போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே வெற்றிபெற்றதோடு, அடுத் தடுத்த அமைச்சரவை மாற்றத்திலும் பதவியைத் தக்கவைத்துக் கொண்டுள்ள அமைச்சர் மதிவேந்தன், மீண்டும் ராசிபுரம் தொகுதியை தக்கவைப்பாரா? என்பதே முட்டை மாவட்டத்தில் பலத்த பேசுபொருளாகி யுள்ளது. 

Advertisment

கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில், அ.தி.மு.க.வின் கோட்டையாகக் கருதப்படும் ராசிபுரம் தனித்தொகுதியில், தி.மு.க. சார்பில் டாக்டர் மதிவேந்தன் போட்டியிட்டார். அ.தி.மு.க.வின் டாக்டர் சரோஜாவை 1952 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித் தார். அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த மதிவேந்தனுக்கு, எடுத்த எடுப்பிலேயே சுற்றுலாத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. இவரின் தேர்தல் வெற்றி முதல், அமைச்சரானது வரை நாமக்கல் கிழக்கு மா.செ. கே.ஆர்.என்.ராஜேஷ்குமாரின் கை ஓங்கியிருந்தது ஊரறிந்த ரகசியம். பின்னர், அமைச்ச ரவை மாற்றத்தின்போது வனத்துறை ஒதுக்கப்பட்ட நிலையில், தற்போது ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராகத் தொடர்கிறார் மதிவேந்தன். 

இது ஒருபுறமிருக்க, தேர்தலில் வெற்றிபெற்றதி லிருந்தே அவர் தொகுதி மக்களை சந்திப்பதே இல்லை என்றும், கட்சிக்காரர்களின் கோரிக்கை களைக் கூட நிறைவேற்றித் தருவதில்லை என்றும் தொகுதிக்குள் அதிருப்தி ஒலிக்கிறது. இந்நிலையில், மதிவேந்தனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் "டோஸ்' விட்டுள்ளார். அண்மையில் நாமக்கல் வந்திருந்த மண்டல தேர்தல் பொறுப்பாளர் செந்தில்பாலாஜி யும் அமைச்சரை கடிந்துகொண்டதாகச் சொல்கிறார்கள். இதையடுத்து, கடந்த ஒரு மாதமாக, "உங்களுடன் ஸ்டாலின்' முகாம் நடக்கும் ஒவ்வொரு கிராமத்திற்கும் நேரில் விசிட்டடிக்கிறார். மதிவேந்தனுக்கு, வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் சீட் கிடைக்குமா? என்பது குறித்து ராசிபுரம் தொகுதி தி.மு.க. நிர்வாகிகள், பொதுமக்களிடம் விசாரித்தோம்.

"அமைச்சர் மதிவேந்தனின் தந்தை டாக்டர் மாயவன், மூத்த கட்சிக்காரர்... பிரபலமானவர். அவர் ஏற்கெனவே ராசிபுரம், நாமக்கல் தொகுதிகளில் போட்டியிட்டு தோற்றுப்போனார். கடந்த தேர்தலில், மாயவனின் மகன் என்ற முறையில் மதிவேந்தனுக்கு சீட் தரப்பட்டது. அவரும் தட்டுத்தடுமாறித்தான் வென்றார். நான்கரை ஆண்டுகளாக வாக்காளர் களை சந்திக்கவே யில்லை. வெற்றிபெற்ற பிறகு நன்றி சொல்லக் கூட வரவில்லை. கட்சி நிர்வாகிகள், தொகுதி மக்கள் கோரிக்கை மனுக்களைக் கொடுத் தாலும் எந்த ரெஸ்பான் ஸூம் இருக்காது. ராசிபுரம், நாமக்கல், சேந்தமங்கலம் ஆகிய மூன்று சட்டமன்றத் தொகுதி களைப் பொறுத்தவரை நாமக்கல் கிழக்கு மா.செ. ராஜேஷ்குமார் எம்.பி. வைத்ததுதான் சட்டம். அவரை மீறி மதிவேந்தனால் தனித்துச் செயல்படவோ, பேசவோ முடியாது. 

Advertisment

rasipuram1

கலெக்டர் முதல் காவல் துறை எஸ்.பி. வரை மா.செ. சொல்வதைத்தான் செய்வார் கள். அரசு நிகழ்ச்சிகளில் அமைச்சர் மதிவேந்தன் முன் கூட்டியே சென்றுவிட்டாலும் கூட, மா.செ. வந்த பிறகுதான் அதிகாரிகள் நிகழ்ச்சியைத் தொடங்குவார்கள். போத மலையில் சாலை போட்டது முதல் நாமக்கல் புதிய பேருந்து நிலையம் கொண்டுவந்தது வரை, அமைச்சர் மதிவேந்த னை எந்த இடத்திலும் ராஜேஷ்குமார் முன்னிலைப் படுத்த அனுமதிக்கவே இல்லை. இதன் பின்னால் சாதிய ஒடுக்குமுறையும் இருக்கிறது'' என்கிறார்கள் மூத்த உடன்பிறப்புகள்.  

மற்றொரு தரப்பினரோ, "சமீபத்தில் ராசிபுரம் தொகுதிக் குட்பட்ட இனிகா என்ற மாணவி "நான் முதல்வன்' திட்டத்தில் படித்து, சென்னை ஐ.ஐ.டி.யில் மேற்படிப்பில் சேர்ந்தார். அவரை நேரில் அழைத்த மா.செ., ராஜேஷ் குமார் தனது சொந்தப் பணம் 50 ஆயிரத்தைக் கொடுத்து உதவினார். இதுபோன்ற சந்தர்ப்பங்களை மதிவேந்தன் தவறவிடுகிறார். கட்சி நிர்வாகி கள் வீட்டுத் திருமணங்கள், துக்க வீடுகளுக்குக்கூட அமைச்சர் அவ்வளவாக செல்வதில்லை. இந்நிலையில், மதிவேந்தன் மீண்டும் வெற்றிபெறுவது கடினம்'' என அடித்துச் சொல்கிறார்கள் கழகக் கண்மணிகள்.  

அமைச்சரின் ஆதரவாளர் ஒருவர் கூறுகையில், "ராசிபுரம் பேருந்து நிலை யத்தை, தற்போதுள்ள இடத்திலிருந்து 8 கி.மீ. தொலைவிற்கு கொண்டு சென்றதில் தொகுதிக்குள் மொத்தமாக தி.மு.க.வின் பெயர் கெட்டுவிட்டது. மதிவேந்தன்  மீண்டும் போட்டியிட்டால் வெற்றி பெறுவது சுலபமல்ல. மதிவேந்தனுக்கு சீட் இல்லாதபட்சத்தில், மா.செ. ராஜேஷ்குமார்  தனது ஆதரவாளரான களங்காணியைச் சேர்ந்த இளைஞரணி மாநில துணைச் செயலாளர் ஆனந்தனை களமிறக்க காய் நகர்த்திவருகிறார். எல்லாவற்றுக்கும் மேல் இத்தொகுதியில் தி.மு.க. சற்று வீக்காகத்தான் இருக்கிறது'' என்றார். 

Advertisment

அ.தி.மு.க. தரப்பிலோ, "வரும் தேர்தலில் கடைசி வாய்ப்பாக மீண்டும் டாக்டர் சரோஜாவுக்கு சீட் தரப்படலாம். முன்னாள் சபாநாயகர் தனபால் அல்லது அவருடைய மகன் லோகேஷ் தமிழ்ச்செல் வன், மாவட்ட ஊராட்சிக்குழு முன்னாள் தலைவர் சாரதா ஆகியோரின் பெயர்களும் பரிசீலனையில் உள்ளதாக'க் கூறுகிறார்கள். 

அமைச்சர் மதிவேந்தனிடம் தொடர்புகொண்டபோது, அவருடைய உதவியாளர், "சார், மீட்டிங்கில் இருக்கிறார். உங்கள் லைனுக்கு வருவார்" என்று சொன்னார், ஆனால் லைனுக்கு வரவே யில்லை.

"ஆளுங்கட்சி மீதான அதிருப்தி, அமைச்சர் மதிவேந்தனுக்கு தனிப்பட்ட செல்வாக்கு இல்லாதது போன்ற காரணிகள் இருந்தாலும், இரட்டைக்குழல் துப்பாக்கி போல் களமாடும் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, மா.செ. ராஜேஷ்குமார் ஆகியோர்,  எப்படியும் ராசிபுரத்தில் தி.மு.க.வை கரையேற்றிவிடுவார்கள்' என்கிற எதிர்பார்ப்பும் வலுவாக இருக்கவே செய்கிறது.