ராங்-கால் : இடைத்தேர்தல்! தி.மு.க. கணக்கு! தினகரன் மல்லுக்கட்டு!

stalin

"ஹலோ தலைவரே, அனைத்து வயதுப் பெண்களும் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் சென்று வழிபடலாம்னு உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு, அண்மையில் அதிரடித் தீர்ப்பைக் கொடுத்தது. இதை எதிர்த்து தொடுக்கப்பட்டிருக்கும் மேல்முறையீட்டு வழக்கில், மீண்டும் ஒரு பரபரப்புத் தீர்ப்பு வரலாம்னு சட்ட வல்லுநர்கள் சொல்றாங்க.''’

thirunavukarasar

""ஏற்கனவே தரப்பட்ட தீர்ப்பே... சபரிமலை பக்தர்கள் பெயரில் களமிறங்கி கொந் தளிக்க வச்சிடுச்சே.''

""அந்தத் தீர்ப்பை, முன்னாள் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அரசியல் சாசன பெஞ்ச் தான் கொடுத் தது. அந்த அமர்வில் இருந்த நீதிபதி களான கன்வில்கரும், சந்திர சூட்டும்கூட அந்தத் தீர்ப்பில் உறுதியாக இருந் தாங்க. இப்ப, தலைமை நீதிபதியா வந்திருக்கும் ரஞ்சன்கோகாயும், அதுபோன்ற மனநிலையில் உள்ள வர்தான். எனவே அவரிடமிருந்து வேறுமாதிரியான தீர்ப்பை எதிர் பார்க்க முடியாது. அதனால், வரப்போகும் மேல் முறையீட் டுத் தீர்ப்பு, ஏற்கனவே கொடுக்கப் பட்ட தீர்ப்பை உறுதிசெய்யும் வகையில்தான் இருக்கும்னு நம்பிக்கையா சொல்றாங்க.''’

ttv

""இந்தத் தீர்ப்பிற்கு எதிரான மனநிலையில் இருக்கும் மத்திய பா.ஜ.க. அரசு என்ன செய்யப் போகுது?''’

""அதையும் விசாரிச்சேங்க தலைவரே, சபரிமலையில் பெண்கள் அனுமதிக்கப்படும் விவகாரத்தில், நோ காம்ப்ரமைஸ்னு சொல்றாராம் அமித்ஷா. அதனால், உச்ச நீதிமன்றத் தீர்ப்பு எப்படி இருந்தாலும் பரவாயில்லை. சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி இல்லைன்னு சொல்லும் விதமா, ஒரு சிறப்பு சட்ட மசோதாவை நாடாளுமன்றத்தில் விரைவில் தாக்கல் செய்யும் வியூகத்தில் பா.ஜ.க. அரசு இருக்குதாம்.''

""உச்சநீதிமன்ற உத்தரவையடுத்து நடத்தப்படும் நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கணும்னு, இது போன்ற ஒரு சட்ட திருத்தத்தை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யுங்கள்னு ஒட்டுமொத்த தமி

"ஹலோ தலைவரே, அனைத்து வயதுப் பெண்களும் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் சென்று வழிபடலாம்னு உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு, அண்மையில் அதிரடித் தீர்ப்பைக் கொடுத்தது. இதை எதிர்த்து தொடுக்கப்பட்டிருக்கும் மேல்முறையீட்டு வழக்கில், மீண்டும் ஒரு பரபரப்புத் தீர்ப்பு வரலாம்னு சட்ட வல்லுநர்கள் சொல்றாங்க.''’

thirunavukarasar

""ஏற்கனவே தரப்பட்ட தீர்ப்பே... சபரிமலை பக்தர்கள் பெயரில் களமிறங்கி கொந் தளிக்க வச்சிடுச்சே.''

""அந்தத் தீர்ப்பை, முன்னாள் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அரசியல் சாசன பெஞ்ச் தான் கொடுத் தது. அந்த அமர்வில் இருந்த நீதிபதி களான கன்வில்கரும், சந்திர சூட்டும்கூட அந்தத் தீர்ப்பில் உறுதியாக இருந் தாங்க. இப்ப, தலைமை நீதிபதியா வந்திருக்கும் ரஞ்சன்கோகாயும், அதுபோன்ற மனநிலையில் உள்ள வர்தான். எனவே அவரிடமிருந்து வேறுமாதிரியான தீர்ப்பை எதிர் பார்க்க முடியாது. அதனால், வரப்போகும் மேல் முறையீட் டுத் தீர்ப்பு, ஏற்கனவே கொடுக்கப் பட்ட தீர்ப்பை உறுதிசெய்யும் வகையில்தான் இருக்கும்னு நம்பிக்கையா சொல்றாங்க.''’

ttv

""இந்தத் தீர்ப்பிற்கு எதிரான மனநிலையில் இருக்கும் மத்திய பா.ஜ.க. அரசு என்ன செய்யப் போகுது?''’

""அதையும் விசாரிச்சேங்க தலைவரே, சபரிமலையில் பெண்கள் அனுமதிக்கப்படும் விவகாரத்தில், நோ காம்ப்ரமைஸ்னு சொல்றாராம் அமித்ஷா. அதனால், உச்ச நீதிமன்றத் தீர்ப்பு எப்படி இருந்தாலும் பரவாயில்லை. சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி இல்லைன்னு சொல்லும் விதமா, ஒரு சிறப்பு சட்ட மசோதாவை நாடாளுமன்றத்தில் விரைவில் தாக்கல் செய்யும் வியூகத்தில் பா.ஜ.க. அரசு இருக்குதாம்.''

""உச்சநீதிமன்ற உத்தரவையடுத்து நடத்தப்படும் நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கணும்னு, இது போன்ற ஒரு சட்ட திருத்தத்தை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யுங்கள்னு ஒட்டுமொத்த தமிழகமும் கோரிக்கை வச்சிது. சட்டமன்றத் தீர்மானமும் போடப்பட்டது. மத்திய பா.ஜ.க. அரசு கண்டுக்கலை. ஆனா சபரிமலை விவகாரத்தில் ஓட்டுக்காக இப்படித் திட்டம் போடுதா?''

""இங்கே நம் அரசியல் கட்சிகளின் இடைத்தேர்தல் ஓட்டுக்கான வியூகங்கள் எந்த அளவிற்கு இருக்கு?''’

stalin

""ஆளுங்கட்சியைப் பொறுத்த வரை, நாடாளுமன்றத் தேர்த லோடுதான் இடைத் தேர்தல் நடக்கும்னு நினைக்கிது. அதே சமயம் இடைத்தேர்தலை 6 மாதத்தில் நடத்தவேண்டிய நிலைமை வந்தாலும், ஆட்சி அதிகாரத்தை வைத்து எப்படியாவது வெற்றி பெற்று விடலாம்ங்கிற கணக்கு இருக்கு. எதிர்க்கட்சியான தி.மு.க.வோ, 20 தொகுதிகளின் இடைத்தேர்தல் என்பதால், இதை மினி சட்டமன்றத் தேர்தலாகவே கருதி கவனமா வேலை பார்க்கணும்னு வியூகம் வகுக்குது. போன முறை ஆர்.கே.நகரில் டெபாஸிட் வாங்க முடியாமப் போனதற்குக் காரணம் பூத் லெவலில் ஏற்பட்ட குளறுபடிதான்னு நினைக்கும் மு.க.ஸ்டாலின், இந்த முறை பூத் கமிட்டிகளை அமைப்பதில் அதிக கவனம் செலுத்தத் திட்டமிட்டிருக்கார். இடைத்தேர்தல் நடக்க இருக்கும் தொகுதிகள், தமிழகத்தின் வடக்கு, தெற்கு மாவட்டப் பகுதிகளைக் கொண்டிருப்பதால், அங்கே தீவிரப் பிரச்சாரத்தை நடத்துவதும் தி.மு.க.வின் இலக்காக இருக்கு. இடைத்தேர்தல் தொகுதிகளில் எதில் எவ்வளவு வாக்கு வித்தியாசத்தில் வெற்றியை நழுவவிட்டோம்னும், எதனால் அப்படி ஆனது என்றும் ஸ்டாலின் கணக்குப் போட்டுக்கிட்டிருக்காரு. 20-ல் 15-ங்கிறது ஸ்டாலின் டார் கெட்! 20-ல் 18 தொகுதி தங்க ளோடதுங்கிறதால அதில் அதிகளவு ஜெயிக்கணும்னு தினகரன் மல்லுக்கட்டுறாரு. பா.ம.க. அன்பு மணியோ, நாடாளுமன்றத் தேர்தலோடுதான் இடைத்தேர்தல் நடக்கும்னு நினைக்கிறார்.''’

""தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் வியூகங்களில் பரபரப்பா இருந்தாலும், காங். கட்சியில் வேறு மாதிரி பரபரப்பு தெரியுதே?''’

""உண்மைதாங்க தலை வரே, மத்திய புலனாய்வு அமைப்பான சி.பி.ஐ.யில் நடக்கும் முறைகேடுகள் மற் றும் குளறுபடிகளைக் கண்டித்து, மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகை யிடும் போராட்டத்தை, அகில இந்திய அளவில் அண்மையில் நடத்தியது காங்கிரஸ். இது தொடர்பான ரிப்போர்ட்டை மாநில காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர்களிடம் ராகுல்காந்தி கேட்டிருந்தார். அந்த வகையில் ராகுல் காந்திக்கு ரிப்போர்ட் அனுப்பிய தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளரான சஞ்சய்தத், தமிழகத்தில் இந்தப் போராட்டம் சரிவர நடத்தப்படவில்லை. போராட்ட ஸ்பாட்டான சாஸ்திரி பவனுக்கு வந்த மாநில தலைவர் திருநாவுக்கரசர், கட்சியினரோடு சேர்ந்து போராட்டத்தை நடத்தாமல், வெளியி லேயே நின்றுவிட்டுப் போய்விட்டார்னும் துணை ஜனாதிபதியாக இருக்கும் வெங்கையா நாயுடுவின் விருப்பப்படியே இப்படி நடந்திருக்கிறார்னும், இதற் குக் காரணம், அண்மையில் 300 சி வங்கி விவகாரம் ஒன்றில், திருநாவுக்கரசரின் ஆளான ரூபி மனோ கரனைக் காப்பாற்றியிருக்கிறாராம் நாயுடு. இதை யெல்லாம் ரிப்போர்ட்டா குறிப்பிட்டிருக்கிறாராம்.''’’

""யார் எதிரி, யார் நண்பர்னு தெளிவா தெரிய மாட்டேங்குதே!''’

vaikundarajan

""உண்மைதாங்க தலைவரே, வி.வி.மினரல்ஸ் வைகுண்டராஜன் தரப்புக்குச் சொந்தமான இடங்கள்ல 3 நாட்கள் வருமானவரி அதிகாரிகள் சோதனை நடத்தினாங்க. இதைத்தொடர்ந்து அதிரடி நடவடிக்கைகள் பாயும்னு பார்த்தால், எல்லாமே சுமுகமா முடிஞ்சிடுச்சி. கேட்டால், அந்த ரெய்டு டீமுக்குத் தலைமை தாங்கிய கேரள அதிகாரியான கமிஷனர் வர்கீஷை, வைகுண்ட ராஜன் நல்ல மதிப்போடு நண்பராக்கிவிட்டார்னு சொல்றாங்க. நட்பின் உபசரிப்பு விவகாரம் அமித்ஷாவரை நீண்டிருக்காம். அதனாலதான் வைகுண்டராஜன், நிருபர்களிடம் ரொம்பவும் அசால்ட்டாக, ’"வியாபாரின்னா ரெய்டு வரத்தான் செய்யும். யாராவது ஒருவர் புகார் எழுதி போட்டா அதிகாரிகள் விசாரிக் கத்தான் செய்வாங்க புகார் உண்மைன்னாலும் பொய்ன்னா லும் போலீஸ்ல எஃப்.ஐ.ஆர். போடுவாங்க, விசாரிப்பாங்க. நாம அதுக்கு ஒரு பதிலை சொல்லுவோம். அதுல என்ன இருக்கு?'ன்னு சொல்லியிருக்காரு.''’

""தேவர் ஜெயந்தியை சாக்காக்கி, அ.தி.மு.க. தரப்பும் தினகரன் தரப்பும் பசும்பொன்னில் போஸ்டர் கிழிப்பு யுத்தத்தை நடத்தியிருக்கே?''’

""தலைவரே, தேவர் ஜெயந்தியை முன்னிட்டு பசும்பொன்னில் இருக்கும் அவர் நினைவிடத்தில் டி.டி.வி.தினகரன் மரியாதை செலுத்த வர்றார்னு தெரிஞ்சதுமே, இம்மானுவேல் சேகரன் நினைவு தினத்துக்கும் நேரில் போய் அஞ்சலி செய்தவர் தினகரன். அது நம் சமூகத்துக்கு எதிரான விஷயம், இப்படிப்பட்டவரை இங்கே அனுமதிக்கலாமான்னு, விருதுநகர் அம்மன்பட்டி இளைஞர்களை உசுப்பிவிட்டது ஓ.பி.எஸ். ஆதரவு டீம். இதைத் தொடர்ந்து பசும்பொன் அன்னதானக் கூடத்துக்கு அருகில் இருந்த தினகரன் பேனர்களை அவர்கள் கிழிச்செறிஞ்சாங்க. இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தினகரன் தரப்பினர், எம்.ஜி.ஆர். ஜெ’ படத்தை மட்டும் விட்டுட்டு இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். படம் போட்ட பேனர்களை எல்லாம் ஒண்ணு விடாம கிழிச்சித் தொங்கவிடுங்க. அப்பதான் நம்ம பலம் தெரியும்ன்னு கோட்டைமேடு பகுதி இளைஞர்களை உசுப்பிவிட, பல பேனர்கள் கிழித்தெறியப்பட்டன. ஆளுங்கட்சித் தரப்புக்காக களமிறங்கிய உளவுத்துறையினரும் கமுதி, குண்டு குளம், கோவிலாங்குளம் பகுதி இளைஞர்களை தினகரன் தரப்புக்கு எதிராகக் கூர் சீவியதையும் பார்க்க முடிந்தது.''’

""நானும் உளவுத்துறையினர் பற்றிய தகவலைச் சொல்றேன். பசும்பொன்னில் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு 500-க்கும் மேற்பட்ட பல்வேறு உளவுப் பிரிவினர் களமிறக்கப் பட்டிருந்தாங்க. அவங்களுக்கு ஒருநாள் உணவுப் படியாக வழங்க வேண்டிய 750 ரூபாய்க்கு பதிலாக 450 ரூபாய் வீதம்தான் அங்க இருந்த 3 நாளும் கொடுத்திருக்காங்க. எங்க உணவுப் படியைக் குறைச்சிட்டாங்களா, இல்லை அதில் அதிகாரிகள் யாராவது கை வச்சிட் டாங்களான்னு உளவுப்பிரிவினரே துப்பு கண்டுபிடிக்க முடியாமல் புலம்பறாங்க. இத்தனைக்கும் உளவுப்பிரிவு ஐ.ஜி. சத்தியமூர்த்தி, எஸ்.பி. கண்ணன் ஆகியோர் ஸ்பாட்டில் இருந்தும் இப்படி ஒரு குழப்படியாம்.''

__________

இறுதிச் சுற்று!

ரிசர்வ் வங்கிக்கு குடைச்சல்!

சி.பி.ஐ.யை அடுத்து ஆர்.பி.ஐ. எனும் ரிசர்வ் வங்கி நிர்வாகத்திலும் பா.ஜ.க. அரசு தலையிடுவதை அதிர்ச்சியாகப் பார்க்கிறார்கள் பொருளாதார வல்லுநர்கள்.

""உலகளாவிய பொருளாதார நெருக்கடியின் போது இந்தியாவை காப்பாற்றிய பொதுத் துறை வங்கிகள், கடந்த பத்தாண்டுகளில் கடும் பின்னடைவை சந்தித்தன. சுமார் 9 லட்சம் கோடி ரூபாய் பணத்தை நீரவ் மோடி, விஜய் மல்லையா போன்ற தொழிலதிபர்கள் வங்கிகளில் கடன் பெற்று விட்டு திரும்பக் கட்டவில்லை. இந்த பிரச்சினையால் இந்தியாவின் ஏற்றுமதி வணிகம் கடுமையாக பாதிக்கப்பட... அதனால் டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு கடுமையான வீழ்ச்சியை கண்டது. இதன் எதி ரொலியாக பெட்ரோலிய பொருட்கள் விலை எகிறின.

இது போதாதென்று ரிசர்வ் வங்கியில் சமீபத்தில் பொறுப்பில் நியமிக்கப்பட்ட குருமூர்த்தி ரிசர்வ் வங்கி கவர்னரான உர்ஜித் படேலுக்கு குடைச்சல் கொடுக்க கொடுக்க, ஏற்கனவே ரிசர்வ் வங்கி கவர்னராக இருந்த ரகுராம் ராஜன் பாணியில் தற்போதைய தலைவரான உர்ஜித் படேல் ராஜினாமா செய்யும் முடிவுக்கு வந்துள்ளார் என்கிறார்கள் பொருளாதார வல்லுநர்கள்.

""எத்தனை ஆயிரம் கோடி கடனிருந்தாலும் அதை எப்படி வசூலிக்க வேண்டும் என்கிற கொள்கையை தீர்மானிப்பது அரசு. பா.ஜ.க.வை சேர்ந்தவர்களே கடன்களை திருப்பி செலுத்தாத தொழிலதிபர்களை தப்பிக்க வைத்துவிட்டு, ரிசர்வ் வங்கி தலைவர்களுக்கு குடைச்சல் கொடுத்தால் போன கடன் திரும்ப வருமா?'' என கேள்வி எழுப்பியுள்ளார் இந்தியன் வங்கி ஊழியர் சம்மேளன தலைவர் சி.பி.கிருஷ்ணன்.

-தாமோதரன் பிரகாஷ்

nkn061118
இதையும் படியுங்கள்
Subscribe