ராங்கால் மிரட்டி அனுப்பிய டெல்லி! பினாமிகளிடமிருந்து வெளிநாட்டுக்கு... சொத்துகளை இடம் மாற்றும் மாஜி மந்திரிகள்!

rang

"ஹலோ தலைவரே, டெல்லிக்கு அழைக்கப்பட்ட எடப்பாடியும் ஓ.பி.எஸ்.சும், பா.ஜ.க.வின் மிரட்டலுக்கு ஆளாயிருக்காங்க.''”

"ஆமாம்பா, அது பற்றி நம்ம நக்கீரனில் தனிக் கட்டுரையும் வந்திருக்கு. உன்கிட்டே இருக்கிற தகவலைச் சொல்லு.''”

"தமிழகத்தில் காலியாக இருக்கும் 3 ராஜ்யசபா பதவிகளுக்கான தேர்தல், விரைவில் நடக்க இருக்குது. அதில் ஒன்றை அ.தி.மு.க. கைப்பற்ற வாய்ப்பு இருப்பதால், அந்த சீட்டை, எம்.பி. பதவியில்லாமல் இணை அமைச்சராக்கப்பட்ட எல்.முருகனுக்காக வாங்க நினைக்கிது. இதுபற்றிப் போன முறையே நாம் பேசிக்கிட்டோம். இந்த சீட்டைக் கேட்கறதுக் காகத்தான் எடப்பாடியையும் ஓ.பிஎஸ்.சையும் ஒருசேர டெல்லிக்கு கூப்பிட்டுச்சாம் பா.ஜ.க. தலைமை. அங்கே இந்த இருவரிடமும் சீரியஸ் குரலில் பேசிய பிரதமர் மோடி, எடுத்த எடுப்பிலேயே சீட் பத்திப் பேசாமல், அவர்களுக்கு பீதியூட்ட, சசிகலா பேரைத் துருப்புச் சீட்டாப் பயன்படுத்தி இருக்கார்.''”

ra

"சசிகலாவின் அரசியல் ரீ-என்ட்ரி பற்றி மோடியின் பார்வை என்னவாம்?''”

"அ.தி.மு.க. பலமா ஆகணும்னா, சசிகலாவையும் உங்க ளோட இணைச்சிக்கங்கன்னு மோடி சொல்லியிருக்கார். இதைக் கேட்டு ரெண்டுபேருமே திடுக்கிட்டு போயிருக்காங்க. மோடி கிட்ட எடப்பாடி, அந்தம்மா கட்சிக்குள் வந்தால் குழப்பம்தான் மிஞ்சும். அவங்க இல்லாமலே நாம் ஜெயிக்க முடியும். சட்ட மன்றத் தேர்தலில் 75 இடங்களை நம் கூட்டணி பிடிச்சிருக் குன்னு சொல்ல, இது தவறான கணிப்புன்னு மறுத்திருக்கார் மோடி. அந்த அம்மையார் இருந்திருந்தால், ஆட்சியை நீங்கள் தக்க வைத்துக் கொண்டிருக்கலாம். பா.ஜ.க.வுக்கு இன்னும் சில தொகுதிகள் கிடைத்திருக்கும்னு ச

"ஹலோ தலைவரே, டெல்லிக்கு அழைக்கப்பட்ட எடப்பாடியும் ஓ.பி.எஸ்.சும், பா.ஜ.க.வின் மிரட்டலுக்கு ஆளாயிருக்காங்க.''”

"ஆமாம்பா, அது பற்றி நம்ம நக்கீரனில் தனிக் கட்டுரையும் வந்திருக்கு. உன்கிட்டே இருக்கிற தகவலைச் சொல்லு.''”

"தமிழகத்தில் காலியாக இருக்கும் 3 ராஜ்யசபா பதவிகளுக்கான தேர்தல், விரைவில் நடக்க இருக்குது. அதில் ஒன்றை அ.தி.மு.க. கைப்பற்ற வாய்ப்பு இருப்பதால், அந்த சீட்டை, எம்.பி. பதவியில்லாமல் இணை அமைச்சராக்கப்பட்ட எல்.முருகனுக்காக வாங்க நினைக்கிது. இதுபற்றிப் போன முறையே நாம் பேசிக்கிட்டோம். இந்த சீட்டைக் கேட்கறதுக் காகத்தான் எடப்பாடியையும் ஓ.பிஎஸ்.சையும் ஒருசேர டெல்லிக்கு கூப்பிட்டுச்சாம் பா.ஜ.க. தலைமை. அங்கே இந்த இருவரிடமும் சீரியஸ் குரலில் பேசிய பிரதமர் மோடி, எடுத்த எடுப்பிலேயே சீட் பத்திப் பேசாமல், அவர்களுக்கு பீதியூட்ட, சசிகலா பேரைத் துருப்புச் சீட்டாப் பயன்படுத்தி இருக்கார்.''”

ra

"சசிகலாவின் அரசியல் ரீ-என்ட்ரி பற்றி மோடியின் பார்வை என்னவாம்?''”

"அ.தி.மு.க. பலமா ஆகணும்னா, சசிகலாவையும் உங்க ளோட இணைச்சிக்கங்கன்னு மோடி சொல்லியிருக்கார். இதைக் கேட்டு ரெண்டுபேருமே திடுக்கிட்டு போயிருக்காங்க. மோடி கிட்ட எடப்பாடி, அந்தம்மா கட்சிக்குள் வந்தால் குழப்பம்தான் மிஞ்சும். அவங்க இல்லாமலே நாம் ஜெயிக்க முடியும். சட்ட மன்றத் தேர்தலில் 75 இடங்களை நம் கூட்டணி பிடிச்சிருக் குன்னு சொல்ல, இது தவறான கணிப்புன்னு மறுத்திருக்கார் மோடி. அந்த அம்மையார் இருந்திருந்தால், ஆட்சியை நீங்கள் தக்க வைத்துக் கொண்டிருக்கலாம். பா.ஜ.க.வுக்கு இன்னும் சில தொகுதிகள் கிடைத்திருக்கும்னு சொன்ன மோடி, சில விசயங்களை அமீத்ஷா சொல்வார். அதைக் கேட்பது புத்திசாலித்தனம்ன்னு முடிச்சிக்கிட்டாராம்.''”

"அமித்ஷா வியூகம் என்ன?''”

"எடப்பாடியும் ஓ.பி.எஸ்.சும் அமித்ஷாவைப் பார்த்தப்ப, அவர் நேரடியாகவே விசயத்துக்கு வந்திருக் கார். தமிழகத்தில் காலியா இருக்கும் 3 ராஜ்யசபா சீட்ல ஒன்னை, பா.ஜ.க.வுக்காக விட்டுத் தரணும்னு கொஞ்சம் அழுத்தம் கொடுத்துச் சொல்லியிருக்கார். உடனே, இதை எங்கள் கட்சி சீனியர்கள் ஏத்துக்கமாட்டாங்கன்னு எடப்பாடியும் ஓ.பி.எஸ்.சும் சொல்ல, அமித்ஷாவோ, நான் சசிகலாவை அ.தி.மு.க.வில் சேர்த்துக்கங்கன்னு கூட சொல்லலை. ஆனால், அ.தி. மு.க. பொதுச்செயலாளர் பதவியை ரத்து செய்யணும்னு தேர்தல் ஆணையத்திலும் கோர்ட்டிலும் சசிகலா போட்டுள்ள வழக்குகள், விரைவில் விசாரணைக்கு வரப் போகுது. அதை . நினைச்சிப்பாருங்க. அதில் சசிகலாவுக்கு சாதகமாகத் தீர்ப்பு வந்தால், அ.தி.மு.க அந்தம்மா கைக்குப் போயிடும். டெல்லி தயவில்லாமல் இதில் நீங்கள் சாதகமா எதையும் எதிர்பார்க்க முடியாது. இதை எல்லாம் உங்க கட்சி சீனியர்களிடம் எடுத்துச் சொல்லி, ராஜ்யசபா சீட் விசயத்தில் நல்ல முடிவை எடுங்கன்னு கறாராவே சொல்லியனுப்பி இருக்கார்.''”

"அ.தி.மு.க. சீனியர்கள் ஒப்புக்கொள்வாங்களா?''”

"ராஜ்யசபா சீட்டைத் தராட்டி, சசிகலாவை உங்களுக்கு எதிரா நிறுத்துவோம்ங்கிற பா.ஜ.க.வின் மிரட்டல் பத்தி, எடப்பாடி யும் ஓ.பி.எஸ்.சும், டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் காத்திருந்த கட்சி நிர்வாகிகளிடம் சொல்லிப் புலம்பியிருக்காங்க. அவர்களைத் தொடர்புகொண்டு விசாரிச்ச கட்சியின் சீனியர்களான கே.பி.முனு சாமி, வைத்திலிங்கம், சி.வி.சண்முகம், rrஜெயக்குமார் உள்ளிட்டோ ரிடமும் அவர்கள் இதையே சொல்ல, அந்த சீனியர்களோ, டெல்லி சொல்றதை எல்லாம் இனியும் நாம் கேட்க முடியாது. ராஜ்யசபா சீட்டை பா.ஜ.க.வுக்குத் தாரை வார்த்தா, உங்க ரெண்டு பேர் வீட்டுக்கு முன்னாலயும் கட்சித் தொண்டர்கள் போராட்டம் தீக்குளிப்புன்னு ஆரம்பிச்சிடுவாங்கன்னு எரிச்சலாச் சொல்லியிருக்காங்க.''”

"சரிப்பா, தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேத்த வற்புறுத்தி அ.தி.மு.க. தமிழகம் முழுக்கப் பதாகைப் போராட்டம் நடத்தியிருக்கே?''”

"ஆமாங்க தலைவரே, இந்தப் பதாகைப் போராட்டத்தை அ.தி.மு.க. பிரமுகர்கள் ஒவ்வொருவரும் தமிழகம் முழுக்கத் தங்கள் வீட்டுமுன் நடத்தி னாங்க. அதன்படி இந்த போராட் டத்தில் கலந்துக்கிட்ட அ.தி.மு.க. சீனியர்களில் ஒருவரான வைத்தி லிங்கம், பா.ஜ.க.வை காட்டமாவே ஒரு பிடி பிடிச்சார். மேகதாது அணை விசயத்தில் கர்நாடகா வுக்கு ஆதரவாக ஒன்றிய அரசு நடந்துகொண்டால், அதை எதிர்த்துப் போராட்டம் நடத்துவோம்ன்னு அதிரடி கிளப்பினார். இதே போல பலரும் ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு எதிராப் பேசி, பரபரப்பை உண்டாக்கி இருக்காங்க. இந்தப் பேச்சு பா.ஜ.க. தரப்பைக் கொதிக்க வச்சிருக்கு. டெல்லியின் மிரட்டலுக்கு பதில் சிக்னலாத்தான் வைத்திலிங்கம் உள்ளிட்டோரை பா.ஜ.க.வுக்கு எதிராக இப்படிப் பேசச்சொன்னாராம் எடப்பாடி.''

"சரிப்பா, அ.தி.மு.க. மாஜி மந்திரிகள் தரப்பு பதட்டப் பரபரப்பில் இருக்குதே?''”

"உண்மைதாங்க தலைவரே, மாஜி போக்குவரத்து மந்திரி எம்.ஆர் விஜயபாஸ்கர் வீட்டில் நடந்த ரெய்டைத் தொடர்ந்து, அவருக்கு நெருக்கமாக இருந்த அண்ணாநகர் ரவி உள்ளிட்ட சிலரது வீடுகளிலும் ரெய்டைத் தொடருது லஞ்ச ஒழிப்புத்துறை. அடுத்ததா மாஜியின் பினாமிகள் லிஸ்ட்டை சேகரிச்சி, அவங்களை குறிவச்சி சீக்ரெட்டாக் காய் நகர்த்திக்கிட்டு இருக்காங்க. இதுதான் அ.தி.மு.க. மாஜிக்கள் தரப்பை பதட்டப்படுத்தியிருக்கு. அதனால் பெரும்பாலான மாஜி மந்திரிகள், தங்கள் பினாமிகளிடம் தாங்கள் கொடுத்துவைத்த பணத்தையும் சொத்துப் பத்திரங்களையும் அவசர அவசரமா வெளிமாநிலங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் விறுவிறுப்பா இடம் மாத்திக்கிட்டு இருக்காங்க. அதனால் அவங்க தரப்பு பரபரப்பா இருக்குது.'' ”

"இந்த நடவடிக்கைகளால், மாஜிக்களின் பினாமிகள் எல்லாம், திவாலான நிலைக்கு மாறுறாங்களாமே?''”

"தலைவரே, மாஜி மந்திரிகளின் பினாமிகளா சொகுசு வாழ்க்கை வாழ்ந்த பலரும், அந்த மாஜிக்கள் கொடுத்த கரன்ஸியையும் சொத்துகளை யும் மீண்டும் பறித்துக்கொண்டதால், இப்ப திவாலான மாதிரி ஆயிட்டாங்களாம். அதேபோல், மாஜிக்களோடு அதிகம் தொடர் பில் இல்லாத உறவினர்களுக்கு, புதுசா பினாமி அந்தஸ்து கிடைக் கிதாம். இந்த நேரத்தில் கொங்கு அ.தி.மு.க.வின் சீனியர் மாஜி மந்திரிக்கு மிக நெருக்கமாக இருந்த, சிந்து ரவிச்சந்திரன், இப்ப தி.மு.க.வில் சேர்ந்துவிட்டதால், மாஜி தரப்பு ரொம்ப ஆடிப்போயிருக்குதாம். தனது சொத்து பத்து பற்றிய விவரங்கள் வெளியில் கசிந்து விடுமோங்கிற பயத்தில் இருக்காராம். அவரும் தனது பினாமிகளை அவசர கதியில் மாற்றி வருகிறாராம்.''”

"மிரளுறாங்கன்னு தெரிஞ்சா, மாஜிக்களுக்கு எதிரான லஞ்ச ஒழிப்புத்துறையின் இந்த வேட்டை வேகமா தொடருமே?''”

"மாஜிக்களுக்கு எதிராக சாட்டையை சுழற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை, ஈ.சி.ஆரிலும், ஓ.எம்.ஆரிலும் கடந்த ஆட்சிக் காலத்தில் ஏக்கர் கணக்கில் நிலங்களை வளைத்துப் போட்டிருக்கும் தமிழக காவல்துறை அதிகாரிகள் மீதும் தங்களின் பார்வையைத் திருப்பணும்ங்கிற எதிர்பார்ப்பு, பலரிடமும் இருக்குது.'' ”

"இந்த அதிரடி ரெய்டால், ஆடிட்டர்கள் தரப்பு பிஸியாயிடிச்சேப்பா?''”

"அதுவும் உண்மைதாங்க தலைவரே, தங்கள் கணக்கு வழக்குகளை சிக்கல் இல்லாமல் வச்சிக் கிறதுக்காக, மாஜிக்கள் தரப்பு ஆடிட்டர்களை களம் இறக்கிவிட்டிருக்கு. அவர்கள் இரவு பகலாக ஃபைல்களோட போராடிக்கிட்டு இருக்காங்களாம். ஒட்டுமொத்தத்தில் இப்போதைய ரெய்டால், மாஜிக்களால் பதுக்கிவைக்கப்பட்ட பணத்துக்கெல் லாம் சிறகு முளைக்க, இன்னொரு பக்கம் அவர் களின் சொத்து ஆவணங்களுக்கு கால்முளைத்து அவை இடம் பெயர்ந்துக்கிட்டு இருக்கு. இதுபத் தின தகவல்கள் மத்திய உளவுத்துறைக்கும், வருமான வரித்துறைக்கும் தெரிந்த போதும், இவற்றைக் கொஞ்சநாள் கண்டுக்கவேண்டாம்னு ஒன்றிய அரசு சொல்லியிருக்குதாம். காரணம், அது அ.தி.மு.க. விடம் பா.ஜ.க. கடைபிடிக்கும் கூட்டணி தர்மமாம்.''”

"நானும் இது தொடர்பா ஒரு தகவலைச் சொல்றேன். மாஜி அமைச்சர் எம்.ஆர்.விஜய பாஸ்கர் வீட்டில் ரெய்டு நடந்த நேரத்தில் எடப்பாடியும் ஓ.பி.எஸ்.சும் டெல்லிக்கு போன நேரத்தில், ஒரு செய்தி இங்கே சிறகடிச்சிது. அதாவது ஓ.பி.எஸ்.சின் ரெண்டாவது மகனான ஜெயபிரதீப், வெயிட்டா வெளிநாட்டுக்குப் பறந்தார் என்றும், அங்கு பாதுகாப்புத்துறை யிடம் அவர் சிக்கிக்கிட்டார் என்றும், அவரை மீட்கத்தான் ஓ.பி.எஸ்., எடப்பாடி சகிதம் டெல்லிக்கு விரைந்தார் என்றும் அந்த செய்தி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி அ.தி.மு.க. தரப்பை மேலும் களேபரத்தில் மூழ்கடிச்சிது.''”

nkn310721
இதையும் படியுங்கள்
Subscribe