லோ தலைவரே.. ரஜினியின் அரசியல் கட்சி அறிவிப்பு, அவரது ரசிகர்களைவிடவும் பா.ஜ.க. தரப்பை ரொம்பவும் மகிழ்ச்சியடைய வச்சிருக்கு.''

""ஆமாம்பா, எதிர்பார்த்தபடி தங்களோட ரிமோட்டின் எல்லைக்குள் ரஜினி வந்துட்டதா அவங்க சந்தோஷப்படுறாங்க.''

""உண்மைதாங்க தலைவரே, வரும் தேர்தலில் தமிழகத்தில் மறுபடியும் தி.மு.க. ஆட்சிக்கு வந்துடக் கூடாதுன்னு, அரசியல்ல அடிச்சி விளையாட ஆரம்பிச்சிருக்கு டெல்லி பா.ஜ.க.. அதற்குத் தோதாக, ரஜினியின் புதிய கட்சியைத் தங்கள் கட்டுப்பாட்டிலேயே அது வச்சுக்க நினைக்கிது. அதேபோல் கமலின் மக்கள் நீதி மய்யத்திலும் பா.ஜ.க., தனது ஆதிக்கத்தைச் செலுத்த ஆரம்பிச்சிடுச்சி. குறிப்பா சொல்லனும்ன்னா, ரஜினியையும் கமலையும் தங்கள் அரசியல் படத்தில் ஹீரோக்களாக்கி, தி.மு.க. கூட்டணி எதிரான வில்லனா, தன்னை நிலை நிறுத்திக்க பா.ஜ.க. திட்டமிடுது.''

kamal

Advertisment

""கமலின் மக்கள் நீதி மய்யத்துக்கும் ரஜினியின் புதிய கட்சிக்கும் இந்துத்துவா மெண்டாலிட்டி உள்ள தனது பிரதிநிதிகளை, பா.ஜ.க அனுப்பிவைக்க ஆரம்பிச்சிடுச்சே?''

""உண்மைதாங்க தலைவரே, தமிழக அரசுப் பணியில் இருந்து வி.ஆர்.எஸ்.வாங்கிய சந்தோஷ்பாபு ஐ.ஏ.எஸ்., முதலில் பா.ஜ.க.வில்தான் சேர ஆசைப்பட்டார். அதுக்காக அவர் மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் மூலம், அமித்ஷாவைத் தொடர்பு கொண்டப்ப, நீங்கள் இப்போதைக்கு பா.ஜ.க.வில் சேரவேண்டாம். நேராகச் சென்று கமலிடம் ஐக்கியமாகுங்கள்னு, அவருக்கு சில அசைன்மெண்டுகளையும் கொடுத்து, அமித்ஷாதான் அவரை மய்யத்துக்கு அனுப்பிவச்சாராம்.''

""மக்கள் நீதி மய்யத்தை, இந்துத்துவா மையமாக்கும் முயற்சிதானே இது?''

Advertisment

rang

""ஆமாங்க தலைவரே, முதல்வர் எடப்பாடி சில மாதங்களுக்கு முன் ஃபாரின் டூர் போனது நினைவிருக்குதா? தொழில் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுப்பதுங் கிற பேரில் நடத்தப்பட்ட அந்த டூரின் போது, அவரோடு சென்று அங்கே சில போலி நிறுவனங்களையும் ஏற்பாடு செய்தவர்தான் இந்த சந்தோஷ் பாபுனு கோட்டையிலே சிலர் சொல்றாங்க. அமைச்சர் உதயகுமாருடன், இணைய கேபிள் டெண்டர் விவகாரத்தில் இவர் முரண்பட்ட கதையையும் கோட்டை வட்டாரம் சுவாரஸ்யமாச் சொல்லுது. கவர்னர் பன்வாரிலால் புரோஹித்தின் நெருக்கமான நட்பும் இவருக்கு உண்டு. இப்படி பலவகையிலும் பெரிய இடத்துத் தொடர்புகளை வளர்த்து வைத்திருக்கும் சந்தோஷ்பாபு, கமல் கட்சியில் சேர்ந்த வேகத்திலேயே, அண்ணா பல்கலைக் கழகத் துணைவேந்தர் சூரப்பாவுக்கு ஆதரவாக கமலிடமிருந்து குரல் வந்திருக்கு. தமிழகத்தின் ஆளுங்கட்சி- எதிர்க்கட்சின்னு பல தரப்பிலிருந்தும் எதிர்க்கப்படுபவர், பா.ஜ.கவால் நியமிக்கப்பட்ட சூரப்பா. அவருக்கு கமல் ஆதரவுக் குரல். இதுதான் டெல்லியின் மேஜிக். இதேபோல் சகாயம் ஐ.ஏ.எஸ்.ஸை ரஜினி தொடங்க இருக்கும் கட்சிக்கு அனுப்பவும் டெல்லி காய் நகர்த்துதாம்.''

""சகாயம் ஐ.ஏ.எஸ். கிருஸ்துவர் ஆச்சே? அவர் சம்மதிப்பாரா?''

""இதே கேள்வியைத் தான் அவங்க தரப்பிடம் கேட்டேங்க தலைவரே, அவரை எப்படி சம்மதிக்க வைக்கிறதுங்கிற டெக்னிக் எங்க தலை மைக்குத் தெரியும்னு சொல்றதோடு, நிர்வாகத்தில் சிறந்து விளங்கிய அதிகாரிகளும், படித்தவர்களும் ரஜினி கட்சியில் இருக்காங்கங்கிற தோற்றத்தை, அவர் கட்சிக்கு பா.ஜ.க. தலைமை ஏற்படுத்த முயலுதுன்னு சொல்றாங்க. இதைத் தொடர்ந்து ரஜினி, விரைவில் டெல்லிக்குச் செல்ல இருக்கிறார். அங்கு அவர் அமித்சாவையும் சில முக்கிய புள்ளிகளையும் சந்தித்துப் பேச இருக்கிறாராம்.''

""ரஜினியின் தேர்தல் பிரசாரத்துக்கான சகல வெயிட்டான வியூகங்களையும் பா.ஜ.க.வே வகுக்குதாமே?''

""அதுவும் உண்மைதாங்க தலைவரே, ரஜினியை அரசியலுக்குள் இழுத்துவிட்டிருக்கும் பாஜக, அவரது உடல் நலத்திலும் அக்கறை கொண்டிருக்குதாம். தேர்தல் நேரத்தில் அவரது பிரச்சாரம் சென்னை, திருச்சி, திருவண்ணாமலை, சேலம், கோவை, மதுரை, கன்னியாகுமரி, பாண்டிச் சேரி ஆகிய 8 இடங்களில் மட்டுமே இருக்கும்படி, பிரச்சார ரூட்டை பா.ஜ.க. தரப்பு வகுத்து வருகிறதாம். ஒவ்வோரு கூட்டத்துக்கும் இடை யே அவர் வீட்டுக்குத் திரும்பிவந்து போது மான ஓய்வெடுக்கும் படி, இடைவெளி யோடுதான் அவரது கூட்டங்கள் இருக்கு மாம். இதையெல்லாம் அறிந்த ரஜினியின் மக்கள் மன்றத்தினர், ரஜினி தொடங்கும் கட்சியே பா.ஜ.க. கைக்குப் போயிடும் போலிருக்கே. அதில் நம்ம ரோல் என்னன்னு குழம்பறாங்களாம்.''

""பா.ஜ.க.வின் இந்த திருவிளையாடல்களுக்கு நடுவே அவங்கக் கட்சிப் பிரமுகர் ஒருவரை காவல் துறை குறிவச்சிருக்கே?''

""ஆமாங்க தலைவரே, பா.ஜ.க. மாநிலத் தலைவர் முருகன் திருத்தணியில் வேல் யாத்திரை நடத்தியபோது, போலீசுடன் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில், பா.ஜ.க. லோக்கல் பிரமுகரான ஓம்சக்தி செல்வமணி என்பவர், மாவட்ட எஸ்.பி. அரவிந்தனின் சட்டையைப் பிடித்து உலுக்கும் ஃபோட்டோ சமூக ஊடகங் களில் வைரலானது. இதைப் பார்த்துக் கடுப்பான ஐ.பி.எஸ். அதிகாரிகள் அசோஷியேசன், ஓம் சக்தியின் க்ரைம் ஹிஸ்ட்ரியை எடுத்திருக்கிறது. ரவுடித்தனத்தில் பெயர் பெற்ற அவரை நோக்கி விரைவில் கடும் நடவடிக்கைகள் பாயுமாம்.''

""அதிருக்கட்டும்பா, ரஜினியின் அரசியல் எண்ட்ரி அறிவிப்பால் எடப்பாடி அப்செட்டுன்னு சொல்லப்படுதே?''

""உண்மைதாங்க தலைவரே, தி.மு.க வெற்றியைத் தடுக்கத்தான் ரஜினி கட்சி ஆரம்பிக்கிறார் என்று பொதுவாகப் பார்க்கப்பட்டாலும், அதி.மு.க. வாக்கு வங்கியில் ஓட்டை போட்டுடுவாரோன்னு எடப்பாடி பதறுறாராம். மாவட்ட நிர்வாகிகள் தொடங்கி, தலைமை நிர்வாகி கள் வரை யாராவது ஊசலாட்டத்தில் இருக்காங்களான்னு உளவுத்துறை மூலம் கண்காணிக்கச் சொல்லியிருக்கிறாராம். அதே சமயம் தேர்தல் நேரத்தில் கரன்ஸியை வைத்தே ரஜினிக்கான ஆதரவைத் தங்கள் பக்கம் திருப்பிவிடலாம்னும் கணக்கு போடு றாராம். தேர்தல் வருவதற்குள் வாக்காளர்களை மகிழ்விக்கும் வகையில் முதற்கட்டமாக ரேசன் கார்டுக்கு தலா 2 ஆயிரம் ரூபாய் வீதம் வினியோ கிக்கத் திட்டமிட்டி ருக்கிறார் எடப்பாடி. இதை அனைவரும் பெறனும் என்பதற் காகத்தான் வரும் 25 ஆம் தேதிக்குள் சர்க்கரை கார்டுகளை அரிசிக் கார்டுகளாக மாற்றிக்கொள்ள லாம்னு அறிவிக்கப் பட்டிருக்கு.''

alagiri

""வாக்காளர்களை வளைக்க நினைக்கும் எடப்பாடிக்கு, ஜெ.’ படத்தைக் கிழித்து, அவர் கட்சிக்காரங்களே ஷாக் கொடுத்திருக்காங்களே?''

""ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் சிட்டிங் மந்திரி கருப்பணன் ஒரு கோஷ்டியாவும், மாஜி மந்திரியும் எம்.எல்.ஏ.வுமான தோப்பு வெங்கடா சலம் இன்னொரு கோஷ்டியாவும் முட்டி மோதிக் கிட்டு இருக்காங்க. கருப்பணனின் ஆதரவாள ரான முன்னாள் மாவட்ட மாணவரணி செயலாளரும் ஒன்றிய கவுன் சிலருமான ஜெயக்குமார், வரும் தேர்தலில் பெருந்துறையில் சீட் வாங்க, எடப்பாடி வரை ரூட் போட்டுக்கிட்டு இருக்கார். இது தோப்புத் தரப்பை ரொம்பவே எரிச்சல் படுத்தியிருக்கு. இந்த நிலையில், ஜெ’வின் நான்காம் ஆண்டு நினைவு நாளுக்காக அவர் படத்தோடு ஜெயக்குமார் தொகுதி முழுக்க ஒட்டியிருந்த போஸ்டர்கள் கிழித்தெறியப்பட, இது தோப்புத் தரப்பின் வேலைன்னு கட்சித் தலைமைவரை ஜெயக்குமார் புகாரைக் கொண்டு போயிருக்காராம்.''

""தமிழக அரசியலில் டெல்லி நடத்திவரும் சித்து விளையாட்டுக்களை தி.மு.க. கூட்டணி எப்படிப் பார்க்குது?''

""தி.மு..க.வுக்கு ரஜினியின் அரசியல் எண்ட்ரி யால் பாதிப்புகள் இருக்கலாம்னு கூட்டணிக் கட்சிகள் நினைக்கிது. குறிப்பா, தேர்தல் களத்தில் அதி.மு.க.- பா.ஜ.க. அணியைத் தவிர தனக்கு வேறு போட்டியாளர் இல்லைன்னு தி.மு.க அணி இதுவரை தெம்பாக இருந்தது. அதனால் தி.மு.க., தன் கூட்டணிக் கட்சிகளிடம் சீட் ஷேரிங் விசயத்தில் கறாராகவே இருந்தது. இப்ப ரஜினி ஏற்படுத்தும் சலசலப்பால், எந்த வகையிலும் சறுக்கிவிடக் கூடாதுன்னு நினைக்கும் தி.மு.க., இனி சீட் ஷேரிங்கில் கொஞ்சம் லிபரலாக நடந்து அதிக சீட்டுகளைக் கொடுக்கலாம்னு அந்தக் கட்சிகள் கணக்குப் போடுது. அதே சமயம் பா.ஜ.க.வின் இந்த பின்வாசல் அரசியல் தோற்கடிக்கப்படனும்னு நினைக்கும் காங்கிரஸின் மூத்த தலைவர்கள், சீட் விவகாரத்தில் தி.மு.க.வுக்கு அதிக நெருக்கடி தர வேண்டாம்னு சொல்லத் தொடங்கிவிட்டார்களாம். இந்த நிலையில் விரைவில் தி.மு.க.வுடன் கூட்டணி-சீட் பங்கீடு பற்றிப் பேச, ராகுல் காந்தி வருவதாகவும் தகவல் கசியுது.''

""நானும் முக்கியமான தகவலைப் பகிர்ந்துக்கறேன். பா.ஜ.க.வின் நிர்பந்தம் காரணமாக மு.க.அழகிரியும் தனிக் கட்சி தொடங்குவது பற்றிய ஆலோசனையில் இருக்கிறாராம். அதன் மூலம் ரஜினியுடன் இணைந்து ஸ்டாலினுக்கு எதிரான அரசியலை முன்னெடுக்க நினைக்கும் அவர், திருவாரூரில் உதயநிதி போட்டியிட்டால் அவரை எதிர்த்து தன் மகன் துரை தயாநிதியை களமிறக்குவது பற்றியும் யோசிக்கிறாராம். இதையறிந்த கலைஞர் குடும்பத்தினர், அவரை சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கியிருப்பதாகவும் டாக் அடிபடுகிறது.''