Advertisment

ஆந்திராவுக்கு கடத்தப்படும் ரேஷன் அரிசி -இங்கே அலட்சியம்! அங்கே அரசியல்!

rice

மிழகத்திலிருந்து ஆந்திராவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுகிறது. அதனை தமிழக முதலமைச்சர் தடுக்கவேண்டுமென ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபுநாயுடு எழுதியுள்ள கடிதம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

rice

தெலுங்கு தேசம் கட்சித் தலைவரும், ஆந்திர முன்னாள் முதல்வரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு, மே 24-ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எழுதிய கடிதத்தில், "தமிழகத்திலிருந்து ஆந்திராவுக்கு ரேஷன் அரிசி கடத்திவரப்படுகின்றது. அந்த அரிசி பாலிஷ் செய்யப்பட்டு கிலோ 40 ரூபாய்க்கு சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது' எனக் குறிப்பிட்டுள்ளார். சந்திரபாபு நாயுடுவின் கடிதத்தைத் தொடர்ந்து குடிமைப்பொருள் புலனாய்வுப் பிரிவு காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின், வாணியம்பாடி வந்து ஆய்வுசெய்தார்.

இதுகுறித்து உணவுப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகளிடம் கேட்டபோது, “"தமிழ்நாட்டில் இருந்து கர்நாடகாவுக்கு கொண்டு செல்லப்படும் ரேஷன் அரிசி அங்கே பாலிஷ் செய் யப்பட்டு கர்நாடக பொன்னி அரிசியாக போ

மிழகத்திலிருந்து ஆந்திராவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுகிறது. அதனை தமிழக முதலமைச்சர் தடுக்கவேண்டுமென ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபுநாயுடு எழுதியுள்ள கடிதம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

rice

தெலுங்கு தேசம் கட்சித் தலைவரும், ஆந்திர முன்னாள் முதல்வரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு, மே 24-ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எழுதிய கடிதத்தில், "தமிழகத்திலிருந்து ஆந்திராவுக்கு ரேஷன் அரிசி கடத்திவரப்படுகின்றது. அந்த அரிசி பாலிஷ் செய்யப்பட்டு கிலோ 40 ரூபாய்க்கு சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது' எனக் குறிப்பிட்டுள்ளார். சந்திரபாபு நாயுடுவின் கடிதத்தைத் தொடர்ந்து குடிமைப்பொருள் புலனாய்வுப் பிரிவு காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின், வாணியம்பாடி வந்து ஆய்வுசெய்தார்.

இதுகுறித்து உணவுப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகளிடம் கேட்டபோது, “"தமிழ்நாட்டில் இருந்து கர்நாடகாவுக்கு கொண்டு செல்லப்படும் ரேஷன் அரிசி அங்கே பாலிஷ் செய் யப்பட்டு கர்நாடக பொன்னி அரிசியாக போலி பில்லோடு தமிழ் நாட்டுக்கே வருகின்றது. இங்கிருந்து கடத்தப்படுவதைத் தடுக்க ஒசூரில் கண்காணிப்பு அதிகப் படுத்தப்பட்டுள்ளது. கர்நாடகாவுக்குச் செல்லும் சாலைகள் அனைத்தும் தீவிர கண்காணிப்பில் வைக் கப்பட்டுள்ளது. இதனால் கடத்தல்காரர்கள் மாற்று வழியாக ஆந்திர மாநில வழியைப் பயன்படுத்து கிறார்கள். தமிழ்நாட்டிலிருந்து காட்பாடியிலிருந்து சித்தூர் வழியாகவும், பேரணாம்பட்டிலிருந்து கே.ஜி.எப், நாட்றம்பள்ளி வழிகளை கடத்தல் காரர்கள் பயன்படுத்துகிறார்கள்''’என்றார்கள்.

rice

Advertisment

இவர்கள் சொல்லும் பாதை சரி, அதைத் தடுக்க முயற்சி செய்கிறார்களா? என சமூக ஆர் வலர்களிடம் கேட்டபோது, "குடிமைப்பொருள் புலனாய்வு எஸ்.பி. ஆய்வுசெய்த தும்பேரி அண்ணாநகர் செக்போஸ்ட்டில் காவல்துறை, வனத்துறை இணைந்து சி.சி.டி.வி. கேமரா வைத்து கண்காணிக்கிறார்கள். இந்த வழியாக அரிசிக் கடத்தல், சாராயம் கடத்தல் நடக்கிறது என அண்ணாநகர் பகுதி இளைஞர்கள் ஆதாரங் களோடு அம்பலப்படுத்தினார்கள். இதுகுறித்து கலெக்டர் அலுவலகம், எஸ்.பி., டி.எஸ்.பி. அலுவலகங்களுக்கு புகார் அளித்தனர்.

புகார் சொன்னவர்களின் பெயர், செல்போன் நம்பரை கடத்தல்காரர்களுக்கு போலீஸ் தந்ததால் கொலைமிரட்டலுக்கு ஆளானார்கள் இளைஞர் கள். எங்க மேலயே புகார் சொல்றியா என போலீஸ் மிரட்டல் மறுபுறம். அதோடு வனத்துறை மூலமாக, வனத்துறை இடத்தில் வீடுகட்டி வாழ்கிறீர்கள் என 20 குடும்பத்தையும் காலி செய்யச்சொல்லி நோட் டீஸ் தந்துவிட்டார்கள். கடத்தல் குறித்து புகார் தருபவர்களின் நிலை இதுதான். அதேபோல ரயில் மூலமும் ஆந்திராவுக்கு அரிசி கடத்தப்படுகிறது. இதை காவல்துறை, ரயில்வே போலீஸார், டி.டி.ஆர். என யாரும் கண்டுகொள்வதில்லை.

வேலூர் மாவட்டத்தில் மட்டும் வாரம் நான்கு வழக்குகளாவது உணவுப்பொருள் கடத்தல் பிரிவு பதிவுசெய்கிறது. இதேபோல் திருப்பத்தூர் மாவட்டம், ராணிப்பேட்டை மாவட்டத்திலும் வழக்குகள் பதிவாகின்றன. கடத்தல் மன்னன் யார் என்பதைக் கண்டறிவதேயில்லை.

திருட்டு வாகனங்களில், நம்பர் பிளேட் மாற்றப்பட்ட வாகனங்களில் கடத்துவதால் வாகன உரிமையாளர் யாரெனக் கண்டறிய முடியவில்லை என்கிறது காவல்துறை. இன்றைய டெக்னாலஜி உலகில் கண்டுபிடிப்பது சுலபம். செம்மரக்கடத்தல் விவகாரத்தில் மரம் வெட்டப்போய் சிக்குபவர்களி டம், ஆளனுப்பும் புரோக்கர்கள் குறித்த தகவல்கள், செல்போன் எண்களை வாங்கி ட்ரேஸ் செய்து, தமிழகத்திற்குள் வந்து புரோக்கர் களைக் கைது செய்கிறது ஆந்திர போலீஸ். ஆந்திராவில் தமிழகத்தின் ரேஷன் அரிசியை வாங்கும் கும்பல் குறித்த தகவலை தமிழகத்தில் சிக்குபவர்களிடம் வாங்கி, ஆந்திரா சென்று அவர்களைக் கைதுசெய்ய லாம். ஆனால் அப்படி எந்த முயற்சியும் குடிமைப்பொருள் புலனாய்வுப் பிரிவு போலீஸ், லோக்கல் போலீஸ் செய்வதில்லை. அந்தளவுக்கு லட்சங்களில் இதில் லஞ்சம் விளையாடுகிறது''’என்கிறார்கள்.

rice

இதுகுறித்து தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணியிடம் நாம் கேட்டபோது, “"கடந்த ஆட்சியில் அரிசிக் கடத்தலை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டார்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் தடுப்பு நடவடிக்கையில் தீவிரமாக இறங்கியதன் அடிப்படையில் 900 வழக்குகள், 1540 குவிண்டால் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் சம்பந்தப்பட்ட 240 பேர் கைதுசெய்யப்பட்டு 20 பேர்மீது குண்டாஸ் போடப்பட்டுள்ளது. திருவள்ளூர், வேலூர் உட்பட எல்லையோர மாவட்டங்களில் கடத்தலைத் தடுக்க சி.சி.டி.வி. கேமரா மூலம் கண் காணிக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது. அரிசிக் கடத்தலில் ஈடுபடுபவர்கள்மீது குண்டாஸ் போடப்பட்டு அவர்களது சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும். இதற்கான ஆலோசனைக் கூட்டம் முதலமைச்சரின் உத்தரவுப்படி நடக்கவுள்ளது''’என்றார்.

"சந்திரபாபு நாயுடு எழுதிய கடிதத்துக்குப் பின்னால் அரசியல் உள்ளது. அரிசி, சாராயம், செம்மரக் கடத்தலில் தெலுங்கு தேசம் கட்சியினர் ஈடுபடுகின்றனர் என சந்திரபாபுநாயுடு முதலமைச்ச ராக இருந்தபோது, எதிர்க்கட்சியாக இருந்த ஒய். எஸ்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி போராட்டங்கள் நடத்தினார். இப்போது ஜெகன் முதலமைச்சர். அதோடு, மாநிலத்தில் சட்டவிரோதத் தொழிலில் அக்கட்சியினர் இறங்கி, தெலுங்குதேசம் கட்சியினரை முடக்குகின்றனர். அதோடு, தமிழக முதல்வர் -ஆந்திரா முதல்வர் இருவருக்கும் நல்ல நட்பு உள்ளது. அதை உடைக்கவும் சந்திரபாபு நாயுடு அரசியல் விளையாட்டைத் தொடங்கியுள்ளார்' என்கிறார்கள்.

nkn280522
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe