Advertisment

ரீல்! நிழல்  உலகின் நிஜங்கள்! -டைரக்டர் ஷாலப்பா (17)

reel

(17) சைக்கிளில் வந்த ‘இதயக்கனி’ டைரக்டர்!

பொதுவாக எந்தத் தொழில் செய்து நஷ்டம் ஏற்பட்டாலும் விட்ட காசை விட்ட இடத்திலிருந்துதான் எடுக்கவேண்டும் என்பது பலரின் கணக்கு. அந்தக் கணக்கின்படி 1963-ல் ஏ.வி.எம்.ராஜன் ஹீரோவாக நடிக்க, தமிழ்மாறன் கதையில் கே.பி.ஸ்ரீனிவாசன் என்பவர் டைரக்ஷனில் ‘"துளசிமாடம்'’ படத்தை எடுத்து ரிலீஸ் பண்ணினார் வேணு. இந்தப் படமும் படுதோல்வி. வேணுவின் கையிலிருந்த கொஞ்சநஞ்ச காசையும் துடைத்தெறிந்துவிட்டது ‘"துளசிமாடம்.' 

Advertisment

இப்படி தொடர்ச்சியாக வீழ்ச்சிப் பாதையில் வேணு போய்க்கொண்டிருந்த போது, பண ரீதியாகவும் மன ரீதியாகவும் உதவிய நல்ல உள்ளங்கள் கவிஞர்கள் கா.மு.ஷெரீப், மருதகாசி,  எடிட்டர் அம்பலம், ரத்னம்பிள்ளையின் மாமா சாமிநாதன் ஆகிய நால்வர்தான். 

அதேபோல் வேணுவின் தொழில் நாணயத்தையும், உழைப்பையும் பற்றி நன்கு தெரிந்த சில ஃபைனான்சியர்கள் உதவ முன்  வந்ததால், எம்.ஜி.ஆர்., எஸ்.எஸ்.ஆர். ஆகியோரை தனித்தனியாக வைத்து படம் எடுத்து, சினிமாவில் விட்ட காசை சினிமாவிலிருந்தே எடுக்கும் வேலையை ஆரம்பித்தார் வேணு. 

ஏன்னா எம்.ஜி.ஆரின் ‘இதயக்கனி’ ரிலீசாகி, அரசியல் சூறாவளி மையம்கொண்டிருந்த  நேரம்

(17) சைக்கிளில் வந்த ‘இதயக்கனி’ டைரக்டர்!

பொதுவாக எந்தத் தொழில் செய்து நஷ்டம் ஏற்பட்டாலும் விட்ட காசை விட்ட இடத்திலிருந்துதான் எடுக்கவேண்டும் என்பது பலரின் கணக்கு. அந்தக் கணக்கின்படி 1963-ல் ஏ.வி.எம்.ராஜன் ஹீரோவாக நடிக்க, தமிழ்மாறன் கதையில் கே.பி.ஸ்ரீனிவாசன் என்பவர் டைரக்ஷனில் ‘"துளசிமாடம்'’ படத்தை எடுத்து ரிலீஸ் பண்ணினார் வேணு. இந்தப் படமும் படுதோல்வி. வேணுவின் கையிலிருந்த கொஞ்சநஞ்ச காசையும் துடைத்தெறிந்துவிட்டது ‘"துளசிமாடம்.' 

Advertisment

இப்படி தொடர்ச்சியாக வீழ்ச்சிப் பாதையில் வேணு போய்க்கொண்டிருந்த போது, பண ரீதியாகவும் மன ரீதியாகவும் உதவிய நல்ல உள்ளங்கள் கவிஞர்கள் கா.மு.ஷெரீப், மருதகாசி,  எடிட்டர் அம்பலம், ரத்னம்பிள்ளையின் மாமா சாமிநாதன் ஆகிய நால்வர்தான். 

அதேபோல் வேணுவின் தொழில் நாணயத்தையும், உழைப்பையும் பற்றி நன்கு தெரிந்த சில ஃபைனான்சியர்கள் உதவ முன்  வந்ததால், எம்.ஜி.ஆர்., எஸ்.எஸ்.ஆர். ஆகியோரை தனித்தனியாக வைத்து படம் எடுத்து, சினிமாவில் விட்ட காசை சினிமாவிலிருந்தே எடுக்கும் வேலையை ஆரம்பித்தார் வேணு. 

ஏன்னா எம்.ஜி.ஆரின் ‘இதயக்கனி’ ரிலீசாகி, அரசியல் சூறாவளி மையம்கொண்டிருந்த  நேரம் அது. எம்.ஜி.ஆருக்காக "பட்டாளத்து ராமன்', எஸ்.எஸ்.ஆருக்காக "எப்போதும் முதலாளி'’ என இரு படத்திற்கும் கதை-திரைக்கதையை நான் எழுதினேன். 

Advertisment

reel1

எனது ஆசான் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் வசனம் எழுதினார். இரு படங்களுக்குமே ‘இதயக்கனி’ ஏ.ஜெகந்நாதனை டைரக்டராக போட முடிவுசெய்து, அப்போது கோடம்பாக்கம்  டைரக்டர்ஸ் காலனியில் இருந்த ஜெகந்நாதனை நேரில் சந்தித்து ஆபீஸ் அழைத்து வரச்சொன்னார் வேணு. எனது சைக்கிளில் கிளம்பிப் போனேன். விவரத்தைச் சொன்னேன். 

மகிழ்ச்சியுடன் ஒத்துக்கொண்ட ஜெகந்நாதன், உடனே தனது சைக்கிளை எடுத்தார்.   “"அண்ணே உங்கள ஆட்டோவுல கூட்டிட்டு வரச் சொன்னாரு ஐயா வேணு''’என நான் சொல்ல,  “"அட பரவாயில்ல வாப்பா.. சைக்கிள்லேயே போவோம்''”என சொல்லிவிட்டு சாலிகிராமத்தில் இருந்த  வேணுவின் அலுவல கத்திற்கு சைக்கிளில் கிளம்ப,  நானும் அவர் பின்னாலேயே வந்து சேர்ந்தேன். 

இப்ப உள்ள டைரக் டர்களும் ஹீரோக்களும் ஹெலிகாப்டரில் வருவேன், கேரவன்லதான் ரெஸ்ட் எடுப்பேன் என அடாவடி பண்ணி தயாரிப்பாளர் களை சாகடிக்கிறார்கள். எனது முதல் படமான ‘"இளமை ஒரு ரோஜா' வின் ஹீரோவாக நடிகர் ரமணாவை, ("படிக்கா தவன்'’ படத்தில் ரஜினிக்கு தம்பியாக நடித்த விஜய்பாபுவின் மகன்) கமிட் பண்ணிவிட்டு, ஷூட்டிங்கை ஆரம் பித்தேன். இரண்டு நாட்கள் ஒழுங்காக வந்துபோன ரமணா, மூன்றாம் நாள் கேரவன் கேட்க ஆரம்பித்து வம்பு பண்ணினார். 

"கேரவனெல்லாம் உனக்கு ரொம்ப ஜாஸ்தி. அதெல்லாம் ஏற்பாடு பண்ண முடியாது. இஷ்டமிருந்தா நடி, இல்லேன்னா வேற ஹீரோவப் பார்த்துக்குறேன்'’என டென்ஷனாகி கத்திவிட்டேன். இதுபோல் இன்னும் பல காரணங்களால் ‘"இளமை ஒரு ரோஜா'’ பூக்காமலே கருகிவிட்டது. 

ஆனால் அண்ணன் ஜெகந்நாதனோ சைக்கிளில் வந்தார்.  இரண்டு படங்களுக்கும் சேர்த்து ஜெகந்நாதனுக்கு  5 ஆயிரம் ரூபாய் அட்வான்ஸ் கொடுத்தார் வேணு. ஆனால் காலமோ எம்.ஜி.ஆரை முதல்வராக்கியதால் வேணுவுக்கு அதுவும் வாய்க்கவில்லை. எனக்கோ எதுவும் வாய்க்கவில்லை. 

reel2

இதற்கு மேலும் சென்னையில் இருப்பது தோதுப்படாது என்ற முடிவுக்கு வந்தார் வேணு. மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் இருக்கும் அவரது மகள் வீட்டிற்குச் செல்ல முடிவெடுத்து, அதற்குமுன் சில செட்டில் மெண்டுகளையும் செய்துவிட நினைத்து என் வீட்டுக்கு வந்தார். 

"டேய் ஷாலப்பா… ‘"பட்டாளத்து ராமன்'’, "எப்போதும் முதலாளி'’ கதைகளுக்காக உனக்கு சம்பளம் எதுவும் கொடுக்கல. அதனால என்னோட கம்பெனி தயாரித்த ’"மாங்கல்யம்'’, ‘"பெண்ணரசி', ‘"தங்க வளையல்',  "பணம் பந்தியிலே', ’"செங்கமலத் தீவு', ‘"டவுண் பஸ்'’ படங்களின் டி.வி. ஒளிபரப்பு உரிமையை உனக்கு எழுதித் தந்துர்றேன். ஐயாயிரம் வந்தாலும், அம்பதாயிரம் வந்தாலும் அது உனக்குத்தான்''’எனச் சொல்லிவிட்டுச் சென்றார். 

சில நாட்களில் பத்திரத் தில் எழுதிக் கொடுத்து, சொன்னதைச் செய்த சொக்கத்தங்கம் வேணுவின் கடைசிக் காலம் புனேவில் உள்ள அவரது மகள் வீட்டில் கரைந்தது. தனது 94ஆவது வயதில் காலமானார் அண்ணன் எம்.ஏ.வேணு.

1988-ல் எனது திருமணத்திற்கு அவர் அனுப்பிய வாழ்த்துக் கடிதத்தையும் அந்த உரிமைப் பத்திரங்களையும்  இப்போதும் பத்திரமாக வைத்துள்ளேன். அந்த 6 படங்களின் டிவி. உரிமையை எனது நண்பர் ஜெயக்குமாரிடம் சொல்ல... அவர் மூலமாகத்தான் ஏவி.எம்.முருகன் அவர்களின் தொடர்பும் நட்பும் கிடைத்தது.  இந்த நட்பினால்தான் ஐயா மெய்யப்ப செட்டியார் குறித்து ஏவி.எம்.ராஜேஸ்வரி அம்மையார் எழுதிய புத்தக உருவாக்கத்திற்கு துணையாக இருந்தேன். அந்தப் புத்தகத்தை தலைவர் கலைஞர்தான் வெளியிட்டார். 

ஆசான் கே.எஸ்.ஜி. பற்றிய நினைவுகளுடன்...…

(அடுத்த இதழில் முடியும்).

___________
‘வள்ளல்’ ரகசியம்! 

எம்.ஏ.வேணுவும் ம.பொ.சி.யும் மிகவும் நெருங்கிய நண்பர்கள் என்பதை ஏற்கனவே எழுதியுள்ளேன். சினிமா சங்கதிகள், அரசியல் சங்கதிகள் என எதுவாக இருந்தாலும் வேணுவிடம் பகிர்ந்துகொள்வார் ம.பொ.சி. ஒருமுறை வேணுவிடம் ம.பொ.சி., "எல்லோருக் கும் அள்ளிக் கொடுக்கும் வள்ளல்னா அது  எம்.ஜி.ஆர்.தான்.  அவரின் வலது கை கொடுப்பது இடது கைக்கே தெரியாது. ஆனால் கலைஞரும் சிவாஜியும் அப்படி இல்ல''’என்றார்.

 "அது சரிப்பா... எம்.ஜி.ஆரின் வலது கை கொடுப்பது இடது கைக்கே தெரியாதுங்குற. ஆனா உனக்கு மட்டும் எப்படித் தெரியும்? இதுதாம்பா எம்.ஜி.ஆர்.டெக்னிக். இதுக்குத் தான் உன்னை மாதிரி ஆளுகள வச்சிருக் காரு. அள்ளிக் கொடுப்பவர்னு எம்.ஜி.ஆரைப் பத்தி இப்படிச் சொல்லி, இதற்கு நேரெதிராக கலைஞரையும் சிவாஜியையும் காட்டுறதுல சூழ்ச்சி அரசியல் இருக்குப்பா. நீ இப்ப என்கிட்ட சொன்னதை ராதாண்ணன்கிட்ட (எம்.ஆர்.ராதா) நான் சொல்லிட்டு தப்பிச்சு வர்றதுக்குள் பெரும்பாடா போச்சுப்பா''’ என்றதும் கப்சிப்பாகிவிட்டார் ம.பொ.சி. 

நான்கூட ஒருவாட்டி எம்.ஜி.ஆரின் வள்ளல் குணத்தைப் பற்றி வேணுவிடம் பேசிக் கொண்டிருந்தபோது, ம.பொ.சி.யிடம் சொன்னதை என்னிடம் சொல்லிச் சிரித்தார் அண்ணன் வேணு.

nkn240925
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe