Advertisment

அமலாக்கத்துறை பெயரால் ரேப்! 35 அதிர்ச்சி வீடியோக்கள்!

ff

ராஜீவ்காந்தி கொலை வழக்கு விசா ரணையில் தலைமைப் புலனாய்வு அதிகாரியாகப் பணியாற்றிய கே.ரகோத்தமன், சி.பி.ஐ. அமைப்பு குறித்து, முந்தைய காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் கூண்டுக் கிளியாக சி.பி.ஐ. பயன்படுத்தப்பட்டதாகவும், பா.ஜ.க. ஆட்சியில் ஏவல் நாயாகப் பயன்படுத்தப்படுவதாகவும் தொலைக்காட்சி விவாதமொன்றில் தெரிவித்திருந்தார். சி.பி.ஐ. மட்டுமல்ல, வருமான வரித்துறை, அமலாக்கத் துறை என பல்வேறு விசாரணை அமைப்புகளும், தாங்கள் கைகாட்டும் நபர்களை மட்டும் ரெய்டு, விசாரணை என விரட்டி, மிரட்டும்படி ஒன்றிய அரசால் செயல்படுத்தப் படுகின்றன.

Advertisment

டெல்லியிலுள்ள கெஜ்ரிவால் அரசுக்கு குடைச்சல் கொடுப்பதில் தொடங்கி, மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, தெலுங்கானா, ஆந்திரா, கேரளா, புதுச்சேரி, தமிழ்நாடு என எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களைச் சேர்ந்த அமைச்சர்களை, எம்.எல்.ஏ., எம்.பி.க்களை மட்டுமே குறிவைக்கிறார்கள். இவர்களின் மிரட்டலுக்குப் பயந்து, தங்கள் கட்சியை உடைத்துக்கொண்டு பா.ஜ.க.வில் இணைந்ததால் வழக்குகளிலிருந்து தப்பி, புனிதர்களானவர்

ராஜீவ்காந்தி கொலை வழக்கு விசா ரணையில் தலைமைப் புலனாய்வு அதிகாரியாகப் பணியாற்றிய கே.ரகோத்தமன், சி.பி.ஐ. அமைப்பு குறித்து, முந்தைய காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் கூண்டுக் கிளியாக சி.பி.ஐ. பயன்படுத்தப்பட்டதாகவும், பா.ஜ.க. ஆட்சியில் ஏவல் நாயாகப் பயன்படுத்தப்படுவதாகவும் தொலைக்காட்சி விவாதமொன்றில் தெரிவித்திருந்தார். சி.பி.ஐ. மட்டுமல்ல, வருமான வரித்துறை, அமலாக்கத் துறை என பல்வேறு விசாரணை அமைப்புகளும், தாங்கள் கைகாட்டும் நபர்களை மட்டும் ரெய்டு, விசாரணை என விரட்டி, மிரட்டும்படி ஒன்றிய அரசால் செயல்படுத்தப் படுகின்றன.

Advertisment

டெல்லியிலுள்ள கெஜ்ரிவால் அரசுக்கு குடைச்சல் கொடுப்பதில் தொடங்கி, மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, தெலுங்கானா, ஆந்திரா, கேரளா, புதுச்சேரி, தமிழ்நாடு என எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களைச் சேர்ந்த அமைச்சர்களை, எம்.எல்.ஏ., எம்.பி.க்களை மட்டுமே குறிவைக்கிறார்கள். இவர்களின் மிரட்டலுக்குப் பயந்து, தங்கள் கட்சியை உடைத்துக்கொண்டு பா.ஜ.க.வில் இணைந்ததால் வழக்குகளிலிருந்து தப்பி, புனிதர்களானவர் களின் பட்டியல், எடியூரப்பா, பவ்னா காவ்லி, ஹிமந்தா பிஸ்வா ஷர்மா, சுவேந்து அதிகாரி, நாராயண் ரானே என்று நீண்டுகொண்டே போகும்! இந்த பட்டியலை காங்கிரஸின் சசிதரூர் எம்.பி. ட்விட்டரில் வெளியிட்டார். இவர்கள் பா.ஜ.க.வில் இணைந்ததும் வழக்கு விசாரணை கள் நிறுத்தப்பட்டன, சிலர் விடுவிக்கப்பட்டனர்!

dd

தமிழ்நாட்டில் கடந்த அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் அப்போதைய அமைச்சர் கள், தலைமைச்செய லாளர் உள்ளிட்ட பலர் மீதும் ரெய்டு கள் நடத்தப்பட் டன. ஆனால், பா.ஜ.க.வை தங்கள் கூட்டணியில் சேர்த்துக்கொள்ள வேண்டுமென்ற நிபந்தனையின் பேரில், அவர்கள் மீதான நடவடிக்கைகள் அனைத்தும் கிடப்பில் போடப்பட்டன. அதுமட்டுமா? தற்போது அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஆளுநரின் அனுமதியை தமிழ்நாடு அரசு கேட்டால், தர மறுக்கிறார். அதேவேளை, தி.மு.க. அமைச்சர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டு நடத்தப்படும் ரெய்டுகளுக்கு உடனுக்குடன் ஒப்புதல் தருகிறார் ஆளுநர். அதேபோல் செந்தில் பாலாஜி கைது நடவடிக்கையில், செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அதிகாரம் இல்லையென் றும், அவரை உடனே விடுவிக்க வேண்டுமென் றும், இரண்டு நீதிபதிகளில் ஒருவரான நிஷா பானு தனது தீர்ப்பில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அமைச்சர் பொன்முடியை, அவரது வயதைக் கணக்கில்கொள்ளாமல் விடியவிடிய விசாரணை செய்ததற்கு மனித உரிமை ஆர்வலர்கள் பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். மத்திய அரசைத் திருப்திப் படுத்துவதற்காக இப்படி பொன்முடியை சித்ரவதை செய்வதாகக் கருத்துத் தெரிவித்தனர்.

Advertisment

இச்சூழலில், மகாராஷ்டிரா பா.ஜ.க.வின் துணைத் தலைவரும், எம்.பி.யுமான கிரித்சோமையா, அமலாக்கத்துறையின் பெயரைச் சொல்லி மிரட்டி பெண் அதிகாரி களை பாலியல் உறவுக்குப் பயன்படுத்திக் கொண்டதாக அதிர்ச்சிகரமான குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கிரித் சோமையா மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரத்தைத் தேடியலையத் தேவையில்லை. ஒன்றல்ல, இரண்டல்ல... மொத்தம் 35 பாலியல் வீடியோக்களில் பல மகாராஷ்டிர அரசின் பெண் அதிகாரிகள் சம்பந்தப்பட்டவை. அவர்களோடு பாலியல் உறவில் ஈடுபட்டிருந்தது இந்த கிரித் சோமையா தான். இந்த 35 வீடியோக்களின் மொத்த நீளம் 8 மணி நேரம். இதுகுறித்த தகவல் அங்குள்ள மராத்தி சேனல் ஒன்றில் ஒளிபரப்பானதும் அச்செய்தி வைரலானது.

ed

ஆபாச வீடியோ விவகாரத்தை எப்படி எதிர்கொள்வதெனத் தெரியாமல் பா.ஜனதா -சிவசேனா கூட்டணி ரொம்பவே திகைத்துப்போனது. இதில் ஏற்கெனவே சரத் பவார் கட்சியை உடைத்துக்கொண்டு வந்து ஐக்கியமான அஜித்பவாரும் முதல்வர் பதவிக் காக குடைச்சல் கொடுத்துக்கொண்டிருந்த நிலையில்... பா.ஜ.க.வுக்கு மிகுந்த நெருக்கடி. இதையடுத்து கிரித்சோமையா மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும், கைது செய்யவேண்டும் என்றெல்லாம் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கின. இத்தனைக்குப் பிறகும் கிரித் சோமையாவோ, "நான் எந்த பெண்ணையும் துன்புறுத்தவில்லை. இந்த வீடியோவின் உண்மைத்தன்மை குறித்து விசாரணை நடத்த வேண்டும்'' என்று கோரிக்கை வைத்து தன்னை நல்லவனாகக் காட்டிக்கொள்ளப் பார்த்தார்.

ஆனால் மகாராஷ்டிராவையும் தாண்டி, நாடு முழுக்க இவ்விவகாரம் அதிர்வலையை ஏற்படுத்தியதால், பா.ஜ.க.வைச் சேர்ந்த துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், "கிரித்சோமையா மீதான புகார் குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும்'' என்று உறுதியளித்தார்.

இந்த விவகாரத்தில் நாம் கவனமாகப் பார்க்க வேண்டியது, சோமையா வின் பாலியல் இச்சைக்கு பலியாக்கப்பட்ட பெண் அதிகாரிகள் மீது துறைரீதியாக எழுப்பப்பட்ட புகார்கள் மீது அமலாக்கத்துறையினர் நடவடிக்கை எடுக்கத் தயாராக இருப்பதாகவும், அவர்களின் நடவடிக்கையில் சிக்காமல், கவுரவமாக இருக்க விரும்பினால், தனது பாலியல் தேவையை பூர்த்தி செய்ய வேண்டுமென்றும் அவர்களை மிரட்டி யிருக்கிறார். ஏற்கெனவே நாடுமுழுக்க அமலாக்கத் துறையினர் பா.ஜ.க.வினரின் ஏவலாட்களாகப் பயன்படுத்தப்படுவதை அறிந்த இந்த அதிகாரிகளும், அவரது மிரட்டலுக்குப் பயந்து, பாலியல் இச்சையைத் தீர்க்க உடன்பட்டிருக்கிறார்கள். இந்த சோமையா, அதிகாரிகளை மட்டுமல்லாது, பல எம்.பி., எம்.எல்.ஏ.க்களையும் இவ்வாறு மிரட்டியுள்ளதாக காங்கிரஸ் எம்.எல்.ஏ. யசோமதி குற்றம்சாட்டினார்.

ஆக, அமலாக்கத்துறை என்ற சுயாட்சி அமைப்பு, பா.ஜ.க.வின் அடியாட்கள் படையாக மாற்றப்பட்டது பரிதாபம்!

nkn260723
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe