தி.மு.க. வரலாறு
இந்திய அரசியலில் ஓர் அங்கமாகத் திகழும் கட்சியான திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொடக்க காலம் முதல் தற்காலம் வரையிலான முழுமையான ஆவணமாக இந்த நூல் விளங்குகிறது. தமிழகத்தில் 1916-ம் ஆண்டு நீதிக்கட்சி என்ற இயக்கம் தொடங்கக் காரணமாக இருந்தது எது என்பது முதல், 2018-ம் ஆண்டு ஆகஸ்டு 28-ந் தேதி தி.மு.க. தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட் டது வரையிலான கட்சி தொடர்பான அத்தனை நிகழ்வு களும் 3 தொகுதி களாக வெளி வந்துள்ள இந்த நூல்களில் சிறப் பாகத் தொகுத்துத் தரப்பட்டு
தி.மு.க. வரலாறு
இந்திய அரசியலில் ஓர் அங்கமாகத் திகழும் கட்சியான திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொடக்க காலம் முதல் தற்காலம் வரையிலான முழுமையான ஆவணமாக இந்த நூல் விளங்குகிறது. தமிழகத்தில் 1916-ம் ஆண்டு நீதிக்கட்சி என்ற இயக்கம் தொடங்கக் காரணமாக இருந்தது எது என்பது முதல், 2018-ம் ஆண்டு ஆகஸ்டு 28-ந் தேதி தி.மு.க. தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட் டது வரையிலான கட்சி தொடர்பான அத்தனை நிகழ்வு களும் 3 தொகுதி களாக வெளி வந்துள்ள இந்த நூல்களில் சிறப் பாகத் தொகுத்துத் தரப்பட்டு இருக் கின்றன. திரா விடக் கழகத்தில் இருந்து பிரிந்து 1949-ம் ஆண்டு தொடங்கப்பட்ட தி.மு.க., அதன் அர சியல் பயணத்தில் சந்தித்த சோதனைகள், வெற்றிகள், படுதோல்விகள், நடத்திய போராட்டங்கள், மாநாடுகள், ஆட்சியில் இருந்தபோது நிறைவேற்றிய நலத்திட்டங்கள், சர்ச்சைகளுக்கும், குற்றச்சாட்டுகளுக்கும் ஆளான சம்பவங்கள் போன்ற அனைத்தும் கால முறைப்படி வரிசைக்கிரமமாகத் தரப்பட்டு இருக்கின்றன. 1968-ம் ஆண்டுவரை கட்சியில் நடைபெற்ற நிகழ்வுகள் முதல் தொகுதியிலும், 1978-ம் ஆண்டுவரை நடைபெற்றவை இரண்டாவது தொகுதியிலும், தற்காலம் வரையிலானவை மூன்றாம் தொகுதியிலும் இடம்பெற்றுள்ளன. வரலாற்றுச் சிறப்புமிக்க புகைப்படங்களையும், கட்சியின் முன்னோடித் தலைவர்கள் அனைவரது படங்களையும் இணைத்து இருப்பது வரலாற்றைப் புரிந்து படிக்க ஏதுவாக இருக்கிறது.
நன்றி
தினத்தந்தி
29-01-2020
அபூர்வ ஆளுமை!
ஒரு நாட்டின் வரலாறு அளவுக்கே, ஒரு மனிதனின் வரலாறும் முக்கியமானது. மகாத்மா காந்தியின் சுயசரிதம், வெறுமனே அவரது வாழ்க்கையைப் பற்றியது மட்டுமல்ல, தென்னாப்பிரிக்காவில் இந்தியர் சம உரிமையைப் போராடிப் பெற்ற வரலாறும், இந்திய சுதந்திர வரலாறும் உள்ளடங்கியது. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் துவக்க நாளிலேயே, தனது பிறந்த நாளைக் கண்ட தோழர் நல்லகண்ணுவின் வரலாறை சுருங்கக் கூறும் "மாபெரும் மனிதநேயர்' என்னும் இந்த நூலும் பல்வேறு சிறப்புகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது. இந்த நூலைப் படைத் துள்ள கே. அய்யாசாமி, தோழரின் வாழ்க்கையை ஆழ்ந்துகவனித்து, அதன் முக்கிய நிகழ்வுகளை மலராகக் தொடுத்து இந்த அழகு ஆரத்தைப் படைத்துள்ளார்.
தோழர் நல்லகண்ணுவின் வாழ்க்கையின் முக்கிய நிகழ்வுகளைத் தெரிந்து கொள்ள விரும்பு பவர்களுக்கும், பள்ளிக் குழந்தைகளுக்கு ஒரு மாபெரும் தலைவரை அறிமுகம் செய்வதற்கும் பொருத்தமான நூல்.
தோழர் நல்ல கண்ணு போன்ற, ஒரு நூற்றாண்டில் அபூர்வ மாக எழுந்துவரும் ஆளுமைகளுக்கு அவர்களது வாழ்க் கையை எச்சமின்றிக் காட்டும் முழுமையான சரித நூல்கள் வர வேண்டும் என்பதே நமது விருப்பம். அதனை நக்கீரன் பதிப்பகம் நிறைவேற்றும் என்பது வாசகர்களின் நம்பிக்கை.
புத்தகம் கிடைக்குமிடம்:
நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்,
105, ஜானிஜான்கான் சாலை,
இராயப்பேட்டை, சென்னை-600 014.
போன்: 044-4399 3029
-சுப்பிரமணி