""ஹலோ தலைவரே, முதல்வர் எடப்பாடி வெளிநாடு போயிருக்கும் நேரத்தில் ஆளுங்கட்சி எம்.எல். ஏ.க்கள் ரகசிய கூட்டம் நடத்தியதா பரபரப் பாயிடிச்சே?''
""இன்னொரு கூவத்தூர் சம்பவம் அரங்கேறுதுன்னு வாட்ஸ்அப்பில் பரவிய பரபரப்புச் செய்தியை நானும் படிச்சேன்ப்பா.''’
""8 அமைச்சர்களும் 15 எம்.எல்.ஏ.க்களும் எடப்பாடிக்கு எதிரா மகாபலிபுரத்தில் ரகசியமா கூடி விவாதிக் கிறாங்கன்னு யாரோ வாட்ஸ்அப்பில் கிளப்பிய தீப்பொறிதான், ஆளும்கட்சித் தரப்பை பதட்ட மாக்கிடிச்சி. ஆனா நடந்தது வேறு. பல்லவர் காலக் கலைச் சிற்பங்களைப் பார்வையிட சீன அதிபர் ஜின்பிங், இங்க இருக்கும் மாமல்லபுரத்துக்கு அடுத்த மாதம் 12, 13 ஆகிய தேதிகளில் வர இருக்கார். அங்கே அவரும் பிரதமர் மோடியும் சந்திச்சி பேசப் போறாங்க. இரு நாட்டு உறவுகளும் வலுப்பட சில ஒப்பந்தங்களிலும் அவங்க கையெழுத்துப் போடப்போறாங்களாம். இதற்கான ஏற்பாடுகளை இருநாட்டு அதிகாரிகளும் விறுவிறுப்பா செஞ்சிக்கிட்டு இருக்காங்க. அதனால் நம் தமிழக அரசின் குழு ஒன்று, முன்னதாக மாமல்லபுரம் சென்று, சீன அதிபர் தங்க இருக்கும் இடத்தையும் அவர் பார்வையிடப் போகும் பகுதிகளையும் சுற்றிப் பார்த்து, பாதுகாப்பு ஏற்பாடுகள் பத்தி ஆலோசிச்சிருக்கு. இதைப் பார்த்த சிலர், மந்திரிகள் சீக்ரெட் ஆலோசனைன்னு வாட்ஸ்அப்பில் பரப்பிட்டாங்க.''
""தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசையை தெலங்கானா கவர்னரா நியமிச்ச நிலையில்... ரஜினி விரைவில் தன்னோட புதுக் கட்சியைத் தொடங்கப் போறார்னு டெல்லிப் பக்கம் இருந்து தகவல் வருதே?''’
""அண்மையில் டெல்லியில் நடந்த பா.ஜ.க. சீனியர் தலைவர் களின் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய, தலைமை நிர்வாகிகளில் ஒருவரான ராம்மாதவ், "தமிழக அரசியலில் நாம் தீவிர கவனம் செலுத்தவேண்டிய காலகட்டம் வந்துடுச்சி. வரும் மார்ச், ஏப்ரலில் ரஜினிகாந்த், தன் புதுக்கட்சியைத் தொடங்கப் போகிறார்'னு சொன்னதோடு, "ரஜினி கட்சியைத் தொடங்கியதும், நாம் அவரோடு சேர்ந்து வலிமையான கூட் டணியை அமைக்கப் போறோம். அதில் அ.தி.மு.க., பா.ம.க., தே.மு.தி.க. ஆகிய கட்சிகளும் இணைந்திருக்கும். அதனால் நம் கூட்டணி வலிமையான கூட் டணியாகத் திகழும். கட்சியைத் தொடங்கியதும் ரஜினி தமிழகம் முழுக்க சுற்றுப் பயணம் செய்யப் போறார். அதனால் தி.மு.க.வுக்கு எதிரான பலமான அரசியல் கூட்டணியாக நாம் இருப்போம்'னு சொல்லியிருக்கார்.''
""அப்ப டெல்லியில் எழுதுற ஸ்கிரீன்பிளேக்கு ரஜினி ஓ.கே. சொல்வாரா? தமிழக பா.ஜ.க.வின் தலைமை நாற்காலியில் அடுத்து யார் உட்காரப்போறா?''’
""சீனியரான இல.கணேசனுக்கு உரிய முக்கியத்துவமும் பதவியும் தரப்படவில்லையேன்னு அவரோட சக சீனியர்கள் வருத்தப்படறாங்க. இதுக்கிடையில் தமிழக பா.ஜ.க. தலைவர் பதவியைக் குறிவச்சி கட்சியின் சீனியர்கள் பலரும் ரேஸில் ஓடிக்கிட்டு இருக்காங்க. யாருக்கு நாற்காலி கிடைக்கும்னு சாதி வாரியாவும் கணக்குகள் போடப்பட்டு வருது. அந்த வகையில் முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்த நயினார் நாகேந்திரன், கருப்பு முருகானந்தம் இவர்களோடு, ராமர் பாலம் தொடர்பான வழக்கைப் போட்ட குப்புமுத்துவும் பரிசீலனைப் பட்டி யலில் இருக்காராம்.''’
""பா.ஜ.க.வின் குட்புக்கில் இருந்த கேரள கவர்னர் சதாசிவத்தின் பதவிக் காலம் முடிய இன்னும் 2 மாத காலம் இருக்கும்போதே, அவருக்கு பதில் புது கவர்னரா ஆரிப் முகமது கான் நியமிக்கப்பட்டிருக்காரே?''’
""தன்னை ஆந்திராவுக்கோ, தெலங்கானாவுக்கோ, மகாராஷ்டிரத்துக்கோ கவர்னரா நியமிக்கணும்னு சதாசிவம் கேட்டுக்கிட்டே இருந்தார். அமித்ஷாவோடு தொடர்புடைய போலி என்கவுண்டர் வழக்கில், உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு சொன்னவர்தான் சதாசிவம். நீதிபதி பதவியிலிருந்து அவர் ரிடையர்டு ஆனாலும் கேரள கவர்னரா ஆக்கப்பட்டார். இப்போது பதவி நீக்கப்பட்டதில் அப்செட்டான அவர், மத்திய அரசு தன்னை உயர்பதவி ஒன்றில் உட்கார வைக்கணும்னு எதிர்பார்க்கிறாராம். முதல்வர் எடப்பாடிக்கும் மத்திய அரசுக்கும் உறவுப் பாலமா செயல்பட்டவர் சதாசிவம். அவரிடம் எடப்பாடி, "டெல்லி உங்களைக் கைவிட்டாலும் நாங்க கைவிடமாட்டோம்'னு சொல்லி, அவரை அரசியலுக்கு வரும்படியும் அழைச்சிருக் காராம்.''’
""சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி தஹில் ரமணி மேகாலயாவுக்கு மாற்றப்பட்டிருக்கிறாரே?''’
""ஆமாங்க தலைவரே, தமிழகத்தில் வழக்குகள் நிறைய தேங்கியிருக்குதாம். அதை விரைவாக விசாரிக்க தலைமை நீதிபதி ரமணி உரிய நடவடிக்கை எடுக்கலைங்கிற ஆதங்கம் டெல்லிக்கு இருந்ததாம். அதனால் 70 நீதிபதிகளைக் கொண்ட சென்னை உயர் நீதிமன்றத்தை அவர் கட்டியாளுவதை விட, ரெண்டே ரெண்டு நீதிபதிகளைக் கொண்ட மேகாலயா உயர் நீதிமன்றத்தை அவர் கவனிக்கட்டும்னு சுப்ரீம்கோர்ட் கொலீஜியம் முடிவுசெய்ததாம். ஏற் கனவே மும்பையில் இருந்த ரமணி போன வருடம் ஆகஸ்ட் 8-ல் தான் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியானார்ங்கிறது குறிப்பிடத்தக்கது. இப்ப அவர் இருந்த இடத் துக்கு மேகாலயா உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி அஜய்குமார் மிட்டலோ அல்லது ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி கீதா மிட்டலோ வரலாம்ங்கிற எதிர் பார்ப்பு நிலவுது. இந்த நேரத்தில் விரைவில் தமிழக கவர்னர் பன் வாரிலால் புரோஹித்தும் மாற்றப்படுவாருன்னும், அவருக்கு பதில் ஏற் கனவே இங்க பொறுப்பு கவர்னரா இருந்த வித்யாசாகர் ராவே கவர்னராக்கப்படலாம்னும் ஒரு தகவல் வந்துக்கிட்டு இருக்கு.''’
""ஐ.என்.எக்ஸ். விவகாரத்தில் சி.பி.ஐ.யின் கிடிக்கிப் பிடியில் சிக்கி இருக்கும் ப.சி. மீது இந்திராணி முகர்ஜியோடு நெருக்கமாக இருந்தது, விமானப் பணிப்பெண்கள் அவரை நினைத்த மாத்திரத்தில் சந்திக்க முடிந்தது என்றெல்லாம் அதிரடியாக எழுப்பப்பட்ட பாலியல் புகாரைப் போலவே, ப.சி.க்கு எதிராக இன்னொரு டேஞ்சரஸ் புகாரையும் சி.பி.ஐ. கையில் வச்சிருக்குதாமே?''’
""ஆமாங்க தலைவரே, ப.சி., உள்துறை அமைச்சராக இருந்த காலத்தில் இஸ்லாமியத் தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்த பிரமுகர் ஒருவரோடு அவர் நல்ல நட்பில் இருந்தாருன்னும் அப்படிப்பட்டவர்களுக்குப் பண உதவிகள் செய்தாருன்னும் பகீர் குற்றச்சாட்டுகளை வைப்பதோடு, அதற்கு ஆதாரமான படங்களையும் சி.பி.ஐ. அதிகாரிகள் தங்கள் வசம் வைத்திருக்கிறார்களாம். அதேபோல் அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையில் இருந்து 5-ந் தேதிவரை கைதுசெய்யக் கூடாதுன்னு ப.சி. தரப்பு ஸ்டே வாங்கிய நிலையிலும், அமித்ஷாவை சொராபுதீன் போலி என்கவுண்டர் வழக்கில் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் 3 மாத காலம் சிறையில் அடைத்ததுபோல், ப.சி.யையும் அடைத்து வைக்கணும்னு பா.ஜ.க. நினைக்குதாம். அதன் மனக்குறிப்பைப் புரிந்துகொண்ட அமலாக்கப் பிரிவினர் வெளிநாடுகளில் ப.சி. தரப்பு எவர் எவர் பெயரில் சொத்துக்களை வாங்கியிருக்கிறது என்ற ஆவணங்களை எல்லாம் திரட்டிக்கிட்டிருக்கு.''
""திகாருக்கு அனுப்பாதீங்கன்னு ப.சி. தரப்பில் வாதாடப்பட்டதே?''
""70 வயதைத் தாண்டிய தன்னை திகார் சிறையில் அடைக்கக் கூடாதுங்கிறது ப.சி. தரப்பின் வாதம். சி.பி.ஐ.யும் அமலாக்கத்துறையும் பெரும்பாடுபடுவதால், திகிலடைஞ்சு, ஜெயிலுக்குப் போகாம இடைக்கால ஜாமீன் வாங்க கடைசிவரை ப.சி. தரப்பு பிரயத்தனம் செஞ்சிருக்கு.''
""ஜக்கி ஆசிரமத்தின் சிக்கலும் இன்னும் தீரலை போலிருக்கே?''’
""ஆமாங்க தலைவரே, ஈசா யோக மைய குருவான ஜக்கி வாசுதேவின் ஆசிரமத்தில், அவருக்கு அடுத்த நிலையில் இருந்த ஏகா என்கிற தாயுமானவன் திடீர்னு அண்மையில் மாயமானது பற்றி நாம் பேசிக்கிட்டோமே, அந்த தாயுமானவன் இன்னும் கிடைக்கலையாம். ஆறேழு ஆண்டுகளுக்கு முன் ஜக்கி வாசுதேவுக்கு இதேபோல் மிகவும் நெருக்கமாக இருந்த திலீப் என்கிற ராஜரத்தினம் விபத்தில் இறந்ததாகச் சொல்லப்பட்டது. என்றாலும் அது மர்ம மரணமாகவே பார்க்கப்படுது. அதேபோல் ராஜரத்தினத்தின் மனைவியும் காணாமல் போய்விட்டாராம். அவர் பற்றிய தகவல் எதுவும் இன்னும் கிடைக்கலையாம். அதோடு தாயுமானவனுக்கு என்ன ஆச்சோங்கிற கூக்குரல் ஈஷாவில் இருப்போரிடமிருந்தே வெளிப்படுது. இதைப் புரிஞ்சிக்கிட்ட ஜக்கி, தாயுமானவனைத் தேடும் பணியைத் தீவிரப்படுத்தும்படி, காவல்துறையைக் கேட்டுக்கொண்டிருக்கிறாராம்.''
""பொள்ளாச்சி பக்கமும் பரபரப்பு தெரியுதே?''’
""நக்கீரனால் அம்பலப்படுத்தப்பட்ட ’பொள்ளாச்சி விவகாரத்துக்குப்’ பிறகு, அந்தப் பகுதியில் திரைமறைவுக் காரியங்களுக்கு உதவியா இருக்கும் ரெசார்ட்டுகளை மூடுவதா அரசு சொன்னது. ஆனால், ஒரே ஒரு ரெசார்ட்டை மட்டும் மூடி சீல் வைத்த மாவட்ட நிர்வாகம், மற்ற ரெசார்ட்டுகளைக் கண்டுக்கவே இல்லை. இது தொடர்பாக ஏகப்பட்ட புகார்கள் போனதால், நட வடிக்கையை எடுத்தே தீரணும்ங்கிற நிர்பந்தத்திற்கு ஆளான மாவட்ட நிர்வாகம், இது தொடர்பாக மேலிடத்தில் பேசியது. முதல்வரின் சமூகத்தைச் சேர்ந்த பலரும் அந்தப் பகுதியில் ரெசார்ட் நடத்தி வருவதால், அவர்களை எல்லாம் விட்டுவிட்டு வெளியூர்க்காரர்களால் நடத்தப்படும் 12 ரெசார்ட் டுகளை மட்டும் கணக்கெடுத்து, அவற்றின்மீது நட வடிக்கை எடுக்க, ஆயத்த வேலைகள் நடக்குது.''’
""செப்டம்பர் 15-ல் திருப்பூரில் நடக்க இருக்கும் தே.மு.தி.க.வின் முப்பெரும் விழாவில் விஜய காந்த்தின் உரையை எதிர்பார்க்கலாமா?''’
""இதே கேள்விதான் தே.மு.தி.க. தொண்டர்கள் ஒவ்வொருவரிடமும் இருக்கு. தே.மு.தி.க. தொடங்கியதன் 15 ஆம் ஆண்டு விழாவை, வழக்கம் போல் முப்பெரும் விழாவா திருப்பூர் வேலவன் ஓட்டல் வளாகத்தில் கொண் டாடப் போறாங்க. இது தொடர்பா ஈரோடு , திருப் பூர், கோவை மாவட்ட கட்சிப் பிரமுகர்களிடம் ஆலோசனை நடத்தினார் தே.மு.தி.க.வின் பொரு ளாளரான பிரேமலதா. அப்ப, அந்த விழாவில் கேப்டன் உரையாற்று வாரான்னு அவர்கள் பிரேமலதாவிடம் கவலை யோடு கேள்வி எழுப்பி யிருக்காங்க. அதுக்கு பிரேமலதா, "இப்ப கேப்டனின் உடல்நிலை யில் நல்ல முன்னேற்றம் இருக்கு. பேசுவதிலும் நடப்பதிலும் மட்டும் கொஞ்சம் பிரச்சினை இருக்கு. அதை சரிசெய்ய அவருக்குப் பயிற்சி களைக் கொடுத்துக் கிட்டு இருக்கோம். அத னால் திருப்பூர் முப்பெரும் விழாவில் கேப்டனின் உரையை நீங்க கேட்க வாய்ப்பிருக்கு'ன்னு சொல்லி, அவர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கார்.''’
""நானும் ஒரு முக்கியத் தகவலைச் சொல் றேன். உள்ளாட்சித் தேர்தல்வரை அ.தி.மு.க.வோடு கூட்டணியை வைத்துக்கொண்டு, அதன்பிறகு பழையபடி ‘திராவிட இயக்கங்களுடன் இனி எந்தக் காலத்திலும் கூட்டணி வைத்துக்கொள்ள மாட்டோம்னு’ பிரகடனம் செய்யும் முடிவிற்கு தைலாபுரம் வந்திருக்கு. அதற்குள் கட்சியை பலப் படுத்த சகோதரர்கள் படை, சகோதரிகள் படைன்னு புதிய டீம் களை உருவாக்கும் முயற்சியில் இருக்கார் பா.ம.க. எம்.பி.யான அன்புமணி. இந்தக் குழுக் கள் ஒவ்வொன்றிலும் தலா 2500 உறுப்பினர்கள் இருப்பாங்களாம். இவங்க தலைக்கு 50 புதிய உறுப் பினர்களைக் கட்சியில் சேர்க்கணுமாம். இப்படி ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் தலா ஒரு லட்சம் புதிய உறுப்பினர் கள் வீதம் சேர்த்து, கட்சியை வலிமையாக்கி சட்டமன்றத் தேர்தலில் ஆட்சியைப் பிடிக்க ஜரூராகத் திட்டம் தீட்டறாங்க.''
_________
இறுதிச்சுற்று!
அடுத்தது கோகுல இந்திரா?
அ.தி.மு.கவிலிருந்து அ.ம.மு.க.வுக்கு சென்று அங்கிருந்து தி.மு.க.வுக்கு வந்த செந்தில்பாலாஜி தி.மு.க.வில் மா.செ.வாகி எம்.எல்.ஏ.வாகவும் ஜெயித்து விட்டார். அவர் வழியில் தி.மு. க.வுக்கு வந்த தங்க.தமிழ்ச் செல்வனுக்கு கொள்கை பரப்புச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே திருச்சி சிவா, ஆ.ராசா போன்ற கட்சியின் சீனியர்கள் இப்பதவியில் உள்ள நிலையில் அவர்களுக்கு இணையாக தங்க.தமிழ்ச்செல்வனுக்கு கொ.ப.செ. பதவி தந்திருப்பது தி.மு.க.வுக்குள் புருவங்களை உயரச் செய்திருக்கிறது. அ.தி.மு.க. டூ அ.ம.மு.க. டூ தி.மு.க. என்று பயணித்துள்ள மற்றொருவரான கலைராஜ னுக்கு இலக்கிய அணியில் பொறுப்பு வழங்கப் பட்டுள்ளது. இந்நிலையில் அப்செட்டாகியிருக்கும் அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா விரைவில் அறிவாலயம் வருவார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
-கீரன்