இந்தியாவை இந்துத்வ தேசமாக மாற்ற நினைக்கும் மத்திய அரசைக் கண்டித்தும், ஆரிய சனாதனக் கோட்பாட்டிற்கு எதிராகவும் மதுரையில் பெரியாரிய உணர்வாளர்கள் கூட் டமைப்பு, இடதுசாரி கட்சிகள் ஒன்றிணைந்து மதுரையில் ஏப்ரல் 29 அன்று செஞ்சட்டைப் பேரணியை நடத்தினர். இப்பேரணியில் தமிழகத் தில் முதன்முறையாக அனைத்து திராவிட இயக்கங்களும், இடதுசாரி இயக்கங்களும் ஒன்றாக இணைந்து, 5000-க்கும் அதிகமானோர் பங்கேற்றது அரசியல் பார்வையாளர்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது”
இந்தப் பேரணியை மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கொடியசைத்துத் தொடங்கிவைத்தார். பேரணியில் பெரியார் உணர் வாளர்கள் அமைப்பைச் சேர்ந்த திராவிடர் விடுதலை கழகத்தலைவர் கொளத்தூர் மணி, கோவை கு.ராமகிருஷ்ணன், தமிழ்ப்புலிகள் கட்சி நாகை திருவள்ளுவன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர், மார்க்சிஸ்ட், இந் திய கம்யூனிஸ்ட் கட்சித் தொண்டர்கள் பெண்கள் குழந்தைகள் என ஏராள மானோர் பங்கேற்றனர்.
அதனைத் தொடர்ந்து மதுரை பழங்காநத்தம் ரவுண் டானா பகுதியில் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் தமிழ்ப்புலிகள் கட்சி தலைவர் நாகை. திருவள்ளுவன் தலைமையில் பிரம்மாண்ட பொதுக்கூட்ட நிகழ்ச்சி நடை பெற்றது. பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்ட அனைத்து தலைவர்களும் வருணாசிரம எதிர்ப்பு, வர்க்க ஆதிக்க ஒழிப்பு, ஆரிய சனாதன எதிர்ப்புக்காக ஒருமித்து முழங்கினர்.
தமிழகத்தில் இந்துத்துவா சக்திகளுக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஜி.ராமகிருஷ்ணன், விடுதலை சிறுத்தை கள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், மதுரை எம்.பி. சு.வெங்கடேசன், திருமுருகன் காந்தி, கொளத்தூர் மணி, முன்னாள் எம்.எல்.ஏ. தனியரசு உள்ளிட்ட 130-க்கும் மேற்பட்ட அமைப்புகள், கட்சிகள் உள்ளிட்ட இடதுசாரி கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர்.
தந்தை பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த கோவை கு.ராமகிருஷ்ணன் பேசுகையில், “"மார்க்சிய, அம்பேத்கரிய, பெரியாரிய தத்துவங் களையும், கருப்பு சிவப்பு நீலம் என மூன்று நிறங்களையும் இம்மாநாடு ஒருங்கிணைத்துள்ளது. தந்தை பெரியார் ரஷ்யா சென்றபோது பொது வுடமை இயக்கத்தின் தத்துவத்தின் மகிமையைக் கண்டு அங்கேயே தங்கிவிடலாம் என நினைத்தபோது, ரஷ்யா அவரை அங்கு தங்கமுடியாது என கூறி விட்டது. ரஷ்யா பெரியாரை அங்கிருந்து அனுப் பியதற்கு நாம் நன்றி சொல்லவேண்டும், ரஷ்யா அவரை அங்கு தங்க அனுமதித்திருந்தால் நாம் எழுச்சி பெற்றிருக்க முடியாது''’என்றார்.
அவரைத் தொடர்ந்து மே-17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி பேசுகையில், “"சாதியாக மதமாக கட்சியாகப் பிரித்துப் பார்த்து தமிழகத்தில் வெற்றிபெறலாம் என காவிக்கூட்டம் நினைத்தது. நாம் அதை முறியடித்தோம். நம்மைப் போன்ற இயக்கங்களும் கட்சிகளும்தான் தமிழகத்தின் எதிர்காலம். எந்த வர்ணத்தை எடுத்தால் காவி ஒழியுமோ அதை கையிலெடுக்க வேண்டும்''’என்றார்.
திராவிடர் விடுதலை கழகத் தலைவர் கொளத் தூர் மணி, "சனாதன சக்திகள் தமிழக அரசியல் களத் தில் வெற்றிபெறாமல் இருந்தாலும் அனைவரையும் இந்துக்களாக உணரச்செய்யும் பணியில் வெற்றி கண்டு தான் வருகிறார்கள். அனைவரும் ஒன்றுபட்டு இம் முயற்சியை கொள்கைரீதியாக வெல்வோம்''’என்றார்.
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்க டேசனோ, "வைகையில் ஓடுவது நீரல்ல. தியாகிகளின் ரத்தம். வர்க்க ஆதிக்கத்தை, வருணபேதத்தை எதிர்த்த தியாகிகளின் ரத்தம் வைகையில் நீராக ஓடுகிறது. வர்க்க, வருண ஆதிக்கத்தை எதிர்த்த மண் மதுரை மண். மீனாட்சி அம்மன் கோவிலில் மொத்தமுள்ள 78 கல்வெட்டுகளில், 77 கல்வெட்டுகள் தமிழில் உள்ளன. வர்க்க வர்ண சமஸ்கிருத ஆதிக்கத்திற்கு எதி ரான குறியீடு அன்னை மீனாட்சி''” என குறிப்பிட்டார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் ஜி.ராமகிருஷ்ணனோ, “"இந்தியா முழுக்க ஒரே மதம், ஒரே கலாச்சாரம், இந்துத்வாவை நிர்மாணிப்பதே ஆர்.எஸ்.எஸ். இலக்கு. பொதுத்துறை நிறு வனங்களை எல்லாம் மோடி அரசு விற்றுவருகிறது. கடந்த 5 ஆண்டுகளால் 60 சாதி ஆணவக் கொலைகள் நடந்துள்ளன. ஹிட்லரை வீழ்த்தியதுபோல சனாதன பா.ஜ.க.வை வீழ்த்துவோம்''’என்றார்.
அவரைத்தொடர்ந்து வி.சி.க. தலைவர் தொல்.திருமாவளவன் பேசுகையில், "நான்கு வர்ணங்களை எதிர்த்து மூன்று நிறங்கள் தொடுக்கும் போரின் அறிவிப்பாக இம்மாநாடு உள்ளது. வர்ணாசிரம கொள் கைப்படி பார்ப்பனர்கள் உயர்ந்தவர்கள் மற்றவர்கள் தாழ்ந்தவர்கள். இதை ஏற்றுக் கொள்ளாதவர்கள்தான் பஞ்சமர் என அழைக்கப்படுகின்றனர்.
நான்கு வருணமும், பார்ப்பனர்களுக்குள்ளே உருவானதுதான். ஆரியர்கள் தங்களிடையே உருவாக்கிக்கொண்ட வாழ்க் கை முறைதான் நான்கு வர்ணம். அதில் சூத்திரர்கள் நாம் இல்லை. இந்தியா முழுவதும் வாழ்ந்தவர்கள்தான் ஆதிதிரா விடர்கள். இந்தியா திராவிடர்களின் நாடு.
இந்தியாவிற்கு மோடி பிரதமராக இருந்தாலும் பார்ப்பனர்களுக்கு அவர்கள் பணியாட்கள்தான். மோடி இன்னொரு முறைகூட பிரதமராகலாம். ஆனால் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் தலைவராக முடியாது'' என்றார்.
மாநாடும் பேரணியும் தமிழகத்தில் மீண்டும் ஒரு எழுச்சியை நோக்கிய கறுப்பு சிவப்பு உணர்வாளர்களின் ஒற்றுமையைக் காட்டியது.