணின தவறையெல்லாம் பெரியமனசு பண்ணி நீங்க மன்னிக்கணும்'' என்றார் சிவாஜி.

சில நிமிட விவாதங்களுக்குப் பிறகு சிவாஜி சொன்ன சமரசத்தை ஏற்றுக்கொண்டார் எம்.ஜி.ஆர்.

ங்கள் குருநாதர் "இயக்குநர் திலகம்' கே.எஸ். கோபாலகிருஷ்ணனின் திருமணம். கலைஞர் மீது எப்போதும் பெருமதிப்பு கொண்டவர். கலைஞரை மானசீக குருவாய் எண்ணியவர் கே.எஸ்.ஜி. கலைஞரை சந்தித்து பத்திரிகை கொடுத்தார். அப்போது பழைய நினைவுகளை இருவரும் பகிர்ந்துகொண்டு அளவளா வினர். பேச்சினூடே கலைஞர் அடித்த ஒரு கமெண்ட்டால் துரைமுருகன் வெட்கத்தில் சிவந்து வெளியே ஓடினார். ஆற்காடு வீராசாமி சிரிப்பை அடக்க முடியாமல் அந்தப் பக்கம் திரும்பிக்கொண்டார். "நான் கிளம்புறேன் சாமி' எனச் சொல்லிவிட்டு வெளியே வந்தார் குரு.  அவருடன் சென்ற நான், அந்த கமெண்ட் பற்றி இப்போது சொல்ல விரும்பவில்லை. இந்த சம்பவத்தை நான் சொல்வதற்குக் காரணம்... கலைஞர் மிக எதார்த்தமானவர் என்பதற் காகத்தான்.

reel1

லைஞரிடம் பத்திரிகை கொடுத்து விட்டுக் கிளம்பிய குரு, "அம்முவுக்கு பத்திரிகை கொடுப்போம்'' எனச் சொன்ன தால் போயஸ் கார்டன் போனோம். பெரிய இரும்பு கேட்... தட்டினோம். பாதுகாவலர் ஒருவர், முகம் மட்டும் தெரியும் சிறு ஷட்டரைத் திறந்து எங்களைப் பார்த்தார்.

"யார் நீங்க?''

"டைரக்டர் கே.எஸ்.கோபால கிருஷ்ணன்''

ஷட்டர் மூடப்பட்டது.

மீண்டும் திறக்கப்பட்டது.

"எதுக்காக வந்திருக்கீங்க?''

"கல்யாண பத்திரிகை மேடத்துக்கு தரணும்...''

மீண்டும் மூடப்பட்டது.

மீண்டும் திறக்கப்பட்டது.

"பத்திரிகையை என்கிட்ட குடுங்க, நான் மேடத்துக்கிட்ட கொடுத்திடுறேன்'' என்றார்.

அவரிடமே கொடுத்துவிட்டு கிளம்பி னோம்.

"வந்தாளே மகராசி' படத்தில் ஜெயலலிதாவைப் பார்த்து "நீ வீட்டுக்குள்ள வந்த, வீடு  திருந்திருச்சு, நீ நாட்டுக்குள்ள வந்தா நாடு திருந்திரும்'னு முன்கணிப்பு செய்த எங்கள் குருவுக்கு இது அவமானம் என்கிற வருத்தம் எனக்கு இப்போதும் உண்டு. 

மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் -தயாரிப்பாளர் -நடிகர் -டைரக்டர் என பன்முகம் கொண்டவராகத் திகழ்ந்தவர் டி.ஆர்.சுந்த ரம். படம் சம்பந்தப் பட்ட ஒவ்வொரு வேலையும் சுந்தரத் தின் பார்வையில் தான் நடக்கும். மிகவும் நேர்மை யும், கண்டிப்பும் கொண்டவர். 

ஒருநாள் செட்டுக்கான மர வேலைப்பாடுகள் நடக்கும் இடத்திற்குச் சென்ற சுந்தரம், கும்பிட்ட ஒரு தொழிலாளியைக் கூர்ந்து கவனித்தவர்... அந்த தொழி லாளியை வெளியே அழைத்தார். அவரின் கண்காட்டுதலுக்கு ஏற்ப, அந்த தொழிலாளியை ஒரு மரத்தில் கட்டிவைத்தார். 

"எனக்கு மாச சம்பளம் 900 ரூபாய்... உனக்கு?''

reel2

"150 ரூபாய் சார்''

"900 வாங்குற நான் 20 ரூவா செருப்பு போட்டிருக்கேன். 150 ரூபா வாங்குற நீ 100 ரூபா செருப்பு போட்டிருக்கியே? எதுக்கு இந்த ஆடம்பரம்?'' எனக் கேட்டு தன்னுடைய செருப்பால் அந்த தொழிலாளியை கடுமையாக அடித்துவிட்டார். 

பின்னாளில் பல சூப்பர்ஹிட் படங்களைத் தயாரித்த எம்.ஏ.வேணு, அப்போது அங்கே புரொடக்ஷன் மேனேஜராகப் பணியாற்றிவந்தார். அவரை அழைத்து, "அடுத்த மாசத்துல இருந்து இவனுக்கு 50 ரூபா சம்பளம் உயர்த்திக் குடு'' எனச் சொன்னார்.

"பணமா, பாசமா' படம் கே.எஸ்.கோபாலகிருஷ்ணனுக்கு மிகப்பெரும் புகழைத் தந்தது. அதேசமயம் ஒரு துயர சம்பவமும் நடந்தது. 

இந்தியப் பட விழாவில்  "பணமா, பாசமா' படம் வெளி யிடப்பட்டதால் அந்த விழாவிற் காக ரஷ்யா சென்றிருந்தார் கே.எஸ்.ஜி. அந்த நேரத்தில், வீட்டு மாடியில் விளை யாடிக்கொண்டிருந்த  கே.எஸ்.ஜி.யின் கடைசி மகன்... குமார் மாடியிலிருந்து தவறி கீழே விழுந்துவிட்டான். தலை, கை, கால் என எலும்பு முறியாத இடமே இல்லை. பதறிப் போய் நின்றிருந்தது கே.எஸ்.ஜி.யின் குடும்பம். இதைக் கேள்விப்பட்ட எம்.ஜி.ஆர்., தன் சொந்தப் பணத்தில் உயர் ரக மருந்து, மாத்திரைகளை வாங்கிக் கொடுத்து சிறந்த டாக்டர்கள் மூலம் சிகிச்சை யளிக்கச் செய்து, அவனைக் காப்பாற்றினார். ரஷ்யாவிலிருந்து திரும்பிய கே.எஸ்.ஜி., விஷயம் அறிந்ததும் கண் கசிந்துபோனார்.

காமராஜரின் மதிப்பிற்குரியவர், கலைஞரின் பற்றுக்குரியவர், அண்ணாவின் அன்புக்குரியவர், சிவாஜியால் "குள்ளக் கவி' என செல்லமாக அழைக்கப்பட்ட கே.எஸ்.ஜி. தன் மகனைக் காப்பாற்றிய எம்.ஜி.ஆருக்கு நன்றி செய்யும் விதமாக எம்.ஜி.ஆர். ஹீரோவாக நடிக்க "தங்கத்திலே வைரம்' என்கிற படத்தை தொடங்க திட்டமிட்டார். ஆனால் தான் செய்த உதவிக்கு பதில் உதவி பெற்றுக்கொண்டதாக அமையும் என்பதால், இந்தப் படத்தில் நடிக்க எம்.ஜி.ஆர். மறுத்து விட்டார். ஆயினும் கே.எஸ்.ஜி.யின் எழுத்தின் மீது எம்.ஜி.ஆருக்கு மிகுந்த மதிப்பு இருந்தது. அதை பிறிதொரு சந்தர்ப்பத்தில் பயன்படுத்திக் கொண்டார் எம்.ஜி.ஆர். 

எம்.ஜி.ஆரின் வேட்டி விலகி, தொடை தெரிந்தது. என்னால் அந்த இடத்திலிருந்து பார்வையை அகற்ற முடியவில்லை

எம்.ஜி.ஆர். அதட்டினார்...

அந்த நிகழ்வு...!

(வெளிச்சம் பாயும்)

படம் உதவி: ஞானம்

______________________
திருத்தம்!


தேனி சட்டமன்றத் தொகுதியில் 1962ஆம் ஆண்டு தி.மு.க. வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றிபெற்று "தேர்தலில் போட்டியிட்டு ஜெயித்த முதல் நடிகர்' என்கிற பெருமையைப் பெற்றார் லட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆர். இந்தத் தேர்தலில் எஸ்.எஸ்.ஆர். தோற்கவேண்டும் என கே.எஸ். கோபாலகிருஷ்ணன் கடவுளிடம் வேண்டிக் கொண்டதாகச் சொன்னார். அதன்பின் ராஜ்ய சபா உறுப்பினராக்கியது கட்சி. 1969ல் இந்திரா காந்தி கொண்டுவந்த "மன்னர் மானிய ஒழிப்பு' மசோதாவில் தி.மு.க. ஆதரவு நிலைப்பாடு எடுத் தும் எஸ்.எஸ்.ஆர். ஓட்டெடுப்பில் கலந்துகொள் ளாததால், ஒரு ஓட்டு வித்தியாசத்தில் மசோதா தோற்றது. ஆட்சியை கலைத்துவிட்டு மீண்டும் தேர்தலில் நின்று தனிப்பெரும்பான்மை பெற்ற இந்திரா 1972ல் மன்னர் மானிய ஒழிப்பு மசோதாவில் வென்றார். 


தவறைச் சுட்டிக்காட்டிய வாசகர்களுக்கு நன்றி!


-ஷாலப்பா
98413 28257