""ஹலோ தலைவரே, ராஜீவ் கொலை வழக்கில் 27 வருசத்துக்கு மேலே சிறைப்பட்டிருக்கும் 7 பேர் விடுதலை தொடர்பான வழக்கில் தமிழக அரசும் கவர்னரும் முடிவெடுக்கலாம்னு உச்சநீதிமன்றம் தீர்ப்பு சொல்லியிருக்கே.''’’
""நம்பிக்கை தரக்கூடிய மகிழ்ச்சியான தீர்ப்பு. 2014-லேயே இவர்கள் விடுதலையாகி இருக்கணும். ஆனா, அரசியல் விளையாட்டுகளால் இப்பவரைக்கும் போராட்டம்தான்..''’’
"உண்மைதாங்க தலைவரே, 7 பேரில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த 3 பேரோட கருணை மனு மீது நடவடிக்கை எடுப்பதில் ஏற்பட்ட காலதாமதத்தைக் காரணம் காட்டி, 2014-ல் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் அதனை ஆயுள் தண்டனையா குறைச்சாரு. அத னால முருகன், சாந்தன், பேரறிவாளன் மூவரும் தூக்கு மேடையிலிருந்து விடுபட் டாங்க. அவங்களோட சேர்த்து ஆயுள் தண்டனையை அனுபவிச்ச 7 பேரையும் விடுவிப்பது தொடர்பா, உரிய அரசு முடி வெடுத்துக்கலாம்ன்னு நீதிபதி தீர்ப்பளிச்சாரு. உடனே ஜெ. தன் அமைச்சரவையில் முடிவெடுத்து, 7 பேரையும் தமிழக அரசு விடுவிக்க ரெடின்னும் இதற்கு 3 நாளில் மத்திய அரசு பதில் சொல்லணும்னும் கெடு விதிச்சாரு. உடனே அப்போதைய மத்திய காங்கிரஸ் அரசு கோர்ட்டுக்குப் போயிடிச்சி.'
""முதல்வருக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, 161-வது பிரிவின் கீழ் ஜெ.வே 7 பேரையும் விடுவிச்சிருக்க முடியும். ஆனால் அரசியல் விளையாட்டு நடந்திடிச்சி.''’’
""ஆமாங்க தலைவரே.. மனித உரிமை செயற்பாட்டாளர்களும் அதைத்தான் சொன்னாங்க. ஏற்கனவே கலைஞர் முதல்வராக இருந்தப்ப, இதே சட்டப் பிரிவைப் பயன்படுத்தி, கொலை வழக்குகளில் மரண தண்டனை பெற்றிருந்த புலவர் கலியபெருமாள், தியாகு ஆகியோரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து, கவர்னருக்குப் பரிந்துரை செய்து, பின்னர் அவர்கள் விடுதலைபெற வழிவகுத்தாரு. ஆனா, ஜெ. அதைச் செய்யாமல், மத்த
""ஹலோ தலைவரே, ராஜீவ் கொலை வழக்கில் 27 வருசத்துக்கு மேலே சிறைப்பட்டிருக்கும் 7 பேர் விடுதலை தொடர்பான வழக்கில் தமிழக அரசும் கவர்னரும் முடிவெடுக்கலாம்னு உச்சநீதிமன்றம் தீர்ப்பு சொல்லியிருக்கே.''’’
""நம்பிக்கை தரக்கூடிய மகிழ்ச்சியான தீர்ப்பு. 2014-லேயே இவர்கள் விடுதலையாகி இருக்கணும். ஆனா, அரசியல் விளையாட்டுகளால் இப்பவரைக்கும் போராட்டம்தான்..''’’
"உண்மைதாங்க தலைவரே, 7 பேரில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த 3 பேரோட கருணை மனு மீது நடவடிக்கை எடுப்பதில் ஏற்பட்ட காலதாமதத்தைக் காரணம் காட்டி, 2014-ல் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் அதனை ஆயுள் தண்டனையா குறைச்சாரு. அத னால முருகன், சாந்தன், பேரறிவாளன் மூவரும் தூக்கு மேடையிலிருந்து விடுபட் டாங்க. அவங்களோட சேர்த்து ஆயுள் தண்டனையை அனுபவிச்ச 7 பேரையும் விடுவிப்பது தொடர்பா, உரிய அரசு முடி வெடுத்துக்கலாம்ன்னு நீதிபதி தீர்ப்பளிச்சாரு. உடனே ஜெ. தன் அமைச்சரவையில் முடிவெடுத்து, 7 பேரையும் தமிழக அரசு விடுவிக்க ரெடின்னும் இதற்கு 3 நாளில் மத்திய அரசு பதில் சொல்லணும்னும் கெடு விதிச்சாரு. உடனே அப்போதைய மத்திய காங்கிரஸ் அரசு கோர்ட்டுக்குப் போயிடிச்சி.'
""முதல்வருக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, 161-வது பிரிவின் கீழ் ஜெ.வே 7 பேரையும் விடுவிச்சிருக்க முடியும். ஆனால் அரசியல் விளையாட்டு நடந்திடிச்சி.''’’
""ஆமாங்க தலைவரே.. மனித உரிமை செயற்பாட்டாளர்களும் அதைத்தான் சொன்னாங்க. ஏற்கனவே கலைஞர் முதல்வராக இருந்தப்ப, இதே சட்டப் பிரிவைப் பயன்படுத்தி, கொலை வழக்குகளில் மரண தண்டனை பெற்றிருந்த புலவர் கலியபெருமாள், தியாகு ஆகியோரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து, கவர்னருக்குப் பரிந்துரை செய்து, பின்னர் அவர்கள் விடுதலைபெற வழிவகுத்தாரு. ஆனா, ஜெ. அதைச் செய்யாமல், மத்தியில் உள்ள காங்கிரஸ் அரசை இங்குள்ள தமிழுணர்வு அமைப்புகளுக்கு எதிரா நிறுத்தி, தன்னை ஈழ ஆதரவாளரா காட்டுற அரசியலை கையாண்டாரு. அதனாலதான் 4 வருசமாகியும் 7 பேரும் விடுதலை யாக முடியலை. உச்சநீதிமன்றத்தில் இழுத்துக் கிட்டே இருந்த வழக்கு இப்ப நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான நீதிபதிகள் நவீன் சின்ஹா, கே.,எம்.ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு மூலம் முடிவுக்கு வந்திருக்கு. தீர்ப்பு தகவல் வேலூர் மத்திய சிறையை எட்டியபோது அதைக் கேட்ட சாந்தன், பாபா கோயிலுக்குப் போயிட்டாராம். முருகனிடம் ஆனந்த கண்ணீர் வந்திருக்கிறது. பேரறிவாளன் தமிழக அரசின் நல்ல முடிவை நம்பிக்கையோடு எதிர்பார்க்கிறாரு. ஏழுபேரையும் விடுவிக்கும் சாவி முதல்வர் எடப்பாடி தலைமையிலான தமிழக அரசிடமும், கவர்னரிடமும் கொடுக்கப்பட்டிருக்கு.''’
""நல்ல முடிவை எடுத்தால் எடப்பாடி அரசுக்கு இது அரசியல் ரீதியாகவும் ஜாக்பாட் தானே.. என்ன திட்டம் இருக்குதாம்?''
""கோட்டையில் நிதி ஆய்வுக்குழுக் கூட்டத்தில் இருந்த முதல்வர் எடப்பாடிக்கு இந்தத் தகவல் தெரிஞ்சதும், தலைமைச் செலயாளர்கிட்டே மகிழ்ச்சியை பகிர்ந்துக்கிட்டாராம். கூடிய சீக்கிரம் அமைச்சரவையைக் கூட்டி விடுதலைக்கான முயற்சியில் இறங்குவது குறித்து, அந்தக் கூட்டம் முடிந்ததும் அமைச்சர்களிடமும் அதிகாரிகளிடமும் ஆலோசித்தார். சட்ட அமைச்சர் சி.வி.சண்முகமும் முனைப்பா இருந்திருக்காரு. அதே நேரத்தில், டெல்லியில் காங்கிரஸ் மேலிடத்தில் சோனியாவும் ராகுலும் இந்தத் தீர்ப்புபற்றிய சாதக-பாதகங்களை ஆலோசிச்சிருக்காங்க. தி.மு.க. உள்பட எல்லா கட்சிகளும் விடுதலையை வரவேற்பதால, தமிழகத் தேர்தலில் வாக்காளர்களின் ஆதரவை மனசிலே வச்சி, இந்தத் தீர்ப்பை அமைதியாக ஏற்றுக் கொள்ளலாமா? இல்லை வேறு சட்ட நடவடிக் கைகளை மேற்கொள்ளலாமான்னு சீனியர்களிடம் ராகுல் ஆலோசிச்சிருக்காரு.''’’
“பா.ஜ.க.வும் இந்தத் தீர்ப்பை செயல் படுத்துவதுபற்றி அரசியல் லாபத்தோடு கணக்கு போடுமே?''’’
""7 தமிழர்கள் சம்பந்தப்பட்ட விவகாரங்களில் காங்கிரஸ் பாணியில்தான் பா.ஜ.க.வும் செயல்படும். ஆனாலும், தமிழ்நாட்டில் எதைத் தொட்டாலும் வில்லங்கமா போய்க்கிட்டிருக்கிற நிலையில், இந்த விடுதலை விவகாரத்தில் எதிர்ப்பு காட்டாம அமைதியா இருக்கிறதுன்னும், அதே நேரத்தில், கவர்னர் கையில்தான் முடிவு இருக்குங்கிறதால, எப்ப அதை செயல்படுத்துறதுன்னு தேர்தல் அர சியல் லாபக் கணக்கோடு சிக்னல் கொடுக் கிறதுன்னும் பா.ஜ.க. வியூகம் வகுத்திருக்குதாம்.''’’
""காங்கிரசிலும் தேர்தல் கணக்கு ஸ்டார்ட் ஆயிடிச்சி. போலிருக்கு. சத்தியமூர்த்தி பவனில் அடிதடின்னு களை கட்ட ஆரம்பிச்சிடிச்சே!''’’
""தலைவரே, தேர்தல் நெருங்குவதால் தமிழக காங்கிரஸுக்குப் புதிய மேலிடப் பொறுப்பாளரா நியமிக்கப்பட்டிருக்கும் சஞ்சய் தத் தலைமையில், ஒரு ஆலோசனைக் கூட்டம் 4-ந் தேதி காலை 10 மணிக்கு சத்தியமூர்த்திபவனில் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், குமரி அனந்தன், கிருஷ்ணசாமி, தங்கபாலு உள்ளிட்ட முன்னாள் மாநிலத் தலைவர்கள் உட்பட மாவட்ட நிர்வாகிகள் பலரும் சரியான நேரத்துக்கு வந்துட்டாங்க. ஆனால் மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசரும் மேலிட பொறுப்பாளர் சஞ்சய் தத்தும் மட்டும் 12 மணிவரை அங்கே வந்துசேரலை. இதனால் ஒரே சலசலப்பாயிடுச்சி. சஞ்சய் தத் திருநாவுக்கரசர் வீட்டில் பரோட்டா, பாயான்னு விருந்து சாப்பிட்டுக்கிட்டு இருக் கார்ன்னு தகவல் வர, எரிச்சலான மாவட்ட தலைவர் கராத்தே தியாகராஜன், கூட்டத்தைப் புறக்கணிச்சிட்டு கோபமா கிளம்பிட்டார்.''’
""அப்புறம்..''’
""இந்த நிலையில், கூட்டத்திற்கு அழைப்பு இல்லாத இளங்கோவன் ஆதரவாளர்கள் சிலர், அரங்கிற்குள் நுழைய முண்டியடிச்சாங்க. அவர் களை திருநாவுக்கரசர் ஆதரவாளர்கள் தடுத்தாங்க. இதில் இருதரப்புக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட, அந்த நேரத்தில் திருநாவுக்கரசர், சஞ்சய் தத்தோட வந்தார். ஒருவழியா எல்லோரை யும் அமைதிப்படுத்திட்டு கூட்டத்தைத் தொடங்கி னாங்க. இதில் பேசிய எல்லோருமே, வரும் தேர் தலில் தி.மு.க.வோடுதான் கூட்டணி வைக்கணும்னு பேசினாங்க. திருநாவுக்கரசரோ, "நானும் தி.மு.க. கூட்டணி தொடரணும்னுதான் விரும்பறேன். ஆனால் நான் இந்தக் கூட்டணிக்கு எதிரானவன் என்பது போல என்னைச் சித்தரிக்கிறாங்க. இளங்கோவன், என்னைப் பார்த்து பா.ஜ.க.வுக்குப் போனால் எதிர்காலம் இருக்கும்ன்னு சொல்றார். எனக்கு இதுவே போதும். அவர் வேணும்னா எதிர்காலத்தைத் தேடிக்கட்டும்'னு ஆவேசமா சொல்ல, பலத்த சலசலப்பு உண்டாச்சு. கூட்டம் முடிந்ததும், இளங்கோவன் ஆதரவாளர்கள் 7 பேரைக் கட்சியை விட்டே நீக்கிவிட்டார் திருநாவுக்கரசர். இதனால் கொதித்துப்போன இளங்கோவன் தரப்பு, அவர் மேல் புகார்களை டெல்லிக்கு ஆவேசமா அனுப்பிக்கிட்டிருக்கு.''’
""பா.ஜ.க. பக்கமும் தமிழக தலைவர் தமிழிசை யை மையமா வச்சி சலசலப்பு அதிகமா இருக்கே?''’
""மாநிலத்தலைவர் நாற்காலியைக் கைப்பற்ற ரொம்ப நாளாவே பலரும் டெல்லியில் காய் நகர்த்திக்கிட்டு இருக்காங்க. விரைவில் கூட இருக்கும் கட்சியின் தேசிய செயற்குழுவில், தமிழிசைக்கு எதிரான புகாரை வைக்கவும், சி.பி.ராதாகிருஷ்ணனை தமிழக பா.ஜ.க. தலைவராக்கவும் ஒரு தரப்பு மும்முரமா காய் நகர்த்திக்கிட்டிருக்கு. இந்த நிலையில் சோபியா விவகாரத்தில் தமிழிசை கடைப்பிடிச்ச அணுகு முறையைப்பற்றி ராஜ்நாத் சிங், தமிழிசையை விசாரிச்சிருக்கார். தென்மாவட்டத்தில் இருக்கும் தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தின் ஆதரவைப் பெற அமித் ஷாவே நேரடி யாகக் காய் நகர்த்தினார். அந்த சமூகத்தினர் கட்சியில் சேரும் நிகழ்ச்சிக்காகத்தான் தமிழிசை தூத்துக்குடி போனார். அந்தப் பயணத்தின்போது அதே சமூகத்தைச் சேர்ந்த மாணவி யை அவர் கைதுசெய்ய வைத்து, பா.ஜ.க.வுக்கு எதிரா எல்லோரும் குரல் கொடுக்கச் செய்தது, பா.ஜ.க. தலைமையை எரிச்ச லடைய வச்சிருக்கு.''’
""பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் பேரணி நடத்திய அழகிரி, பெருசா ரீயாக்ட் பண்ணாமல் அமைதியாயிட்டாரே?''’
""எதிர்பார்த்த அளவுக்கு பேரணி இல்லைங்கிற வருத்தம் அழகிரி தரப்பிலேயே இருக்கு. இதற்கே தென் மாவட்டங்கள்ல இருந்து கொண்டுவந்த கூட்டத்தோட, வட மாவட்டங்கள்ல இருந்து வன்னிய சமூகத்தினரை எக்ஸ் எம்.எல்.ஏ.வான ஏ.ஜி.சம்பத் மூலம் கொண்டு வந்தாங்க. இந்த நிலையில் தன் அதிரடி முடிவு பத்தியும் குடும்ப ரகசியங்கள் பத்தியும் பேசப் போவதாகச் சொல்லியிருந்த அழகிரி, வெறும் நன்றி மட்டும் சொல்லிட்டு அமைதியாயிட்டார். 8-ந் தேதி நடக்கும் தி.மு.க. மா.செ.க்கள், எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தின் ஃபீட் பேக்கை வைத்து, தனது அடுத்த கட்ட மூவை வச்சிக்கலாம்ன்னு அழகிரி நினைக்கிறாராம்.''’
""நானும் ஒரு ஃபீட்பேக் தகவலைச் சொல்றேன். மாவட்டங்களில் அண்மையில் அறிவிக்கப்பட்ட அரசுத் திட்டங்கள் எந்த அளவுக்கு செயல்படுத்தப்படுதுங்கிற ஃபீட் பேக்கைத் தெரிஞ்சிக்க, மாவட்ட ஆட்சியர் மாநாட்டை விரைவில் கூட்டலாம்ன்னு முடிவெடுத்திருந்த முதல்வர் எடப்பாடி, இப்ப அந்த முடிவைக் கைவிட்டு, நான்கு மாவட்ட ஆட்சியர்களை கோட்டைக்கு வரவழைக்க ஆரம்பிச்சிட்டாரு. முதல் டிஸ்கஷன், போன 3-ந்தேதி கோட்டையில் நடந்தது. இதில் விழுப்புரம் கலெக்டர் சுப்பிரமணியன், திண்டுக்கல் கலெக்டர் வினய், திருப்பூர் கலெக்டர் பழனிச்சாமி, கோவை கலெக்டர் ஹரிகரன் ஆகியோர் கலந்துக்கிட்டாங்க. இந்த டிஷ்கஷனில் மாவட்ட வாரியா பல நிலவரங்கள் அலசப்படுதாம்.''