Advertisment

ராங்கால்! தமிழக பாஜகவில் தனி அணி! அதிகாரிகளைக் குறிவைக்கும் அமலாக்கத்துறை!

rr

"ஹலோ தலைவரே, உரசல், ஆதங்கம், கோஷ்டி, சர்ச்சைகள்னு விதவிதமான செய்திகள் கிளம்பி, தமிழக அரசியல் களத்தைப் பரபரப்பாக்கி வருது.''”

"ஆமாம்பா, முதல்வர் ஸ்டாலினுக் கும் துணை முதல்வர் உதயநிதிக்கும் இடையில் கூட உரசல்ன்னு தகவல் பரவுச்சே?’''’

"சொல்றேங்க தலைவரே, தி.மு.க.வைப் பொறுத்தவரை கட்சிப் பணிகள் விறுவிறுப்பாக நடக்கணும்ன்னா, இரண்டு மாவட்டத்திற்கு ஒரு மா.செ.ன்னு நிர்வாக மாற்றங்களைக் கொண்டுவரணும்ன்னு, சபரீசனின் ’பென்’ அமைப்பு ஏற்கெனவே அறிவாலயத்துக்கு ஆலோசனை சொன்னது. இதை ஸ்டாலினும் உதயநிதியும் அப்போதே உற்சாகமாக ஏற்றுக்கொண் டார்கள். அதே சமயம், தி.மு.க.வில் இருக்கும் சில மா.செ.க்கள், இதன்மூலம் தங்கள் அதிகார எல்லை சுருங்குவதை விரும்பவில்லையாம். உதாரணத்திற்கு அமைச்சர் சேகர்பாபுவின் கட்டுப்பாட் டில், இரண்டுக்கும் மேற்பட்ட மாவட்டங்கள் இருக்கின்றன. இவற்றைப் பிரித்து, கொளத்தூர் தொகுதி உட்பட சிலவற்றை ஐ.சி.எஃப். முரளீதரனுக்குக் கொடுக்கலாம்ன்னு சொன் னாங்களாம் ஆனால் களப்பணிகள் மூலம் தனது எல்லைக்குட்பட்ட பகுதி மக்களோடு, ரொம்பவே ஒன்றியிருக்கும் சேகர்பாபு, இதற்கு இசையவில்லையாம்.''”

"அவர் இப்படி நினைப் பது இயல்புதானே?''”

"ஆமாங்க தலை வரே, சேகர்பாபுவைப் போலவே, மற்ற மாசெ.க்களும் இதே கருத்தில் இருப்பதால், சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு, இப்படி கட்சி அமைப்புகளில் அதிகாரப் பகிர்வை ஏற்படுத்தினால் மா.செ.க்கள் மத்தியில் சுணக்கம் ஏற்படலாம்ன்னு, அந்தத் திட்டத் தையே ஸ்டாலின் நிறுத்தி வைத்துவிட்டாராம். தேர்தல் முடிந்தபிறகு இது குறித்து விவாதித்து முடிவெடுக்கலாம்ன்னு உதயநிதியையும் அவர் சமாதானப்படுத்திவிட்டார். ஆனால், இது தொடர்பாக ஸ்டாலி னும் உதயநிதியும் இருமுனைகளில் இருந்து விவாதித்ததை வைத்துதான், இவர்கள் இருவருக்கும் இடையில் கருத்து முரண் என்றும், அதைத் தொடர்ந்து உரசல் என்றும் பற்றவைத்து விட்டார்களாம். உதயநிதிக்கு என்று தனிப்பட்ட கருத்துக்கள் சில இருந்தாலும், அவர் என்றைக்கும் அப்பா சொல்லைத் தட்டாத பிள்ளைதான் என்கிறார்கள். அதோடு, கலைஞர் குடும்பத்தில் அதிகார விவகாரங் களை வைத்து, எந்த நிலையிலும் உறவுச் சிக்கல்கள் எப்போதும் வராது என்கிறது அறிவாலயத் தரப்பு.''”

"முதல்வர் ஊட்டிக்குச் செல்வதாகத் தகவல் வந்ததே?''”.

Advertisment

cm

"அண்மைக்காலமாக, உரிய ஓய்வு கூட எடுக்காமல் தொடர் பணிகளில் முதல்வர் ஸ்டாலின் ஈடுபட்டு வருகிறார். அதனால் அவரிடம், ஒரு வாரமாவது

"ஹலோ தலைவரே, உரசல், ஆதங்கம், கோஷ்டி, சர்ச்சைகள்னு விதவிதமான செய்திகள் கிளம்பி, தமிழக அரசியல் களத்தைப் பரபரப்பாக்கி வருது.''”

"ஆமாம்பா, முதல்வர் ஸ்டாலினுக் கும் துணை முதல்வர் உதயநிதிக்கும் இடையில் கூட உரசல்ன்னு தகவல் பரவுச்சே?’''’

"சொல்றேங்க தலைவரே, தி.மு.க.வைப் பொறுத்தவரை கட்சிப் பணிகள் விறுவிறுப்பாக நடக்கணும்ன்னா, இரண்டு மாவட்டத்திற்கு ஒரு மா.செ.ன்னு நிர்வாக மாற்றங்களைக் கொண்டுவரணும்ன்னு, சபரீசனின் ’பென்’ அமைப்பு ஏற்கெனவே அறிவாலயத்துக்கு ஆலோசனை சொன்னது. இதை ஸ்டாலினும் உதயநிதியும் அப்போதே உற்சாகமாக ஏற்றுக்கொண் டார்கள். அதே சமயம், தி.மு.க.வில் இருக்கும் சில மா.செ.க்கள், இதன்மூலம் தங்கள் அதிகார எல்லை சுருங்குவதை விரும்பவில்லையாம். உதாரணத்திற்கு அமைச்சர் சேகர்பாபுவின் கட்டுப்பாட் டில், இரண்டுக்கும் மேற்பட்ட மாவட்டங்கள் இருக்கின்றன. இவற்றைப் பிரித்து, கொளத்தூர் தொகுதி உட்பட சிலவற்றை ஐ.சி.எஃப். முரளீதரனுக்குக் கொடுக்கலாம்ன்னு சொன் னாங்களாம் ஆனால் களப்பணிகள் மூலம் தனது எல்லைக்குட்பட்ட பகுதி மக்களோடு, ரொம்பவே ஒன்றியிருக்கும் சேகர்பாபு, இதற்கு இசையவில்லையாம்.''”

"அவர் இப்படி நினைப் பது இயல்புதானே?''”

"ஆமாங்க தலை வரே, சேகர்பாபுவைப் போலவே, மற்ற மாசெ.க்களும் இதே கருத்தில் இருப்பதால், சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு, இப்படி கட்சி அமைப்புகளில் அதிகாரப் பகிர்வை ஏற்படுத்தினால் மா.செ.க்கள் மத்தியில் சுணக்கம் ஏற்படலாம்ன்னு, அந்தத் திட்டத் தையே ஸ்டாலின் நிறுத்தி வைத்துவிட்டாராம். தேர்தல் முடிந்தபிறகு இது குறித்து விவாதித்து முடிவெடுக்கலாம்ன்னு உதயநிதியையும் அவர் சமாதானப்படுத்திவிட்டார். ஆனால், இது தொடர்பாக ஸ்டாலி னும் உதயநிதியும் இருமுனைகளில் இருந்து விவாதித்ததை வைத்துதான், இவர்கள் இருவருக்கும் இடையில் கருத்து முரண் என்றும், அதைத் தொடர்ந்து உரசல் என்றும் பற்றவைத்து விட்டார்களாம். உதயநிதிக்கு என்று தனிப்பட்ட கருத்துக்கள் சில இருந்தாலும், அவர் என்றைக்கும் அப்பா சொல்லைத் தட்டாத பிள்ளைதான் என்கிறார்கள். அதோடு, கலைஞர் குடும்பத்தில் அதிகார விவகாரங் களை வைத்து, எந்த நிலையிலும் உறவுச் சிக்கல்கள் எப்போதும் வராது என்கிறது அறிவாலயத் தரப்பு.''”

"முதல்வர் ஊட்டிக்குச் செல்வதாகத் தகவல் வந்ததே?''”.

Advertisment

cm

"அண்மைக்காலமாக, உரிய ஓய்வு கூட எடுக்காமல் தொடர் பணிகளில் முதல்வர் ஸ்டாலின் ஈடுபட்டு வருகிறார். அதனால் அவரிடம், ஒரு வாரமாவது சற்று ஓய்வு எடுங்கள். டென்சன் இல்லாமல் இருங்கள். ஊட்டி அல்லது கொடைக்கானல் போய் வாருங்கள் என அவரது குடும்ப மருத்துவர்களும், நண்பர்களும் கடந்த ஒரு மாதமாகவே சொல்லி வந்தனர். இந்த நிலையில் குடும்பத்தினரும் அதையே வலியுறுத்தியதால், ஊட்டி மலர்க் கண்காட்சியைத் திறந்துவைக்கும் நிகழ்ச்சிக்கு செல்வது என்றும், அங்கே ஒருவார காலம் ஓய்வெடுத்துவரலாமென்றும் ஸ்டாலின் முடிவுசெய்தார்.இதற்கிடையே பாகிஸ் தானுடன் போர் ஏற்பட்டதால், இந்த ஊட்டி பயணத்தை ஸ்டாலின் ஒத்திவைக்கலாமா? என்று யோசித்தார். இந்நிலையில் போர் நிறுத்தம் ஏற்பட்டிருப்பதை அடுத்து திட்டமிட்டபடி ஊட்டிக்கு கிளம்பினார் முதல்வர் என்கிறார்கள்.''”

Advertisment

"தன்னிடம் இருந்த கனிமவளத்துறை பறிக்கப்பட்டதில் அமைச்சர் துரைமுருகன் இன்னும் ஆதங்கத்தில் இருக்கிறாராமே?''”

"உண்மைதாங்க தலைவரே, அமலாக் கத்துறை மூலம் அமைச்சர் துரைமுருக னைக் குறிவைத்தது டெல்லி.''

rr"மணல் மும்மூர்த்தி களான ராமச்சந்திரன், ரத்தினம், கரிகாலன் ஆகியோ ரைத் தன் கையில் வைத்துக் கொண்டு அவர் நடத்திவந்த பரிபாலனத்தை, இஞ்ச் பை இஞ்ச்சாக கண்காணித்து, அவருக்கு எதிரான ஆவணங்கள் தொகுக்கப்பட்டிருக்கின்றன. இதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் களும் விசாரணைக்கு உட்படுத்தப் பட்டனர். அடுத்து அமைச்சர் துரைமுருகனை அவர்கள் அட்டாக் செய்யலாம் என்ற நிலையில், வயது முதிர்வில் இருக்கும் துரைமுருகனால், அதை மேனேஜ் செய்வது கஷ்டம் என்று நினைத்த ஸ்டாலின், கனிமவளத்துறையை அமைச்சர் ரகுபதியிடம் கொடுத்திருக்கிறாராம். இதன் மூலம் துரைமுருகன் ஒருவகையில் காப்பாற்றப்பட்டிருக்கிறார் என்கிறார்கள். புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த அந்த மணல் மும்மூர்த்திகள், அதே மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் ரகுபதி வீட்டிற்குச் சென்று, உட்காரத் தொடங்கிவிட்டார்களாம். இவர்களை எப்படி அமைச்சர் ரகுபதி, மேனேஜ் செய்யப்போகிறார் என்கிற கேள்வி இப்போது எழுந்திருக்கிறது.''”

"அதே சமயம், தமிழக அரசின் உயர் அதிகாரிகள் சிலரைக் குறிவைத்து அம லாக்கத்துறை பாயப்போகிறது என்றும் செய்திகள் வருகிறதே?''”

"போர்ப் பதட்டம் காரணமாக மத்திய அரசின் விசாரணை அமைப்புகள், தங்கள் நடவடிக்கை களை ஒத்திவைத்து அமைதிகாத்தபடி இருந்தன. இப்போது போர் நிறுத்தம் அறிவிக்கப் பட்டிருப்பதால், மீண்டும் அவை அடுத்தடுத்த நகர்வுகள் குறித்து ஆலோசிக்கத் தொடங்கிவிட்டன என்கிறார்கள். குறிப்பாக இவற்றில் அமலாக் கத்துறை, தமிழகத்தில் சில அதிரடி ரெய்டுகளை நடத்த இருக்கிறதாம். இதற் காக ஆவணங்கள் எல்லாம் சரிபார்க் கப்பட்டு வருகின்றனவாம். இவற் றின் அடிப்படையில் அவர்கள் இந்த முறை குறிவைத்திருப்பது, தமிழக ஐ.ஏ.எஸ்., ஐ,.பி.எஸ். அதிகாரிகள் சிலரைத்தானாம். ஏகத்துக்கும் வருமானத்தில் கொழிக்கும் அந்த அதிகாரி கள், நிறைய சொத்துக் களை வாங்கிக் குவித் திருக்கிறார்களாம். அதிலும் அவர்கள், மிகவும் காஸ்ட்லியான பகுதிகளான, கிழக்கு கடற்கரை சாலையில் ஏக்கர் கணக்கில் நிலங்களை பலரிடமிருதும் வளைத்துப் போட்டிருக்கிறார்களாம். அது குறித்த வில்லங்க விபரங்களைத் திரட்டி வைத்திருக்கும் அமலாக்கத் துறை, விரைவில் தனது பாணியில் அதிரடியில் இறங்கப் போகிறதாம்.''”

"தமிழக பா.ஜ.க.வில் தனியாக ஒரு கோஷ்டி உருவாகியிருப்பதாகச் சொல்கிறார்களே?''”

rr

"ஆமாங்க தலைவரே, தமிழக பா.ஜ.க.வின் முன்னாள் தலைவருக்கு, கட்சியில் எந்தவித முக்கியத்துவமும் கொடுக்கப் படாததால் அவர் ரொம்பவே நொந்து போயிருக்கிறாராம். இதனால் தனது ஆதரவாளர்களை அழைத்த அவர்,’நம்மால் சும்மா உட்கார்ந்து எல்லாத்தையும் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்க முடியாது. அதனால், நாம் தமிழக பா.ஜ.க.வில் தனி அணியாக இயங்குவோம். கட்சிப் பணிகளைச் செய்ய, இங்கே யாரிடமும் நாம் அனுமதி பெறவேண்டியதில்லை. அதனால் தனியாக இயங்க ஆரம்பியுங்கள் என்றாராம். இதைத் தொடர்ந்து கடந்த 11ஆம் தேதி கோவையில், பல்லடம் -உடுமலை சாலையில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் அவரது ஆதரவாளர்கள் சுமார் 1000 பேர், இந்திய ராணுவத்துக்குப் பாராட்டுக் கூட்டம் என்ற பெயரில் கூடியிருக்கிறார்கள். எப்படியெல்லாம் தனித்துச் செயல்படலாம் என்று ஆலோசனை நடத்தியிருக்கிறார்கள். மாஜி தலைவரின் தலைமையிலேயே தொடர்ந்து இயங்கி, கொங்கு மண்டலத்தில் கட்சியின் வலிமையை நாம் நிரூபிப்போம் என்றெல்லாம் அவர்கள் முடிவெடுத்திருக்கிறார்கள்.''

"இந்தத் தகவலை அறிந்து கமலாலயத் தரப்பே பரபரப்பில் மூழ்கியிருக்கிறதாம்.''”

"வானதி சீனிவாசனை பா.ஜ.க.வினரே கடுமையாக விமர்சிக்கிறார்களே?''”

"பா.ஜ.க.வின் தேசிய மகளிரணித் தலைவியான வானதி சீனிவாசன், ஆஸ்தி ரேலியாவிற்குத் தன் குடும்ப சகிதமாகச் சுற்றுலா சென்றிருக்கிறார். இந்தியாவைப் போர் மேகங்கள் சூழ்ந்திருக்கும் நேரத்தில், பா.ஜ.க.வின் முக்கியஸ்தர்கள் பலரும் தங்கள் வெளிநாட்டுப் பயணத்தை ரத்து செய்திருக்கிறார்கள். இந்த நிலையில், வானதியோ, போரைப் பற்றியெல்லாம் கவலைப்படவில்லையாம். இது எந்த மாதிரி யான தேசபக்தி என்று கொங்கு பகுதி பா.ஜ.க.வினரே அவருக்கு எதிராகக் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். அவர் தனது எம்.எல்.ஏ. அலுவலகத்தைத் திறந்த போதே ‘தனலாபம்’ என்று எழுதிவைத்துத் திறந்தவர் என்றும், அவர் அரசியலில் எந்த வகையிலும் சின்ன நஷ்டத்தைக் கூட ஏற்கமாட்டார் என்றும், இதற்கு அவர்கள் விளக்கமும் கொடுத்து வருகிறார்கள்.''”

"தன்னைத் திட்டமிட்டு அவமானப்படுத்தி வர்றதா காரைக்குடி மாநகராட்சி ஆணையர் மனத்தாங்கலில் இருக்காராமே?''”

"ஆமாங்க தலைவரே, காரைக்குடி மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டவுடனேயே அதன் ஆணையராக பதவியேற்றவர் கொங்குமண்டலத்தைச் சேர்ந்த சித்ரா எனும் பெண் அதிகாரி. வந்த நாளிலிருந்தே மாநகராட்சி மேயர் முத்து துரைக்கும், அவருக்கும் ஏழாம் பொருத்தம். தான் சொல்வதை ஆணையர் கேட்கவில்லை என மேயர் குற்றம்சாட்ட, இருவருக்குமிடையே பஞ்சாயத்து செய்துவைத்தனர் இலக்கிய அணி தென்னவனும், அமைச்சர் பெரிய கருப்பனும். அமைச்சர் நேருவும் தன் பங்குக்கு மேயரைக் கண்டித்திருக்கிறார். இந்நிலையில், சமீபத்தில் காரைக்குடியிலிருந்து மதுரை மாநகராட்சிக்கு துணை ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டார் சித்ரா. ஆணையர் சித்ரா காரைக்குடியில் தனக்கு ஒதுக்கப் பட்ட குடியிருப்பைக் காலிசெய்யாமலும், அந்தப் பதவியை ஏற்காமலும் விடுப்பில் சென்றுள்ளார். அவர் மீண்டும் காரைக்குடிக்கே வந்துவிட முயற்சித்து வருவதாக நகர்ப்புற வளர்ச்சித்துறையிலிருந்து தகவல் கசிந் திருக்கின்றது. இதற்கு நடுவில் சித்ராவின் புகைப்படம் போட்டு போஸ்டர் அடித்து குப்பைத் தொட்டிகளிலும், கழிப்பிடச்சுவர் களிலும் ஒட்டி வன்மத்தை வெளிப்படுத்தி யுள்ளது குறிப்பிட்ட தரப்பு. போஸ்டர் ஒட்டியது யார் என காவல்துறை விசா ரணையில் இறங் கிய நிலையில், ஐயோ, அந்த அளவுக்கு நாங்க மோச மில்லை என ஜகா வாங்கு கிறதாம் மேயர் தரப்பு!''”

"திடீர்னு ஆத்தூர் ரமேஷுக்கு சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சம்மன் அனுப்பியிருக்கே… என்ன விவரம்?''”

"கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கின் தடயங்களை அழிக்க சிலர் முயற்சிசெய்வதால் வழக்கினை விரைந்துமுடிக்க முயற்சி செய்துவருகின் றது சி.பி.சி.ஐ.டி.. தடயங்களை அழிக்கமுற்பட் டது, கனகராஜின் தம்பி தனபால், அவரது உறவின ரான சேலம் மாவட்டம் ஆத் தூரைச் சேர்ந்த ரமேஷ் ஆகியோரே எனத் தெரியவர அவர்களைக் கைது செய்தது சி.பி.சி.ஐ.டி.. இதில் தனபால், ரமேஷ் ஆகி யோர் ஜாமீனில் வெளி வந்துள்ளனர். இந்த நிலையில், "கொடநாடு சம்பவத்தில் நடத் தப்பட்ட விசா ரணையில் சில சந் தேகங்கள் உள்ளன. அதுதொடர்பாக ரமேஷிடம் விசாரணை நடத்தவேண்டும். எனவே ஆத்தூரைச் சேர்ந்த ரமேஷ் வருகின்ற மே 22-ஆம் தேதி கோவை அலு வலகத்தில் விசா ரணைக்கு ஆஜராக வேண்டும் என சி.பி.சி.ஐ.டி..போலீசார் சம்மன் அனுப்பி யுள்ளனர். இதில் ஆத்தூர் ரமேஷ் வாய்திறக்கும் பட்சத் தில் சேலம் இளங் கோவனுக்கும், எடப்பாடி பழனிச்சாமிக்கும் சிக்கல் உண்டாகலாம் என அ.தி.மு.க. மேல்மட்டம் கலக்கத்தில் உள்ளது.''

rr

"என் காதுக்கு வந்த செய்தியை, நானும் பகிர்ந்துக்கறேன். அ.தி.மு.க. சீனியர்கள் எடப்பாடி மீது ஆதங்கத்தில் இருக்கிறார்களாம். பாகிஸ்தானுக்கு எதிரான போரில் இந்திய ராணுவத்தின் நடவடிக்கைகளை ஆதரித்து முதல்வர் தலைமையில் தி.மு.க. கூட்டணி களமிறங்கி, பேரணியை நடத்தியிருப்பது, தேசிய அளவில் கவனம் பெற்றிருக்கிறது. எனவே இதுபோல் அ.தி.மு.க. சார்பில், இந்திய ராணுவத்தை ஆதரித்து மனித சங்கிலியையாவது எடப்பாடி நடத்தியிருக்க வேண்டும். அல்லது ராணுவத்தையும் பிரதமர் மோடியையும் வாழ்த்தி ஒரு அறிக்கையாவது அவர் தந்திருக்க வேண்டும். இது எதையுமே செய்யாமல், அவர் சும்மா உட்கார்ந்திருந்தால் எப்படி மக்கள் மத்தியில் கவனம் பெற முடியும்?’ என்று அவர்கள் பகிரங்கமாகவே தங்களுக்குள் விவாதிக்கிறார்களாம்.''

____________

இறுதிச் சுற்று!

இந்தியாவும் பாகிஸ்தானும் பரஸ்பரம் போர் நிறுத்தம் அறிவித்துள்ள நிலையில், பாகிஸ்தான் பயங்கரவாதிகளை கண்காணிப்பதற்காக அமைக்கப்பட்டு வரும் விண்வெளி கண்காணிப்பு சேட்டிலைட் திட்டப்பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட துறையின் உயரதிகாரிகளுக்கு திங்கள்கிழமை (12/05/25) மத்திய அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இந்த திட்டம் பயன்பாட்டுக்கு வரும்போது, "சேட்டிலைட்டின் உதவிகள், இந்திய ராணுவத்துக்கு அளப்பரிய பங்களிப்பைக் கொடுக்கும். இந்தியாவின் மதிப்பு விண்வெளியில் உயர்ந்து நிற்கும்" என்று தகவல்கள் கூறுகின்றன. விண்வெளி கண்காணிப்புத் திட்டத்துக்கு பாதுகாப்பு அமைச்சரவை கமிட்டி கடந்த அக்டோபரில் அனுமதி தந்தது. இந்த திட்டத்திற்காக சுமார் 22,500 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் படி, 52 உளவுச் செயற்கைக்கோள்கள் உருவாக்கப்படும். இந்த செயற்கைக் கோள்கள் இந்திய எல்லையில் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவதோடு, பாகிஸ்தானிய தீவிரவாதிகளையும் கண்காணித்து எச்சரிக்கை செய்யும். இந்த திட்டப்பணிகளைத் தான் விரைந்து முடிக்க பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.

-இளையர்

nkn140525
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe