""ஹலோ தலைவரே, 12-ந் தேதி ஏர்போர்ட்டுல, எந்த 7 பேருன்னு கேட்ட ரஜினி, அது தொடர்பான விவாதம் பரபரப்பாகி, மீம்ஸ் தாக்குதல் நடந்ததும் 13-ந் தேதி போயஸ் கார்டன் வீட்டு வாசலில் பேட்டியளித்த ரஜினி, "7 பேரு யாருன்னு தெரியாத அளவுக்கு நான் முட்டாள் இல்லை'ன்னும் பரோலில் பேரறிவாளன் வந்தபோது போனில் பேசியதையும் குறிப்பிட்டதைக் கவனிச்சீங்களா?''
""அதை மட்டுமா கவனிச்சோம். முதல் நாள் ஏர்போர்ட்டில், பா.ஜ.க. ஆபத்தான கட்சின்னு எதிர்க்கட்சிகள் சொல்வதைப் பற்றி நிருபர்கள் கேட்டப்ப, அத்தனை கட்சிகள் சொன்னால் ஆபத்தான கட்சிதானேங்கிற தொனியில் சொன்ன ரஜினி, மறுநாள் போயஸ்கார்டனில் பேட்டி அளித்தபோது, அத்தனை கட்சிகள் எதிர்க்குதுன்னா அவங்களுக்குத் தான் ஆபத்தா தெரியுதுன்னு சொன்னதாகவும், 10 பேர் சேர்ந்து ஒருத்தரை எதிர்த்தா அந்த ஒருத்தர்தானே பலசாலின்னு மோடியை பலசாலியாகவும் மறைமுகமா சுட்டிக்காட்டியதையும் கவனிச்சோம்.''
""தலைவரே, ஏர்போர்ட்டில் ரஜினி கொடுத்த பேட்டி தமிழக பா.ஜ.க. தரப்பை ரொம்பவே அதிரவச்சிடுச்சி. தமிழ்நாட்டில் பா.ஜ.க. ரொம்ப வீக்கா இருக்கிற நேரத்தில், தங்களின் ஒரே நம்பிக்கையான ரஜினியே, பா.ஜ.க. ஆபத்தான கட்சிங்கிற தொனியில் சொன்ன உடனே ஹெச்.ராஜா, இல.கணேசன் போன்றவர்கள் அமித்ஷாவைத் தொடர்பு கொண்டு பேசியிருக்காங்க. தமிழக மக்களிடம் இது பெரிய எஃபெக்ட்டை ஏற்படுத்தும்னு பா.ஜ.க.வினர் சொன்னதா அமித்ஷா உடனடியா மத்திய அமைச் சர் ராஜ்நாத் சிங்கைத் தொடர்புகொண்டு, ரஜினியிடம் பேசும்படி சொல்லியிருக்கார். அதைத் தொடர்ந்து ஒரு ஆடிட்டர் மூலம் ரஜினியிடம் பேச முயற்சி செஞ்சார் ராஜ்நாத்சிங். ரஜினி லைனில் சிக்கலை. இருந்தும் விடாமல், ரஜினி குடும்பத்தினரைத் தொடர்புகொண்டு, ரஜினி தன் பேச்சுக்கு மறுப்பு சொல்லணும்னு சொல்லப்பட்டிருக்கு.''
""ஏர்போர்ட்டில் பேட்டி கொடுத்த அன்னைக்கே டெல்லியிலிருந்து பிரஷர்னு சொல்லுப்பா.''
""ஆமாங்க தலைவரே.. ரஜினிக்கும் தன் பேட்டியின் சீரியஸ்னெஸ் அப்பதான் தெரிஞ்சிருக்கு. டெல்லி முதல் ஃபேமிலி மெம்பர்ஸ் மற்றும் நண்பர்கள் வரை பல தரப்பிலிருந்தும் வந்த நெருக்கடியால் ரஜி
""ஹலோ தலைவரே, 12-ந் தேதி ஏர்போர்ட்டுல, எந்த 7 பேருன்னு கேட்ட ரஜினி, அது தொடர்பான விவாதம் பரபரப்பாகி, மீம்ஸ் தாக்குதல் நடந்ததும் 13-ந் தேதி போயஸ் கார்டன் வீட்டு வாசலில் பேட்டியளித்த ரஜினி, "7 பேரு யாருன்னு தெரியாத அளவுக்கு நான் முட்டாள் இல்லை'ன்னும் பரோலில் பேரறிவாளன் வந்தபோது போனில் பேசியதையும் குறிப்பிட்டதைக் கவனிச்சீங்களா?''
""அதை மட்டுமா கவனிச்சோம். முதல் நாள் ஏர்போர்ட்டில், பா.ஜ.க. ஆபத்தான கட்சின்னு எதிர்க்கட்சிகள் சொல்வதைப் பற்றி நிருபர்கள் கேட்டப்ப, அத்தனை கட்சிகள் சொன்னால் ஆபத்தான கட்சிதானேங்கிற தொனியில் சொன்ன ரஜினி, மறுநாள் போயஸ்கார்டனில் பேட்டி அளித்தபோது, அத்தனை கட்சிகள் எதிர்க்குதுன்னா அவங்களுக்குத் தான் ஆபத்தா தெரியுதுன்னு சொன்னதாகவும், 10 பேர் சேர்ந்து ஒருத்தரை எதிர்த்தா அந்த ஒருத்தர்தானே பலசாலின்னு மோடியை பலசாலியாகவும் மறைமுகமா சுட்டிக்காட்டியதையும் கவனிச்சோம்.''
""தலைவரே, ஏர்போர்ட்டில் ரஜினி கொடுத்த பேட்டி தமிழக பா.ஜ.க. தரப்பை ரொம்பவே அதிரவச்சிடுச்சி. தமிழ்நாட்டில் பா.ஜ.க. ரொம்ப வீக்கா இருக்கிற நேரத்தில், தங்களின் ஒரே நம்பிக்கையான ரஜினியே, பா.ஜ.க. ஆபத்தான கட்சிங்கிற தொனியில் சொன்ன உடனே ஹெச்.ராஜா, இல.கணேசன் போன்றவர்கள் அமித்ஷாவைத் தொடர்பு கொண்டு பேசியிருக்காங்க. தமிழக மக்களிடம் இது பெரிய எஃபெக்ட்டை ஏற்படுத்தும்னு பா.ஜ.க.வினர் சொன்னதா அமித்ஷா உடனடியா மத்திய அமைச் சர் ராஜ்நாத் சிங்கைத் தொடர்புகொண்டு, ரஜினியிடம் பேசும்படி சொல்லியிருக்கார். அதைத் தொடர்ந்து ஒரு ஆடிட்டர் மூலம் ரஜினியிடம் பேச முயற்சி செஞ்சார் ராஜ்நாத்சிங். ரஜினி லைனில் சிக்கலை. இருந்தும் விடாமல், ரஜினி குடும்பத்தினரைத் தொடர்புகொண்டு, ரஜினி தன் பேச்சுக்கு மறுப்பு சொல்லணும்னு சொல்லப்பட்டிருக்கு.''
""ஏர்போர்ட்டில் பேட்டி கொடுத்த அன்னைக்கே டெல்லியிலிருந்து பிரஷர்னு சொல்லுப்பா.''
""ஆமாங்க தலைவரே.. ரஜினிக்கும் தன் பேட்டியின் சீரியஸ்னெஸ் அப்பதான் தெரிஞ்சிருக்கு. டெல்லி முதல் ஃபேமிலி மெம்பர்ஸ் மற்றும் நண்பர்கள் வரை பல தரப்பிலிருந்தும் வந்த நெருக்கடியால் ரஜினி மறுநாள் காலையே விளக்க பேட்டி கொடுக்க வேண்டியதாயிடிச்சி. தான் இன்னும் முழு நேர அரசியல்வாதி ஆகலைன்னு சொல்ற ரஜினி, யாரையும் பகைச்சிக் காம-எவரோட வாய்ஸாகவும் இல்லாம கட்சி ஆரம்பிக்கணும்னு தான் வெயிட் பண்ணிக்கிட்டே இருக்காரு. ஆனா, போயஸ் கார்டனில் அவர் கொடுத்த பேட்டி, பா.ஜ.க.வின் தமிழக முகவர் ரஜினிதானோன்னு அவர் இமேஜை பொதுவான மக்களிடம் டேமேஜ் பண்ணியிருக்கு. அதாவது ரஜினியை பி.ஜே.பி. சறுக்க வச்சிடிச்சின்னு மன்ற நிர்வாகிகள் வருத்தப்படுறாங்க.''’’
""அரசுக்கு எதிரா, தமிழகம் தழுவிய போராட்டத்தை நடத்தும் அளவுக்கு, அரசு ஊழியர்களும் பெரிய அளவில் குமையறாங்க போலிருக்கே?''’
""ஆமாங்க தலைவரே, பழைய பென்ஷன் முறையே வேணும்ங்கிறது உள்பட அரசு ஊழியர்களின் பழைய கோரிக்கைகளே இன்னும் நிறைவேற்றப்படலை. அதற்கான போராட்டத்துக்கு அவங்க தயாரான நிலையில் இன்னொரு நெருக்கடி, அரசு ஊழியர்களைச் சூழ்ந்திருக்கு. இப்ப தமிழக அரசுப் பணிகளில் 40 சதவீத இடங்கள் காலியா இருக்கு. வேலை பார்க்கிறவர்களுக்கு பணிச்சுமை அதிகரிப்பதால் விரைவாக காலிப் பணி இடங்களை நிரப்புங்கள்னு அனைத்து அரசு ஊழியர் அமைப்புகளும் தமிழக அரசுக்கு அழுத்தம் கொடுத்துக்கிட்டு இருந்தது. முதல்வர் எடப்பாடியும் துணை முதல்வர் ஓ.பி.எஸ்.சும் காலிப் பணியிடங்களை நிரப்புவது தொடர்பா தலைமைச் செயலாளர் கிரிஜா, நிதித்துறைச் செயலாளர் சண்முகம் ஆகியோரோடு 4 தடவை பேசினாங்க.''
""என்ன முடிவெடுத்தாங்க?''
""இப்பவே நிதிச் சுமையில் இருக்கோம். புதுசா ஆள் போட்டா எப்படி சேலரி கொடுக்குறதுன்னு உயரதிகாரிகள் தரப்பில் இழுத்துருக்காங்க. இதுக்கிடையில் மத்திய அரசு, போன வருடம் அனுப்பிய ஒரு சர்க்குலரை எடப்பாடி அரசு கெட்டியா பிடிச்சிக்கிச்சி. 2017 மே-யில், அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு ஒரு சர்க்குலரை அனுப்புச்சு. அதில், இனி காலி பணியிடங்களை நிரப்பும் போது, நிரந்தரப் பணியாளர்களாக அவர்களை அமர்த்தாமல், தனியார் நிறுவனங்கள் மூலமாக அவுட் சோர்ஸிங் முறையில் தற்காலிகப் பணியாளர்களாக நியமியுங்கள்ன்னு சொல்லியிருந்தது. இதைக்கையில் எடுத்த எடப்பாடி அரசு, இனி அரசுப் பணியாளர்கள் அவுட்சோர்ஸ் முறையில்தான் எடுக்கப்படுவார்கள் என்ற ரீதியில் எண் 56-ஐக் கொண்ட ஒரு அரசாணையைப் பிறப்பிச்சிருக்கு. ஏற்கனவே அரசின் அலட்சியத்தால் கொதித்துப் போயிருக்கும் அரசு ஊழி யர் அமைப்புகள், பணி நியமனத்தை யும் தனியார் மயமாக்கும் முயற்சி இது. உடனடியாக இந்த அரசாணையைத் திரும்பப் பெறணும்னு மாநிலம் தழுவிய போராட்டத்துக்கு ரெடியாயிட்டாங்க.''’
""அரசு ஊழியர்கள் எதிர்ப்பு இருக்கட்டும்.. சொந்தக் கட்சி தொண்டர்களே கொதிப்படைஞ்சி எதிர்ப்பு தெரிவிக்கிறாங்களே?''’
""உண்மைதாங்க தலைவரே, ஜெ.வின் பிறந்தநாளை முன்னிட்டு, போன பிப்ரவரி 24-ந் தேதி அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் முதல் வர் எடப்பாடியும் துணை முதல்வர் ஓ.பி.எஸ்.சும் சேர்ந்து பட்டனை அழுத்தி ஜெ.வின் சிலைன்னு ஒரு சிலையைத் திறந்துவச்சாங்க. அந்த சிலையைப் பார்த்த கட்சிக்காரங்க அத்தனை பேரும், இது ஜெ. மாதிரியே இல்லைன்னு விமர்சனம் செஞ்சதால, பல சர்ச்சைகள் எழுந்தன. அதனால, ராஜ்குமார் உடையார்ங்கிற ஸ்தபதி மூலம் புதுசா, 8 அடி உயரத்தில் 800 கிலோ எடையில் ஒரு சிலையை தயார் செய்து, அதை நவ. 14-ந் தேதி அதே இடத் தில் வச்சாங்க. இதை முறைப்படி திறந்துவைக்காமல்... சிலையை அப்படியே வச்சி, முதல்வர் எடப்பாடி உள்ளிட்டவர்கள் அஞ்சலி மட்டும் செஞ்சாங்க. அதுக்கு முன்னாடி, ஜெ.வின் முகத்தை வெள்ளைத்துணி போட்டு மறைச்சிருந்ததைப் பார்த்து தொண்டர்கள் கொதிப்படைஞ்சிட்டாங்க. அது சாதாரண வேட்டித் துணின்னு தெரிஞ்சதும் இன்னும் கடுப்பாயிட்டாங்க. அம்மா சிலையை திறக்கிறதுக்கு வெல்வெட் துணியில் ஸ்கிரின் தைச்சித் திறக்கக்கூட முடியலையா? அவ்வளவு எளக்காரமா போயிட்டாங்களா?ன்னு பெரும் பாலான அ.தி.மு.க. தொண்டர்கள் எடப்பாடித் தரப்பு மீது கோபத்தில் இருக்காங்க.''
""இப்படி ஒரு துணியை போட்டு மூடி வச்சித் திறந்தா யாருக்கும் கோபம்தானே வரும்?''
""இது சம்பந்தமா அ.தி.மு.க. சீனியர்களிடம் விசாரிச்சப்ப, எல்லாம் சிலை சென்ட்டிமெண்ட் தான்னு சொல்றாங்க. அதாவது, செத்தவங்க சிலையை ஒரு தடவைதான் திறக்கணும். அதுவே, பதவியில் இருக்கிறவங்களுக்கு சிக்கலை உண்டாக்குமாம். அப்படிப்பட்ட சிலையை ரெண்டாவது தடவையா திறந்தா, பதவி போயிடும்னு ஜோசியர் சொன்னாராம். அதனால்தான் ஜெ.வின் புது சிலையைத் முறைப்படி, ரிமோட் பட்டன் அழுத்தி திறக்காம, வேட்டியைப் போட்டு மூடி வச்சி, பீடத்தில் இருந்த கல்வெட்டு பக்கமா நின்னு போஸ் கொடுத் துட்டு, பூத்தூவிட்டு இ.பி.எஸ்.ஸும் ஓ.பி. எஸ்.ஸும் அவசரமா நகர்ந்துட்டாங்க. ரெண்டு பேருக்கும் பதவி கொடுத்தவரே ஜெ.தான். ஆனா, அவர் சிலையைத் திறக்கவே சென்ட்டிமெண்ட் பார்த்து இரண்டு பேரும் ஒதுங்கிட்டாங்க.''’
""தி.மு.க. சைடிலும், அதன் தலைமைக் கழகமான அறிவாலயத்தில் கலைஞர் சிலை திறக்கப்பட இருக்குதே? அந்தத் திறப்பு விழாவும் தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சியா அமையப் போகுதுன்னு தி.மு.க. தரப்பிடம் டாக் அடிபடுதே?''’
""வர்ற டிசம்பர் 16-ந் தேதி, கலைஞரின் பிரமாண்டமான சிலை அறிவாலயத்தின் முன் பக்கம் திறக்கப்பட இருக்குது. சிலை ஏற்கனவே தயாரான போதும், அந்த இடம் மாநகராட்சிக்கு உரிமையான இடம் என்பதால், அனுமதி வாங்குவதில் கால தாமதம் ஆகி விட்டதாம். தேசிய அளவில் பா.ஜ.க.வுக்கு எதிரான ஒரு அணியை ஏற்படுத்தும் முயற்சியில் இருக்கும் சந்திரபாபு நாயுடு, அண்மையில் மு.க.ஸ்டாலினை சந்திச்சார். இந்த அணியை முன் னெடுப்பவர்களில் ஸ்டாலினும் இருக்கணும்னு நாயுடு உட்பட அனைத்து தேசியத் தலைவர்களும் நினைக்கிறாங்க. அப்படிப்பட்ட அகில இந்தியத் தலைவர்களை எல்லாம் அழைத்து, கலைஞர் சிலைத் திறப்பு விழாவை நடத்துவது ஸ்டாலின் ப்ளான். தேசிய அளவில் கூட்டணி வலுவடைகிற நிலையில், தமிழ்நாட்டில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், விடுதலைசிறுத்தைகள் போன்ற கட்சிகளுக்கு எத்தனை சீட்டுங்கிற கேள்வி இப்பவே கிளம்புவதால விமர்சனங்களும் வெளிப்படுது. ஸ்டாலின் எப்படி சமாளிக்கப் போறாருன்னு எதிர்பார்ப்பு இருக்கு.''’
""கூட்டணியில் சீட் பிரச்சினையெல்லாம் தேர் தல் நேரம் வரை நீடிக்கக்கூடிய சச்சரவுகள்தான். ஆனால் சசிகலா தரப்புக்கும் வைகுண்டராஜன் தரப்புக்கும் இடையில் ஏற்பட்டிருக்கும் சச்சரவு, இப்போதைக்குத் தீர்ற மாதிரி தெரியலையே?''’
""ஜெ. இருக்கும் போதே சசிகலா சேர்த்த சொத்தில் ஒரு பகுதி வி.வி. மினரல்ஸ் வைகுண்டராஜன் பாதுகாப்பில் இருந்துச்சாம். அண்மையில் தன் சம்பந்தப்பட்ட இடங்கள்ல நடந்த வருமானவரித்துறை ரெய்டின் போது, சசிக்குச் சொந்தமான பினாமி சொத்துக்களின் டாக்குமெண்டுகளையும் அதிகாரிகள் அள்ளிக்கிட்டுப் போயிட்டாங்கன்னு வைகுண்டராஜன் சொல் றாராம். அதாவது இனி என்கிட்ட எதிர்பார்க்காதீங்கன்னு அவர் சசி தரப்பிடம் கைவிரிச்சிட்டாராம். கூடவே, டெல்லி பா.ஜ.க. தலைமையிடமும் போய், என்னை சசி தரப்புக்கிட்ட இருந்து முழுசா ரெக்கவரி பண்ணுங்க. உங்களுக்கு நாடாளுமன்றத் தேர்தலின்போது செய்ய வேண்டியதைச் செய்றேன்னு சொல்லிட்டாராம். சசிகலா தரப்பின் அளவு 50ஆயிரம் சி வரை இருக்குமாம்.''
""சர்ச்சைகள் ஒரு பக்கம்.. சந்தோசம் ஒரு பக்கம்ங்கிறதுதானே அரசியல்?''’’
""உண்மைதாங்க தலைவரே, எடப்பாடி தரப்பு எம்.எல்.ஏ.வான தி.நகர் சத்யா, இங்கே ஒரு வாக்காளர் அட்டையும், ஆந்திராவில் ஒரு வாக்காளர் அட்டையும் வச்சிருப்பதை அண்மையில் நக்கீரன் அம்பலப்படுத்துச்சு. அவர் எந்த மகளுக்காக தமிழ்நாடு, ஆந்திரான்னு பாடுபட்டாரோ அந்த மகளுக்கு திருமணம் நிச்சயம் ஆகியிருக்கு. மாப்பிள்ளை கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ. விஜய குமாரின் மகனாம். இந்தத் திரு மணம் ஃபாரின்ல கோலா கலமா நடக்கப் போகுதாம்.''
""மணமக்களுக்கு வாழ்த்து சொல்லிட்டு என் கிட்ட உள்ள தகவலைச் சொல்றேன்.. "சர்கார்' சர்ச்சைக்குப் பிறகு, தமிழகத்திலும் மத்த மாநிலங்களிலும் நடிகர் விஜய் தரப்புக்கு என்னென்ன சொத்துக்கள் இருக்குன்னும் துருவிய உளவுத்துறையினர், மத்திய புலனாய்வுப் பிரிவின் உதவியோடு வெளிநாடுகளில் எங்கேனும் விஜய் சொத்துக்களையும் முதலீடுகளையும் வச்சிருக்காரான்னு தேடிக்கிட்டு இருக்கு. இந்த நிலையில், கேரள மாநில சுகாதாரத் துறை, சர்கார் படத்தில் சிகரெட் பிடிப்பதை ஊக்குவிக்கும் வகையில் காட்சிகள் வைக்கப்பட்டிருப்ப தாக நடிகர் விஜய் மீது, 14-ந் தேதி புகார் கொடுத்து, அவருக்கு அதிர்ச்சி கொடுத்திருக்கு. மலேசிய நாட்டு அரசாங் கத்துக்கிட்டேயும் அங்கே உள்ள இந்து அமைப்புகள் சர்கார் படம் மேலே புகார் கொடுத்திருக்குதாம்.''’