றைமுக மிரட்டல் விடுத்த மாநிலங்களவை அ.தி.மு.க. உறுப்பினர் விஜயகுமாரின் மாவட்டச் செயலாளர் பதவியை பறித்து, இ.பி.எஸ்.சும், ஓ.பி.எஸ்.சும் தங்கள் பவரை நிரூபித்திருக்கிறார்கள்.

vijayakumar-mpதன்னிடமிருந்து குமரி மாவட்டச் செயலாளர் பதவியை பறித்தால் தினகரனுடன் சேர்ந்துவிடுவதாக விஜயகுமார் எம்.பி. மிரட்டல் விடுத்ததை ஜூலை (28-31) நக்கீரனில் "வந்த செய்தி விசாரித்த உண்மை' பகுதியில் எழுதியிருந்தோம்.

டி.டி.வி. தினகரன் வழியாக சசிகலாவுக்கு அறிமுகமாகி கட்சிப் பொறுப்புக்கு வந்தவர் விஜயகுமார். சென்னையில் தொழில் செய்த விஜயகுமாருக்கு மாநிலங்களவை உறுப்பினர் பொறுப்பையும் வாங்கிக் கொடுத்தார் சசிகலா. 2016 சட்டமன்றத் தேர்தலில் குமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளையும் அ.தி.மு.க. இழந்தது. அதைத்தொடர்ந்து மாவட்டச் செயலாளர் பொறுப்பிலிருந்து தளவாய்சுந்தரத்தை நீக்கிவிட்டு விஜயகுமாருக்கு மாவட்டச் செயலாளர் பதவியை கொடுத்தார் ஜெயலலிதா. அவர் இறந்தபிறகு, சசிகலா, தினகரன் பின்னால் இருந்த விஜயகுமார், சமீப காலமாக நடுநிலையாக எல்லோருக்கும் நல்லபிள்ளையாக நடித்துக்கொண்டிருந்தார்.

அ.தி.மு.க.வினரைக் கண்டுகொள்ளாமல் தனக்கு வேண்டிய ஆட்களுக்கே முக்கியத்துவம் கொடுத்தார். தினகரனோடும் அண்டர்கிரவுண்ட் தொடர்பில் இருந்த விஜயகுமார் மீது இ.பி.எஸ்.சும், ஓ.பி.எஸ்.சும் அதிருப்தி அடைந்தனர். விஜயகுமார் மீது கட்சிக்காரர்கள் தொடர்ந்து புகார்களை கொடுத்துவந்தனர்.

Advertisment

vijayakumar-mpதினகரனிடம் மறைமுக தொடர்பில் இருந்துகொண்டு, சசிகலாவின் நலனை அடிக்கடி விசாரித்துவந்ததை உளவுத்துறை மூலமாக இ.பி.எஸ்.சும் ஓ.பி.எஸ்.சும் அறிந்தனர். இதையடுத்து விஜயகுமாரை நீக்க முடிவு செய்தனர்.

இந்நிலையில் சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் விஜயகுமார் பங்கேற்றார். அப்போது, தன் மீது நடவடிக்கை எடுக்கத் திட்டமிட்டிருப்பதை அறிந்த அவர், அப்படி நடவடிக்கை எடுத்தால் தினகரன் அணிக்கு போகப் போவதாகவும், தனது கட்டுப்பாட்டில் உள்ள 4 எம்.எல்.ஏ.க்களையும் அழைத்துச் செல்லப்போவதாகவும் மிரட்டினார் விஜயகுமார்.

விஜயகுமார் மீது நடவடிக்கை எடுக்க முயற்சிக்கப்படுவதை கண்டித்து, அவருடைய ஆதரவாளர்கள் ஆத்திரமடைந்தனர். தளவாய் சுந்தரம்தான் இதற்கு காரணம் என்று கூறி, சில தினங்களுக்கு முன் ஓ.பி.எஸ். வீட்டிற்குமுன் கிள்ளியூர் ஒன்றியச் செயலாளர் ரெஜிஸ் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். விஜயகுமார்தான் இதன் பின்னணியில் இருக்கிறார் என்பதை அறிந்த இ.பி.எஸ்.சும் ஓ.பி.எஸ்.சும் ஆத்திரமடைந்தனர். எனவேதான், குமரி மாவட்டத்தை இரண்டாக பிரித்து ஓ.பி.எஸ். ஆதரவாளர் அசோகனை கிழக்கு மாவட்டச் செயலாளராகவும், இ.பி.எஸ். ஆதரவாளர் ஜான்தங்கத்தை மேற்கு மாவட்டச் செயலாளராகவும் நியமித்துவிட்டனர்.

Advertisment

-மணிகண்டன்