கற்பழிப்பு ஆசிரியருக்கு ஆயுள்  சிறை! தீர்ப்புக்கு உதவிய டி.என்.ஏ!

teacher

 

ளவுத் திருமணம் செய்து பா-யல் பலாத்காரம் செய்த ஆசிரியருக்கு ஆயுள் சிறைத் தண்டனை வழங்கி அதிரடிகாட்டியிருக்கிறது மகிளா நீதிமன்றம். இந்த தீர்ப்பு, பெரம்பலூர் மாவட்ட நீதித்துறையில் பரபரப்பாகப் பேசப்பட்டுவருகிறது. 

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் சீதாராமபுரத்தை சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மகன் செல்வம். பாடாலூரிலுள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணி புரிந்து வந்தார். செல்வி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண்ணுடன் 3 ஆண்டு காலமாகப் பழகி வந்துள்ளார். திருமணம் செய்துகொள்வதாகச் சொல்லி செல்வியுடன் உடலுறவு கொள்ள முயற்சித்தார். இதற்கு உடன்படாத செல்வி, திருமணம் செய்துகொள் என வலியுறுத்தியுள்ளார். 

teacher1

ஆனால், அவரை அடையும் நோக்கத்தில், கடந்த 2018-ல் கோவிலில் வைத்து செல்விக்கு மஞ்சள் கயிறைக் கட்டி திருமணம் செய்துகொண்டிருக

 

ளவுத் திருமணம் செய்து பா-யல் பலாத்காரம் செய்த ஆசிரியருக்கு ஆயுள் சிறைத் தண்டனை வழங்கி அதிரடிகாட்டியிருக்கிறது மகிளா நீதிமன்றம். இந்த தீர்ப்பு, பெரம்பலூர் மாவட்ட நீதித்துறையில் பரபரப்பாகப் பேசப்பட்டுவருகிறது. 

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் சீதாராமபுரத்தை சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மகன் செல்வம். பாடாலூரிலுள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணி புரிந்து வந்தார். செல்வி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண்ணுடன் 3 ஆண்டு காலமாகப் பழகி வந்துள்ளார். திருமணம் செய்துகொள்வதாகச் சொல்லி செல்வியுடன் உடலுறவு கொள்ள முயற்சித்தார். இதற்கு உடன்படாத செல்வி, திருமணம் செய்துகொள் என வலியுறுத்தியுள்ளார். 

teacher1

ஆனால், அவரை அடையும் நோக்கத்தில், கடந்த 2018-ல் கோவிலில் வைத்து செல்விக்கு மஞ்சள் கயிறைக் கட்டி திருமணம் செய்துகொண்டிருக்கிறார் செல்வம். இதனையடுத்து அந்த பெண்ணுடன் உடலுறவு வைத்துக்கொண்டார். இதில் கர்ப்பமானார் செல்வி. இதனைத் தெரிவித்து வீட்டுக்கு அழைத்துச் செல்ல செல்வத்திடம் வற்புறுத்தியிருக்கிறார். ஆனால், மறுத்தே வந்துள்ளார் செல்வம். இதனால் செல்வத்தின் வீட்டுக்குச் சென்று செல்வி முறையிட, அவரை அடித்து விரட்டிவிட்டனர். 

இதனையடுத்து, போலீசில் புகார் கொடுத்ததுடன் மகிளா நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார் செல்வி. கிட்டத்தட்ட 6 ஆண்டுகாலம் நடந்த இந்த வழக்கில், அண்மையில் தீர்ப்பளித்த நீதிபதி இந்திராணி, குற்றம் நிரூபிக்கப்பட்டிருப்பதால் செல்வத்துக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பு, பெரம்பலூர் மாவட்ட நீதித்துறையில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.  

இந்த வழக்கு குறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் வழக்கறிஞர் இளவரசுவிடம் நாம் பேசியபோது,”"திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தைச் சொல்லி செல்வியை வன்புணர்வு செய்திருக்கிறார் செல்வம். இதனால் அவர் கர்ப்பமானார். மஞ்சள் கயிறைக் கட்டிவிட்டு, நமக்குள் கல்யாணம் ஆகிவிட்டது எனச்சொல்லி ஏமாற்றி யிருக்கிறார். அந்தளவுக்கு மயக்கியிருக்கிறார் செல்வம். நியாயம் கேட்கச் சென்ற செல்வியை மிரட்டியுள்ளனர். 

இதனையடுத்து, பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தோம். எஃப்.ஐ.ஆர். போட மறுத்ததால், மாநில மகளிர் ஆணையத்தில் முறையிட்டோம். அவர்கள் விசாரித்தனர். உண்மை என அறிந்ததும், பெண்ணின் புகாரை பதிவு செய்து சட்டப்படி விசாரிக்க வேண் டும் என உத்தர விட்டது மகளிர் ஆணையம். அதன்பிறகே எஃப்.ஐ.ஆர். போட்டது போலீஸ்.    

இதற் கிடையே, மகிளா நீதிமன்றத்தில் வழக்கு போடப்பட்டது. விசாரணை யின்போது, "அந்த குழந்தை என்னுடையதில்லை; நான் வன்புணர்வு செய்யவில்லை' என செல்வம் தரப்பில் வாதிடப் பட்டதை தொடர்ந்து, உண்மை யை கண்டறிய காவல் துறைக்கு உத்தரவிட்டது நீதிமன்றம். இதனால், மரபணு சோதனைக்கு (டி.என்.ஏ.) உட்படுத்துங்கள் என விசாரணை அதிகாரியிடம் வலியுறுத்தினோம். 

மரபணு சோதனைக்கான சேம்பிள்களை கலெக்ட் செய்து சென்னையிலுள்ள தடய அறிவியல் துறைக்கு அனுப்பி வைத்தார் விசாரணை அதிகாரி. சோதனையின் முடிவில், செல்வியின் குழந்தைக்கு உயிரியல் தந்தை செல்வம்தான் என்பதை உறுதிசெய்து ரிப்போர்ட் கொடுத்தது தடயஅறிவியல் துறை. இந்த ரிப்போர்ட்டை குற்றப்பத்திரிகையில் இணைத்து கோர்ட்டில் வாதிட்டது போலீஸ். 

கிட்டத்தட்ட 6 ஆண்டுகாலம் நடந்த விசாரணையின் முடிவில் தீர்ப்பளித்த மகிளா நீதிமன்றம், தடய அறிவியல் துறையின் டி.என்.ஏ. ரிசல்ட்டை முழுமையாக ஏற்றுக்கொண்டது. மேலும், இந்த வழக்கில் பயாலஜிக்கல் ஃபாதர் செல்வம்தான் என்று கூறியதுடன், பெண்ணை கெடுத்த குற்றத்திற்காக செல்வத்திற்கு ஆயுள் தண்டனையும், 50,000 ரூபாய் அபராதமும், ஏமாற்றிய குற்றத்திற்காக 1 ஆண்டு கால கடுங்காவல் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தது.   

தீர்ப்பு கிடைக்க நீண்ட வருடங்களானாலும், பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு நீதி கிடைத்திருக்கிறது.  இந்த தீர்ப்பு பெரம்பலூர் மாவட்ட நீதித்துறையில் ஒரு பெரும் மைல்கல்! மரபணு சோதனை யின் மூலம், குற்றவாளி ஒருவருக்கு ஆயுள் தண்டனை கிடைத்திருப்பது இதுதான் முதல்முறை. இந்த தீர்ப்பின் மூலம், பெண்களை ஏமாற்றி வன்புணர்வு செய்யும் கயவர்களுக்கு இனி பயம் ஏற்படும்''’என்று ஆவேசப் பட்டார் வழக்கறிஞர் இளவரசு. 

பெரம்பலூர் மாவட்ட வழக்கறிஞர்கள் இந்த தீர்ப்பினை கொண்டாடி வருகின்றனர். 

-இளையர்

nkn020825
இதையும் படியுங்கள்
Subscribe