ராங்-கால் : புதுத் தலைவர்! சவால்கள் நடுவே ஸ்டாலின்!

stalin

""ஹலோ தலைவரே, பள்ளிப்பருவத்தில் கோபாலபுர இளைஞர் தி.மு.க.வை ஆரம்பிச்சி அதற்கப்புறம் தி.மு.க.வின் மாவட்ட பிரதிநிதி, பொதுக்குழு உறுப்பினர்னு அடிமட்டத்தில் தொடங்கி புதிய தலைவர்ங்கிற உச்சத்தைத் தொட்டிருக்கிற மு.க.ஸ்டாலினை நோக்கித்தான் அரசியல் களம் அமைஞ்சிருக்கு.''

stalin""ஆமாம்பா, கலைஞர் என்னும் ஆலமரம் அரை நூற்றாண்டுக்கும் மேலா தமிழகத்துக்கு பெரிய அளவில் நிழல் கொடுத்துக்கிட்டு இருந்துச்சு. அதன் விழுது எப்படி தி.மு.க.வைத் தாங்கப்போகுதுங்கிற எதிர்பார்ப்பு தமிழ்நாட்டு அரசியலில் மட்டுமல்ல, இந்திய அளவிலும் இருக்குது..''’

""உண்மைதாங்க தலைவரே, தி.மு.க.வின் தலைவர் பொறுப்புக்கான வேட்புமனுவை ஞாயிற்றுக்கிழமை கட்சிப் பிரமுகர்களின் உற்சாகத்துக்கு மத்தியில் ஸ்டாலின் முறைப்படி, தாக்கல் செய்தார். அதேபோல் 65 மாவட்டங்களின் செயலாளர்களும், ஸ்டாலினுக்காக வேட்பு மனுவைத் தாக்கல் செஞ்சி, தங்களின் அன்பான ஆதரவை வெளிப்படுத்தினாங்க. ஏற்கனவே கட்சியின் மற்ற அணிகளும் ஸ்டாலினைத் தலைவராக முன்மொழிந்து தீர்மானங்களை நிறைவேற்றியிருக்கு. வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால், வேட்புமனு தாக்கல் செய்த நாளிலேயே ஸ்டாலின் ஏகமனதா தி.மு.க.வின் தலைவராயிட்டார். கட்சி நிர்வாகிகள் வாழ்த்துக்கு நடுவே கனிமொழி கொடுத்த அன்பு முத்தம் ரொம்ப பாப்புலராயிடிச்சி. இருந்தாலும் பொதுக்குழுவில்தான் முறைப்படியான தலைவர் அறிவிப்பு. அதேபோல் ஸ்டாலினிடம் இருந்த பொருளாளர் பதவிக்கு, நாம ஏற்கனவே பேசிக்கிட்ட மாதிரியே துரைமுருகன் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கார். மற்ற சீனியர்களுக்குத் தரவேண்டிய பதவிகளை, முறைப்படி கட்சித் தேர்தல் வரும்போது பார்த்துக்கலாம்ன்னு ஸ்டாலின் சொல்லிட்டாராம்.''’

""புதிய தி.மு.க. தலைவரின் உடனடித் திட்டங்கள் என்னவா இருக்கு?''’

""ஸ்டாலினோட கவனமெல்லாம் இப்ப, தி.மு.க. கட்டமைப்பை பலப்படுத்தறது, அழகிரியின் சலசலப்பை சமாளிக்கிறது, தேசிய அரசியலில் தி.மு.க.வின் பங்களிப்பை வலிமைப்படுத்துறது, இதையெல்லாம் தேர்தல் களத்தில் மகத்தான வெற்றியாக மாற்றுவது. இதுதான் இப்போது அவருடைய திட்டங்களா இருக்கு.''’

""2014-லிருந்து தி.முக. ஜெயிக்கலைன்னு அழகிரி சீண்டுறாரு.. எடப்பாடி ஆட்சியைக்கூட

""2014-லிருந்து தி.முக. ஜெயிக்கலைன்னு அழகிரி சீண்டுறாரு.. எடப்பாடி ஆட்சியைக்கூட கவிழ்க்க முடியலையான்னு மக்கள்கிட்ட அதிருப்தி இருக்கு. இது மாதிரியான சவால்களை சமாளிக்கணும்னா தி.மு.க.வுக்கு தேர்தல் வெற்றி முக்கியம்தான். அதே சமயம் கலைஞர் நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு பா.ஜ.க. தலைவர் அமித்ஷாவை அழைத்ததும் சர்ச்சைகளும் கிளம்பிடிச்சே…''’

kanimozhi""உண்மைதாங்க தலைவரே, தி.மு.க.வுக்குத் தொடந்து வாக்களிப்பவர்களும், சிறுபான்மையினரான முஸ்லிம்-கிறிஸ்தவர்களும், பெரியாரிஸ்டுகளும், தமிழ் உணர்வாளர்களும், இந்தக் கூட்டம் கூட்டணிக்கான அஸ்த்திவாரமா ஆயிடுமான்னு கவலைப்பட ஆரம்பிச்சிட்டாங்க. ஆனால் இந்திய அளவில் இருக்கும் எல்லாக் கட்சிகளிடமும் தன் ஆளுமையை நிரூபித்தவர் கலைஞர். மத்தியில் கூட்டணி ஆட்சிக்கு வழிவகுத்து, மாநிலங்களுக்கு நன்மை கிடைக்கச் செய்ததில் கலைஞருக்கு பெரும்பங்கு உண்டு. வாஜ்பாய் தலைமையில் முதன்முறையா 5 ஆண்டுகள் கூட்டணி ஆட்சி நீடித்தது. இதையெல்லாம் யோசிச்சித்தான், பா.ஜ.க.வையும் அழைச்சாங்க. ஸ்டாலின் மருமகன் சபரீசனுக்கு பா.ஜ.க. தரப்புடன் இருக்கும் "டச்'சும் கை கொடுத்திருக்கு.

""அமித் ஷா வர்றாருன்னு தகவல் வந்ததும் கை சின்னத்துக்காரங்களுக்கு சந்தேகம் வந்திடிச்சே.. அதை ஸ்டாலின் யோசிக்கலையா?

""ஸ்டாலினைப் பொறுத்தவரை, தலைவர் பதவிக்கு, தான் வந்திருக்கும் சூழலில், கலைஞர் இருந்தப்ப எப்படி தி.மு.க.வை duraimuruganமையமாக்கி இந்திய அரசியலின் அச்சு சுழன்றதோ, அதேபோல் இனியும் சுழலணும்ன்னு விரும்பறார். அதேபோல், இங்கே தி.மு.க.வோட வாக்கு வங்கியை பலப்படுத்தறதோட, தேர்தல் சமயத்தில் கூட்டணிக் கட்சிகளுக்கு அதிக சீட்டுகளைப் பங்கிட்டுக் கொடுத்துடாமல், வெற்றிக்குத் தோதா அதிக சீட்டுகளில் தி.மு.க. நிற்கணும்னு வியூகம் வகுக்கறார். அதுவரை யாருடன் கூட்டணின்னு வெளியாகும் யூகங்களும் விமர்சனங்களும் தங்களுக்கு விளம்பரமா இருக்கட்டும்ன்னு நினைக்கிறார். தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிப்பதுதான் அவரோட இலக்கு. அப்ப இந்த விமர்சனங்களெல்லாம் மாறிடும்ங்கிறது ஸ்டாலினோட கணக்கு. கூட்டணி பற்றி அவசரப்பட வேண்டாம். நம்மோடு இருப்பவர்கள் எப்போதும் இருப்பார்கள்னு கட்சி சீனியர்களிடம் சொல்றாராம். அவரின் மனப்போக்கைப் புரிஞ்சிக்கிட்டதால்தான் ஆசிரியர் வீரமணியும், சிறுத்தைகள் திருமாவும், இரங்கல் கூட்டத்துக்கு பா.ஜ.க. வர்றதை அரசியலாக்க வேண்டாம்ன்னு சொல்றாங்க.''’

""ஸ்டாலின் வியூகமெல்லாம் சரிதான்.. தோழமைத் தரப்பு-எதிர்த்தரப்பு வியூகங்களும் முக்கியமாச்சே.. 2016 தேர்தல் சமயத்தில் ஆளுங்கட்சியான அ.தி.மு.க.வோட வியூகங்களை தெரிஞ்சிக்கப் போறதா நினைச்சி முன்னாள் டி.ஜி.பி. ராமானுஜத்துக்கிட்ட ஸ்டாலின் குடும்பத்தை சேர்ந்தவங்க, சித்தரஞ்சன் சாலையை ஒட்டி இருக்கிற காபி ஷாப்பில் அடிக்கடி பேசுனாங்க. அ.தி.மு.க. வியூகம் எதுவும் தி.மு.க.வுக்கு கிடைக்கலை. ஆனா, தி.மு.க. வியூகங்களை முழுசா தெரிஞ்சிக்கிட்ட ராமானுஜம், அதை ஜெ.கிட்ட சொல்லி, கவுண்ட்டர் அட்டாக் கொடுத்து, மறுபடியும் அ.தி.மு.க. ஆட்சியை அமைச்சிட்டாங்க. இப்பவும் ஸ்டாலின் குடும்பத்தாருக்கு நெருக்கமான நபர்களோடு காபி ஷாப்பில் அடிக்கடி பேசிக்கிட்டுத்தான் இருக்காரு ராமானுஜம். கப்பலை கரை சேர்க்கணும்னு ஸ்டாலின் நினைக்கிறாரு. ஆனா, ஓட்டை விழுந்து, தண்ணீர் உள்ளே போனால் கஷ்டமாச்சே.''…

""சரியா சொன்னீங்க தலைவரே.. பிரதமர் மோடி ’மன்கிபாத்’ வானொலிப் பேச்சில் கேரள மக்களுக்காக உருகினாரு. ஆனா, 20,000 கோடி ரூபாய் மதிப்புக்கு இழப்புன்னு கேரள அரசு சொல்லியும் 600 கோடியை மட்டும்தான் மத்திய அரசு ஒதுக்கியிருக்கு. இதனால்தான் அரபு அமீரகம் 700 கோடி ரூபாய் வழங்குவதாக அறிவித்திருக்கிறதுன்னும் உலகமே கேரளாவுக்காக கவலைப்படுதுன்னு முதல்வர் பினரயி விஜயன் சொன்னாரு. அமீரகம் உதவும் செய்தி, முதன் முதலில் இந்திய அரசுக்கு வந்தபோது, அது பிரதமர் அலுவலக அதிகாரிகள் மூலம் கேரள முதல்வர் அலுவலகத்துக்கு வந்து சேர்ந்தது. முதல்வர் உடனே அறிவித்துவிட்டார். கடுப்பான மோடி, வெளிநாட்டு நிதி உதவிக்குத் தடைபோட்டுட்டார். இதைத் தொடர்ந்து, இந்தத் தடையை நீக்கணும்னு உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கு போடப்பட்டிருக்கு.''

kerala-cm""இங்கே குட்கா வழக்கில் சிக்கியவர்களுக்கெல்லாம் புரமோசன் கிடைக்கிதே?''’

""உண்மைதாங்க தலைவரே, குட்கா விவகாரத்தில் டி.ஜி.பி.யான டி.கே.ராஜேந்திரன், அப்போதைய சென்னை கமிஷனர் ஜார்ஜ், இணை கமிஷனராக இருந்த தினகரன் போன்றோர் குற்றம் சாட்டப்பட்டனர். இந்த விவகாரம் இப்ப சி.பி.ஐ.யின் விசாரணையில் இருக்கு. இவர்களில் தினகரனின் பெயர், குட்கா விவகாரத்தின் பலமான ஆதாரமான மாதவராவின் டைரியிலேயே இருக்கு. இந்த தினகரன் எந்த ஏரியாவில் இருந்தபோது குற்றம் சாட்டப்பட்டாரோ, அதை உள்ளடக்கிய சென்னை வடக்கு மண்டல உதவி கமிஷனராகவே அவரை பதவி உயர்வில் உட்கார வச்சிருக்கு எடப்பாடி அரசு.''’

""எடப்பாடி அரசின் விசாகா கமிட்டி பற்றிய சர்ச்சைகளும் பரபரக்குதே?''’

""போனமுறை நம்ம நக்கீரனிலேயே "காக்கி அதிகாரிகளின் உள்குத்து! ஐ.ஜி.க்கு எதிராக எஸ்.பி.'ங்கிற தலைப்பில் ’தெளிவா எழுதி இருக்காங்க. உள்குத்து மட்டுமல்லாம, அதில் அரசியலும் இருக்கு. ஐ.ஜி. மேல் பெண் எஸ்.பி. கடந்த 1-ந் தேதி டி.ஜி.பி.கிட்ட செக்ஸ் டார்ச்சர் புகார் கொடுத்தார். உடனே அவர் உளவுத்துறை ஐ.ஜி. சத்தியமூர்த்தியோடு ஆலோசனை செய்து விசாகா கமிட்டிக்கான பட்டியலில் சீமா அகர்வால் தலைமையில் காவல்துறையைச் சேர்ந்தவர்களை மட்டுமே போட்டிருக்கார். இதுக்கு 6-ந் தேதி முதல்வர் எடப்பாடியை நேரில் சந்தித்து ஓகேவும் வாங்கியிருக்காங்க. விசாகா கமிட்டியில் பிற துறையினர் யாரும் இல்லைங்கிறதைச் சுட்டிக்காட்டியும், புகார் கொடுத்த அதிகாரியை, விசாரணை தொடங்கும் முன்பே டிரான்ஸ்பர் செய்தது ஏன்னும் கேட்டு மு.க.ஸ்டாலின் அறிக்கை விட்டிருக்கார். ஐ.ஜி. விஷயத்தில் ஜாபர் சேட் தரப்பு சீரியஸா அக்கறை காட்டி, எல்லாப் பக்கமும் ஊதிப் பெருசாக்குதாம்.''’

"" காங்கிரஸ் பக்கமும் பரபரப்பு செய்திகள் பெருசா ஊதப்படுதே?''’

""காங்கிரஸின் தமிழக மேலிடப் பொறுப்பாளர்களில் ஒருவராக இருந்த சென்னா ரெட்டியைத் தூக்கிவிட்டு, அவருக்கு பதில் மகாராஷ்டிராவைச் சேர்ந்த சஞ்சய் தத்தைப் போட்டிருக்கார் ராகுல். இவர் ப.சி., மற்றும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் நண்பராம். அதோட ஏற்கனவே இவர் இங்கே கட்சித் தேர்தல் பொறுப்பாளரா இருந்தப்ப திருநாவுக்கரசரோடு கடுமையாக மோதியவராம். அதேபோல் இப்ப தமிழக காங்கிரஸ் பொருளாளரா இருக்கும் நாசே.ராமச்சந்திரனை மாற்றப் போகிறாராம் திருநாவுக்கரசர். இந்தப் பதவியைக் குறிவைத்து, திருநாவுக்கரசருக்கு ’கேஷ் பேக்கா’இருக்கும் ரூபி மனோகரன், சத்தியமூர்த்திதணிகாசலம் ஆகியோரோடு எக்ஸ் எம்.பி.க்களான ஜே.எம்.ஆரூண், விசுவநாதன் போன்றோரும் முட்டி மோதுகிறார்களாம். இதனால், எதிர் கோஷ்டியினர், பொருளாளரா யாரை வேண்டுமானாலும் போடுங்கள். ஆனால், திருநாவுக்கரசர் சொல்லும் நபரை மட்டும் போட்றாதீங்க. ஏன்னா, பதவிக்கு ரேட் பேசப்படுதுன்னு ராகுல்வரை புகார் கிளப்பி அதகளப்படுத்திக்கிட்டிருக்காங்க.''’

yanadeikan

""காங்கிரஸ் சலசலப்பு கலாச்சாரம், அதிலிருந்து பிரிந்த த.மா.கா.வையும் விட்டுவைக்கலை போலிருக்கே?''’

""த.மா.கா.வின் துணைத் தலைவரா இருக்கும் ஞானதேசிகன், சமீப காலமா அதன் தலைவர் ஜி.கே.வாசனை விட்டு விலகியே இருக்காராம். இந்த நிலையில், சென்னையில் 26-ந் தேதி நடந்த காங்கிரஸ் கலை இலக்கியப் பிரிவுத் தலைவர் சிவாஜி சமூக நலப் பேரவை சந்திரசேகரனின் மணி விழாவில் கலந்துக்கிட்டாரு ஞானதேசிகன். அப்ப அவர், நான், காங்கிரஸை விட்டு விலகினாலும் அந்த உணர்வோடுதான் இப்போதும் இருக்கிறேன்னு சொன்னார். அடுத்து பேசிய பீட்டர் அல்போன்ஸ், ஞானதேசிகனின் உடலில் காங்கிரஸ் ரத்தம்தான் ஓடுதுன்னு சொல்லிப் பூரித்தார். இந்தத் தகவல் வாசன் தரப்புக்குப் போக, அங்கே சலசலப்பு தொடங்கிடிச்சி.''’

thiruma

""நானும் ஒரு முக்கிய தகவலைச் சொல்றேம்பா. விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பரபரப்பான அரசியல் வேலைகள், கூட்டணிப் பார்வைகளுக்கு நடுவே, 1981 நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு, ’"மீனாட்சிபுரம் மதம் மாற்றம் - பாதிக்கப்பட்டோரின் பார்வை'ங்கிற தலைப்பில் ஆய்வு செய்து, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்றிருக்கார். சமூக அக்கறையோடு கள ஆய்வில் இறங்கி, பட்டம் வாங்கிய அவரை மனமார பாராட்டியாகணும். இது சம்பந்தமா திருமா சொல்லும் போது, நான் கல்லூரியில் படிக்கும் போது நடந்த சம்பவம் அது. அப்ப ஒரே நேரத்தில் 200 குடும்பத்தினர் மதம் மாறினார்கள். இது பல்வேறு சர்ச்சையை ஏற்படுத்தியது.’இது யாருடைய தூண்டுதலிலும் நடைபெறவில்லை. சாதிக் கொடுமையில் இருந்தும் அரசின் ஒடுக்குமுறையில் இருந்தும் விடுதலை பெறணும்னு மக்களாக எடுத்த சுய முடிவுங்கிறதையும் இஸ்லாமியர்களாக மாறியதால் அவர்களது சமூக மதிப்பும் பொருளாதார வளர்ச்சியும் மேம்பட்டிருப்பதையும் என் ஆய்வின் மூலம் நிறுவியிருக்கேன்னு சொல்லியிருக்காரு. திருமா ஏற்கனவே வக்கீல்.. இப்ப டாக்டர், அதாவது முனைவர்''’

nkn310818
இதையும் படியுங்கள்
Subscribe