"கடவுளை மற மனி தனை நினை'’என்ற வாசகத்தை தொடர்ந்து முழங்கினார் பெரியார். கடவுள் மறுப்பு மட்டுமே திராவிட இயக்கங் களின் அடிப்படை நோக்கம் இல்லை என்றாலும், தமிழக அரசியலில் ஊறிப்போன பகுத்தறிவுப் பார்வையிலிருந்து மாறுபட்ட நிலைப்பாடு (Strategy) வேண்டும் என்று பேசியிருக்கிறார் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ.

vvvகடந்த 15-ந்தேதி சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில், பேரறிஞர் அண்ணாவின் 111-வது பிறந்தநாள் மாநாடு ம.தி.மு.க. சார்பில் நடத்தப் பட்டது. இந்த நிகழ்வில் பேசிய வைகோ, “""மதம் பா.ஜ.க.வின் ட்ரோஜன் குதிரை என்பதை மறந்துவிடக் கூடாது. தமிழ்நாட்டில் அரசிய லாக நாம் வெல்லமுடியாது என்று அவர்கள் நினைக் கிறார்கள். தமிழர்கள் பக்தர்கள்… அவர்களின் வழிபாட்டுத் தலங்களில் நுழைந்துவிட மதத்தைக் கையிலெடுக் கிறார்கள். ட்ராய் நகர கோட் டையை, ட்ரோஜன் மரக் குதிரைக்குள் தந்திரமாக மறைந்திருந்து கிரேக்க வீரர்கள் கைப்பற்றியதைப் போல, பா.ஜ.க.வினர் மதத்தை பயன் படுத்தி நுழைகிறார்கள்''’என்று ஆவேசமாகப் பேசியதோடு, ""நாம் யுத்தத் தந்திரத்தை மாற்றி யமைக்க வேண்டும். கி.வீரமணி என் கருத்தோடு உடன்பட மாட்டார். இருந்தாலும் உறுதி யாகச் சொல்கிறேன்''’என்றும் கூறினார்.

மேடையிலிருந்த பலரும் வைகோவின் பேச்சைக்கேட்டு புருவமுயர்த்திய நிலையில், ""நீ மாறுபட்டு விட்டாயா பெரியாரிடமிருந்து? நீ திராவிட இயக்கக் கொள்கையிலிருந்து விலகிவிட்டாயா? என்னை நோக்கி கேள்வி வரும். ஆழமாக சிந்தித்துச் சொல்கிறேன். தி.மு.க.வை நிறுவிய அண்ணா 40-களில் பேசிய தேவ லீலை யையும், மாஜி கடவுள்களையும் 60-களில் ஏன் பேசவில்லை? யோசிக்கவேண்டும் நீங்கள். நாம் அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டுமென்பது மட்டுமல்ல... சனாதன சக்திகளிடம் அதி காரம் போய்விடக்கூடாது என்பதிலும் உறுதியாக இருக்க வேண்டும்''’என்றார்.

நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் தி.மு.க.வை இந்து விரோதக் கட்சி என்று பரப்பப்பட்ட குற்றச்சாட்டு குறித்து விளக்கமளித்த அக் கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின், "தி.மு.க.வை இந்துக் களுக்கு எதிரான கட்சியாக அடையாளப்படுத்த முயல் கிறார்கள். நாங்கள் ஒருபோதும் இந்துக்களுக்கு எதிரானவர்கள் அல்ல' என்று கூறியிருந்தார். வைகோவோ, ""எங்கள் ஊரில் சுந்தரராஜ பெருமாள் கோயி லின் கும்பாபிஷேகத்திற்காக கோபுரம் கட்டிக் கொண்டி ருக்கிறோம். ஊரிலிருக்கும் பிள்ளையார் கோயிலுக்கும் கும்பாபிஷேகம் நடத்தி னோம்''’என்று கூறியிருப்பது பேசுபொருளாகி இருக்கிறது.

Advertisment

dd

"இந்து விரோதக் கட்சி களாக திராவிடக் கட்சிகள் நிறுவப்படுவதில் இருந்து தற் காத்துக் கொள்ள, பகுத்தறிவிலிருந்து பக்திமயமாக வேண்டிய தேவை இருக்கிறதா' என திராவிட இயக்க ஆய்வாளர் க.திருநாவுக்கரசுவிடம் கேட் டோம்.“""வைகோ இதைப் பேசியிருக்க வேண்டிய அவ சியமே கிடையாது. அவர் சொல்வதுபோல் அனைவரும் இயங்கவேண்டும் என்று விரும்பினால், அவருடைய கட்சி யிலோ, திராவிட இயக்கமாக கருதக்கூடிய கட்சிகளிலோ ஒரு உள்விவாதம் செய்திருக்க வேண்டும். இப்போதிருக்கும் அரசியல் சூழ்நிலையில், பா.ஜ.க. வினுடைய மக்கள்விரோத நடவடிக்கைகள், இங்கிருக்கும் மாநில அரசின் போக்கு ஆகியவை தி.மு.க.வுக்கு dddஆதரவு தருவதாக இருக்கிறது. அது நாடாளுமன்றத் தேர்தலிலும், சமீபத்திய போராட்டங்களிலும் வெற்றியைத் தந்திருக்கிறது. ஒவ்வொரு சென்டிமீட்டராக முன்னேறிக்கொண்டிருக்கிறோம். இந்தச் சூழலில் ஒட்டுமொத்தமாக போர்த்தந்திரத்தை மாற்றுவது என்று வலியுறுத்தினால், திராவிட சித்தாந்தம் நீர்த்துப்போய் விட்டதாக எதிரிகள் பேசுவதற்கே வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக் கும்.

சுயமரியாதை இயக்கத்தை சமூக சீர்திருத்தம்போல் தொடங்கி, சமய சீர்திருத்தம் போல் வழி நடத்தி, மெல்ல பகுத்தறிவுக்குத் திரும்பி பின்பு நாத்திகரானவர் பெரியார். அதை யார் வேண்டு மானாலும் செய்யலாம், அது வொரு அறிவுப்பயிற்சி. அந்தப் பயிற்சிக்கு உட்படுத்துவதே சரி எனும்போது, அ.தி.மு.க.வைப் போல் மாறுங்கள் என்று சொல்வதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?''’என்றார் விளக்கமாக.

Advertisment

தமிழ் நிலத்தின் வழி பாட்டைத் தொடர்ந்து வலியுறுத்திவரும் சைவ சித்தாந்த துறைத் தலைவர் முனைவர் நல்லூர் சரவணன் நம்மிடம், ""கோயிலில் வழிபடுவதாக இருந்தாலும், பூஜை முறை களிலும் சாதி பேதம் கூடாது. தமிழ் மந்திரங்கள் ஒலிக்க வேண்டும். பக்தி இயக்கத்தை சமஸ்கிருதமயத்திலிருந்து மீட்க வேண்டும். இதுதான் மாறுபட்ட நிலைப்பாடாக இருக்க வேண்டும். வடநாட்டு இந்துத்வா பாணிக்கு மக்களை கொண்டுசெல்லக் கூடாது'' என்கிறார்.

""சாதியின்பேரால் ஏற்றத் தாழ்வு கற்பித்து, வழிபாட்டு உரிமை மறுக்கப்பட்ட சமயத்தில், ஆலய நுழைவுப் போராட்டத்தை நடத்தி வெற்றிகண்டது திராவிடர் இயக்கம். அனைத்து சாதியின ரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற மேலான எண்ணத்தை, கடவுள் மறுப்புபேசிய பெரியார்தான் வலியுறுத்தினார். அதனால், ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட சங்பரிவாரங்களின் உள் நுழைதலைத் தவிர்க்க, பகுத்தறிவு இயக்கத்தின் உறுதியான நிலைப்பாடே தமிழ்நாட்டு பக்தர்களுக்கு உண்மையான பாதுகாப்பு'' என்கிறார்கள் தமிழ்வழி ஆன்மிக சிந்தனையாளர்கள்.

-கீரன், ச.ப.மதிவாணன்

படங்கள்: ஸ்டாலின்