""ஹலோ தலைவரே, கோட்டை முதல் குடிசைகள் வரை இப்ப கொரோனாவின் திகில் ஆட்சிதான் தமிழகத்தில் நடக்குது.''
""ஆனா... சமூகப் பரவல் நிலைக்கு கொரோனா வரலைன்னு முதல்வர் எடப்பாடி சொல்றாரே?''
""அது மட்டுமா சொன்னாரு? சமூகப் பரவல்னா, உங்க முன்னாடி நானும், என் முன்னாடி நீங்களும் நின்னு பேச முடியுமா? கொரோனா பரவியிருக்கும்னு மீடியாகிட்ட சொன்னாரு. அவர் அப்படி சொல்லி கொஞ்ச நேரம்கூட ஆகலை. அவர்கூடவே பயணிக்கும் ஆஸ்தானப் புகைப்படக்காரர் மோகன் கொரோனா தொற்றுக்கு ஆளாகிட்டாரு. மேட்டூர் அணையைத் திறக்க எடப்பாடி சேலத்துக்குப் போனப்பகூட, பாதுகாப்பு அதிகாரிகளுடன் மோகனும் போயிருந்தார். இந்த நிலையில் அவருக்கு கொரோனாத் தொற்று உறுதியானதால், அவர் மூலம் யார் யாருக்கு தொற்று பரவியிருக்குமோன்னு அதிகாரிகளும் ஆளும்கட்சிப் பிரபலங்களும் ஆடிப்போயிருக்காங்க. மோகனுடன் தொடர்பில் இருந்த அத்தனை அதிகாரிகளுக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டிருக்கு.''
""முதல்வர் தரப்பிலேயே இந்த பகீர் செய்தி பரவிக்கிட்டிருந்த நிலையில், ஒரு திகிலூட்டும் மரணமும் நடந்திருக்கேப்பா?''
""ஆமாங்க தலைவரே, முதல்வர் அலுவலகத்தில் இருக்கும் தனிச்செயலாளர் தாமோதரனையும் அண்மையில் கொரோனா அட்டாக் பண்ணுச்சு. அதனால் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அவர் அட்மிட் செய்யப்பட்டிருந்தார். தீவிர சிகிச்சை கொடுத்தும் கூட 17-ந் தேதி அவர் இறந்துட்டாரு. இது முதல்வர் எடப்பாடியை மட்டுமல்லாது ஒட்டுமொத்த தலைமைச் செயலகத்தையும் பதட்டத்தில் ஆழ்த்தியிருக்கு. முதல்வர் ஏரியாவை சுற்றிலும் கொரோனாங்கிறதால, முதல்வர் அலுவலகத்துக்கு போய்வந்த துறைச்செயலாளர்கள் உள்ளிட்ட உயரதிகாரிகள் பலரும் இப்ப பீதியில் இருக்காங்க. அவர்களில் பலரும் தங்களைத் தனிமைப
""ஹலோ தலைவரே, கோட்டை முதல் குடிசைகள் வரை இப்ப கொரோனாவின் திகில் ஆட்சிதான் தமிழகத்தில் நடக்குது.''
""ஆனா... சமூகப் பரவல் நிலைக்கு கொரோனா வரலைன்னு முதல்வர் எடப்பாடி சொல்றாரே?''
""அது மட்டுமா சொன்னாரு? சமூகப் பரவல்னா, உங்க முன்னாடி நானும், என் முன்னாடி நீங்களும் நின்னு பேச முடியுமா? கொரோனா பரவியிருக்கும்னு மீடியாகிட்ட சொன்னாரு. அவர் அப்படி சொல்லி கொஞ்ச நேரம்கூட ஆகலை. அவர்கூடவே பயணிக்கும் ஆஸ்தானப் புகைப்படக்காரர் மோகன் கொரோனா தொற்றுக்கு ஆளாகிட்டாரு. மேட்டூர் அணையைத் திறக்க எடப்பாடி சேலத்துக்குப் போனப்பகூட, பாதுகாப்பு அதிகாரிகளுடன் மோகனும் போயிருந்தார். இந்த நிலையில் அவருக்கு கொரோனாத் தொற்று உறுதியானதால், அவர் மூலம் யார் யாருக்கு தொற்று பரவியிருக்குமோன்னு அதிகாரிகளும் ஆளும்கட்சிப் பிரபலங்களும் ஆடிப்போயிருக்காங்க. மோகனுடன் தொடர்பில் இருந்த அத்தனை அதிகாரிகளுக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டிருக்கு.''
""முதல்வர் தரப்பிலேயே இந்த பகீர் செய்தி பரவிக்கிட்டிருந்த நிலையில், ஒரு திகிலூட்டும் மரணமும் நடந்திருக்கேப்பா?''
""ஆமாங்க தலைவரே, முதல்வர் அலுவலகத்தில் இருக்கும் தனிச்செயலாளர் தாமோதரனையும் அண்மையில் கொரோனா அட்டாக் பண்ணுச்சு. அதனால் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அவர் அட்மிட் செய்யப்பட்டிருந்தார். தீவிர சிகிச்சை கொடுத்தும் கூட 17-ந் தேதி அவர் இறந்துட்டாரு. இது முதல்வர் எடப்பாடியை மட்டுமல்லாது ஒட்டுமொத்த தலைமைச் செயலகத்தையும் பதட்டத்தில் ஆழ்த்தியிருக்கு. முதல்வர் ஏரியாவை சுற்றிலும் கொரோனாங்கிறதால, முதல்வர் அலுவலகத்துக்கு போய்வந்த துறைச்செயலாளர்கள் உள்ளிட்ட உயரதிகாரிகள் பலரும் இப்ப பீதியில் இருக்காங்க. அவர்களில் பலரும் தங்களைத் தனிமைப்படுத்திக்கிறாங்க. இப்படி நிலைமை கைமீறிப் போய்க்கிட்டு இருக்கும் நிலையிலும், கொரோனா விஷயத்தில் எடப்பாடி அரசு வெளிப்படைத்தன்மை இல்லாமல் செயல்படுது.''
""இந்த முயற்சிகளுக்கு மத்தியிலும் பவர் புள்ளிகளின் சீக்ரெட் முதலீடுகள் விறு விறுப்பா நடக்குதுன்னு கோட்டை வட்டாரத்தில் கிசுகிசு பரவுதே?''
""அதுவும் உண்மைதாங்க தலைவரே, அதானியோட பார்ட்னரான திரிவேணி எர்த் மூவர்ஸ் நிறுவன உரிமையாளர் பிரபாகரன் இருக்காரே, அவருடைய மைத்துனர் செந்தில் ஒரு வி.வி.ஐ.பி.யின் வாரிசோடு சமீபத்தில் சென்னையில் இருந்து கல்கத்தாவுக்கு பாசஞ்சர்ஸ் ஃபிளைட்டில் பறந்திருக்கார். அங்கிருந்து மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் அனுமதியை வாங்கி, திரிவேணி நிறுவனத்தின் ஸ்பெஷல் ஃபிளைட்டில், அவர் அந்த வி.ஐ.பி.யின் வாரிசோடு ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருக்கும் மொசாம்பிக் நாட்டிற்கு போயிருக்கார். அந்த ஃபிளைட்டில் கரன்ஸி பண்டல்களும் கணிசமா இருந்துச்சாம்.''’’
""வெயிட்டான முதலீடுதான் போலிருக்கு?''
""ஆமாங்க தலைவரே, அந்த நாட்டில் இருக்கும் நிலக்கரி சுரங்க நிறுவனங்களில் ஒரு பெருந் தொகையை முதலீடு பண்ணிய அவர்கள், அங்கிருந்து இந்தோனேஷியா போயிருக்காங்க. அங்கும் சில சுரங்க நிறுவனங்களில் கரன்ஸி முதலீடுகள் மிகவும் பாதுகாப்பாக செலுத்தப்பட்டி ருக்கு. இப்படி மொத்தமா ஏறத்தாழ 12 ஆயிரம் கோடி ரூபாய்வரை வெளிநாடுகளில் கமுக்கமா முதலீடு பண்ணிட்டு, அவங்க ரெண்டுபேரும் சைலண்டா சென்னை திரும்பியிருக்காங்க. இப்படி ’திரிவேணி எர்த் மூவர்ஸ்’ செந்திலுடன் வெளிநாடுகளுக்குப் போய் சுரங்கத் தொழிகளில் முதலீடு செய்திருக்கும் அந்த வி.வி.ஐ.பி. வேறு யாருமல்ல. முதல்வர் எடப்பாடியின் மகன் மிதுன்தானாம்.''’
""இந்த கொரோனா காலத்தில் எப்படி இப்படி வெளிநாடுக்கு அவர்களால் சுதந்திரமா போய்வர முடிஞ்சிது?''
""மோடி அரசின் ஆசிர்வாதம் இருப்பதால், அவங்களுக்கு இதில் எந்தவித இடையூறும் ஏற்படலை. ஆனால், எடப்பாடியின் மகனான மிதுனின் நண்பர்கள்தான் இப்ப பயந்து போயிருக்காங்களாம். ஏன்னா, மிதுன் போய்வந்த மொசாம்பிக் நாட்டில் கொரோனாத் தொற்று அதிகம் இல்லைன்னாலும், இந்தோனேஷியாவில் கடுமையான கொரோனாப் பரவல் இருக்குது. அப்படிப்பட்ட நாடுக்குப் போய்ட்டு வந்திருக்கும் மிதுனை, அவர் வைக்கும் நட்பு சந்திப்பு பார்ட்டிகளுக்குப் போய், எப்படி பயமில்லாமல் சந்திக்கிறதுன்னு மிரட்சியில் இருக்காங்களாம். காண்ட்ராக்ட்டுகளில் பவர் தரப்பு அள்ளிய கமிஷன்கள்தான் இப்போ அந்நிய நாடுகளில் முதலீடாக்கப்பட்டிருக்குன்னும் அதிகாரிகள் தரப்பில் டாக் அடிபடுது.''
""எடப்பாடி ரஜினியைத் தொடர்புகொண்டு பேசியதாவும் தகவல் இருக்கேப்பா?''
""அதுவும் உண்மைதாங்க தலைவரே, சமீபத்தில் ரஜினி, ஆரோக்கியம் போச்சுன்னா, வாழ்க்கையே போச்சுன்னு தனது ’மக்கள் மன்றத்தினருக்கு அட்வைஸ் செய்திருந்தார். கூடவே, கொரோனா தடுப்புக்காக எடப்பாடி அரசு எடுத்து வரும் நடவடிக்கையையும் பாராட்டியிருந்தார். இதில் மகிழ்ந்துபோன எடப்பாடி, ரஜினியைத் தொடர்பு கொண்டு நன்றி தெரிவிச்சிருக்கார். அதுக்கு ரஜினி, உங்க நிர்வாகத்தை கவனிக்கிறேன். பாராட்டும்படி இருக்குன்னு சொல்ல, இதில் மேலும் உற்சாகமான எடப்பாடி, கொரோனாவை ஒடுக்க எவ்வளவோ முயற்சி எடுக்கறோம். ஆனால், மக்களின் முழுமையான ஒத்துழைப்பு கிடைக்க லைன்னு ஆதங்கப்பட்டிருக்கார்.''
""ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல். ஏ.க்களுக்கு எதிராக தி.மு.க. தொடுத்த வழக்கு, ஆளுங்கட்சிக்கு கவலையைக் கொடுத்திருக்கே?''
""ஆமாங்க தலைவரே, 16-ந் தேதி இந்த வழக்கின் விசாரணை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே அமர்விடம் வந்தபோது, இந்த விவகாரத்தில் 3 மாசத்தில் சபாநாயகர் முடிவெடுக்கனும்னு உத்தரவிடப்படிருந்ததே, அதன்படி விரைவில் முடிவெடுக்கச் சொல்லுங்கன்னு சபாநாயகர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் முகுல் ரோஹத்கியிடம் அந்த அமர்வு தெரிவித்ததோடு, வழக்கை 15 நாட்கள் ஒத்திவச்சிருக்கு. அதனால் இந்த விவகாரத்தில் சபாநாயகர் தனபால் விரைவில் ஒரு முடிவை எடுத்தாக வேண்டிய நிர்பந்தத்துக்கு ஆளாகியிருக்கார். இந்த நேரத்தில் இப்ப அ.தி.மு.க. தரப்புக்கு என்ன சிக்கல்ன்னா, ஓ.பி.எஸ். அணியிடம் வாக்களிக்கும்படி கொறடா எந்த உத்தரவையும் பிறப்பிக்கலைன்னு எடப்பாடி சபாநாயகருக்கு கடிதம் கொடுத்திருக்கார். அதேசமயம், தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் தரப்பு ஏற்கனவே தாக்கல் செய்த அபிடவிட்டில், வாக்களிப்பது தொடர்பா எங்களுக்கு கொறடா உத்தரவு இருந்த துன்னு குறிப்பிடப்பட்டிருக்கு. இதை தி.மு.க. தரப்பு கையில் எடுக்கப் போவதைத் தெரிந்துகொண்ட எடப்பாடி தரப்பு, இப்ப பெரும் தர்மசங்கடத்தில் இருக்குது.''
""பா.ஜ.க. தரப்பில் விறுவிறுப்பு தெரியுதே?''
""தமிழகத்துக்கான புதிய நிர்வாகிகளை நியமிப்பது தொடர்பா, கட்சித் தலைமை தமிழக பா.ஜ.க தலைவர் முருகனை டெல்லிக்கு அழைத்தது. நிர்வாகிகள் பட்டியல் ஒன்றைத் தயார் செய்துக்கிட்டுப் போன அவரிடம், கட்சியின் தேசிய தலைவர் நட்டாவும் அமைப்புச் செயலாளர் சந்தோசும் அது குறித்து விவாதிச்சிருக்காங்க. கொண்டு சென்ற பட்டியல் பரிசீலனையில் இருக்குதாம். அதேபோல் தமிழக பா.ஜ.க. பிரமுகர்கள் சிலருக்கு தேசிய அளவிலான பதவிகளைக் கொடுப்பது குறித்த ஆலோசனையில் பிரதமர் மோடியும், அமித்ஷாவும் இறங்கியிருக்காங்களாம்.''
""நானும் ஒரு முக்கியமான தகவலைச் சொல்றேன். சங்கரமடத்துக்கு சொந்தமான திருவனந்தபுரம் உத்திராடம் மருத்துவக் கல்லூரியை, மறைந்த சங்கராச்சாரி ஜெயேந்திரருக்கு மிகவும் நெருக்கமான கௌரி காமாட்சி நிர்வாகம் செய்துக்கிட்டு இருக்கார். அந்தக் கல்லூரியை ஜெயேந்திரர் தனக்குக் கொடுத்து விட்டதாகவும் அவர் சொல்லி வருகிறார். இந்த நிலையில் சங்கரமடத்தைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்திருக்கும் ஆடிட்டர் குருமூர்த்தி, அந்த மருத்துவக் கல்லூரியை வேறு தரப்பிடம் விலை பேசியது பற்றி ஏற்கனவே நக்கீரன் பதிவிட்டது. இந்த நேரத்தில் பா.ஜ.க. பிரமுகரான சுப்பிரமணிய சாமி, கௌரி காமாட்சிக்காக கள மிறங்கியிருக்கார். குருமூர்த்தி மீது கௌரி வழக்கு தொடுக்கத் தயாராகி வருவதோடு, குருமூர்த்தித் தரப்பு தனக்குக் கொடுத்துவரும் டார்ச்சர் பற்றி பிரஸ் மீட் செய்யவும் தயாராகி வரு கிறாராம். பா.ஜ.க. தரப்போ, தாங்கள் இதில் ஆடிட்டர் பக்கம் இருப்பதா? சு.சாமி பக்கம் இருப்பதா? என கை பிசைகிறதாம்.''
______________
திருநங்கையர் குரல்!
கடந்த ஜூன் 17-19 தேதியிட்ட இதழில்... திருநங்கையருடன் காதல்... கொலையான இளைஞன்... என்ற தலைப்பில் கட்டுரை வெளியிட்டு இருந்தீர்கள்.
அதில் மஞ்சு என்கிற பெயரில் வெளியாகி இருப்பது அவரல்ல, தனன்யாவாகிய என்னுடைய படம். செய்திக்கான படம் மாறியதால், நான் மன உளைச்ச லுக்கு ஆளாகிவிட்டேன்’’என திருநங்கை தனன்யா தெரிவித்துள்ளார். திருநங்கை அமைப்பைச் சேர்ந்த பலரும், “எங்கள் உரிமைக்காக குரல் கொடுத்ததில் நக்கீரன் பங்கு மகத்தானது. அதில் தவறான செய்தி இடம்பெற்றது சங்கடமாக இருக்கிறது’எனத் தெரிவித்தனர். தவறுதலான படம் வெளியானதற்கு வருந்துகிறோம். நக்கீரன் எப்போதும் போல திருநங்கையரின் உரிமைக்குத் துணை நிற்கும்.