செஞ்சிலுவைச் சங்கக் கிளையில் ஊழல்களும், மோசடிகளும் தொடர்ந்து நடைபெறுகிறது. அரசும் அதை உறுதிசெய்து அந்த அமைப்பின் நிர்வாகத்தை கலைக்கிறது. ஆனால் ஊழல், மோசடியில் ஈடுபட்டவர்களிடமே நிர்வாகத்தை மீண்டும் ஒப்படைத்ததால் மோசடியாக தேர்தல் நடத்த முயல்கிறார்கள்'' எனக் கொதிக்கிறார்கள் சங்க உறுப்பினர்கள் சிலர்.

வேலூர் செஞ்சிலுவைச் சங்க கிளை கடந்த 70 ஆண்டுகளாக செயல்பட்டுவருகிறது. மாவட்ட கிளையின் சேர்மன், செயலாளர், பொருளாளர் போன்றோர் சங்க உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகக்குழு உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

ff

Advertisment

மாநில நுகர்வோர் கமிட்டியின் அரசு உறுப்பினரும், சங்க உறுப்பினருமான வழக்கறிஞர் குமரேஸ்வரன், “"மாவட்ட கிளையின் சேர்மனாக நீண்டகாலம் இருந்தவர் சுசீலா. மோசடிப் புகாரில் 2011-ல் மாவட்ட ஆட்சித்தலைவராக இருந்த நாகராஜ் ஐ.ஏ.எஸ். இந்த அமைப்பின் நிர்வாகக் குழுவைக் கலைத்தார். அவர் மாறுதலாகிச் சென்றபின் தேர்தல் நடத்தியது போல் செட்டப் செய்து தகுதிநீக்கம் செய்யப்பட்ட உறுப்பினர்களில் சிலரோடு, வேறு சிலர் நிர்வாகக் குழுவுக்கு வந்தனர். 2020 டிசம்பரில் துணைத் தலைவர் வெங்கடசுப்பு, செயலாளர் இந்திரநாத் தலைமையிலான நிர்வாகக் குழுவை கலைத்து, சங்க அலுவலகத்துக்கு சீல் வைத்தார் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம்.

dd

சங்கத்தை நிர்வாகம் செய்ய அரசு அதிகாரி கள், உறுப்பினர்கள் கொண்ட ஒரு குழு அமைக்கப் பட்டது. அந்தக் குழுவில் ஊழல் புகாரால் கலைக் கப்பட்ட நிர்வாகக் குழுவின் துணைத்தலைவர் வெங்கடசுப்பு, விமல்சந்த்ஜெயின், அஞ்சுசக்திவேல், மாறன், உஷாநந்தினியை மீண்டும் சேர்த்து அறிவித்தார். இந்த குழு 2018, 2019, 2020-ஆம் ஆண்டுகளுக்கான திட்டப் பணிகள் அறிக்கை, வரவு-செலவு அறிக்கை, தீர்மானம் போன்றவற்றில் 2021 பிப்ரவரியில் பொதுக்குழுவைக் கூட்டி கையெழுத்து வாங்கி தவறுகளை மறைத்தது. சில தகவல்களை ஆர்.டி.ஐ.யில் கேட்டால் பதில் தர மறுக்கிறாங்க. டிசம்பர் 22-ஆம் தேதி சங்க நிர்வாகக் குழுவுக்கு தேர்தல் நடத்த முடிவுசெய் தாங்க, அதிலும் அவ்வளவு தில்லுமுல்லு'' என்றார்.

அதுகுறித்து நம்மிடம் பேசிய உறுப்பினர் நிவேதன், "500 ரூபாய் சந்தா கட்டிய அனைவரும் ஆயுட்கால உறுப்பினர்கள். சங்கத்தில் 650 உறுப்பினர்கள் உள்ளனர், ஆனால் 125 பேருக்கு மட்டுமே அடையாள அட்டை தந்து வாக்களிக்க அழைத்தார்கள். வாக்களிக்க தற்காலிக உறுப்பினர் அட்டை தருவோம், இது இருந்தால்தான் வாக்களிக்க முடியும்'' என்கிறார்.

சங்க உறுப்பினரும், அ.தி.மு.க.வின் "வேலூர் மாவட்ட மருத்துவரணி இணைச் செயலாளரு மான டாக்டர். பாலாஜி, "வேலூர் செஞ்சிலுவைச் சங்க கிளை சார்பாக பொய்கையில் முதியோர் இல்லம் செயல்படுகிறது. பிறந்தநாள், திருமணநாள் போன்றவற்றுக்கு யாராவது உணவு வழங்கவந்தால் அவர்களிடம் பணமாக வசூலிக்கின்றனர். அந்த பணம் சங்கக் கணக்கில் வருவதில்லை.

சத்துவாச்சாரியில் மருத்துவ டிஸ்பென்சரியில் மருந்துகளை கள்ளமார்க்கெட்டில் விற்பனை செய்கிறார்கள். சங்கநாத்மலை குழந்தைகள் வளர்ச்சி மையத்தில் பள்ளி மூடப்பட்டு 10 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. ஆனால் அங்கு பணியாற்றிய ஒரு ஆசிரியைக்கு 10 ஆண்டுகளாக சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. இது கண்டுபிடிக்கப் பட்டு அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். ஆனால் அவரை மீண்டும் பணியில் சேர்த்து அவருக்கு சம்பளம் தரப்படுகிறது.

இங்கு 13 ஆம்புலன்ஸ்கள் உள்ளன. ஆனால் இவர்களே ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்துதந்து ஆம்புலன்ஸ் உரிமையாளர்களிடம் கமிஷன் வாங்கியது உறுதியாகி இதற்குப் பொறுப்பாளரான வெங்கடேசன் என்பவரை சஸ்பெண்ட் செய்தார்கள்.

வேலூர் பழைய பேருந்து நிலையம் அருகே சங்க கட்டிடத்தில் சங்க அலுவலகம், தனியார் வங்கி, ஹோட்டல் செயல்படுகின்றன. ஹோட்டல் துணைத் தலைவர் வெங்கடசுப்புவுடையது. சங்கத்தில் முடிவு எடுக்குமிடத்தில் இருப்பதால் இப்போது முழுக் கட்டடத்தையும் ஹோட்டலாக மாற்ற முயல்கிறார். சிக்கல் ஏற்படுத்தக்கூடாதென துணைத்தலைவர் பதவியில் நீடிக்க தேர்தல் மோசடியில் ஈடுபடுவதோடு, தனக்கான செல்வாக்கைப் பயன்படுத்துகிறார். சேவை அமைப்பை ஊழல் அமைப்பாக மாற்றிவிட் டார்கள்''’என்றார்.

இந்நிலையில்தான் சங்க தேர்தல் ரத்தென திடீரென டிசம்பர் 20-ஆம் தேதி அறிவித்தார் மாவட்ட ஆட்சி யர் குமாரவேல்பாண்டியன். உறுப்பினர் சேர்க்கை நீதிமன்ற வழக்கால் தேர்தல் ரத்து செய்யப்பட்டது என்றார்கள்.

சங்க துணைத்தலை வரும், ஹோட்டல் அதிபருமான வெங்கடசுப்புவிடம் குற்றச்சாட்டுகள் குறித்து கேட்டபோது, "2020-ல் கமிட்டி கலைக்கப்பட்டதற்கு காரணம் செயலாளர் இந்திர ஜித். போலியாக உறுப்பினர்களைச் சேர்த்ததை புதிய உறுப்பினர் சேர்க்கை கமிட்டி தலைவர் உஷாநந்தினி உறுதி செய்தது, அலுவலக டெக்க ரேஷன், முதியோர் இல்லத்துக் கான செலவு போன்றவற்றில் தவறு நடந்ததால் நிர்வாகக்குழு கலைக்கப்பட்டு, தற்காலிக கமிட்டி அமைக்கப்பட்டது. 6 மாதம் மட்டுமே அதற்கான காலம் என்பதால் தற்போது தேர்தல் அறிவிக்கப்பட்டது. தேர்தலில் முறையாக உறுப்பினராகாத 250 பேர் வாக்களித்துவிடக்கூடாது என்பதற்காக தற்காலிக உறுப்பினர் அட்டை வழங் கப்பட்டது. சரியான உறுப்பினர்கள் விடுபட்டிருந் தால் அது நிர்வாகத் தவறு. ஆசிரியராக இருப் பவருக்கு 10 ஆண்டுகள் சம்பளம் வழங்கவில்லை, கொரோனா காலத்தில்தான் வழங்கப்பட்டது. அலுவலக கட்டிடம் உள்ள கட்டடத்திலோ முதி யோர் இல்லம் பகுதியிலோ ஹோட்டல் வைக்கப் போகிறேன் எனச்சொல்வது தவறானது''’என்றார்.

தமிழ்நாடு செஞ்சிலுவை சங்க கிளையில் 2011 முதல் 2020 வரை பல்வேறு ஊழல்கள் நடந்துள்ளன என 2021 ஜனவரி மாதம் ஆளுநரின் துணைச்செயலாளர், சி.பி.ஐ.யிடம் புகார் தந்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் செஞ்சிலுவை சங்கத்தின் தமிழக கிளையின் தலைவர் ஹரிஷ்மேத்தா, செயலாளர் நஸ்ரூதின், இந்தர்நாத், பொருளாளர் செந்தில்நாதன் உட்பட பலர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடந்துவருகிறது என்கிறார்கள்.