"ஹலோ தலைவரே... நக்கீரனுக்கு சக்ஸஸ்... நம்ம நக்கீரனின் கருத்துக் கணிப்பின்படி தமிழக சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. அமோக வெற்றியைப் பெற்றிருக்கு.''”

"ஆமாம்பா, ஆதரவு அலையா-எதிர்ப்பலையான்னு புரியாமல் தேர்தல் களம் குழப்பமா இருந்த நிலையில், ஆட்சி மாற்றத்துக்கான தேர்தல் இதுங்கிறதை நம்ம நக்கீரன் துல்லியமா கணித்ததை வாசகர்கள் பாராட்டறாங்க...''

rang

"உண்மைதாங்க தலைவரே, 10 ஆண்டுகால இருளில் இருந்து மீண்ட உணர்வை தமிழக மக்கள் பெற்றிருக்காங்க. மே 2ந் தேதி தபால் ஓட்டுகளை எண்ணத் தொடங்கியதுமே தி.மு.க.வின் வெற்றிக்கான அறிகுறிகள் தெரிய ஆரம்பிச்சிடிச்சி. அறிவாலயத் திலும், ஸ்டாலினின் சித்தரஞ்சன் சாலை இல்லத்தின் முன்பும் தி.மு.க. தொண்டர்கள் உற்சாகமாகக் கூடி, பட்டாசு வெடித்து, இனிப்புகளை வழங்க ஆரம்பிச்சிட்டாங்க. அவங்களோட உற்சாகப் பெருக்கை, கட்சி நிர்வாகிகள்தான், கொரோனா சூழலைக் காரணம் காட்டி கட்டுப்படுத்தினாங்க.''”

Advertisment

"ஆமாம்பா, நானும் ஊடகங்கள்ல கவனிச்சேன்.''”

"அதேபோல் ஸ்டாலினும் அதிகாலையிலேயே எழுந்து, தேர்தல் முடிவுகளைக் கவனிக்க ரெடியாயிட்டார். சித்தரஞ்சன் சாலை வீட்டில், அவ ருடன் அவர் மருமகன் சபரீச னும் இருந்தாரு. மெஜாரிட்டி அளவுக்கு லீடிங் தெரிஞ்சதில் ஸ்டாலினுக்கு மகிழ்ச்சி. பக்கத்தில் இருந்த சபரீச னும் அதை சுட்டிக்காட்ட, அடுத்தடுத்த சுற்றுகளின் முடிவும் வரட்டும்னு ஸ்டாலின் பொறு மையா சொல்லி யிருக்காரு. குடும்ப உறுப்பினர்களும் தங்கள் மகிழ்ச்சிப் பெருக்கை ஸ்டாலினுடன் பகிர்ந்திருக்காங்க.''”

"ஒரு கட்டத்தில் அ.தி.மு.க. கூட்டணி 100 இடங்கள்வரை நெருங்கி வந்ததே?''”

Advertisment

"ஆமாங்க தலைவரே, முதலில் 11 மணி வாக்கில் பா.ஜ.க. நாகர்கோயில், நெல்லை, தாராபுரம், துறைமுகம், ஊட்டி ஆகிய 5 தொகுதி களில் முன்னணின்னு செய்தி வந்தது. இதைப் பார்த்த ஸ்டாலின், கொஞ்சம் சுணங்கிப் போயிட்டாராம். காரணம், இந்த 5-ல் ஊட்டியைத் தவிர மற்ற 4 தொகுதிகளில் தி.மு.க.வை பா.ஜ.க. நேருக்கு நேரா எதிர்க்குது. அதனால், மதவாதக் கட்சியான பா.ஜ.க.விடம் தி.மு.க. எந்த நிலையிலும் தோற்றுவிடக்கூடாது என்பதுதான் அவர் எண்ணமா இருந்தது. ஆனா, கடைசியில் பா.ஜ.க. ஜெயித்த 4 தொகுதிகளில் நாகர்கோவில், மொடக்குறிச்சி, நெல்லை மூன்றும் தி.மு.க போட்டியிட்ட தொகுதிகள்தான். இதேபோல் பா.ம.க.வும் ஏழெட்டு தொகுதிகளில் லீடிங்ன்னு வந்த செய்தியையும் ஸ்டாலின் கூர்ந்து கவனிச்சாராம். பக்கத்தில் இருந்த சபரீசன், அடுத்தடுத்த சுற்றுகளில் அவங்களுக்கு லீடிங் குறையும்னு சொல்லியிருக்காரு. வன்னியர் சமூகத்தினர் நிறைந்துள்ள தொகுதிகளில் அ.தி.மு.க கூட்டணி ஏற்படுத்திய நெருக்கடியையும் ஸ்டாலின் கவனிக்கத் தவறலை.''”

"ஓட்டு எண்ணிய நாளில் காலை 10 மணியில் இருந்தே ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள் குவிய ஆரம்பிச்சிடுச்சே?''”

ra

"உண்மைதாங்க தலைவரே, தி.மு.க.வின் கூட்டணிக் கட்சித் தலைவர்களான, கே.எஸ். அழகிரி, வைகோ, திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்கள் ஸ்டாலினைத் தொடர்புகொண்டு, பத்தாண்டுகளாகத் தொடரும் தமிழ்நாட்டின் துயரம் நீங்குதுன்னு சொல்லி மகிழ்வோடு வாழ்த்தினாங்க. ஐபேக் பிரசாந்த் கிஷோரும் ஸ்டாலினுக்கு வாழ்த்து சொன்னார். தமிழக நிலவரத்தை இங்குள்ள காங்கிரஸ் பிரமுகர்களிடம் கேட்டுக்கிட்டே இருந்த ராகுல்காந்தியும், டெல்லி முதல்வர் அரவிந்த்கெஜ்ரிவால், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், சமாஜ்வாடி சரத்யாதவ் உள்ளிட்ட வட இந்தியத் தலைவர் களும் வாழ்த்தினாங்க. அதிகாரப்பூர்வ வெற்றி அறிவிப்புகள் வெளியானதும் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத்சிங், நிர்மலா சீதாராமன் ஆகியோரும் வாழ்த்து தெரிவிச் சாங்க.''”

"இந்த முடிவுகளை அ.தி.மு.க. எப்படி பார்க்குது?''”

"அ.தி.மு.க. தரப்பால் ஜீரணிக்க முடியலை. பத்து வருசமா பதவி-அதிகாரம்னு இருந்தவங் களால, தோல்வியை சட்டுன்னு எதிர்கொள்ள முடியலை. எப்படியும் பா.ஜ.க தயவில் ஜெயிச் சிடலாம்னுதான் நம்பினாங்க. அதோடு, வன்னியர் சமூகத்திற்கான உள்ஒதுக்கீடு வடமாவட்டங்களை முழுசா ஜெயித்து தந்திடும்னும், எடப்பாடி பழனி சாமியின் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் நிறைந் துள்ள கொங்கு மண்டலமும் கொத்தா வெற்றியைத் தரும்போது, கெத்தா மறுபடியும் ஆட்சியைப் பிடிச்சிடலாம்னு நினைச்சாங்க. கொங்கு மண்டலம் அதிலும் குறிப்பா பா-யல் கொடூரம் நடந்த பொள்ளாச்சி உள்பட பல தொகுதிகளில் அ.தி.மு.க ஜெயித்தது. வன்னியர்கள்+கவுண்டர்கள் வாக்குகளால் சேலம் மாவட்டத்திலும் அ.தி.மு.க. அசத்தியது. வடமாவட் டங்களில் தர்மபுரியை மொத்தமா அந்தக் கூட்டணி அள்ளியது. அதுபோல இன்னும் சில மாவட்டங்களிலும் வெற்றி கிடைத்தது. அதே போக் கில், பணம் செலவழித்த மற்ற மாவட்டங்களிலும் லீடிங் காட்டிடலாம்னு நினைச்சாங்க. ஆனா, அது நடக்காமல் போனதில் அப்செட்தான்.''

"வழக்கமா தேர்தல் முடிவுகள் வரும்போது அ.தி.மு.க தலைமைக் கழகம் கொண்டாட்டமா இருக்குமே?''”

"இந்த முறை அறிவாலயம் களை கட்டியிருந்தது. இதைக் கவனித்த அ.தி.மு.க. தரப்பு, கொரோனா நேரத்தில் தி.மு.க.வினர் அறிவா லயத்தில் கூடிக் கூத்தடிக்கிறாங்கன்னு தேர்தல் ஆணையத்திடம் புகாரைக் கொண்டுபோனாங்க. அடுத்த அரைமணி நேரத்திற்குள், கூட்டம் கூட அனுமதிச்சதா, தேனாம்பேட்டை இன்ஸ்பெக்டர் முரளியை, அதிரடியா சஸ்பெண்ட் செய்ய வைச்சிடுச்சி தேர்தல் ஆணையம்.''”

rang

"எடப்பாடியின் ரியாக்ஷன் எப்படி இருந்தது?''”

"சேலத்தில் தன் வீட்டில் இருந்த முதல்வர் எடப்பாடி, வாக்கு எண்ணிக்கை தொடங்கும் வரை மிகுந்த உற்சாகத்தோடுதான் இருந்தார். உயரதிகாரிகளும் கட்சியின் சீனியர்களும் அவருக்கு அட்வான்ஸ் வாழ்த்தைத் தெரிவிச்சாங்க. ஆனால் வாக்கு எண்ணிக்கை தொடங்கிய சில நிமிடங்களி லேயே அவருடைய போன் அமைதியாயிடிச்சி. இந்த நிலையில், ஓ.பி.எஸ். பின்னடைவுன்னு முதல் இரு சுற்றில் வந்த செய்தியைப் பார்த்ததும், அவரைத் தொடர்பு கொண்டார் எடப்பாடி... "அண்ணே, கவலைப்படாதீங்க. அடுத்த சுற்றுக்களில் உங்களுக்கு லீடிங் அதிகமா இருக்கும்'னு ஆறுதல் சொன்னதோடு, "ஏண்ணே, அமைச்சர்கள் பலரும் பின்னடைவுன்னு செய்தி வருதே... கட்சியிலிருந்து கொடுத்த பணத்தைக் கூட அவங்க செலவு பண்ணலை போலி ருக்கே'ன்னு அவரிடம் வருத்தப்பட்டி ருக்கார். ஓ.பி.எஸ்.சோ, இதுக்கு பெரிதாக ரியாக்ட் பண்ணாம ரொம்பவும் இறுக்கமாகவே இருந்தாராம்.''”

"முன்னாள் உளவுத்துறை ஐ.ஜி. சத்தியமூர்த்தியிடம் எடப்பாடி தன் கோபத்தைக் கொட்டினாராமே?''”

"ஆமாங்க தலைவரே, பெரும்பாலான தொகுதிகளில் தி.மு.க. முன்னிலைன்னு செய்திகள் வரத்தொடங்கியதும், தனது ஆலோசகர்களான முன்னாள் உளவுத்துறை ஐ.ஜி.யான சத்தியமூர்த்தியையும் சுனிலையும் தொடர்புகொண்ட எடப்பாடி, தமிழ்நாட்டு நிலவரத்தை சரியா கணிக்கத் தெரியாம விட்டுட்டீங்க. உங்களை ரொம்ப நம்பியிருந்தேன்னு எரிச்சலாச் சொல்லியிருக்கார். இருவரும், அடுத் தடுத்த சுற்றுகளில் நிலைமை நமக்கு சாதகமா மாறிடும்னு சொல்ல, இப்ப இதையும் என்னை நம்பச் சொல்றீங்களா?ன்னு கோபமா ரிசீவரை வச்சிட்டாராம்.''”

"சட்டமன்றத்தில் வலுவான எதிர்க்கட்சியா அ.தி.மு.க. செயல்படலாமே?''”

"கிட்டத்தட்ட 65 தொகுதிகளில் அதற்கான வாய்ப்பை தமிழக மக்கள் கொடுத்திருக்காங்க. குறிப்பா, எடப்பாடி தொகுதியில் செம லீடிங்கில் பழனிசாமி ஜெயிச்சிருப்பது அவரோட செல்வாக்கின் அடையாளம்தான். அதோடு, அ.ம.மு.க. பெரியளவில் எடுபடாமல் போனதால், தேர்தலில் அ.தி.மு.க தோற்றால் அதை சசிகலா கைப்பற்றிடுவாருங்கிற எதிர்பார்ப்பும் நொறுங்கிப் போயிடிச்சி. போடியில் ஓ.பி.எஸ். திணறித் திணறி ஜெயிக்க, எடப்பாடியோ கட்சிக்குள்ளே தன்னுடைய வலிமையைக் காட்டியிருக்காரு. ஆட்சி போனாலும் கட்சி கையிலே இருக்கும்ங்கிறதுதான் எடப்பாடியின் ஆறுதல்.''”

"ஆனால் அ.தி.மு.க. ஆட்சியை இழந்ததுக்கு எடப்பாடிதான் காரணம்ன்னு அந்தக் கட்சியிலேயே புகார் குரல் எழுந்திருக்கே?''”

"வேட்பாளர் தேர்வில் சரியாக எடப்பாடி கவனம் செலுத்தவில்லை என்றும், பெரும்பாலான மா.செ.க்களும் அமைச்சர்களும், ‘கவனிப்பைப் ’ பெற்றுக்கொண்டு செய்த சிபாரிசுகளை அப்படியே ஏற்றுக்கொண்டு, அவர்களுக்கே சீட் கொடுத்துவிட்டார் என்றும், சீனியர்கள் அவர் மீது புகாரை வைக்க ஆரம்பிச்சாங்க. அதேபோல் தே.மு.தி.க.வின் எதிர்பார்ப்பை நிறைவேற்றி, அக்கட்சியைக் கூட்டணிக்குள் வைத்திருக்க எடப்பாடி தவறிவிட்டார் என்றும், அதுவும் அ.தி.மு.க.வின் படுதோல்விக்குக் காரணம் என்றும் அவர்கள் பகிரங்கமாகவே விமர்சிச்சாங்க. ஓ.பி.எஸ். தரப்பும், இதையே கட்சிக்காரர்கள் மத்தியில் பரப்பியதோடு, எடப்பாடிக்கு மக்களிடம் செல்வாக்கு இல்லை. அவர் தலைமையில் தேர்தலைச் சந்தித்ததால்தான் அ.தி.மு.க. படுதோல்வி அடைந்தது என்றும் பிரச்சாரம் செய்து வருகிறது.''”

"4 தொகுதிகளில் ஜெயித்திருக்கும் பா.ஜ.க. வியூகம் என்ன?''”

"அ.தி.மு.க. தயவில் தமிழகத்தில் கால் ஊன்றி கட்சியைப் பலப்படுத்திவிடவேண்டும் என வியூகம் வகுத்த பா.ஜ.க தலைமை, மற்ற மாநிலங்களைப்போல இங்கே மத அரசியல் செய்ய முடியாது என்பதைப் புரிந்து கொண்டு, சாதிரீதியான கணக்குகளைக் கையில் எடுத்தது. வடமாவட்டங்களில் வன்னியர் ஆதரவு. மேற்கு மாவட்டங் களில் கொங்குவேளாளர் ஆதரவு, தென்மாவட்டங்களில் தேவேந்திர குல வேளாளர் ஆதரவு என கணக்குப் போட்டு செயல்பட்டது. அந்த வியூகப்படி, தேர்தலில் வாக்குகள் பிரிந்தன. 2001 தேர்தலுக்குப் பிறகு 4 எம்.எல்.ஏ.க்களுடன் பா.ஜ.க. தமிழக சட்டமன்றத்திற்குள் நுழைகிறது. அ.தி.மு.க. நிர்வாகிகளை தன் பக்கம் இழுத்து, தமிழக அரசியலில் வலுவாக கால் ஊன்ற திட்டமிட்ட பா.ஜ.க.வின் முயற்சியை பெருமளவு தடுத்து திராவிடம் வென்றி ருக்கிறது. ''”

"நானும் முக்கியமான தகவலைப் பகிர்ந்துக்கறேன். அ.தி.மு.க.வுக்கு இத்தனை நாளாக விசுவாசத்தைக் காட்டிவந்த அதிகாரிகள் சிலர், தி.மு.க.வின் மகத்தான வெற்றியைப் பார்த்து நெளிய ஆரம்பிச்சாங்க. தி.மு.க.வின் வெற்றிச் செய்திகள் வந்துகொண்டிருக்கும் நிலையிலே, டி.ஜி.பி. திரிபாதி உள்ளிட்ட ஐ.பி.எஸ்., ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சித்தரஞ்சன் சாலை இல்லத்துக்குப் போவதை அறிந்த அவர்களும், பெருத்த சங்கடத்தோடும், பூச்செண்டுகளோடு அங்கே படையெடுக்க ஆரம்பிச்சிட்டாங்க. அதேபோல் பல அதிகாரிகள், தி.மு.க. ஆட்சியில் முக்கியமான பதவிகளைக் குறிவைத்து, ஸ்டாலினின் குடும்பத்தினரை அணுகத் தொடங்கி யிருக்கிறார்கள்''’

___________________________

பா.ஜ.க.வை ஜெயிக்க வைத்த தி.மு.க.வின் அலட்சியம்!

ra

தி.மு.க.வின் தலைமை வாக்காளர் செலவு மற்றும் தேர்தல் செலவிற்காக நல்லதொரு தொகையை வழக்கம் போல் திருநெல்வேலி தொகுதிக்கும் அனுப்பியிருந்தது. திருநெல்வேலியில் இரட்டை இலை நிற்கவில்லை. பா.ஜ.க. நிற்பதால் வெற்றி எளிதாக இருக்கும் என கணக்கு போட்ட தி.மு.க. வேட்பாளர் ஏ.எல்.எஸ்.லட்சுமணன் வந்த தொகை யைப் பிரிக்காமல் வைத்துக் கொண்டாராம். இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்ட பா.ஜ.க நயினார் நாகேந்திரன் வாக்காளர்களுக்கு நல்ல கவனிப்பை நடத்தி, வெற்றி பெற்றுவிட்டார்.

உள்ளடி-ஓட்டுப் பிரிப்பு!

ஆலங்குளம் தொகுதியில் இரண்டுமுறை தொடர்ந்து எம்.எல்.ஏ.வானவர் ஆலங்குளம் பூங்கோதை. கட்சி நிர்வாகிகளுடன் முட்டல் மோதல் இருந்தாலும் தொகுதி மக்களிடம் செல்வாக்கு உண்டு. வாக்காளர் களையும் கவனித்திருந்தார். மேலும் அ.தி.மு.க. மனோஜ்பாண்டியன் வெளியூர் வேட்பாளர். வாக்குகள் கிடைக்காது என்ற நிலைமை தொகுதியிலிருந்தபோது, இலைத் தலைமை பூங்கோதையை வீழ்த்தி மனோஜ் பாண்டியனை வெற்றிபெற வைப்பதற்காக சுயேட்சையான ஹரி நாடாரை மறைமுகமாக சப்போர்ட் செய்தது. தி.மு.க.விற்குள்ளே பூங்கோதைக்கெதிரான உள்ளடி வேலைகளும், பூங்கோதைக்குச் செல்ல வேண்டிய நாடார் சமூக வாக்குகளை ஹரிநாடார் கணிசமாகப் பிரித்ததும் தி.மு.க.வின் பூங்கோதையின் தோல்விக்கு காரணமானது.

-பரமசிவன்