ராங்-கால் : மோடிக்கு ஆதரவாக ராகுல்! எதிர்க்கட்சிகள் அதிர்ச்சி! எடப்பாடி பிரச்சாரம் - மக்கள் ரியாக்ஷன்!

dd

"ஹலோ தலைவரே, சின்ன வயசுல படிச்ச சிங்கம் எருதுகள் கதை மாதிரிதான் இந்தியத் தேர்தல் களத்தின் நிலவரம் இருக்கு.''’

""ஆமாம்பா... எருதுகள் ஒத்துமையா வலிமையா இருந்தப்ப, அதுகளை நெருங்க முடியாத சிங்கம், அந்த எருதுகள் தனித்தனியா பிரிஞ்சி நின்னப்ப, ஒவ்வொன்னையும் ஈஸியா குறிவச்சிடிச்சின்னு பாடப்புத்தகத்திலே படிச்சிருக்கோமே...''’

r""தேர்தல் களத்தில் மோடி எதிர்ப்புங்கிற உணர்வு மம்தா, மாயாவதி, சந்திரபாபு நாயுடுன்னு எல்லாத் தலைவர்களுக்கும் இருக்கு. ஆனா, ராகுலை பிரதமர் வேட்பாளரா அறிவிக் கிறதிலும் காங்கிரசோடு கூட்டணி அமைக்கிறதிலும் ஒத்துமையா இல்லை. காங்கிரசும் இவர்களோடு இணங்கிப் போகலை. இது மோடிக்கு சாதகமா இருக்கு. இந்த நிலையில், மோடி எதிர்ப்பை வலுவா கடைப்பிடிக்கும் இடதுசாரிகளையும் பகைச்சிக்கிற வகையில் கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் ராகுல் போட்டியிடுவது, மோடிக்குத்தான் சாதகமா அமையும்னு எதிர்க்கட்சிகளை அதிர வச்சிருக்கு.''’

""உத்தரபிரதேசத்தில் உள்ள தனது ரெகுலர் தொகுதியான அமேதியில் போட்டியிடும் ராகுல், அடிஷனலா ஏன் வயநாடு தொகுதியை செலக்ட் பண்ணியிருக்காராம்?''’

""உத்தரபிரதேசத்தில் காங்கிரசுக்கு கூட்டணி பலம் இல்லை. கேரளாவில் காங்கிரஸ் தனித்தே பலமா இருக்கு. அங்கே பா.ஜ.க.வும் வீக். அதோடு, 2009-ல் உருவாக்கப்பட்ட வயநாடு தொகுதியில் தொடர்ந்து இரண்டு முறை காங்கிரஸ்தான் ஜெயிச்சிருக்கு. அதனால, கேரளா -தமிழ்நாடு -கர்நாடகா பார்டரை ஒட்டிய தொகுதியில் போட்டியிட்டா தென்மாநிலங்களில் காங்கிரஸ் கட்சிக்கு அது வலுச் சேர்க்கும்னு ராகுலும் காங்கிரஸ் தலைவர்களும் நினைக்கிறாங்க.''

""இடதுசாரிகள் வலுவாக உள்ள கேரளாவில் ராகுல் போட்டியிடுவதால், அது தமிழ்நாட்டில் ஒரே கூட்டணியில் இருக்கும் காங்கிரசுக்கும் சி.பி.எம்-சி.பி.ஐ. கட்சிகளுக்கும் சிக்கலை உண்டாக்கிடுமே..''

""ஆம

""ஆமாங்க தலைவரே, வயநாட்டில் சி.பி.ஐ. தன் வேட்பாளரான பி.பி.சுனீரை நிறுத்தியிருக்கு. அவரை எதிர்த்து ராகுல் போட்டியிடுவதால் கேரளாவில் தொடங்கி தமிழ்நாடு வரை தோழர்கள் கொந்தளிக்கிறாங்க. தமிழகத்தில் காங்கிரஸ் நிற்கும் 9 தொகுதிகளிலும் தோழர்கள் சைலன்ட் மோடுக்குப் போயிட்டாங்க.''

""தமிழ்நாட்டில் காங்கிரஸ் போட்டியிடுற 9 தொகுதி களில், அவங்க கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களுமே சைலன்ட் மோடில்தான் இருக்காங்களாமே?''’’

""அகில இந்திய காங்கிரஸ் தலைமை, தமிழ்நாட்டில் போட்டியிடுற வேட்பாளர்களுக்கு தலா 2 "சி' கொடுத்து, தேர்தல் வேலைகளை முடுக்கிவிடச் சொல்லியிருக்கு. இதில், ராகுல்காந்தியின் நேரடி பரிந்துரையில் சீட் வாங்கிய கரூர் ஜோதிமணிக்கும் விருதுநகர் மாணிக்கம் தாகூருக்கும் மற்றவர்களைவிட 5 மடங்கு கொடுக்கப்பட்டிருக்காம். ஆனா, யாருமே சரியா கரன்ஸி மூட்டையை அவிழ்க்கலைன்னு கதர்ச்சட்டையினர் குற்றம்சாட்டுறாங்க.''’’

""ஓப்பன் பண்ணலைன்னா களத்தில் ஒத்துழைப்பு இருக்காதே?''’’

c

""கொடுத்ததில் ஒரு பகுதியை சேமித்து வைப்பதில்தான் வேட்பாளர் கள் அதிக அக்கறை காட்டுறாங்களாம். அதே நேரத்தில், தி.மு.க.வின் தயவில் லாமல் ஜெயிக்க முடியாதுங்கிறதால அவங்களை மட்டும் கண்டுக்குறாங் கன்னும் அகில இந்திய தலைமை வரை புகார் போயிருக்கு. தனித் தொகுதியான திருவள்ளூரில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஜெயக்குமார், தொகுதியில் செல்வாக்குள்ள கூட்டணிக் கட்சியான விடுதலை சிறுத்தைகளை கண்டுக்கலைங் கிற அதிருப்தி தெரியுது. திருவள்ளூர் மாவட்டத்தில் பூவை ஜெகன் மூர்த்தி யின் "புரட்சி பாரதம்' கட்சிக்கு செல்வாக்கு இருப்பதால், சிறுத்தை களோடு ஓட்டுக் கேட்கப் போனால் அது எதிரா போயிடும்னு நினைக்கும் ஜெயக்குமார், விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகளைத் தவிர்ப்பதா சொல்றாங்க. திருச்சியில் காங்கிரஸ் திருநாவுக்கரசர், தன் பிரச்சாரக் கூட்டங்களில் வைகோவின் பெயரைப் புறக்கணிப்பதாக லோக்கல் ம.தி. மு.க.வினர், வைகோ வரை புகார் கொண்டு போயிருக்காங்க.''’’

""காங்கிரசின் ஸ்டார் பேச்சாளரான குஷ்புவே சைலன்ட் மோடில் இருக்கிறாரே?''’’

""2014-ல் இருந்து காங்கிரஸில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் குஷ்பு. அவருக்கு சீட் கொடுக்காத கட்சித் தலைமை, தேர்தல் சீட்டுக்காகவே கட்சியில் சேர்ந்த பழைய இந்தியன் பட நடிகை ஊர்மிளாவுக்கு உடனே சீட் கொடுத்திடிச்சி. குஷ்புவின் ஆதரவாளர்களோ, நீங்க பிரச்சாரத்துக்கு போக வேண்டாம் மேடம்னு வலியுறுத்து றாங்களாம். குஷ்புவைப் பொறுத்தவரை, அவர் கட்சித் தலைமைக்கு கட்டுப்பட்டு செயல்படக்கூடியவர்ங்கிறதால, என்ன நடக்குதுன்னு பார்க்கலாம்.''

""அ.தி.மு.க. தரப்பிலும் சலசலப்பு, கைகலப்பு, ஒத்துழை யாமை இயக்கம்ன்னு ஏக களேபரங்கள் நடக்குதாமே?''’

""உண்மைதாங்க தலைவரே, அ.தி.மு.க. அணியில் பா.ம.க.வுக்கும் தே.மு.தி.க.வுக்கும் இன்னும் இணக்கம் ஏற்படலை. அதனால் பா.ம.க. நிற்கும் 7 தொகுதியிலும் தே.மு.தி.க.வினர் வேலை செய்யாமல் ஒத்துழையாமை இயக்கம் நடத்திக்கிட்டு இருக்காங்க. இதனால் தே.மு.தி.க. நிற்கும் தொகுதிகளில், பா.ம.க.வினரும் கண்டுக்கலை. அதேபோல் அ.தி.மு.க. தொண்டர்களும் பா.ம.க.வின் பழைய விமர்சனங்களை மறக்காததால் அவர்களுக்குத் தேர்தல் வேலை செய்ய மாட்டோம்ன்னு புறக்கணிக்கிறாங்க. இது தொடர்பாக மேட்டூரில் களமிறங்கிய பா.ம.க. அன்புமணி யிடம், ஒரு அ.தி.மு.க. பிரமுகர் நேருக்கு நேர் வெறுப்பைக் காட்ட, அங்கே நிலைமை கைகலப்பு வரை போயிருக்கு. இதையெல்லாம் பார்த்து மனம் வெறுத்துப்போன டாக்டர் ராமதாஸும் அன்புமணியும் டெல்லி பா.ஜ.க. வரை விவகாரத்தைக் கொண்டு போயிட்டு, சொந்தக் கட்சிக் காரங்களை நம்பி வேலையை ஆரம்பிச்சிட்டாங்க.''’

""பிரச்சாரத்துக்குப் போகும் முதல்வர் எடப்பாடிக்கும் விதவிதமான அனுபவங்கள் கிடைக்குதாமே?''’

a

""எடப்பாடியைவிட ஓ.பி.எஸ்.ஸுக்கு கூட்டம் அதி கம்னு அ.தி.மு.க.வினரே சொல் றாங்க.. ஓ.பி.எஸ். பெரும்பாலும் மாலையில் மட்டும் பிரச்சாரம் செய்வதால் அவருக்கு கூட்டம் இருப்பதுபோல தெரியுதுன்னும், எடப்பாடி பகல்-இரவு பார்க்காம உழைக்கிறார்னு அவர் தரப்பில் சொல்றாங்க. சில இடங்களில், சேர்த்து வச்ச கூட்டம், எடப் பாடி பேசிக்கிட்டிருக்கும்போதே வெயில் தாங்காமல் கலைய ஆரம்பிக்க, கட்சி நிர்வாகிகளோ கைகோத்து நின்னுக்கிட்டு, கூட்டம் முடிகிற வரைக்கும் இருக்கணும்ங்கிறதுக்குத்தான் பணம் கொடுத்திருக்கோம்னு சொல்லி நிர்பந்தப்படுத்துறாங்க. மயிலாடுதுறை தொகுதியில் இருக்கும் கும்பகோணத்தில் 31-ந் தேதி பிரச்சாரம் செய்துகொண் டிருந்த எடப்பாடி, கூட்டணி கட்சித் தலைவரான ஜி.கே.வாச னின் அழைப்பை ஏற்று, அன்னைக்கு நைட்டு, வாசனின் சுந்தரபெருமாள்கோவில் வீட்டுக்குப் போனார். நல்ல வரவேற்பு. ஜி.கே.மூப்பனார் மற்றும் அண்மையில் மறைந்த ஜி.ஆர்.மூப்பனார் படங்களுக்கு அஞ்சலி செலுத்திய எடப் பாடிக்கு சுவையான விருந்தும் பரிமாறப்பட்டது. தேர்தல் பணி களில் உங்களுக்கு என்ன தேவையோ அதை தயக்கமில் லாம கேளுங்கன்னு வாசன்கிட்ட எடப்பாடி சொன்னாராம்.''

""கேட்காததுகூட தேர்தல் நேரத்தில் திடீர்னு கிடைச்சி அதிர்ச்சியாக்கிடுதே?''

va

""ஆமா.. ஒரத்தநாட்டுப் பகுதியில் இருந்த மக்கள், கஜா புயல் நேரத்தில் கூட எங்களைப் பார்க்காமல் ஹெலிகாப்டர்லயே பறந்துபோயிட்டு, இப்ப ஓட்டுக் கேட்க மட்டும் நேரிலே வர்றீங்களான்னு கேட்டு, செருப்பை வீசி, எடப்பாடிக்கு ஷாக் கொடுத் திருக்காங்க.''

""தி.மு.கவுக்கு எதிரா இந்துக்கள் ஓட்டு திரும்பும்னு தேர்தல் நேரத் தில் குரல்கள் ஒலிக்குதே?''’’’

""பொள்ளாச்சி விவகாரம் பற்றி பேட்டியளித்த தி.க.தலைவர் கி.வீரமணி, கிருஷ்ணர் குறித்த புராண செய்திகளைச் சுட்டிக்காட்டினார். இதை இந்துக்களுக்கு எதிரான கருத்தாக மக்களிடம் கொண்டு போய், தி.மு.க. அணிக்கு சிக்கலை ஏற் படுத்துங்கள்ன்னு இந்துத்துவா அமைப்புகளுக்கு அ.தி.மு.க.வும், பா.ஜ.க.வும் அசைன்மெண்ட் கொடுத்திருக்கு. பிராமண சங்கம் உள்ளிட்ட இந்துத்துவா அமைப்பினர் போராட்டங்களை நடத்திக்கிட்டு இருக்காங்க. இது தி.மு.க. கூட்டணியில் இருக்கும் சீனியர் தலைவர்களையும், ஸ்டா லின் குடும்ப kusஉறுப்பினர்களை யும் ஷாக்காக்கிடிச்சி. அதை பேலன்ஸ் செய்யும் வகையில் சோளிங்கர் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய ஸ்டாலின், தி.மு.க இந்துக்களுக்கு எதிரான கட்சிபோல சித்தரிக்கப் பார்க்கி றார்கள். அது நடக்காது. என் மனைவி கோவிலுக்குப் போவதை நான் தடுப்பதில் லைன்னு பேலன்ஸ் செய்தார்.''

""மு.க.அழகிரி என்ன செய்கிறாராம்?''

""அவரோட அறிக்கை எப்ப வேணும்னாலும் வரலாம்ங்கிற எதிர்பார்ப்பு ஒரு பக்கம் இருந்தாலும், 27-ந் தேதி தேனி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு ஆதரவா பிரச்சாரம் செய்துட்டு மு.க. ஸ்டாலின் ஓய்வெடுத்தப்ப, அழகிரியின் தீவிர ஆதரவாளர் களான முன்னாள் பெரியகுளம் ந.செ.செல்லப்பாண்டியன், முன்னாள் மா.து.செ. கம்பம் இளங்கோவன், நெசவாளர் அணி ஆண்டிப்பட்டி குமார், உத்தமபாளையம் முன்னாள் ஒ.செ. முல்லைசேகர் உள்ளிட்ட பலரும் ஸ்டாலினை சந்திச்சி, கட்சியில் மீண்டும் ஐக்கிய மானதோட, தேர்தல் வெற்றிக்குப் பாடுபடுவோம்னு சொல்லிட்டுப் போயிருக்காங்க. அழகிரியும் இதுபற்றி அலட்டிக்கலையாம்.''’

""நானும் ஒரு தகவல் சொல்றேன்.. தினகரனின் அ.ம.மு.க.வுக்கு பரிசுப்பெட்டி சின்னம் கிடைச்சிருப்பதில் அவங்க தரப்பு உற்சாகமா இருக்கு. பரிசுப் பெட்டிக்குள்ள என்னென்ன வச்சித் தரப் போறாங்கன்னு வாக்காளர்கள் எதிர்பார்ப்போடு இருக்காங்க. அதை எப்படித் தடுக்கலாம்னு ஆளுந்தரப்பு யோசிக்குது.''’’

nkn050419
இதையும் படியுங்கள்
Subscribe