(14) மிரண்டு போன  சௌகார்ஜானகி!

த்னா ஸ்டுடியோ & எம்.ஏ.வி. பிக்சர்ஸ் ஓனரான எம்.ஏ.வேணுவின் முதல் மனைவி பார்வதி. இவருக்கு ஞானமணி, செல்வமணி என்ற இரட்டை பெண் குழந்தைகள் பிறந்து, சில வருடங்கள் கழித்து மூன்றாவதாகவும் பெண் குழந்தை பிறந்தது. அதற்கு கண்மணி என பெயர் வைத்த வேணுவிற்கு, ”மூணாவதும் பெண்ணாப் பிறந்துருச்சே” என்ற கவலை. இவரின் கவலைக் கண்களுக்குள் அடிக்கடி வந்து போனவர் கனகா என்ற நடிகை.  

Advertisment

மாடர்ன் தியேட்டர்ஸிலிருந்து வேணு வெளியேறிய கடைசிப் படமான ‘"பொன்முடி'யில் காமெடி நடிகர் ஏ.கருணாநிதிக்கு ஜோடியாக நடித்த இந்த கனகா, நல்ல பாடகியும்கூட. அந்தப் பட ஷூட்டிங்கின்போதே இருவரும் காதல்வயப் பட்டனர். ஆனால் சுந்தரத்தால் வேணுவின் மனம் காயப்பட்டு, வெளியேறி, ரத்னம் பிள்ளையின் ஆதரவுடன் எம்.ஏ.வி. பிக்சர்ஸின் முதலாளி ஆகும்வரை, கனகாவையும் காதலையும் கண்டுகொள்ள நேரமில்லை வேணுவுக்கு. 

1953-ல் ‘நால்வர்’ படம் மூலம் சினிமா தயாரிக்க ஆரம்பித்த வேணு, முதலில் வருசத்துக்கு ஒரு படம், அப்புறம் இரண்டு,  மூன்று படங்கள் என பிஸியான  தயாரிப்பாளரானார். அந்த வகையில் 1955-ல் ஏ.பி.நாகராஜன் கதை-வசனத்தில், எஸ்.ஏ.நடராஜன் டைரக்ஷனில் எம்.என்.நம்பியார், மாதுரிதேவி நடித்த ‘"நல்ல தங்காள்', ஏ.பி.என். கதை- வசனம் எழுதி, கே.சோமு டைரக்ட் பண்ணி, கண்ணாம்பா, எம்.என்.நம்பியார், பி.எஸ்.வீரப்பா, ஏ.கருணாநிதி ஆகியோர் நடிப்பில் ‘"பெண்ணரசி'’ படத்தையும் தயாரித்தார். இந்தப் படத்திலும் ஏ.கருணாநிதிக்கு ஜோடியாக ரஞ்சிதா என்ற கேரக்டரில் நடித் திருந்தார் கனகா. 

"பெண்ணரசி'’ரிலீசுக்குப் பின் சில வரு டங்கள் வேறு கம்பெனிப் படங்களில் நடித்து முடித்ததும், கனகாவை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார் வேணு. வேணுவின் மறுதார விவகாரம், முதல்தாரம் பார்வதிக்கும் தெரியும். சினிமாவைப் பற்றியும் முதலாளிகளின் பழக்க வழக்கங்கள் பற்றியும் பார்வதிக்குத் தெரிந்ததால், எல்லாவற்றையும் அனுசரித்துப் போக பழகிக்கொண் டார். மூணும் பொண்ணா பொறந்துருச்சே,  இவள் மூலமாகவாவது ஆண் குழந்தை பிறக்கும் என்ற நம்பிக்கையில் கனகாவை இரண்டாம் திருமணம் செய்தார். வருசங்கள் ஓடியதே தவிர, ஆண் வாரிசு மட்டுமல்ல, கனகாவிற்கு வாரிசே இல்லாமல் போனதுதான் பெரும் சோகம். இதற்கிடையில்தான் பார்வதி-வேணுவுக்கு  நான்காவதாக ஒரு பெண் குழந்தையும், அதற்கடுத்து ஐந்தாவது பெண் குழந்தையும் பிறந்தது. இக்குழந்தைகளுக்கு ரஞ்சனா, ரமணி என பெயர் வைத்தார் வேணு. வரிசையாக பெண் குழந்தைகள் பிறந்த நேரம்தான், வேணுவும் வரிசையாக படங்களைத் தயாரிக்க ஆரம்பித்தார். பேர், பணம், புகழ் குவிய ஆரம்பித்தது. இந்த நேரத்தில்தான் வேணுவுடனான பதினைந்து வருட இல்லற பந்தம் கனகாவுக்கு கசக்க ஆரம்பித்தது. 

Advertisment

reel1

இரண்டு கல்யாணம் பண்ணும் ஆண்களின் பொதுவான, உலக வழக்கமான குணம்னு ஒண்ணு இருக்கு. அதாவது முதல் சம்சாரம் என்னதான் சங்கடப்பட்டாலும் கோபப்பட்டாலும் மனக்கசப்பு ஏற்பட்டாலும் ஈஸியாக சமாளித்துவிடுவார்கள். ஆனால் ரெண்டாவது சம்சாரம் லேசா இருமி னாலே பதறுவார்கள், இதற்கு வேணு மட்டும் விதிவிலக்கா என்ன? கனகாவின் மனச்சங்கடத்தால் ரொம்பவே சங்கடப்பட்டாலும் சினிமா தயாரிப்பில் எந்த சங்கடங்களும் வந்து விடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார் வேணு. அதனால் ஒருநாள் கனகாவைக் கூப்பிட்டு, “"நமக்குள் இப்படி மனக் கசப்புடனும் சங்கடத்துட னும் வாழ்றது நல்லா யில்ல. ஒண்ணு எல்லாத்தையும் அனுசரிச்சு என் னோட வாழ விருப்பம் இருந்தா இரு. இல்லையா… நீ தனியா வாழ்றதுக்கான காசு- பணம் தர்றேன். வாங்கிட்டு ஒதுங்கிரு. எது உனக்கு விருப்பம்னாலும் எனக்கு சம்மதம்தான்''’என இறுதியாக சொல்லிவிட்டார் வேணு. நடிகை யாச்சே கனகா? அதனால கைநிறைய சில லட்சங்களை வாங்கிக் கொண்டு, வேணுவைவிட்டு விலகிச் சென்றார் கனகா.  இப்படிப்பட்ட நல்ல முடிவை எடுக்காமல் இருந்திருந்தால்…அப்போதே சினிமாவைவிட்டு வேணு விலகிப் போயிருப்பார். 

1955-ல் வேணு தயாரிப்பில் ஏ.பி.நாகராஜன் கதை-வசனத்தில் உருவான படம் ‘"டவுண் பஸ்'. இப்படத்தின் டைரக்டர், நடிகர்-நடிகைகள் குறித்து கடந்த இதழில் சொல்லியிருந்தேன். சேலம் மாடர்ன் தியேட்டர்ஸில் ஆபீஸ்பாயாக சேர்ந்து புரொடக்ஷன் மேனேஜராக உயர்ந்த வேணுவின் நிஜக் கதையைத்தான் பஸ் கம்பெனி கதையாக மாற்றி "டவுண் பஸ்'’சினிமா கதை எழுதினார் ஏ.பி.என். 

Advertisment

வேணு, ரத்னா ஸ்டுடியோவை லீசுக்கு எடுப்பதற்கு முன்பாகவே வெங்கட்ராமானுஜம் என்பவர் ‘"முதலாளி'யின் கதையை ரத்னம் பிள்ளையிடம் சொல்லி, 200 ரூபாய் அட் வான்ஸும் வாங்கியிருந்திருக்கிறார். வேணு கைக்கு ஸ்டுடியோ வந்து படங்களைத் தயாரிக்க ஆரம்பித்த பிறகுதான் "முதலாளி'’கதை விசயத்தை வேணுவிடம் சொல்லியிருக்கார் ரத்னம் பிள்ளை. 

"இந்தக் கதையை இதே டைட்டிலுடன் நானே தயாரிக் கிறேன். கதை எழுதிய ராமானுஜத்திற்குரிய முழு சம்பளத்தையும் நானே கொடுத்துடுறேன்''’எனச் சொல்லி, ரத்னம் பிள்ளை கொடுத்த 200 ரூபாய் அட்வான்ஸ் தொகையுடன் மேலும் சில ஆயிரங்களைச் சேர்த்துக்  கொடுத்து, ரத்னம் பிள்ளையை மெய்சிலிர்க்க வைத்தார் வேணு. 

லட்சிய நடிகர்  எஸ்.எஸ்.ஆர். ஹீரோவாகவும், தேவிகா அறிமுக ஹீரோ யினாகவும் நடித்த ‘"முதலாளி'’ படம் மூலம் முக்தா சீனிவாசனை டைரக்ட ராக்கினார் வேணு. முக்தா சீனிவாசனை டைரக்டராக போடுமாறு சிபாரிசு செய்தவர் எஸ்.எஸ்.ஆர்.தான். அதேபோல் டைட்டிலில் கதாசிரியர் வெங்கட் ராமானுஜத்தின் பெயரைப் போட்டு கௌரவித்தார் வேணு. 

"முதலாளி'’ படத்தை ஆரம்பிப்ப தற்கு முன்பே "சம்பூர்ண ராமாயணம்' படத்தை ஆரம்பித்தார் வேணு. அந்தப் படத்தின் பட்ஜெட் கொஞ்சம் பெரியது, காட்சிகளையும் டெக்னிக்கலாக எடுக்க கால அவகாசம் அதிகம் தேவைப்பட்ட தால், அதன் ஷூட்டிங் நடந்து கொண்டி ருந்தபோதே "முதலாளி'யை ஆரம்பித்து விட்டார் வேணு. மொத்தமே 3 லட்சத்தில் படத்தை முடித்து, "சம்பூர்ண ராமாயண'த் திற்கு முன்பே ரிலீஸ்பண்ணி, 12 லட்சம் லாபமும் கிடைத்தது வேணுவுக்கு. ("முதலாளி'’ படத்தை 12 லட்சத்தில் தயாரித்ததாக 5-ஆவது அத்தியாயத்தில் தவறுதலாக எழுதியிருந்தேன். வாசகர்கள் பொறுத்தருள்க.)

reel2

சுமார் முப்பது ஆண்டுகள் மாடர்ன் தியேட்டர்ஸ் சுந்தரத்தின் வளர்ப்பு என்பதால், எம்.ஏ.வி. பிக்சர்ஸை ஆரம் பித்த பிறகு வேணுவும் சுந்தரம்போல, செம ஸ்ட்ரிக்டாகத் தான் இருப்பார். ஒரு கதையைக் கேட்டு, அதை மூன்று, நான்கு முறை மூளைக்குள் ஓடவிட்டு முழு திருப்தியான பிறகுதான் ஹீரோ, ஹீரோயின் மற்ற ஆர்ட்டிஸ்டுகளை செலக்ட் பண்ண ஆரம்பிப்பார். படத்திற்கு பூஜை போட்டதிலிருந்து 40 நாட்களுக்குள் படத்தை முடித்து, அதற்கடுத்த சில வாரங்களில் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளையும் முடித்து ரிலீசும் பண்ணிவிடுவதுதான் வேணுவின் ஸ்டைல். 

1957-ல் ரிலீசாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘"முத லாளி'’ படத்தை 1958-ல் தெலுங்கில் ரீமேக் பண்ணினார் வேணு. நாகேஸ்வரராவ், சௌகார் ஜானகி ஜோடி. தெலுங் கில் தயாரானாலும் ரத்னா ஸ்டுடியோவில்தான் முக்கால் வாசி ஷூட்டிங் நடந்தது. ஷூட்டிங் ஆரம்பித்து சில நாட்கள் கரெக்ட் டயத்துக்கு வந்த சௌகார்ஜானகி, அதன் பின் கால்ஷீட் சொதப்பினார். இதனால் ரொம்பவே கடுப் பான வேணு, “"இப்படியே பண்ணிக்கிட்டிருந்தீன்னா… உன் னையும், உன்னை  வச்சு இதுவரை எடுத்ததையும் தூக்கிப் போட்டுட்டு, வேற ஹீரோயினை வச்சு படத்தை முடிச்சிரு வேன், ஜாக்கிரதை''’என சவுண்ட் விட்டதும், சப்தநாடியும் ஒடுங்கிப் போனது சௌகார் ஜானகிக்கு. சொன்ன நேரத்திற்கு முன்பாகவே ஓடிவந்து ஷூட்டிங் முடிந்த பின்பு, "வேணு சொன்ன பிறகுதான் ஸ்டுடியோவைவிட்டு வெளியேபோகும் அளவுக்கு...' மிரண்டுபோனார். 

அதிர்ச்சியான நடிகர் திலகம்… 

(வெளிச்சம் பாயும்)

_______________
தேசிய விருது பெற்ற முதல் தமிழ்ப்படம்!

1957-ல் வெளியான "முதலாளி'’ படத்தினை தேசிய விருது கமிட்டிக்கு அனுப்புமாறு வேணுவிடம் எஸ்.எஸ்.ஆர். சொன்னபோது, “"அதெல்லாம் பெரிய கம்பெனி படங்களுக்குத் தான் கொடுப்பார்கள். நமக்கெல்லாம் தரமாட்டார்கள்'’என்றார் வேணு. தேசிய விருதுன்னாலே அப்போ  இருந்து இப்பவரைக்கும் மாறவேயில்லைபோல. ஆனால் எஸ்.எஸ்.ஆர்., வேணுவை சம்மதிக்க வைத்து செலக்ஷன் கமிட்டிக்கு அனுப்பினார். எஸ்.எஸ்.ஆரின் முயற்சிக்கு வெற்றி கிடைத்தது. "தேசிய விருது வென்ற முதல் தமிழ்ப் படம்' என்ற பெருமையும் ‘"முதலாளி'க்கு கிடைத்தது. அதன்பின் அதே டைட்டிலுடன் 1965-ல் மலையாளத் தில் ரீமேக் பண்ணினார் வேணு. இந்தப் படத்தின் மூலமாகத்தான் மலையாள சினிமாவில் அறிமுகமானார் பிரேம்நஸீர்.