லோ தலைவரே, 6-ஆம் தேதி பரபரப்பாக நடந்த வாக்குப்பதிவில், வாக்காளர்கள் மத்தியில் புதிய மாற்றத்தையும் எழுச்சியையும் தெளிவாகவே பார்க்க முடிந்தது. கிட்டத்தட்ட 73% வாக்குப்பதிவு. மதியம் ஒரு மணிக்குள்ளே 40 சதம் பேர் ஆர்வமாக வந்து வாக்களிச்சிருக்காங்க.''’’

""ஆமாம்ப்பா. வாக்குப்பதிவு நேரத்தில் தமிழக அரசின் செய்தித்துறையிடமே, அதிரடி மாற்றத்தைப் பார்க்க முடிந்ததே?''’’

""உண்மைதாங்க தலைவரே, தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறை, பல ஆண்டுகளாகவே அ.தி.மு.க.வின் பிரச்சார சாதனமாகவே செயல்பட்டு வருது. அது வெளியிடும் செய்திகளிலும் படங்களிலும் அரசின் திட்டங்களோடு, முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் மட்டும்தான் இடம்பெறுவார்கள். இந்த 10 ஆண்டுகளில் உலகமகா அதிசயமாக முதல்முறையாக, செய்தி மக்கள் தொடர்புத் துறை, எதிர்க்கட்சித் தலைவரான தி.மு.க. ஸ்டாலின் வாக்களித்ததை, செய்தி அறிக்கையா வெளியிட்டிருக்கு. இதையே, வாக்குப்பதிவின் போக்கைக் காட்டுவதா, அரசியல் நோக்கர்களும் அதிகாரிகளும் பார்க்குறாங்க.''’

rangcall

Advertisment

’""அதே சமயம், எடப்பாடி தரப்பும் கடைசி வரை நம்பிக்கையூட்டும் கணக்குகளைப் போட்டு வச்சிக்கிட்டு, இருந்ததே?''’’

""ஆமாங்க தலைவரே, நக்கீரன் உள்ளிட்ட ஊடகங்கள் எடுத்த கருத்துக் கணிப்புகள், எடப்பாடி தரப்புக்கு தொடர்ந்து பலத்த அதிர்ச்சியைத் தந்ததால், உளவுத்துறை மற்றும் முக்கிய புள்ளிகள் முலமாக, கொஞ்சம் பூஸ்ட் தரும்படியான சர்வே ஒன்றைக் கொடுங்கள்னு எடப் பாடி தரப்பு கேட்டு வாங்கி யிருக்கு. அவங்க குழம்பிக் குழம்பி பல்வேறு கணக்குகளைப் போட்டுப் பார்த்துட்டு, அ.தி. மு.க. 85, பா.ம.க. 9, பா.ஜ.க. 8, த.மா.கா. 2 -என்றெல்லாம் கணக்குப் போட்டு, கடைசிக் கட்டத்திலும் பண விநியோகம் நடந்தால், அ.தி.மு.க. கூட்டணி 100-ல் இருந்து 110 தொகுதிகள் வரை பிடித்து, ஆட்சியில் அமரலாம்னு சொல்லியிருக் காங்க. இதைக் கையில் வச்சிக் கிட்டுதான், பல தொகுதிகளிலும் வைட்டமின் ப மூலம் தெம்பு ஏற்றியது எடப்பாடி தரப்பு. காவல்துறையின் உதவியோடு பணம் அனுப்பப்பட்டுவிட்டதால், அது தேர்தலில் தங்களுக்கு ஆதரவாக மாயங்கள் செய்யும்னு எடப்பாடி நம்பறார்.''’’

""காவல்துறை அதிகாரிகள் எந்தளவு ஒத்துழைப்பா இருந்தாங்களாம்?''’’

Advertisment

""திருச்சி பகுதி சம்பந்தப்பட்ட சங்கதியை மட்டும் நான் சொல்றேன். தேர்தல் பறக்கும் படையினரின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு, கரன்ஸிக் கட்டுகளைத் திருச்சிக்கு கொண்டுவரணும்னு சுகாதார அமைச்சரான சி.விஜயபாஸ்கரும், போக்குவரத்துத்துறை அமைச்சரான எம்.ஆர்.விஜயபாஸ்கரும் களமிறங்கினாங்க. அதுக்கு மத்திய மண்டல ஐ.ஜி.யாக இருந்த ஜெயராமன் ஒத்துழைக்க மறுத்துட்டார். அதனால் டெல்லி தொடர்புகள் வரை காய்களை நகர்த்தி, தேர்தல் ஆணையத்துக்கு ப்ரஷர் கொடுத்து அவரை சென்னைக்கு டிரான்ஸ்பர் பண்ணவச்சி, அவருக்கு தண்டனை கொடுத்தாங்க. அதனால் மனுஷன் நொந்துட்டார்.''’’

rr""அப்புறம்?''’’

""திருச்சி மண்டல ஐ.ஜியா, அமல்ராஜைக் கொண்டு வரணும்னு ரெண்டு விஜயபாஸ்கர்களும் ப்ரஷர் கொடுக்க, தி.மு.க.வோ அமல் ராஜ் மீது தேர்தல் ஆணையத்திடம் புகார் கொடுத்தது. அதனால் தேர்தல் ஆணையம் அமல்ராஜை மேற்கு மண்டல ஐ.ஜி.யாக கோவைக்குத் தூக்கி அடிச்சிடிச்சி. இதில் இரண்டு விஜயபாஸ்கர் களும் அப்செட் ஆயிட்டாங்களாம். உடனே ஐ.ஜி.அமல்ராஜ், அந்த அமைச்சர்களுக்கு ஆறுதல் சொன்னதோடு, தானே முன்னின்று அவர்கள் விரும்பிய காரியத்தைச் செய்து கொடுத்துட்டாருன்னு ஐ.பி.எஸ். அதிகாரிகள் தரப்பே சொல்லுது. அது எப்படி என்பதையும் சொல்றேன். திருச்சியில் உள்ள ஓட்டலில் ஒரு ஹோம்கார்டு போலீஸ்காரர் பெயரில் ரூம்கள் புக் பண்ணப்பட்டிருக்கு. அந்த ஓட்டலுக்கு, போலீஸ் அதிகாரிகளால் தடுக்க முடியாதபடி மூன்று பேர் போலீஸ் பாதுகாப்போடே ’வெயிட்டா’ வந்திருக்காங்க.''’’

""யார் அந்த மூன்று பேர்?''’’

""சொல்றேங்க தலைவரே, கலைஞரின் நள்ளிரவுக் கைதை அராஜகமாக அரங்கேற்றிய, ஓய்வுபெற்ற டி.ஜி.பி., முத்துக்கருப்பன், மின்வாரிய விஜிலென்ஸ் ஐ.ஜி.யான பிரஜேஸ்குமார் ரவி, கோவை மண்டல ஐ.ஜியாக அமரவைக்கப்பட்ட அமல்ராஜ், இந்த மூணு பேரும்தான் அமைச்சர்கள் எதிர்பார்த்த வெயிட்டான விஷயத்தோடு வந்தாங்களாம். ரெண்டு நாள் அதே ஓட்டலில் தங்கி, எங்கெங்கே எவ்வளவு போகணுமோ, அதை எல்லாம் பிரிச்சி அவங்களே விநியோகம் பண்ணிட்டுதான் அங்கிருந்து கிளம்பினாங்களாம். எல்லோருமே பெரிய அதிகாரிகளா இருந்ததால் அவர்களின் வாகனங்கள் சோதனைக்கு ஆளாகாமல் வந்திருக்கு. இப்படி தமிழகம் முழுக்க, அதிகாரிகள் மூலமாகவே டிஸ்ட்ரிபியூஷன் நடந்ததா குற்றம்சாட்டப்படுது.''’’

""பறக்கும் படை அதிகாரிகள் டீம், சுற்றிச் சுற்றிவந்தும் கூட வாக்காளர்களுக்குப் போய்ச் சேர்ந்திருக்கே?''’’

rr

""உண்மைதாங்க தலைவரே, தேர்தல் பறக்கும் படையினர் இதுவரை 400 கோடி ரூபாய்க்கும் மேலாக ரொக்கப் பணத்தைக் கைப்பற்றியிருக்காங்க. அப்படியிருந்தும், ஆளும்கட்சித் தரப்பின் பணப் பட்டுவாடாவை முழுமையாகத் தடுக்க முடியலையேன்னு அதிகாரிகள் தரப்பே கை பிசையுது. கிராமம் மற்றும் நகர்ப்புறங்களில் அ.தி.மு.க. தரப்பு, ஓட்டுக்கு 1000 ரூபாயும், வி.வி.ஐ.பி. அமைச்சர்கள் போட்டியிடும் தொகுதிகளில் 3000 ரூபாயும் காவல்துறையினரின் ஒத்துழைப் போடு விநியோகிச்சிருக்கு. அதேபோல் தி.மு.க தரப்பும் பல தொகுதிகளில் 300 முதல் 500 ரூபாய் அளவுக்கு பணப்பட்டுவாடாவை நடத்தியிருக்கு. இதையெல்லாம் ஸ்மெல் செய்த அதிகாரிகள், தேர்தல் ஆணையத்திடம் ரிப்போர்ட் செய்திருக்காங்க.''’’

""பலவிதமான டெக்னிக்குகளைப் பயன் படுத்தி, ஆளும் தரப்பினர் பட்டுவாடா செய் தாங்கன்னும் அந்த ரிப்போர்ட்டில் சொல்லப் பட்டிருக்குதே?''’’

""உண்மைதாங்க தலைவரே, சில இடங்களில் பிரச்சார பிட் நோட்டீசையே அட்டையில் அச்சடித்து விநியோகம் செஞ்சிருக்காங்க. அது விளம்பரம்போலத் தெரிஞ்சாலும், அதுதான் பணத்துக்கான டோக்கனாம். அந்த அட்டை வினியோகிக்கப்பட்ட வீடுகளுக்குச் சென்ற இன்னொரு டீம், அட்டையைச் சரி பார்த்துவிட்டு இலைக்கு ஓட்டுப் போடுங்கன்னு சொல்லி, அவர்களுக்குப் பணம் கொடுத்திருக்கு. ஒரு வாரத்துக்கு இந்த அட்டைகள் விநியோகிக் கப்பட்டாலும், அதுக்கு கடந்த 4,5,6 ஆகிய தேதிகளில்தான் பணம் கொடுக்கப்பட்டிருக்கு. அதேபோல் வாக்குப் பதிவு அன்றும் கட்சி சாராத இளைஞர்கள் மூலமாக, பூத்துக்கு வந்த வாக்காளர் களுக்கு தலா 1000 ரூபாய் வீதமும் பரவலாக விநி யோகம் நடந் திருக்கு.''’’

""கடைசி வரை பா.ஜ.க. துரத்தியும், அதன் பிடியில் சிக்காமல் ரஜினி நழுவிவிட்டாரே?''

’""உண்மைதாங்க தலைவரே, தங்கள் கூட் டணிக்கு சாதகமாக ரஜினி வாய்ஸ் கொடுக்க ணும்னு பலவகையிலும் பா.ஜ.க. தலைகீழா நின்னு தண்ணி குடிச்சிப் பார்த்துச்சு. ரஜினி கொஞ்சமும் அசைஞ்சு கொடுக்காததால், கலைத்துறையின் அதிக பட்ச உயரிய விருதான தாதா சாகேப் விருதை அவருக்குக் கொடுத்தால் அவர் நெகிழ்ந்து நன்றி சொல்வார். அதையே தேர்தலுக்கு காயின் பண் ணிக்கலாம்னு பா.ஜ.க. டீம் திட்டமிட... அட, நல்ல ஐடியாவே இருக்கேன்னு மோடியும் பச்சைக்கொடி காட்டியிருக்கார். ரஜினியைப் பாராட்டிய மோடி "தலைவர்'னு வர்ணிக்க, அதை ஆர்.எஸ்.எஸ். தரப்பே ரசிக்கலையாம். ஆங்கிலப் பத்திரிகை மூலம் ரஜினியைப் பேசவைக்க ஆர்.எஸ்.எஸ். எடுத்த முயற்சியிலும் ரஜினி சிக்காமல் நழுவிட்டார்.''’’

""பலத்த எதிர்ப்புக்கிடையில் நியமிக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் சூரப்பா, ஓய்வுபெறுகிறாரே?''’’

""அதுபற்றி நான் சொல்றேன்... துணைவேந்தர் சூரப்பாவின் பதவிக்காலம் இம்மாதம் 11-ந் தேதியோடு முடிவடையுது. தனது பணிக்காலத்தில், அந்தப் பல்கலைக்கழகத்தை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் ஒப்படைப்பதற் காக வேலைகளைச் செய்து முடிச்சிட்டு, ஒருவழியாக சூரப்பா கிளம்பறார். மறுபடியும் தன் சேவை கருதி பதவி நீட்டிப்பு கிடைக்கும்னு அவர் செய்த முயற்சிகள் பலிக்கலை. புதிய துணைவேந்தரைப் பரிந்துரைக்க கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஒரு குழுவை அமைச்சிருக்கார். டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகதீஷ்குமார் தலைமையில் அமைக்கப்பட்ட அந்தக் குழுவில் கவர்னரின் பிரதிநிதியாக அந்த ஜெக தீஷ்குமாரே நியமிக்கப்பட, தமிழக அரசின் பிரதிநிதியாக ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ஷீலாராணி சுங்கத், அவினாசிலிங்கம் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் தியாகராஜன் ஆகியோர் இடம் பெற்றிருக்கிறார்கள். புதிய துணை வேந்தராக இந்த முறையாவது தமிழகத் தைச் சேர்ந்த ஒருவர் தேர்ந் தெடுக்கப்படுவாராங்கிற எதிர்பார்ப்பு எல்லாப் பக்கமும் இருக்கு.''’’