""ஹலோ தலைவரே, தேர்தல் முடிவுகள் பற்றி ஆளுந்தரப்புக்கு வருகிற ரிப்போர்ட் ஒரு சில சமயங்களில் நம்பிக்கையையும், ஒரு சில சமயங்களில் அதிர்ச்சியையும் தருதாமே?''’’
""’மே 2ந் தேதி விடிகிற வரைக்கும் இப்படி பல ரிப்போர்ட்டுகள் வந்துக்கிட்டேதான் இருக்கும்பா.''’’
""உண்மைதாங்க தலைவரே, தேர்தல் நேரத்தில் சேலத்தில் முகாமிட்டிருந்த எடப்பாடியிடம், உளவுத் துறையினர் ’எக்ஸிட் போல்’ மூலம் கிடைத்த ரிசல்ட்டை 8ந் தேதி ரிப்போர்ட்டாகக் கொடுத்திருக்காங்க. அதில் வெற்றி வாய்ப்பு பற்றி 10% அளவுக்குத்தான் நம்பிக்கை தந்திருக்காங்க. 90% எதிர்த்தரப்புக்கு சாதகம்னு சொல்லப்பட்டிருந்ததாம். குழப்பமடைந்த எடப்பாடி உடனே ஓ.பி.எஸ்.சைத் தொடர்புகொள்ள, அப்படித்தான் எனக்கும் ரிப்போர்ட் வந்திருக்குன்னு அவரும் சொல்லியிருக்காரு. சேலத்துக்குப் புறப்பட்டு வாங்க. அடுத்து மூவ் பத்தி நாம் ஆலோசிக்கலாம்ன்னு கூப்பிட்டிருக்காரு எடப்பாடி. நாலு வருசமா நீங்கதானே முடிவுகளை எடுத்தீங்க. இதையும் நீங்களே பார்த்துக்குங்கன்னு ஓ.பி.எஸ். சொல்லிட்டாராம்.''’’
""அமைச்சரவையில் உள்ள மற்ற மந்திரிகளின் மன நிலை என்னவாம்?''’’
""ஜெயக்குமார், தங்கமணி, வேலுமணி, சி.வி.சண்முகம் இந்த 4 பேரும் பாசிட்டிவ்வான ரிப்போர்ட்டை எடப்பாடி பழனிசாமிகிட்டே சொல்லியிருக்காங்க. கடைசி 4 நாட்களில் ஆளுந்தரப்புக்குச் சாதகமா களம் மாறிடிச்சின்னும், பெண்கள் ஓட்டு வழக்கம்போல விழுந்திருக்குன்னும் சொல்லியிருக்காங்க. ஆனா, மற்ற மந்திரிகளின் பதிலில் சுரத்து இல்லையாம். அவங்களுக்கு கிடைச்ச ரிப்போர்ட்டால் ஷாக் ஆகியிருக் காங்களாம். அதைக்கேட்ட எடப்பாடியோ, பா.ஜ.க.வுக்கு எதிரான பிரச்சாரத்தைக் கையில் எடுத்த தி.மு.க. நம்மையும் சேர்த்துக் கவுத்துடுச்சி. பா.ம.க. ஓட்டு நமக்கு விழுந்த மாதிரி தெரியலை. அதேபோல் நம்ம ஓட்டு பா.ஜ.க.வுக்கும் பா.ம.க.வுக்கும் முழுசா போயிருக்குமாங்கிறதும் சந்தேகம்தான். அமைச்சர்களும் உங்க தொகுதிகளை மட்டும் பார்த்துக்கிட்டீங்கனு அப்செட் குரலில் பேசினாராம்.''’’
""பா.ம.க. தரப்பிடமும் தேர்தல் நிலவரம் குறித்து எடப்பாடி பேசினாராமே?''’’
""டாக்டர் ராமதாஸ்கிட்ட அவர் பேசுனப்ப, ரொம்ப நம்பிக்கையா பேசியிருக்காரு டாக்டர். எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த தேர்தலில் அ.தி.மு.க. ஓட்டு பா.ம.க.வுக்கும், பா.ம.க. ஓட்டு அ.தி.மு.க.வுக்கும் டிரான்ஸ்ஃபர் ஆகியிருக்கு. அதனால 130 முதல் 150 இடங்கள் வரை நம்ம கூட்டணிக்குக் கிடைக்கும். மீண்டும் அ.தி.மு.க ஆட்சிதான்னு சொன்னாராம். இதே பாசிட்டிவ் ரிப்போர்ட்டை எடப்பாடியின் தேர்தல் ஆலோ சகரான சுனில் தரப்பும் சொல்லியிருக்கு. இரண்டு தடவை தொடர்ச்சியா ஆட்சியில் இருந்தால், மாற்றத்தை எதிர்பார்த்து மக்கள் ஓட்டுப்போடு வது வழக்கம்தான். ஆனா, நம்மோட கடைசி நேர விளம்பரங்களாலும், வாக்காளர்களுக்கான கவனிப்பாலும் 120 சீட் வரை ஜெயிச்சி ஆட்சிக்கு வந்திடலாம்னு நம்பிக்கை கொடுத்திருக்காரு. அதே நேரத்தில், தேர்தல் நிலவரம் குறித்து மற்றவர் களிடம் ஆலோசிக்கும்போது, 50 சீட்டிலிருந்து அதிகபட்சம் 80 வரை அ.தி.மு.க.வுக்கு கிடைக்கும்னு சுனில் தரப்பு சொல்லுதாம். இப்படி உள்ளே-வெளியேனு டபுள் ரிப்போர்ட்டால் அ.தி.மு.க.வில் குழப்பம்.''’’
""அதிகாரிகள் வட்டாரத்தில் என்ன மன நிலை?''’’
""தேர்தலுக்குப் பிறகு ஆளுந்தரப்புடன் தொடர்பு கொள்ளும் அதிகாரிகளின் எண்ணிக்கை குறைஞ்சிருக்கு. கொங்கு மண்டல அதிகாரிகள் மட்டும்தான் முதல்வரிடம் சகஜமா பேசிக்கிட்டி ருப்பதா கோட்டை வட்டாரத் தகவல். தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாகியிருப்பதால, 12 ந்தேதி ஆலோசனைக் கூட்டம் நடத்துவது சம்பந்தமா அரசின் ஆலோசக ரான சண்முகத்திடம் எடப்பாடி பேச, அவர் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சனிடம் இதை சொல்லியிருக்காரு. தலைமைச் செயலாளரோ, தேர்தல் நடத்தை விதிகள் இன்னும் தொடர்வ தால், அரசு நிர்வாகத்தில் நேரடியாக முதல்வர் தலையிட முடியாதேனு தயக்கம் காட்டியிருக் கிறார். புதிய உத்தரவுகளைப் பிறப்பிக்க முடியா விட்டாலும், அவர்தானே காபந்து முதல்வர்ன்னு சண்முகம் சொல்ல, தேர்தல் ஆணையத்தின் அனு மதி கிடைத்தால் அவர் கலந்துக்கட்டும்ன்னு தலை மைச் செயலாளர் கறாராகச் சொல்லிவிட்டாராம். அதனால் தேர்தல் ஆணையத்திடம் அனுமதி கேட்டு 11ந் தேதி வரை காந்திருந்தது முதல்வர் தரப்பு.''’’
""தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், ஐ-பேக் ஆபீசுக்குப் நேரில் போய் பிரசாந்த் கிஷோர் உள் ளிட்டவர்களோடு ஃபோட்டோ எடுத்திருக்காரே?''’’
""அந்த விசிட்டின்போது, சென்னையில் வாக்குப்பதிவு பெரிதா இல்லையேன்னு ஐபேக் டீமிடம் ஸ்டாலின் கேட்டிருக்கார். அதுக்கு அவங்க, வாக்குப்பதிவு குறைவா ஆனதுக்கு கொரோனா உட்பட பல்வேறு காரணங்கள் இருக்கு. வாக்குப்பதிவை வச்சி நம்ம வெற்றியை நாம் சந்தேகப்பட வேண்டியது இல்லை. ஆளுந்தரப்பின் கடைசி நேர மேஜிக்குகளை எல்லாம் தாண்டி, தி.மு.க.வுக்கு 140 சீட் வரை கிடைக்கும். கூட்டணிக் கட்சிகளையும் சேர்த்து நல்ல ரிசல்ட் வரும்னு சொல்லியிருக்காங்க. தேர்தலோடு ஐ-பேக் டீமிடம் தி.மு.க. போட்டிருந்த ஒப்பந்தமும் முடிவடைஞ்சிடிச்சி. அதனால்தான் ஸ்டாலின் நேரில் போனாரு. அறிவாலயத்தில் ஐ-பேக் டீமுக்கு ஒதுக்கப்பட்டிருந்த ஆபீசையும் காலி பண்ணிட்டு, குட்பை சொல்லிட்டு கிளம்பிட் டாங்க.''’’
""மக்கள் எப்படி ஓட் டுப் போட்டிருந்தாலும், மத்தியில் ஆளும் பா.ஜ.க நினைத்தால் எதையும் செய்யலாம்னு தமிழகம் முழுக்க பரவலான பேச்சு இருக்குதே?''’’
""உண்மைதாங்க தலைவரே, தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து, ஊடகக் கருத்துக் கணிப்புகளும், புலனாய்வு அமைப்புகளின் கணிப்புகளும் தி.மு.க.வுக்கே சாதகமாக இருப்பது குறித்து டெல்லி பா.ஜ.க. மேலிடம் ஆலோசனை செய்திருக்கு. இதை எப்படி சாதாகமாக்குறதுன்னு ஒரு பக்கம் ஆலோசனை நடந்திருக்கு. எல்லாத்தை யும் மீறி தி.மு.க ஜெயிச்சிடிச்சின்னா, டி.ஆர்.பாலு, திருச்சி சிவா போன்ற அனுபவமிக்க தி.மு.க. எம்.பிக் கள் மூலம், தி.மு.க தலைமையை அணுகலாமான் னும் ஆலோசிக்கப்படுதாம். அ.தி.மு.கவுக்கு பாதக மான முடிவு வந்தால், அங்கேயுள் பிரமுகர்கள் சிலர் பா.ஜ.க.வில் இணையலாம்ங்கிற எதிர்பார்ப்பும் நிலவுது. தளவாய் சுந்தரம் மூலம் ஒருங்கிணைக்க லாம்னு ஆலோசிக்கப்படுது. தேர்தல் முடிவில் மெஜாரிட்டி முன்னே, பின்னே இருந்தால், தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை எப்படித் தூக்கலாம்னும் டெல்லி பா.ஜ.க. வியூகம் வகுத்துக்கிட்டிருக்குதாம்...''’’
""சசிகலா?''’’
""அவர் எதிர்பார்ப்பது அ.தி.மு.க.வின் தோல்வியை. போயஸ் கார்டனில் ஜெ.வின் வேதா இல்லத்துக்கு எதிரே, அதே பாணியில் அவர் கட்டிவரும் பங்களாவின் கட்டுமான வேலைகளை, ரெண்டு நாட்களுக்கு முன்பு பார்வையிட்டார். தேர்தல் முடிவுக்குப்பின் இங்கே குடியேறி, எடப்பாடியையும், ஓ.பி.எஸ். சையும் செல்லாக்காசாக ஆக்கி, அ.தி. மு.க.வைத் தன் கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வருவேன்னு சொல்லியிருக்காராம் சசிகலா.''’’
""தேர்தலுக்குப் பிறகும் டெல்லியின் கவனம், மக்கள் நீதி மய்யம் கமல், நாம் தமிழர் சீமான், அ.ம. மு..க. தினகரன் ஆகி யோர்மீது இருக்குதே?''
""உண்மைதாங்க தலைவரே... தமிழக தேர்தலுக்குப் பிறகும் மத்திய அரசு கமல், சீமான், தினகரன் ஆகியோர் மீது கவனம் செலுத்துது. இவர்கள் மூவரும் தேர்தலில் பிரித்த வாக்குகள் யாருக்குச் சாதகம்? யாருக்குப் பாதகம்?னு சர்வே ஒன்றை எடுத்துத் தருமாறு மத்திய உளவுத்துறையிடம் கேட்டிருக்கிறார் மத்திய உள்துறை அமைச்சரான அமித்ஷா. அதன்படி, இரு நாட்களுக்கு முன்பு அதன் ரிப்போர்ட்டை டெல்லிக்கு அனுப்பி வைத்திருக்கிறது புலனாய்வு அமைப்பு. கமலும், சீமானும் பிரிக்கும் வாக்குகளில் பெருமளவு தி.மு.க வுக்குத்தான் பாதகம்னும், தினகரனின் அ.ம.மு.க. பிரிக்கும் வாக்குகளால் முழுமையாக அ.தி.மு.க.வுக்கு பாதிப்புன்னும் ரிப்போர்ட் போயிருக்குது.''’’
""அரக்கோணம் அருகே தேர்தலுக்கு மறுநாள் நடந்த இரட்டைப் படுகொலை, பெரும் பதட்டத்தை உண்டாக்கியிருக்கே?''’’
""அதன் பின்னணி பற்றி நம்ம நக்கீரனில் தனிச்செய்தி வந்திருக்குதுங்க தலைவரே, அரக் கோணம் அருகேயுள்ள சோகனூரில் இரண்டு சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டிருக்கு. இதில் பட்டியலினத்தைச் சேர்ந்த அர்ஜீன், சூர்யாங்கிற இரண்டு இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டிருக்காங்க. கொலை யாளிகளைக் கைது செய்யும்வரை உடலை வாங்க மாட்டோம்ன்னு அவர் களின் குடும்பத்தின ரும், தலித்தியக் கட்சி களும், அமைப்புகளும் 4 நாட்களாகப் போராடினாங்க. படு கொலையைக் கண்டிச்சி விடுதலைச் சிறுத் தைகள் போராட்டத்தில் குதிக்க, பா.ம.க. வோ உண்மை கண்டறியும் குழுவை அமைச் சிருக்கு. சிறுத்தைகள் தலைவரான திருமா எம்.பி., கொல்லப்பட்டவர்களின் வீடுகளுக்குச் சென்று ஆறுதல் சொல்ல, அரசுத் தரப்பும் அவர்களின் குடும்பத்தினருடன் பேச்சு வார்த்தை நடத்தி, தலா 4.12 லட்சத்துக்கான காசோலையை வழங்கியதோடு, வேலை வாய்ப்பு உத்தரவாதத்தையும் அவர்களுக்கு கொடுத்திருக்கு. இதன்பிறகே உடல் அடக்கம் நடந்திருக்கு.''’’
""அந்தப் படுகொலை விவகாரத்தில் அ.தி. மு.க. புள்ளிகள் கைதாகியிருக்காங்களே?''’’
""ஆமாங்க தலைவரே... இந்தப் படு கொலை தொடர்பாக 6 பேர் கைது செய்யப் பட்டிருக்காங்க. அதில் அரக்கோணம் தகவல் தொழில்நுட்ப அணியின் ஒ.செ.வான சத்யாவும் கைதாகியிருக்கார். இந்த சத்யாவை இந்த வழக்கில் இருந்து காப்பாற்ற ஆளும் கட்சி பிரமுகர்கள் பலரும் முயற்சி செய்திருக் காங்க. அதற்கு தலித் கட்சி ஒன்றும் பெரிய அளவுக்கு சப்போர்ட் செய்திருக்கு. ஆனால் அதுக்குள்ள சத்யாவின் பெயர் வெளியே தெரிய ஆரம்பிச்சதும், வேறு வழியில்லாமல் அவரைக் கைது செய்திருக்கு போலீஸ். சத்யா தரப்பு மீது கட்சியின் தலைமையும் நடவடிக்கை எடுத்திருக்கு. இந்த வழக்கில் தொடர்புடைய இன்னும் சிலரை காவல்துறை 3 தனிப்படைகளை அமைத்துத் தேடி வருது. இந்தப் படுகொலையின் பின்னணியில் அரசியல் பகையோடு, மணல் கடத்தல் விவகாரமும் இருக்குன்னு டாக் அடிபடுது''’
""தேர்தல் முடிந்த கையோடு தமிழக அரசின் உயர் அதிகாரிகளை டெல்லி அழைத்திருந்ததே?’’
’""ஆமாங்க தலைவரே, டெல்லியின் அழைப்பின் பேரில், தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், உள்துறைச் செயலாளர் பிரபாகர், டி.ஜி.பி. திரிபாதி உள்ளிட்ட தமிழக அதிகாரிகள் டெல்லிக்குச் சென்றார்கள். கடந்த ஒரு வருடமாக ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் மற்றும் கன்ஃபர்ட் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளின் பதவி உயர்வுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் கொரோனா காரணமாக நடக்கலை. அத னால் அதிகாரிகளுக்குப் பதவி உயர்வும் கிடைக்கலை. எனவே இது குறித்து விவாதிக்கத்தான் தமிழக அதிகாரிகள் அழைக்கப் பட்டிருந்தாங்க. அங்கே அதி காரிகளின் பதவி உயர்வுகளுக் கான பட்டியலைக் கொடுத்து விட்டு அவர்கள் திரும்பியிருக்காங்க. அதன் அடிப்படையில், சுமார் 12 பேருக்கு கன்ஃபர்டு ஐ.ஏ. எஸ்.சாக பதவி உயர்வு கிடைக்க லாம்னு எதிர்பார்க்கப்படுது''’’
""நானும் ஒரு முக்கியமான தகவலைப் பகிர்ந்துக்கறேன். கடந்த இதழில், ஓய்வுபெற்ற டி.ஜி.பி. முத்துக்கருப்பன் உள்ளிட்ட அதிகாரிகள், திருச்சியில் ஒரு ஓட்டல் அறையில் தங்கி, ஆளுங் கட்சித் தரப்புக்கான, பண விநியோகத்தை செய்தாங்கன்னு நமக்குக் கிடைத்த தகவலின் அடிப் படையில், நாம் பேசிக்கிட்டோம். ஆனால், இந்த செய்தி தவறுன்னு சம்பந்தப்பட்ட முன்னாள் -இந்நாள் போலீஸ் அதிகாரிகள் மறுக்குறாங்க. ஊர்க்காவல்படை முன்னாள் அதிகாரி ஒருவர் வீட்டுத் திருமணத்துக்காக உயரதிகாரிகள் திருச்சி சென்று ஓட்டலில் தங்கியது அரசியல் காரணங்களுக்காக திசை திருப்பப் பட்டிருக்குன்னு சொல்றாங்க.''’’