reel

 

(3) திருமதி ஜெயலலிதா!

ந்திராகாந்தி பிரதமராக இருந்த சமயம்...

"ஜனநாயக மக்களாட்சி நிலவும் இந்தக் காலத்தில் மன்னர்களுக்கு என்ன வேலை? தற்கால சமூகத்திற்கு எவ்வித சம்பந்தமும் இல்லாத மன்னர் பாரம்பரியம் எதற்கு? அவர்களின் வசதியான வாழ்க்கைக்கு மானியம் ஏன் அரசு தரவேண்டும்?'' என நினைத்தார் இந்திரா. அந்தக் காலத்திலேயே மன்னர்களின்  வசதியான வாழ்க்கைக்கு அரசாங்க மானியமாக ஆண்டுக்கு சுமார் 58 கோடி ரூபாயை செலவழிக்கவேண்டி வந்தது. இந்த டாம்பீகத்தை ஒழிக்கும்விதமாக 1969ஆம் ஆண்டில் "மன்னர் மானிய ஒழிப்பு மசோதா'வை கொண்டுவந்தார் இந்திரா. ஆனால் ஒரே ஒரு ஓட்டு வித்தியாசத்தில் இந்த மசோதா நாடாளு மன்றத்தில் தோல்வியடைந் தது. 

தி.மு.க.வின் நிலைப் பாடும் மன்னர் மானிய ஒழிப்பு என்பதாகவே இருந்தது. ஆனால் அப்போது தி.மு.க.வின் ராஜ்யசபா உறுப்பினராக இருந்த எஸ்.எஸ்.ஆர்., தன் ஓட்டைப் போடாததால் மசோதா தோல்வியடைந்தது. தனக்கு திடீரென வயிற்றுவலி ஏற்பட்டதால் பாத்ரூம் சென்றதாகவும், திரும்பி வந்தபோது வாக்கெடுப்பிற்காக நாடாளுமன்ற கதவுகள் மூடப்பட்டதால் தன்னால் வாக்களிக்க முடியாமல் போய்விட்டதாகவும் எஸ்.எஸ்.ஆர். விளக்கம் சொன்னார்.

(1971ல் தனித்த மெஜாரிட்டியுடன் ஆட்சியைப் பிடித்த இந்திரா, மன்னர் மானிய ஒழிப்பு மசோதாவை நிறைவேறச் செய்தார்)

தி.மு.க.வின் ராஜ்யசபா  உறுப்பினர், அ.தி.மு.க.வின் சட்டமன்ற உறுப்பினர், எம்.ஜி.ஆர். -எஸ்.எஸ்.ஆர். கழகம் கட்சியின் தலைவர் -இப்படி அரசியலில் பல முகங்கள் கொ

 

(3) திருமதி ஜெயலலிதா!

ந்திராகாந்தி பிரதமராக இருந்த சமயம்...

"ஜனநாயக மக்களாட்சி நிலவும் இந்தக் காலத்தில் மன்னர்களுக்கு என்ன வேலை? தற்கால சமூகத்திற்கு எவ்வித சம்பந்தமும் இல்லாத மன்னர் பாரம்பரியம் எதற்கு? அவர்களின் வசதியான வாழ்க்கைக்கு மானியம் ஏன் அரசு தரவேண்டும்?'' என நினைத்தார் இந்திரா. அந்தக் காலத்திலேயே மன்னர்களின்  வசதியான வாழ்க்கைக்கு அரசாங்க மானியமாக ஆண்டுக்கு சுமார் 58 கோடி ரூபாயை செலவழிக்கவேண்டி வந்தது. இந்த டாம்பீகத்தை ஒழிக்கும்விதமாக 1969ஆம் ஆண்டில் "மன்னர் மானிய ஒழிப்பு மசோதா'வை கொண்டுவந்தார் இந்திரா. ஆனால் ஒரே ஒரு ஓட்டு வித்தியாசத்தில் இந்த மசோதா நாடாளு மன்றத்தில் தோல்வியடைந் தது. 

தி.மு.க.வின் நிலைப் பாடும் மன்னர் மானிய ஒழிப்பு என்பதாகவே இருந்தது. ஆனால் அப்போது தி.மு.க.வின் ராஜ்யசபா உறுப்பினராக இருந்த எஸ்.எஸ்.ஆர்., தன் ஓட்டைப் போடாததால் மசோதா தோல்வியடைந்தது. தனக்கு திடீரென வயிற்றுவலி ஏற்பட்டதால் பாத்ரூம் சென்றதாகவும், திரும்பி வந்தபோது வாக்கெடுப்பிற்காக நாடாளுமன்ற கதவுகள் மூடப்பட்டதால் தன்னால் வாக்களிக்க முடியாமல் போய்விட்டதாகவும் எஸ்.எஸ்.ஆர். விளக்கம் சொன்னார்.

(1971ல் தனித்த மெஜாரிட்டியுடன் ஆட்சியைப் பிடித்த இந்திரா, மன்னர் மானிய ஒழிப்பு மசோதாவை நிறைவேறச் செய்தார்)

தி.மு.க.வின் ராஜ்யசபா  உறுப்பினர், அ.தி.மு.க.வின் சட்டமன்ற உறுப்பினர், எம்.ஜி.ஆர். -எஸ்.எஸ்.ஆர். கழகம் கட்சியின் தலைவர் -இப்படி அரசியலில் பல முகங்கள் கொண்ட எஸ்.எஸ்.ஆர்., நாடக மன்ற உரிமையாளர், நடிகர், டைரக்டர், தயாரிப்பாளர், நடிகர் சங்க தலைவர் -என சினிமாவிலும் பன்முகம் கொண்டவராகத் திகழ்ந்தார். முத்துராமனும், மனோரமாவும் இவரின் நாடக மன்றம் மூலமே பிரபலமானார்கள்.

பெரியாருடன் திராவிடர் கழகத்தில் பணியாற்றியபோது, பெரியாரின் தளபதியாகத் திகழ்ந்த அறிஞர் அண்ணாவுடன் நட்பு கொண்ட எஸ்.எஸ்.ஆர்., தி.மு.க.வை அண்ணா தொடங்கி யதும் அண்ணாவுக்கு பக்கபலமாக இருந்தார். கட்சி வளர்ச்சிக்கு பொருளாதார ரீதியாக உதவியதோடு, வில்லுப்பாட்டு கச்சேரிகளை நடத்தி, அதில் தி.மு.க. கொள்கைகளை மையப்படுத்தி கட்சி வளர்த்தார்.

(இந்த தகவல்களையெல்லாம் எஸ்.எஸ்.ஆர். மற்றும் கே.எஸ்.ஜி. உள்ளிட்டோர் என்னிடம் சொன்ன தகவல்களின் அடிப்படையிலேயே உங்களோடு பகிர்கிறேன்.)

reel1

 

என் திரை வாழ்க்கை என்பது வெற்றி -தோல்வி களுக்கு அப்பாற்பட்டதாய் இருக்கிறது.  ஆயினும் என் திரை வாழ்க்கைக்கு தொடக்கப்புள்ளியான லட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆர். என் திருமணத்தின்போதும் வந்திருந்து ஆசிர்வதித்தார். அவருடன் பழகிய காலங்களை என்னால் மறக்கவே முடியாது.

"எம்.ஏ.வேணு தயாரித்த "முதலாளி' படத்தில்தான் தேவிகா அறிமுகமானார். பல வரு டங்களுக்குப் பின் "முதலாளி' படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க விரும்பிய வேணு, என்னிடம் "கதையை ரெடி பண்ணு ஷாலப்பா'' எனச் சொன்னார்.

எஸ்.எஸ்.ஆர். -தேவிகாவை வைத்து கதையைத் தொடங்கி, பிரபு, கார்த்திக்கை வைத்து "எப்போதும் முதலாளி' என்கிற கதையை எழுதி முடித்தேன்.

"தேவிகாவை சந்திச்சு கதையைச் சொல்லிட்டு வா'' என்றார் வேணு.

நான், தேவிகாவின் வீட்டுக்குச் சென்றேன் வீட்டு வராந்தாவில் ஒரு தடித்த பெண்மணி, உட்கார்ந்து அரிசி புடைத்துக்கொண்டிருந்தார்.

"வணக்கம்மா...''

"சொல்லுங்க''

"தேவிகா அம்மாவ பார்க்கணும்...''

"அவங்கள பார்க்க முடியாதே''

"ஏம்மா''

"அவங்க செத்துட்டாங்களே...''

அப்படிச் சொன்னதும் நான் திகைத்து நின்றேன்.

என் அதிர்ச்சியைப் பார்த்த தேவிகா, "நீங்க பார்க்க வந்தது தேவிகாவையா? தேவிகாவோட அம்மாவையா?'' எனக் கேட்டார்.

"தேவிகாவைத்தான்''

"நான்தான் தேவிகா''

அவர் அப்படிச் சொன்னதும், "அந்தப்  பேரழகியா இப்படி பெருத்த உருவமாய் இருக்கிறார்?' என அதிர்ந்துபோனேன்.

"என்ன விஷயமா என்னைப் பார்க்க வந்தீங்க?''

"எம்.ஏ. வேணு சார், "முதலாளி' படத்தோட இரண்டாம் பாகம் எடுக்கப்போறார். அதில் நீங்க நடிக்கணும்னு விரும்பி, கதை சொல்ல என்னை அனுப்பினார்''.

"என் உருவத்த பார்த்தீங்கள்ல. என்னை வச்சுப் படம் எடுத்தா... ஃபிலிம்மோட ஒவ்வொரு ஃபிரேம்லயும் நான்தான் தெரிவேன். கூட நடிக்கிற வங்க உருவம் தெரியாதே'' என தன்னைத்தானே கிண்டலடித்துக்கொண்ட தேவிகா, "நான் செத்துப்போனது மாதிரி கதையைத் தொடங்குங்க, வேற நடிகையை வச்சுப் படம் எடுங்க'' என்றார்.

"சரிங்க மேடம்''

"முதலாளி வேணு சார் எப்படி இருக்கார்? அவரை வர்ற ஞாயித்துக்கிழமை கூட்டி வாங்க... எங்க வீட்டுல அவருக்கு விருந்து'' என்றார். அவரிடம் விடை பெற்றுக்கொண்டு கிளம்பினேன். (சொன்னபடியே வேணு சாருக்கு விருந்து வைத்தார் தேவிகா. நானும் கலந்துகொண்டேன்.) 

வேணுவை சந்தித்து விஷயத்தைச் சொன்னேன். 

"தேவிகா சொன்ன மாதிரி கதையை மாத்துங்க'' என்றார். 

மாற்றினேன்.

reel2

கதையின் முதல் காட்சி. சுவற்றில் தேவிகா வின் புகைப்படம் பூ போடப்பட்டு மாட்டப் பட்டிருக்க... எஸ்.எஸ்.ஆர்., சுவற்றில் கையை ஊன்றிய படியே போட்டோவைப் பார்த்துக்கொண்டிருக்க... அங்கே சுஜாதா வந்து "என்னங்க... இன்னும் அக்காவோட இழப்பை மறக்க முடியலையா?'' எனக் கேட்க...

-இப்படி கதையைத் தொடங்கி, எஸ்.எஸ்.ஆரின் இரண்டாம் தாரமாக சுஜாதாவை நடிக்க வைக்க தீர்மானித்தோம். படத்திற்கு ஃபைனான்ஸ் செய்வதாகச் சொல்லியிருந்த அப்போதைய அமைச்சர் சி.பொன்னையன்... தரமுடியாமல் போனதால்... படம் கைவிடப்பட்டது.

ஜெயலலிதா அவர்கள் நடிப்பில் மட்டுமல்ல... நாட்டியத்திலும் சிறந்து விளங்கினார். 

ஒருசமயம்... ஜெயலலிதாவுக்கு பாராட்டு விழா நடந்தது. 

கலைஞர், சோ, ஏவி.எம்.முருகன் உள்ளிட்ட பிரபலங்கள் இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.

ஜெயலலிதாவைப் பாராட்டி ஏவி.எம்.முருகன் பேசியபோது "திருமதி ஜெயலலிதா' என குறிப்பிட்டுப் பேசினார்.

பார்வையாளர்களுக்குப் பயங்கர ஷாக்!

சோ பேசும்போது, "ஜெயலலிதாவை "திருமதி' என குறிப்பிட்டுப் பேசினார் ஏவி.எம். முருகன். அவர் வாய் தவறி அப்படிச் சொல்லியிருக்கிறார். ஜெயலலிதா திருமதி அல்ல, செல்வி ஜெயலலிதா'' என விளக்கமளித்தார். 

வார்த்தை விளையாட்டு பற்றி கலைஞருக்கு வேறு யாருமா சொல்லித் தரவேண்டும்?

தனது பேச்சின்போது "திருமதி' பற்றி விளக்கிப் பேசினார்.

"திருமதி என முருகன் சொன்னதும் சரிதான்'' என்றதும் எல்லோரும் ஆர்வமாக கலைஞரையே பார்த்தார்கள்.

"திரு என்றால் அழகு என்று பொருள் உண்டு. மதி என்றால் சந்திரனையும் குறிக்கும். ஆக திரு+மதி = திருமதி. எனவே செல்வி ஜெயலலிதா அவர்களை "திருமதி' என முருகன் அழைத்ததில் தவறில்லை''

-கலைஞர் இப்படிச் சொன்னதும்... அரங்கம் அதிர்ந்தது.

(இது ஏவி.எம்.முருகன் சார் என்னிடம் சொன்ன நிகழ்வு) 

ஜெயலலிதா மிகத்திறமையான நடிகை. எளிதான காட்சியோ, கடினமான காட்சியோ காட்சியின் தன்மையை உள்வாங்கிக்கொண்டு "ஒரே டேக்'கில் நடித்துவிடுவார்.

"வந்தாளே மகராசி' படத்தில் அவருக்கு அப்பாவிப் பெண் -துடுக்கும் துணிச்சலுமான பெண் என இரண்டு கேரக்டர். இரண்டு கேரக்டர்களையும் மிக அருமையாக, தனித்துவமாக வெளிப்படுத்தி னார். இந்தப் படத்தில் நான் உதவி இயக்குநராகப் பணியாற்றினேன். அநாவசியமான வெட்டிப் பேச்சு ஜெயலலிதாவிடம் கிடையாது. ஷாட் ஓ.கே. ஆனதும் தனக்குரிய நாற்காலியில் அமர்ந்து உலகப் புகழ்பெற்ற ஆங்கிலப் புத்தகங்களைப் படிப்பார். அதேபோல "இத்தனை மணிக்கு படப்பிடிப்பு' என்று சொன்னால் சரியாக அந்த நேரத்திற்கு மேக்-அப்புடன் ஸ்பாட்டில் ஆஜராகிவிடுவார்.

ஜெயலலிதா மீது எம்.ஜி.ஆர். கோபம்!

இருவருக்கும் சமாதானம் செய்து வைத்த சிவாஜி!

(வெளிச்சம் பாயும்)
____________________________

தொடர் சம்பந்தமாக என்னுடன் பேச விரும்புவோர் 98413 28257 என்ற கைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம்!

-ஷாலப்பா

nkn020825
இதையும் படியுங்கள்
Subscribe